layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
சரியாக நான்கு மணிக்கு எல்லாம் மண்டபத்திற்குள் நுழைந்து விட்டான் அயன்.

மண்டபத்திற்குள் நுழையும்போது அயனின் பின்னால் இருவர் பேசிக்கொண்டு வர அந்த குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான் அங்கே கவின் ராகவ் இருவரும் அவன் பின்னால் நடந்து வந்தனர்

அவர்களை புருவம் முடிச்சிட அயன் பார்க்க..

என்ன மச்சான் அப்படி பாக்குற எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம நீ எதையுமே செய்ய மாட்டியே அப்படியே நீ சொல்லலனாலும் அதை தெரிஞ்சுக்கிட்டு வருது தானே எங்க வேலை என்று இருவரும் சிரிக்க.இறுகிய முகத்தோடு அவர்களைப் பார்த்தவன் திரும்பி வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்தான்.

வந்தவன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த தன் நண்பர்கள் குழுவை கண்டதும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து விட்டான் அயன்.

அவன் பின்னால் வந்த கவின் ராகவ் இருவரும் மித்திரனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ இடம் வந்தவர்கள்

ஏண்டா இந்த கல்யாணத்துக்கு வந்துட்டு எதுக்காக செல்பி எடுத்து குரூப்ல போட்டீங்க என்றான் கவின்.

ஏண்டா கவின் வழக்கமா நம்ம பிரண்ட்ஸோட பங்க்ஷனுக்கு மேரேஜ்க்கோ எங்க போனாலும் யாரெல்லாம் வந்திருக்குமோ எல்லாரும் சேர்ந்து குரூப்பா போட்டோ எடுத்து போஸ்ட் பண்றது தானே விளக்கம் அதே தானே இன்னிக்கு செய்தோம் என்றான் ஸ்ரீ புரியாமல்.

நீங்க குரூப்ல இத்தனை நாள் போட்ட போஸ்ட் எல்லாம் பார்த்துட்டு எங்கேயும் வந்திருக்கானா என்றான் கவின் .

இல்லடா அது தான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு இதுவரைக்கும் எங்கேயுமே வராத ஐயன் இந்த கல்யாணத்துக்கு மட்டும் எப்படி வந்தான் என்றான் யோசித்தபடி.

எதுக்கு வந்தான்னு என்கிட்ட கேக்குறியா இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் ஏன் இந்த கல்யாணத்துக்கு வந்தான்னு உங்க எல்லாருக்கும் தெரியும் வெயிட் அண்ட் வாட்ச் என்றான் ராகவ்.

ஸ்ரீ என் குழப்பமாக அவர்களைப் பார்க்க... எங்கள பார்க்காத மேடையப்பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன வேணாம் நடக்கலாம் நீ கண்ணிமைக்கிற நேரத்துல எதையும் மிஸ் பண்ணிடாத ஓகேவா என்று கவின் அவன் முகத்தை பிடித்து மேடையை நோக்கி திருப்பி வைத்தான்.

இங்கே மித்ரன் அயனிடம் டேய் என்னடா வந்ததுல இருந்து முகத்தை இறுக்கமாக வச்சிருக்க என்றான்.

அயன் எந்த பதிலும் பேசாமல் மணமேடையில் அமர்ந்திருந்த மணமக்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

என்னடா எதுவுமே பேச மாட்டேங்குற என அவனை கடிந்து கொண்ட மித்ரன் சரிடா சாரி உன்கிட்ட சொல்லாம இந்த ஃபங்ஷனுக்கு வந்தது என்னோட தப்பு தான்.

உனக்கும் ரோஜாவுக்கும் இடையில் பேச்சு வார்த்தையே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு பிறகு அவளை பத்தி இதுவரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்டதே இல்ல அப்படி இருக்கும்போது அவ கல்யாணத்துக்கு நாங்க வந்ததை எப்படி உன்கிட்ட சொல்ல முடியும் என்றான் மித்ரன்.

பரவாயில்ல அதான் எனக்கு தெரிஞ்சிருச்சே எங்க ஃப்ரெண்ட்ஷிப் கட்டாயி எத்தனையோ வருஷம் ஆயிடுச்சு. அதுக்காக அவ கல்யாணத்துக்கு கூடவா என்ன இன்வைட் பண்ண அவளுக்கு தோணல அந்த அளவுக்கு இன்னமும் என் மேல் அவ கோவமா இருக்காளா அதை கேட்டுட்டு போக தான் இங்கே வந்தேன் என்றான் அயன்.

டேய்.. டேய்... எதுவும் அவ கிட்ட பேசி பிரச்சனை வளர்த்து விட்டுடாத அயன்.

அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆனா பாரு கல்யாண பொண்ணுக்கான எந்த ஒரு சந்தோஷமும் இல்லாம அவன் முகத்தை எப்படி வச்சிட்டு உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்ல..

நானும் கவனித்தேன் என்பது போல அயன் தலையை ஆட்டினான்.

ஏன் அவளுக்கு இந்த கல்யாணத்துல எதுவும் பிரச்சனையா என்றான் அயன்.

ரொம்ப பெரிய பிரச்சனை எல்லாம் இல்லடா அவளுக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா ஆனா அவளோட அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் மோசமா இருக்கு அதனால அவங்க சொத்துக்கள் எல்லாம் வெளியே யாருக்கும் போயிடக் கூடாதுன்னு சொந்தத்திலேயே ஒரு பையனை பார்த்து அவளுக்கு திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க அதுதான் அவளுக்கு டென்ஷன் தான் நினைக்கிறேன் என்றான் மித்திரன்.

அவனை அதிசயமாக அயன் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் இருந்த அத்தத்தை புரிந்து கொண்ட மித்ரன்.

சாரிடா மாப்பிள உனக்கும் அவளுக்கும் தானே பிரச்சனை அதுக்காக நான் அவ கூட பேசாம இருக்க முடியுமா அவளும் என்னோட பிரண்டு தானே.

அப்போ அப்போ நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசிப்போம் இந்த மேரேஜ் பத்தி இன்பார்ம் பண்ண எனக்கு கால் பண்ணி இருந்த அப்போதான் ரோஜா என்கிட்ட விஷயத்தை சொன்னா என்றான் மித்ரன்.

சரி என்று தலையாட்டிய ஐயன் பார்வையை மீண்டும் மேடையில் பதட்டமான முகத்தோடு அமர்ந்திருந்த ரோஜாவின் மேல் பதிய விட்டான்.

பூஜைகள் எல்லாம் செய்து ஐயர் ரோஜாவின் கையில் முகூர்த்தப்பட்டை கொடுத்து சீக்கிரம் மாத்திட்டு வாங்கோ நாழி ஆயிட்டு இருக்கு என்றார்.

ரோஜாவின் கைப்பிடித்து ஒரு பக்கம் லட்சுமியும் மறுபக்கம் ரசிகாவும் அவளை உடைமாற்ற மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

ரோஜா சென்ற பிறகு தன் பார்வையை மொபைலில் பதிய விட்டான் அயன்.

இவ்வளவு நேரம் கலகலவென பேசிக்கொண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்களை கிண்டல் செய்து படி அமர்ந்திருந்த நண்பர்கள் வட்டம் அயன் வந்ததும் அப்படியே அமைதியாக இருந்தது என்றுமே வராதவன் இன்று எதற்காக வந்திருக்கிறான் என அனைவரும் குழப்பத்தில் கவினையும் ராகவையும் பிடித்து கேள்விகளால் அவர்களை நச்சரித்துக் கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் பட்டுப்புடவையை மாற்றி விட்டு மணமகள் அறையில் இருந்து வெளியே வந்த ரோஜாவை மேடை ஏறியதும் மாப்பிள்ளை அருகில் வந்து அமர வைத்தனர் லட்சுமியும் ரசிகாவும்.

மாப்பிள்ளை அருகில் அமர்ந்து தலை குனிந்து இருக்க வேண்டிய மணமகள் மேடைக்கு கீழே அமர்ந்திருந்தவர்களை தன் பார்வையை மேயவிட்டபடி பதட்டமாக அமர்ந்திருந்தால் ரோஜா

சரியாக அயன் இருந்த இடத்திற்கு வந்ததும் அவன் மேலே அவள் பார்வை நிலை குத்தி நின்றது அவனை பார்த்ததும் ரோஜாவிற்கு மேலும் பதட்டம் அதிகரித்தது .

அயனும் அவள் மேல் பதித்திருந்த தன் பார்வையை அகற்றாமல் ரோஜாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அதை கவனித்த மித்ரன் டேய் என்னடா நடக்குது ரோஜா அங்க இருந்து உன்னையே பார்த்துட்டு இருக்கா. எதுவும் பிரச்சனை பண்ணிடாத டா மாப்ள ப்ளீஸ் என்றான் அயன் கையை பிடித்துக் கொண்டு.

நான் எந்த பிரச்சனையும் பண்ண இங்கே வரல மித்ரன் என்றான் பார்வையை ரோஜா மீது இருந்து அகற்றாமல்.

அயன் தாண்டி அமர்ந்திருந்த கவின் ராகவ் இருவரையும் எட்டிப் பார்த்து என் மொபைலை ஆட்டிக்காட்டி தான் அனுப்பிய மெசேஜ் பார்க்கும்படி ஜாடை செய்தான்.

கவின் மொபைலை ஓபன் செய்து பார்க்க அதில் மித்ரன் அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான் டேய் இவனை எதுக்குடா எங்க கூட்டிட்டு வந்தீங்க இங்கே எதுவும் பிரச்சனை நடந்துச்சுன்னா யாருடா ரோஜாவுக்கு பதில் சொல்றது என்று அனுப்பி இருந்தான் மித்ரன்.

குரூப்ல நீங்க எல்லாரும் சேர்ந்து செல்பி எடுத்து போடும்போதே யோசிக்கணும் இப்ப யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை என்று கவின் ரிப்ளை செய்திருந்தான்.

அதைப் பார்த்த மித்ரன் எனக்கு என்னடா தெரியும் இந்த ஸ்ரீ இப்படி ஒரு வேலையை பண்ணி வைப்பான்னு. என்று பதில் அனுப்பி இருந்தான்.

இவர்கள் இருவரும் மொபைலில் மாற்று மாற்றி மெசேஜ் அனுப்பி கொண்டிருக்க... திடீரென மண்டபமே அமைதியானது போல மூவரும் உணர்ந்து தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்க திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து மேடையை பார்த்துக் கொண்டு இருக்க..

அங்கே ரோஜாவின் கழுத்தில் அயன் தாலி கட்டிக் கொண்டு இருந்தான்.

அதைப் பார்த்த மூவரும் அதிர்ச்சியில் எழுந்து நிற்க... ஸ்ரீ வேகமாக மித்ரனிடம் வந்து டேய் இவன் இங்க தாண்டா உட்கார்ந்து இருந்தா எப்படா மேடை ஏறினான் அதுவும் இல்லாம ரோஜா காலத்துல இவன் தாலி கட்டிட்டு இருக்கான் என்னடா நடக்குது இங்க என்றான் அதிர்ச்சியாக.

அதைவிட பேரதிர்ச்சி தன் கழுத்தில் அயன் தாலி கட்டிக் கொண்டிருக்க அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ரோஜா அமைதியாக நின்று இருந்ததுதான்.

தாலி கட்டி முடித்ததும் ரோஜாவின் கையைப் பிடித்து மணமேடையில் இருந்து அயன் இறங்கி வர அவளும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இறங்கி வந்தாள்.

மேடையை விட்டு நேராக மித்ரன் ஸ்ரீ நண்பர்கள் இருந்த இடத்திற்கு வந்தவன். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை மட்டும் உதித்துவிட்டு மண்டபத்தை விட்டு ரோஜாவை அழைத்துக் கொண்டு வேகமாக கிளம்பினான்.

அவனை தடுக்கவும் எதிர்த்து நிற்கவோ அங்கே யாருமே வரவில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம் மாப்பிள்ளையோ, மாப்பிள்ளை வீட்டாரோ... ரோஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் என யாருமே அயன் ரோஜா கழுத்தில் தாலி கட்டி அவளை மண்டபத்தில் இருந்து அழைத்துச் சென்றதை தடுக்கவே இல்லை
 
Top