sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
மாறன் காந்தள், மதி கயல்விழி நால்வரும் ரிசப்ஷன் தொடங்கி இருக்க அந்த ரிசப்ஷன் காலை நிறைந்து வழிந்து இருந்தது .



பல பிரபலங்கள், பிசினஸ் ஜாம்பவான்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் என மாறன் காந்தள் திருமண வரவேற்பு கூறியிருந்தனர்.



இரு ஜோடிகளுக்கும் தனித்தனியே மேடை அமைத்து ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது .



வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் மாறனும் காந்தளையும் தான் சென்று பார்க்க மும்மரம் காட்டின.ர் அவர்களை பொறுமையாக வரிசையில் நின்று காத்திருந்து வாழ்த்தி விட்டு சென்றனர்.



ஆனால் மதி கயல் இருவரையும் அவர்கள் உறவினர்கள் மதியின் நண்பர்கள் என்று சிலரே வந்து வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருக்க ...



"என்ன மதி பெரிய பெரிய ஆளுங்க எல்லாரும் உன் அண்ணன் ரிசப்ஷனுக்கு தான் போறாங்க. நீங்க இருக்கிற பக்கம் காத்து வாங்குது"என்று மதியின் நண்பன் ஒருவன் வெறுப்பேற்றினான் .



"டேய் அவன்தானே மூத்தவன் என் வீட்டிலும் அவனை தானே எல்லா விஷயத்தையும் முன் நிறுத்தி செய்றாங்க. அதனாலதான் வந்திருக்கிற கூட்டம் அவனை பார்க்கப் போகுது. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற" என்றான் மதி கடுப்பாக



"சரி தாண்டா நீயும் அவங்க மகன் தானே அப்புறம் என்ன உன் அண்ணனை மட்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறாங்க. உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க" என்று சும்மா இருந்த மதியின் கோபத்தை தூண்டி விட்டுக் கொண்டிருந்தான்



இவர்கள் பேசுவதை கவனித்த கயல்விழியும் மதியின் நண்பனை பார்த்து "ஹலோ இப்போ நீங்க என் கல்யாணத்துக்கு வாழ்த்த வந்திருக்கீங்களா? இல்ல என் புருஷனை தேவை இல்லாம டென்ஷன் பண்ண வந்திருக்கீங்களா?" என்றாள்



"ஐயர் சிஸ்டர் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. மதிக்கு அவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கலன்னு தான் அவன்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்." என்றவன் மதியின் கையைப்பிடித்து"வாழ்த்துக்கள் மச்சான் சிஸ்டர் உங்களுக்கும் வாழ்த்துக்கள்" என்றவன் மேடையை விட்டு கீழே இறங்கி இருந்தான்.



"இப்படித்தான் என் பிரென்ட்கிட்டே பேசுவியா அப்படி அவன் என்ன சொல்லிட்டான் பெருசா எதுவும் சொல்லலையே . உண்மையை தானே சொன்னான் நீயே பார்க்கிற தானே என் வீட்ல எனக்கு கொடுக்கிற மரியாதை விட மாறனை தான் அதிகமா மதிக்கிறாங்க " என்றான் மாறன் காந்தல் இருவரையும் பார்த்து .



" உங்க அண்ணாவுக்கு தான் எல்லா மரியாதையும் கிடைக்குது உங்க அண்ணாவோட பேச்சுக்கு தான் உங்க வீட்ல மதிப்பு அதிகம்னு சொல்றீங்களே அப்போ அவர் எவ்வளவு பொறுப்பா இருந்துருக்காருன்னு இதிலிருந்து தெரிஞ்சுக்க வேண்டாம். நீங்களும் தான் இருக்கீங்களே அவர மாதிரி நீங்களும் பொறுப்பா நல்ல பிள்ளையா நடந்திருந்தால் இந்த நேரம் உங்க வீட்ல உங்க அண்ணனை எப்படி நடத்தினாங்களோ அதே மரியாதையை உங்களுக்கும் கொடுத்திருப்பார்களே " என்றாள் கயல்விழி சரியாக .



"அப்போ நான் சரியா இல்லைன்னு சொல்றியா? எனக்கு பொறுப்பு இல்லைன்னு சொல்றியா?" என்றான் அந்த மேடையிலேயே அவளிடம் கோபமாக .



"நீங்க பொறுப்பில்லாதவர் தான்" என்று அவனை நக்கலாக பார்த்தவள் " எங்கே சொல்லுங்க பாப்போம் அப்படி என்ன பொறுப்பா இதுவரைக்கும் ஏதாவது வேலை பண்ணி இருக்கீங்கன்னு" என்றாள் கயல்விழியும் விடாமல் அவனிடம் கேள்வி கேட்டு



அவள் கேட்டதற்கு என் பதில் சொல்வதென்று தெரியாமல் மதி கோபமாக கயல்விழியை முறைக்க ...



அடேயப்பா என்று வாயை பிளந்த கயல்விழி ஏங்க யாருங்க அந்த ஜோடி பார்க்கவே ரொம்ப அம்சமா இருக்காங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா என்றால் மாறன் காந்தள் இருந்த மேடையில் அவர்களுக்கு வாழ்த்துவதற்காக சென்றிருந்த ஒரு தம்பதியை பார்த்து .



யார சொல்றா இவ என்று யோசனையோடு மதி தங்கள் மேடையை விட்டு சற்று தள்ளி போடப்பட்டிருந்த மாறன் காந்தல் இருந்த மேடையை பார்த்தான்.



அங்கே செம்பட்டை வேய்ந்த தலைமுடியுடன் ஓங்குதாங்காக வளர்ந்த ஆறடி உயரம் கொண்ட கம்ரத்தமனையும் அவன் புதிதாக திருமணம் செய்து தன்னோடு அழைத்து வந்திருந்த சாத்விகாவையும் பார்த்தவன் . இவனா இவன் புது பணக்காரன் ஆச்சே ... என்று நினைத்தவன் .



அவங்க எங்களோட பிசினஸ் வட்டாரத்துல இருக்குறவங்க என்றவன் ஆமா ரிசப்ஷனுக்கு வந்திருந்த இத்தனை பேர விட்டுட்டு இந்த ஜோடி மட்டும் பார்த்து கேட்கிற நீ என்றான் கயல்விழியிடம் .



இல்லங்க வந்ததிலேயே அந்த ஆள் தான் பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருந்தாரு ரொம்ப அழகாவும் இருக்காரு . அதைவிட அவர் கூட இருக்கு அந்த பொண்ணு பாருங்களேன் அவளுக்கு எவ்வளவு முடி என்று ஆச்சரியமாக கம்ரத்தமனையும், சாத்விகாவையும் காட்டி பேசினால் கயல்விழி .



அப்போதுதான் சாத்விகாவை நன்றாக கவனித்து இருந்தான் மதி. அவள் அழகான உருவமும் , கருத்த இடையைத் தாண்டி இருந்த தலை முடியையும் பார்த்து வாய்பிழந்தவன் செம ஸ்ட்ரக்சரா இருக்காளே என்று தன் மனதிற்குள் நினைத்தவன் .



என்ன வெச்சிட்டு நீ அவனை சைட் அடிக்கிறியா நான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன் அந்த நினைப்பு இருக்கா இல்லையா என்றான் .



ஏன் இல்லை அதெல்லாம் நல்லாவே இருக்கு என்றவள் நீங்க மட்டும் அந்த பொண்ணு சைட் வைக்கலையா என்னமோ நீங்க ரொம்ப உத்தமன் மாதிரி பேசுறீங்க ... உங்க லட்சணம் எனக்கு தெரியாதா? காந்தலை லவ் பண்றேன்னு சொல்லிட்டு என்கூட குடும்பம் நடத்தி என் வயித்துல புள்ளைய குடுத்து ஆள் தானே நீங்க உங்கள பத்தி நல்லாவே எனக்கு தெரியும் என் உத்தம புருஷா என்றாள் .



Sசிஸ்டர் உங்க புருஷன் பேரும் உத்தமனா நான் வேற பேரு இல்ல கேள்விப்பட்டேன் என்று கேட்டபடி அவர்களுக்கு வாழ்த்து சொல்ல மேடை ஏறினான் கம்ரத்தமனின் நண்பனும் அவனது பிஏவுமான உத்தமன்



உத்தமனை பார்த்ததும் மதியின் முகம் அஷ்ட கோணலானது.



அதைக் கண்டு கொள்ளாதவன் வாழ்த்துக்கள் என்று மதிக்கு கைகுலுக்குவதுபோல அவனைத் தாண்டி சென்று கயல்விழியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அவளுக்கு வாழ்த்து தெரிவித்தவன் சிஸ்டர் உங்க புருஷன் பேர மாத்திட்டாங்களா ? என்றான் சிரித்துக் கொண்டே .



கயல்விழியும் சிரித்துக் கொண்டே நானும் அப்படித்தான் அண்ணா நினைச்சுட்டு இருக்கேன் . அந்த பேரு என் புருஷனுக்கு வைக்கிற அளவுக்கு அவரு ஒன்னும் அவ்வளவு வொர்த் இல்லை என்றாள் .



கயல் நீ ரொம்ப பேசுற என்று மதி கோபப்பட ... அவன் கோபம் கண்டு பயந்த கயல்விழி அவனை விட்டு சற்று விலகி நிற்க..



ஐயோ சிஸ்டர் இவன் கோபத்துக்கு எல்லாம் நீங்க பயப்படலாமா இவன் சும்மா இப்படித்தான் அப்பப்போ கோபப்படுறேன் அதை பண்றேன் இதை பண்றேன்னு ஏதாவது பில்டப் போட்டுக்கிட்டே இருப்பான் இதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்றான் .



அவன் பேச்சில் சற்று இலகுவான கயல்விழி நீங்க சொல்றது சரிதானா எனக்கு அதை புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் எடுக்கும் நினைக்கிறேன் என்று சிரித்தாள்.



அவர்களோடு நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்த உத்தமன் சரிமா நான் கிளம்புறேன் உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் இந்த அண்ணனுக்கு மறக்காம கால் பண்ணு என்று சொல்லி அவன் விசிட்டிங் கார்டை எடுத்து கயல்விழியிடம் நீட்டினான்.



அதை வாங்கி அதில் இருந்த அவன் பெயரை பார்த்து அண்ணா உங்க பேர் உத்தமனா அதனாலதான் இவரை நீங்க கிண்டல் பண்ணீங்களா என்று சொல்லி ஆச்சரியமாக கேட்டாள் .



இப்போதைக்கு இந்த மண்டபத்துல இந்த பேர்ல என்ன தவிர்த்து வேறு யாருமில்லை நினைக்கிறேன் என்று சிரித்தான் .



பார்த்த மாத்திரத்தில் கயல்விழியும் உத்தமனும் அண்ணன் தங்கை போல பேசிக் கொள்வதை பார்த்து மதி கடுப்பானவன் சரி கொஞ்சம் சீக்கிரம் மேடை விட்டு இறங்குறியா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றான் .



எங்கடா ஒருத்தரையும் காணோமே உன் அண்ணன் மாறனை பார்க்க வந்த கூட்டத்தில் பாதி கூட உன்னை பார்க்க வரலையே என்று உத்தமன் மதியை கிண்டல் செய்ய ..



வருபவர் எல்லாம் மாறனுடன் மதியை சம்பந்தப்படுத்தி பேசுவதை கேட்டு எரிச்சலானவன் அந்த கோபத்தை உத்தமனிடம் காட்டினான். தேவையில்லாமல் பேசிட்டு இருக்காதே கொஞ்சம் கீழே போறியா என்றான் .



சரி சரி டென்ஷன் ஆகாத நான் கிளம்புறேன் என்றவன் கயல்விழியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் .
 
Top