- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
கேரளாவில் உள்ள பைத்தமாலா காட்டு பகுதிக்குள் தான் தன் நண்பர்கள் குழுவுடன் ட்ரக்கிங் சென்றிருந்தான்.
ட்ரெக்கிங் செய்வதற்கு மிகவும் சவாலான காட்டுப்பகுதி அது சுமார் 5 மணி நேர பயணத்திற்குப் பின்பு ஒரு இடத்தில் ஓய்வெடுப்பதற்காக நண்பர்களுடன் அங்கே இருந்த பெரிய மரத்தில் சாய்ந்து மூச்சி இருக்க அமர்ந்திருந்தான் அயன்.
"டேய் அயன் உண்மையாவே நீ அயன் மேன் தாண்டா உனக்கு ஈடு கொடுத்து எங்களால் இவ்வளவு தூரம் வர முடியல. எப்படிடா உனக்கு இந்த மாதிரி ஒரு ஆர்வம் வந்துச்சு. எங்களுக்கெல்லாம் அந்த காட்டுக்குள்ள வரதுக்கு ரொம்ப பயமாயிடுச்சு. ஏதோ நீ எங்களை வற்புறுத்தி கூட கூப்பிட்டதுனால தான் வந்தோம்".
"ஆனா நீ என்னவோ ராத்திரியில சிட்டில ஊர் சுத்திட்டு வர்றது மாதிரி இல்ல காட்டுக்குள்ள சர்வ சாதாரணமா போற" என்றான் அவன் நண்பன் கவின்.
அவன் சொன்னதை கேட்டு மெல்ல சிரித்தவரே தான் அணிந்திருந்த டி ஷர்டை கழட்டினான் அயன்.
கோவில் படிகட்டுகள் போல அடுக்கடுக்காக அவன் உடலில் இருந்த படிக்கட்டுகளை பார்த்த கவின் "டே மச்சான் இத்தனை வருஷமா உன் கூட வேலை பண்றேன். ஆனா நீ இப்படி உடம்பு, மெய்ண்டைன் பண்ணிட்டு இருக்கிறது எனக்கு தெரியாதே என்னடா இது உடம்பை இப்படி வச்சிருக்க" என்றான்.
" ஆமா அயன் எங்களுக்கும் உன்னை மாதிரி உடம்பு வேணும் அதுக்கு நாங்க என்ன செய்றது" என்றான் அவனுடன் வந்த மற்றொரு நண்பன் ராகவ்.
நண்பர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டே உடலில் இருந்த உயர்வையை ஒரு டவலால் ஒற்றி எடுத்தவன். "தினமும் என்ன மாதிரி எக்சைஸ் செய்து அளவான உணவுகளோடு உடம்பை பராமரித்தாலே என்ன மாதிரியே நீங்களும் ஆகலாம். தவிர அடிக்கடி இந்த மாதிரி வெளியே வரணும் உங்களுக்கு புடிச்ச விஷயத்தை செய்யணும் அது எந்த மாதிரி விஷயமாக இருந்தாலும் சரி" என்றான் அயன்.
"ஏ மச்சான் ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம்னு சொன்னா லேட்நைட் பார்ட்டி பண்றது தான். அத தினமும் செஞ்சா உடம்பு இந்த மாதிரி ஆயிடுமா" என்றான் எதுவும் தெரியாதவன் போல.
"ஓ தாராளமா பார்ட்டி பண்ணலாமே. அப்படி தினமும் நீயும் இவனும் பார்ட்டி பண்ணி ட்ரிங்க்ஸ் அது இதுன்னு நிறைய சாப்பிடுங்க சீக்கிரமா என்ன மாதிரி ஆக முடியாது ஆனா பரலோகம் வேணா போகலாம்" என்றான் நக்கலாக அயன்.
அவனை முறைத்த கவின் "உனக்கு கொழுப்புடா நீ மட்டும் இப்படி உடம்பு வச்சுக்கணும். நாங்க எல்லாம் இப்படி பிட் இல்லாம இருக்கணும்னு வேணும்னு நீ எங்களுக்கு எதுவும் சொல்ல மாட்டேங்குற" என்றான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகவ் கவின் தோளை சுரண்டினான் .
"இருடா...இருடா மச்சான் நமக்காகத் தானே இவன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் ஏதாவது கேட்டா சரியா பதில் சொல்றனா பாரேன்" கவின் புலம்ப.
"நீங்க டெய்லி பார்ட்டி, பொண்ணுங்கன்னு சுத்திக்கிட்டு இருந்தா எப்படிடா என்ன மாதிரி ஆக முடியும். எந்த வேலையும் செய்யாம கஷ்டப்படாம நினைச்சது நடக்கணும்னா அது கடவுளால் கூட முடியாது" என்றான் அயன்.
மீண்டும் ராகவ் கவினின் தோளை சுரண்ட "ம்ம்...ம்ம்ம்ச் சொல்லு மச்சான்" என்றான்.
"எனக்கு பாத்ரூம் வருதுடா" என்று அடி வயிற்று பிடித்துக் கொண்டு ராகவ் நிற்க.
"வந்தா போக வேண்டியது தானே அதுக்கு ஏன் என் தோளை சுரண்டுற" என்றான் கவின்.
"இல்லடா மச்சான் தனியா போக எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு இந்த காட்டு பாக்கவே அப்படித்தான் இருக்கு நீ கொஞ்சம் துணைக்கு வாயேன்" என்றான்.
"மச்சான் அடுத்த தடவை வரும்போது இவனை கழட்டி விட்டுட்டு நம்ம ரெண்டு பேரும் மட்டும் வந்திடுவோம். புதுசா கல்யாணம் ஆன பொண்டாட்டி மாதிரி என் முதுகு ஒட்டிக்கிட்டு என் உயிரை எடுக்கிறான்" என்று புலம்பிய கவின்.
"வந்து தொலை போகலாம்" என ராகவ்வை அழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த இடத்தை விட்டு சற்று தள்ளி சென்றான்.
சிக்னலே கிடைக்காத காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து அன்றைய பொழுது முழுவதும் தன் நண்பர்களோடு காட்டில் கழித்தான் அயன்.
மதியம் இரண்டு மணியை கடந்திருக்க "சரி நம்ம இப்போ கிளம்புனா தான் ஒன்பது மணிக்குள்ள காட்ட விட்டு வெளியே போக முடியும். சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க" என்றவன் வேக வேகமாக தன் பொருட்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டு அவர்கள் அமைத்திருந்த கூடாரத்தை பிரித்து எடுத்து கொண்டிருந்தான்.
"என்னடா மச்சான் இப்பதான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள திரும்பவும் கிளம்பணுமா" என்று சலித்துக் கொண்டான் ராகவ்.
"இந்த காட்டுக்குள்ள மதியம் வரைக்கும் தாண்டா அழகான இயற்கை எழிலோட மேகங்கள் எல்லாம் நம்மள தழுவி விட்டு போற.. ஒரு ஏகாந்தம் கிடைக்கும் .அதுக்கு மேல இந்த காட்டுக்குள்ள சுத்தி பார்க்கவோ அனுபவிக்கவோ எதுவும் கிடையாது. அதனாலதான் போகலாம்னு சொல்றேன் ஏற்கனவே லேட் ஆயிடுச்சு சீக்கிரம் கிளம்புங்க" என்று நண்பர்களே அவசரப்படுத்தி காட்டிவிட்டு வெளியேற மூவரும் கிளம்பினர்.
சரியாக மாலை 7 மணியை கடந்திருக்கும் அவர்கள் காட்டை விட்டு வெளியே வருவதற்கு.
மூச்சிரைக்க தங்கள் இடத்திற்கு ஒரு வழியாக மூவரும் வந்திருக்க "மச்சான் நல்ல வேலை நீ சொன்னது சரிதாண்டா இதுக்கு மேல இந்த காட்டுக்குள்ள இருந்தா எந்த மிருகம் வந்து நம்மள வேட்டையாடும்னு தெரியாது. அதுங்க சத்தம் எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு. இனிமேல் நான் இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வரமாட்டேன் எனக்கு உசுரு முக்கியம் அதை புரிஞ்சுக்கோ" என்றான் கவின்.
"ஏண்டா என்ன மாதிரி உடம்பு வேணும்னா நான் செய்யறது எல்லாம் செய்கிறேன்னு சொன்ன. ட்ரக்கிங்கும் செய்தா தானே உடம்பு வலுவாய் இருக்கும்" என்றான் அயன்.
"இல்ல மச்சான் ஆஃபீஸ்ல உன்கூட ஒரு நாள் முழுக்க இருக்கேன். அதுவே எனக்கு தினமும் ஒர்கவுட் பண்ற மாதிரி தான். எனக்கு கொஞ்சம் கூட ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கிக்கிட்டே இருப்ப நீ....இதுல நீ கூப்பிட்டேன்னு இத்தனை வருஷம் கழிச்சு ட்ரக்கிங் வந்தேன் அந்த ஒரு நாள் அனுபவம் எனக்கு போதும் தயவு செய்து இனிமேல் என்ன இங்க கூப்பிடாதே" என்றான் கவின்.
அவன் பேசியதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது அயனின் போன் வரிசையாக நோட்டிபிகேஷன் சத்தத்தால் நிறைந்து கொண்டு இருந்தது.
அதை எடுத்து பார்க்க நிறைய பிசினஸ் விஷயமான நோட்டிபிகேஷன் whatsappல் மெசேஜ் மூலமாக வந்து குவிந்து இருக்க அதில் வந்திருந்த ஒரே ஒரு மெசேஜ் மட்டும் அயனின் கவனத்தை ஈர்த்தது.
நோட்டிபிகேஷனை திறந்து பார்க்க தன் கல்லூரி நண்பர்கள் மட்டும் இணைந்திருக்கும் வாட்சப் குழுவில் இருந்து அனைவரும் சேர்ந்து ஏதோ திருமணத்தில் இருந்து மண மக்களுடன் சேர்ந்து செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பி இருந்தனர் .
போட்டோவை ஜூம் செய்து தன் நண்பர்கள் ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அயன்.
சிரித்த முகமாக நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து வந்தவனின் முகம் திடீரென சுருங்கி கருத்து விட்டது அந்த போட்டோவை மீண்டும் மீண்டும் ஜூம் செய்து பார்த்தவன்.
உடனே கால் ஹிஸ்டரி ஓப்பன் செய்து தன்னுடைய நண்பனுக்கு கால் செய்தான். "டேய் மித்ரா இப்ப நீ எங்க இருக்க?" என்று கேட்டான்.
"ஏண்டா வாட்ஸ் அப் குரூப்ல நான் அனுப்புன போட்டோவ பார்க்கலையா நாங்க எல்லாரும் பங்க்ஷன்ல தான் இருக்கோம். ஸ்ரீ கூட இங்க தான் இருக்கான் அவன் கிட்ட பேசுறியா?" என்றான் மித்ரன்.
"ஏன் இந்த கல்யாணத்தைப் பற்றி என்கிட்ட எதுவுமே சொல்லல நீங்க" என்றான் சற்று கோபமாக .
"என்னடா மச்சான் உனக்கும் இன்விடேஷன் வந்திருக்கும் நினைச்சு தான். நாங்க எல்லாம் எங்க கிளம்பி வந்துட்டோம்" என்றான் மித்ரன் .
"முகூர்த்தம் எத்தனை மணிக்கு?" என்றான் அயன்.
"காலையில பிரம்ம முகூர்த்தம்னு சொன்னாங்க நாலு டு ஆறு மணிக்குள்ள முகூர்த்தம்" என்றான் மித்ரன்.
மித்ரன் விஷயத்தை சொன்னதும் அவனிடம் திருமணம் நடக்க போகும் இடம் எங்கே என்று கேட்டுக் கொண்டு தன் போனை கட் செய்தவன் வேகமாக தான் பார்க் செய்து இருந்த இடத்திற்கு வந்த அயன் தன்னுடைய மகேந்திரா தோர் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தவன்.
தூரத்தில் சிரித்து பேசி கிண்டல் அடித்துக் கொண்டு மெதுவாக வந்து கொண்டு இருந்த கவின், ராகவ் இருவரையும் பார்த்தான். ஏற்கனவே பரபரப்பில் இருந்த அயன் ஜீப் ஹாரனை அழுத்தி பிடிக்க...
இருவரும் அதில் அதிர்ந்தவர்கள் ஜீப்பிற்குள் அமர்ந்திருந்த அயனின் முகத்தை பார்த்தனர்.
அவன் முகம் சரியில்லை என்பதை உணர்ந்ததும் அவசரமாக வந்து ஜீப்பில் ஏரியமர்ந்த அடுத்த நொடி கேரளாவை விட்டு தமிழ்நாட்டில் நோக்கி புயல் வேகத்தில் ஜிப்பை செலுத்தினான்.
கவின் ராகவும் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு எங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக அவனோடு சென்றனர்.
அயன் இருந்த கோபத்தை பார்த்து அவனிடம் பேசுவதற்கே இருவரும் நடுங்கினர்.
அவன் கோபம் இவர்கள் இருவரும் அறிந்ததே இருவரும் அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவும் இல்லை தங்களுக்குள் பேசிக் கொள்ளவும் இல்லை.
கிட்டத்தட்ட பதினோரு மணி நேர பயணத்தை ஏழு மணி மேல நேரத்தில் கடந்த இரவு இரண்டரைப் போல தன் நண்பர்களை அவர்கள் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டில் இறக்கிவிட்டு தன்னுடைய வீட்டை நோக்கி புறப்பட்டான் அயன்.
வீட்டிற்கு வந்ததும் சிறிது கூட ஓய்வெடுக்காமல் நேராக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு பிரஷ் ஆகி வெளியே வந்தவன் கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்து பெருமை கொண்டவன்.
மிடுக்கான ஒரு ஆடையை மாட்டிக் கொண்டு மித்ரன் இருந்த மண்டபத்திற்கு கிளம்பினான்.