- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
ரிசெப்ஷன் முடிந்த கையோடு இரு ஜோடிகளை ஹனிமூன் செல்ல சொல்லி வசுந்தரா மாறன், மதி இருவரிடமும் கேட்டார்.
"தமிழ் என் பேரன்ங்க ரெண்டு பேர் எந்த நாட்டுக்கு ஹனிமூன் போறாங்கன்னு கேட்டு அங்க அவங்க தங்கறதுக்கு ஊரை சுத்தி பாக்குறதுக்குன்னு நம்ம ஸ்டாப்ஸ் கிட்டே சொல்லி எல்லா ஏற்பாடும் செய்ய சொல்லிடு " என்றார் வசுந்தரா .
அதை கேட்டதும் காந்தளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை தன் அருகில் அமர்ந்து இருந்த மாறனிடம் "சார் அப்போ நாம ரெண்டு பேரும் ஸ்விட்சர்லாந்து போலாமா? அங்கே எல்லா இடமும் அழகளாக இருக்கும்னு கேள்வி பட்டிருக்கேன். நிறைய இடம் சுத்தி பார்க்கவும் இருக்கு . அங்கே போகலாம்னு பாட்டிகிட்டே சொல்லுங்க ப்ளீஸ்" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி .
"நாம போறதே ஹனிமூனுக்கு . ஏன் ஊரை சுத்தி பார்க்கணும்னு சொல்ற " என்றான் .
"ஏன் ஹனிமூன் போனா ஊரை சுத்தி பார்க்கக்கூடாதுனு என்ன இருக்கு " என்றாள் காந்தள்.
"ஹனிமூன் எதுக்கு போறோமோ அந்த வேலையை பார்க்குறது விட்டுட்டு ஊரை சுத்தி பாக்க கூட்டிட்டு போக சொல்ற.. ம்ஹும்... அதெல்லாம் என்னால முடியாது. நீ சொன்ன மாதிரி ஹனிமூனுக்கு ஸ்விட்சர்லாந்தே போகலாம். அங்க கிளைமேட் நல்லா இருக்கும் . குளிருக்கு இதமா நம்ம சூட்டை தனிச்சுக்கலாம் " என்றான் காந்தளின் கையை பிடித்து நெட்டி முறித்தபடி .
மாறன் சொன்னதை கேட்டதும் அவன் கைப்பிடிக்குள் இருந்த தன் கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டவள் "ம்கூம்... போனதுல இருந்து ரூமுக்குள்ளயே கட்டில்ல உருளுறதுக்கு இங்கயே இருந்துக்கலாம் . இங்கையும் எப்பவும் இதே வேலையா தானே இருக்கீங்க " என்றாள் அவன் தோளை இடித்து .
"எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல... வா நம்மளை ரெண்டு மூணு நாளைக்கு யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்லிடலாம் . ரூமுக்கு போகலாமா இப்போவே... மூணு நாளும் ஆய கலைகள் 64 யும் ட்ரை பண்ணி பார்த்துடலாம் . அந்த மூணு நாளும் உடம்பை தெம்பேத்திக்க சாப்பாடு மட்டும் வேலைக்கு வேலை ரூமுக்கு கொடுத்து விட சொல்லிடலாம் . ஒன்னாவ ரெண்டு பேரும் சாப்பிடலாம், ஒன்னாவே ரெண்டு பேரும் தூங்கலாம், ஒன்னாவே ரெண்டு பேரும் குளிக்கலாம் ... குளிச்சிட்டு வந்து அப்படியே ரெண்டு பேரும் கட்டில்ல...." என்று காந்தளை பார்த்து கண்ணடித்தான் .
அவன் சொன்னதை கேட்டு வாய் பிறந்தவள் "ஐயோ ! சார் என்ன இது ... யாராவது கேட்டுட போறாங்க . ரொம்ப தான் பண்றிங்க நீங்க " என்று சிவந்திருந்த முகத்தை அவனிடம் காட்ட முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு .
அவள் வெட்கப்படுவதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட மாறன் காந்தலிடம் இருந்து தன் பார்வையை மற்றவர்களிடம் திருப்ப... அதுவரை இவர்கள் இருவரும் தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்வதை பார்த்துகொண்டிருந்த மற்றவர்கள் எதையும் கவனிக்காதது போல தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வது போல நடித்தனர் .
அவர்களிடம் இருந்து தன் பார்வையை திரும்பியவன் தனக்கு எதிரே இருந்த மதியை பார்த்தான் . அவன் மாறனும், காந்தளும் கொஞ்சிக்கொள்வதை பார்த்து கடுப்பில் இருவரையும் பார்த்து முறைத்தபடி அமர்ந்து இருந்தான்.
அதை கண்டும் காணாமல் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.
"அவங்களை ஏன் இப்போ முறைச்சிட்டு இருக்ககீங்க... பாட்டி கேட்டதை பத்தி யோசிச்சீங்களா . நம்ம ரெண்டு பேரும் எங்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா ?" என்றாள் கயல்விழி.
"ஏய் என்ன ஓசில ஊரை சுத்தி பாக்கலாம்னு நினைச்சியா ... " என்றான் மதி .
"நான் ஏன் ஓசில சுத்தி பார்க்க போறேன் . வேணும்னா சொல்லுங்க உங்களையும் என் காசுல ஊரை சுத்தி பாக்க கூட்டிட்டு போறேன் " என்றாள் கயல் .
"ஓஹோ ... நான் சொன்ன இடத்துக்கு உன்னால கூட்டிட்டு போக முடியுமா ?" என்றான் அவளை திமிராகா பார்த்து .
"ஓ... எங்க போகணும்னு சொல்லுங்க அங்க உங்களை நான் என் செலவுல கூட்டிட்டு போறேன்" என்றாள் கயலும் விட்டுக்கொடுக்காமல் .
"சரி அப்போ எனக்கு கிரீஸ் போகணும்னு ரொம்ப நாள் ஆசை . எங்கே என்னை அங்கே கூட்டிட்டு போ பார்க்கலாம் " என்றான் கயலை நக்கலாக பார்த்த்து .
"கிரீசா... இந்த வண்டி சரியா ஓடலனா கிரீஸ் ஊத்துவாங்களே அந்த பேரு மாதிரி இருக்குல்ல நீங்க சொல்ற ஊரு " என்றாள் கயல்.
"ஊரு பேறே என்னனு தெரியலை நீ நான் சொல்ற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போறேன்னு வேற பேசுற... " என்று அவளால் ஏலக்காரமாக பார்த்தவன்.
"நீ எதுவும் பண்ண வேணாம் கொஞ்சம் தொணதொணன்னு பேசாம இரு போதும் " என்று கயல்விழியின் வாயை அடைத்தான்
"என்ன நான் சொன்னது கேட்டுதா? இல்லையா? ஹனிமூனுக்கு எங்கே போகணும்னு முடிவு பண்ணிட்டிங்களா ? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம ஆளாளுக்கு அவங்க பொண்டாட்டிகிட்டே என்ன ரகசியம் பேசுறீங்க" என்றார் வசுந்தரா இரு ஜோடிகளை பார்த்து.
"பாட்டி நான் ஹனிமூனுக்கு போகல ..." என்றான் மதி .
"என்ன டா மதி இப்படி சொல்றே.... உனக்கும் உன் அண்ணாவுக்கும் ஒண்ணா ஹனிமூன் அனுப்பணும்னு நினைச்சேன் டா நான். இப்போ ஏன் நீ ஹனிமூன் வேணாம்னு சொல்ற.. " என்றார் மரகதம் .
"அம்மா.. என்ன மா நீ புரியாம பேசுற .. இவளை இந்த நிலைமையில எப்படி நான் ஹனிமூன் கூட்டிட்டு போகமுடியும் . இவளே வயித்தை தள்ளிட்டு இருக்கா... ஏற்கனேவே ரிசெப்சனுக்கு வந்த ரெண்டு பெருசுங்க .. கல்யாணம்ம் செய்துட்டு வளைகாப்பு வைப்பாங்க . நீங்க உங்க மனைவிக்கு எங்களை எல்லாம் கூப்பிடமா வளைகாப்பே முடிச்சிட்டீங்க போல.. அதுக்கு பிறகு ரிசெப்ஷன் வெச்சிருக்கீங்கன்னு கிண்டல் செய்றாங்க . இதுல ஹனிமூன் போனேன்னு வை அப்பறோம் அங்க பொய் இவ கூட நான் ஹனிமூன் கொண்டாட முடியாது . அங்க போய் இவளுக்கு எப்போ புல்லை பிறக்கும்னு தினம் தினம் பாத்துட்டு இருக்கனும் . அதுக்கு பேசாம நான் இங்கையே இருந்துகிறேன் . அதுவுமில்லாம எனக்கு இங்கே நிரைய வேலை இருக்கு " என்று தன் எதிரே இவன் பேசுவதை எல்லாம் கிட்டும் கேட்காமல் தன் மொபைலை நோண்டிக்கொண்டு இருந்த காந்தளை பார்த்து கூறினான்.
"எங்க அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல... எனக்கு டெலிவரி ஆக இன்னும் நிறைய நாள் இருக்கு ." என்றவள்.
"அமரன் படம் நம்ம ரெண்டு பேரும் போய் இருந்தோம் அதுல சாய்பல்லவி கூட ப்ரெக்னெண்டா இருந்தாலும் ஹனிமூன் போவேன்னு சொன்னாங்களே . அது மாதிரி நானும் அவங்களை மாதிரி முதல்ல ஹனிமூன் போகும்.. பின்னே குழந்தை பெத்துக்க போகும் " என்று சாய்பல்லவியை போல முகத்தை வைத்துக்கொண்டு மதியிடம் பேசினாள்.
அவள் அப்படி செய்வதை பார்த்து அவள் கியூட்டான முக பாவனையை பார்த்து ஒரு நிமிடம் அவனையும் அறியாமல் ரசித்தவன் சட்டென்று தலையை உலுக்கியவன் "ஏய் கொஞ்சம் சும்மா இருக்கியா அங்கே போய் உனக்கு ஒண்ணுக்கிடைக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா அப்பறோம் இவங்க என்னை கேக்குற கேள்விக்கு என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது " என்றவன் .
"பாட்டி நான் எங்கயும் போகல.. இவளுக்கு டெலிவரி முடியட்டும் அப்பறோம் பாக்குறேன் " என்றான் .
" சரி டா நீயே ஏதோ உன் பொண்டாட்டிமேல அக்கறை காட்டுற.. இதை பாக்குற அப்போவே சந்தோசமா இருக்கு " என்ற வசுந்தரா .
"கயல் உனக்கு நல்ல படியா டெலிவரி ஆகி குழந்தையை பெத்து கொடு ஒரு 6 மாசம் போனதும் எப்போ குழந்தை சாப்பிட ஆரம்பிக்குறாளே அப்போ நானே உங்க ரெண்டுபேரையும் ஹனிமூன் அனுப்பி வெக்குறேன் " என்றார் வசுந்தரா .
பின் மாறன் , காந்தள் இருவரையும் பார்த்து "சரி அப்போ நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் எங்க போலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க " என்றார் .
"பாட்டி ... " என்று மாறன் பேச வர...
"பாட்டி அவங்களும் ஹனிமூன் போக வேணாம் " என்றான் இடையில் புகுந்து மதி கூற..
"ஏங்க இப்போ எதுக்கு ஒங்ககையும் ஹனிமூன் போக வேணான்னு சொல்றிங்க.. என்ன ஆச்சு ?" என்றாள் கயல்.
"ஆமா மதி நீ போகலைன்னு சொன்னா அதுக்கு காரணம் இருக்கு சரின்னு நாங்களும் சொல்லிட்டோம். ஆனா மாறனும், காந்தளும் ஹனிமூன் போகவேணாம்னு ஏன் சொல்ற... அவங்க போறதுல உனக்கு என்ன டா பிரச்சனை நீ பழசை எல்லாம் மனசில வெச்சிட்டு அவங்களை போக கூடாதுனு சொல்றியா? என்ன?" என்றார் தமிழ்மாறன் .
"அப்பா... இன்னமும் நான் பழசை நினைச்சிட்டு இருக்கருத்துல எனக்கு என்ன ஆக போகுது . எப்போ மாறனும் , காந்தளும் கல்யாணம் செய்துகிட்டாங்களோ அப்போவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் . நீங்க என்னை இன்னும் பழையமாதிரியே நினைச்சிட்டு இருக்கீங்க..." என்றவன் .
தனக்கு எதிரே இருந்த இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு "அப்பா உனக்கே நல்ல தெரியும் . நம்ம கம்பெனியில் அந்த சைல்ட் ப்ரோடக்ட் சம்மந்தமா ஆஃபிஸில் பரபரப்பா வேலை போய்ட்டு இருக்கு . இந்த நேரத்துல நான் என்னோட திறமையை காட்ட கிடைச்ச வாய்ப்பை வீண் பண்ண விரும்பல" என்றான் .
"நீ வேலை பாக்கணும், உன் திறமையை நிரூபிக்கணும்னா நீ போய் வேலை பாரு . அதுக்காக ஏன் நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போக கூடாதுனு சொல்ற.." என்றான் மாறன் கடுப்போடு .
"பொண்டாட்டி கூட ஜாலியா ஹனிமூன் போக எவ்வளவு துடிக்கிறான் பாரு..." என்று அவனை முறைத்தவன் "இரு.. இரு... துடிக்குற உன் இதயத்தை இப்போ சில்லு சில்லா நொறுக்க போறேன் பாரு டா..." என்று உள்ளுக்குள் மாறனையும் காந்தளையும் ஹனிமூன் அனுப்ப கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டவன் .
"எனக்கு ஒன்னும் நீயும் உன் பொண்டாட்டியும் ஹனிமூன் போறதை பார்த்து பொறாமை இல்லை. நான் என்னோட டீமில் காந்தளும் வேலை செய்ய்ய வேணும்னு சொல்லி இருந்தேனே அது நியாபகம் இருக்கா ? இல்லையா?" என்று இருவரையும் பார்த்தவன் .
"நீங்க ரெண்டு பேரும் கிளம்பி போய்ட்டா அப்பறோம் என்னோட வேலை எப்படி நடக்கும் . அதனால இந்த ப்ராஜெக்ட் வேலையை முடிச்சு கொடுத்துட்டு நீங்க எங்க வேணா போங்க " என்றான்.
"மதி எதுக்காக இந்த நேரத்துல ப்ரொஜெக்ட்டை கொண்டு வர... அவங்க முதல்ல ஹனிமூன் போயிடு வரட்டுமே " என்றார் வசுந்தரா
அவர் பேசியது கேட்டு மதி பதில் கூற வர...
"பாட்டி அவனை எதும் சொல்ல வேணாம் . மதியோட போரெஜேக்ட் முடிஞ்ச பிறகே நாங்க ஹனிமூன் போகிறோம். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை " என்று காந்தள் இடைமறித்து அவர்கள் எங்கும் செல்லவில்லை என்று தீர்மானமாக கூறிவிட்டாள்.
அதை கேட்டதும் மதிக்கு அபப்டி ஒரு சந்தோசம் அதே சந்தோசத்தோடு காந்தளை பார்க்க அவளோ அவனை சட்டை செய்யாது எழுந்தவள் "பாட்டி நான் ரூமுக்கு போறேன் " என்றவள் அங்கிருந்து செல்ல..
எப்படியோ அவன் நினைத்தது நடந்துவிட்ட சந்தோசத்தில் மதியின் பார்வை மாடியேறி சென்ற காந்தளை பின் தொடர்ந்தது அவ வன்மம் கலந்த பார்வையை யாரும் கவனிக்கவில்லை . தன் பார்வையில் இருந்து காந்தள் மறையும் வரை அவள் மீதிருந்த தன் பார்வையை விளக்காதவன் அவள் மறைந்ததும் " சரி இப்போ தான் யாரும் எங்கயும் போகலையே நான் போய் அடுத்து என் வேலையை ஆரம்பிக்குறேன்" என்று அங்கிருந்து எழுந்தவன் வெளியே கிளம்பினான்.
அவன் சென்றதும் மற்றவர்கள் அடுத்ததடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட .. தனனியும், கந்தளையும் ஹனிமூன் செல்ல விடாமல் தடுத்த மதியை நினைத்து கடுப்பான மாறன் . அவனே வேலை செய்ய ஆர்வம் காட்டும் போது தன்னால் எதற்காக அவன் வேலை கெடவேண்டும் என்று நிதானமாக யோசித்தவன் வேறு வழி இல்லாமல் வேலை முடிந்ததும் அதன் பிறகு செல்லலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டன.