- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
"அப்பா!! நாம நினைச்ச மாதிரியே அடுத்து நடக்க போற பிரபல லைட் ஜூவல்லரி நம்ம கூட டை அப் வெச்சுக்க விரும்புறாங்க . உலக அளவில் அவங்க பிரண்டை பிரபல படுத்த போறதால அதுக்கான விளம்பரப்படங்கள்ல நம்ம ஸ்டூடியோ டிசைன்ஸை அவங்க மாடல்ஸ் போட்டு சுட நடத்த போறாங்க ... அந்த டீலிங்கை நான் பேசி முடிச்சுட்டேன். நாம் நினைச்சது போல இந்த ஆட் மட்டும் வெளிவந்தா நம்முடைய பிஸினஸ் அடுத்த கட்டத்துக்கு போய்டும் " என்று சந்தோசமாக சொன்னான் விஜய் சக்ரவர்த்தி .
அவன் சொன்னதை கேட்டு சந்தோசமான வீரா "நீ எப்பவும் நினைச்சதை நடத்தி முடிச்சிட்டு தான் மறுவேலை பாக்குற விஜய் . நம்ம பிசினஸ் ஏற்கனவே உச்சத்தில் தான் இருக்கு... நீ இருந்த இடத்தில இருந்தே அதன் வளர்ச்சியை பார்க்கலாம் . ஆனா இப்படி ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும் நீயே நேரில் போய் பார்த்து இறங்கி செய்யணும்னு நமக்கு எந்த அவசியமும் இல்லைப்பா... உன்னோட த்ரிப்திக்காக தான் நான் நீ செய்யுற எந்த ஒரு விஷயத்துக்கும் குறுக்க நிக்குறது இல்லை" என்றார்.
வீரா சொன்னதை கேட்டு சிரித்தவன் "டாட்... இது நம்ம பிசினஸ் இதில் நடக்குற ஒவ்வொரு விஷயமும் நான் முன்ன நின்னு செய்யணும்னு ஆசை படுறேன் "என்றான் .
"சரிப்பா உன்னோட விருப்பம் தான், அப்பா எதுக்குவம் சொல்லலை" என்று சிறிது நேரம் தன் மகனிடம் பேசிவிட்டு போனை வைத்தான் வீரா.
விஜய்யின் அப்பா வீரா , வீராவின் அப்பா விக்ரம் , அவன் தந்தை மௌலி சக்கரவர்த்தி என அனைவருமே ஆடை வடிவமைப்பு ... மாடலிங் தலைமுறை தலைமுறைகளாக இந்த பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு ஜாம்பவான் குடும்பம் . அவர்களின் இன்றைய தலைமுறையின் மூத்த வாரிசு தான் நம் விஜய் சக்ரவர்த்தி . அப்போ இளையவன்... வருவான் காத்திருங்கள்.
வீராவிடம் போன் பேசிவிட்டு வைத்த விஜய் தன் பிஏ அர்ஸ் இடம் திரும்பி "இன்னிக்கு நைட் நான் இந்தியா கிளம்பறேன். நீ இங்கே இருந்து மற்ற போர்மாலிட்டீஸ் முடிச்சிட்டு இந்தியா வந்திரு" என்றான் .
"ஓகே பாஸ் , இங்கே பார்மாலிட்டீஸ் முடிச்சதும் நான் உங்களுக்கு மெயில் பண்றேன் " என்றான் அரசின் என்ற தன் பெயரை ஸ்டைலாக அர்ஷ் என்று மாற்றி வைத்தவன் .
அர்ஷ் இடம் சொல்லிவிட்டு மீட்டிங் நடந்த இடத்தைவிட்டு கிளம்பியவன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு நேராக தான் தங்கி இருந்த 7 நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றான் . தன் ரூமிற்கு வந்தவன் களைப்பில் அப்படியே உறங்கிப்போனான்.
நள்ளிரவை கடந்த வேளையில் அவன் போனில் அலாரம் அடிக்கவே தூக்க கலக்கத்தில் கண் விழித்தவன் மணியை பார்த்தான் மூன்று என்று காட்டியது.
அலாரத்தை ஆப் செய்தவன் எழுந்து நேராக பாத்ரூம் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன்னுடைய தனி விமானம் இருக்கும் ஏர்போட்டிற்கு காரில் கிளம்பினான்.
காரில் சென்று கொண்டு இருக்கும்போது அவன் மொபைல் வைபிரேட் ஆனது . அதை காரில் ப்ளூடூத்தில் கனெக்ட் செய்திருந்தவன் திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் முகம் மலர்ந்தான்.
உடனே காலை அட்டென்ட் செய்து வால்யூமை அதிகரித்தவன் "ஹே லோட்டஸ் ..." என்றான் உற்சாகமான குரலில் .
"விஜய் மாமா!! போன வேலை சக்ஸஸ் ஆகிருச்சா... என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்றாள் அவன் அத்தை மகள் தாமரை.
"உன் மாமன் தொட்டது எப்பவும் சக்ஸஸ் தான்... அதே சந்தோஷத்தோட என் லோட்டஸை பார்க்க கிளம்பிட்டேன் "என்றான் .
"அப்டியா மாமா! அப்போ நாங்க கோவில் கிளம்பரத்துக்குள்ள நீங்க இங்கே வந்திருவிங்க அப்படித்தானே "என்றாள் தாமரை.
"ம்ம்ம்...." என்று யோசித்தவன் தன் வாட்சில் மணியை பார்த்தான் . இப்போ டைம் 3.45 ஆச்சு நான் நேரா ஏர்போர்ட் தான் போயிட்டு இருக்கேன் . எப்படியும் கிளம்பி இந்தியா வாரத்துக்கு 6 ஓ கிளாக் ஆகிடும் என்றான் .
"ஐயோ மாமா ! இங்கே ஆல்ரெடி ஆறு மணி ஆகிடுச்சு" என்றாள் தாமரை.
"எனக்கு தெரியும் லோட்டஸ் .. நான் இங்கே துபாய் தாய்மை சொன்னேன் " என்றவன்.
"எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிட்டீங்க போல..." என்றான்.
"ஆமாம் மாமா.. எல்லாரும் ரெடி இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவோம் . நீங்க இந்திய ரீச் ஆனதும் நேரா நம்ம குலதெய்வம் கோவிலுக்கு வாதிருங்க" என்றாள்.
"ஓகே வந்துறேன் " என்றவன் போனை கட் செய்துவிட்டு காரை வேகப்படுத்தினான்.
ஏர்போர்ட்டை நெருங்கும் போது ஒரு வளைவை வேகமாக அவன் திரும்பும் வேளையில் . அப்போது அவன் காரின் முன்பு ஒரு பெண் வேகமாக வந்து மோதி தரையில் விழுந்தாள் .
அதிக சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போனவன் அவசரமாக காரை விட்டு கீழே இறங்கி அவன் காரின் முன்பு விழுந்த பெண்ணை பார்த்தான். அவள் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தபடியே எழுந்து நின்றவள் . யாரையோ பார்த்து கலவரம் ஆனால் . உடனே அந்த பெண் அங்கிருந்து செல்ல போக ... அவள் கையை பிடித்து நிறுத்திய விஜய் "ஹலோ ஹூ ஆர் யூ ? இப்படியா வந்து என் கார் மேல மோதுவிங்க... நான் மட்டும் பிரேக் போடலையின்னா இன்னேரம் நீங்க அந்தரத்துல பறந்து போய்யிருப்பிங்க.." என்று ஆங்கிலத்தில் அந்த பெண்ணை பார்த்து சத்தம் போட்டான் .
"ஐயோ ... சார் என் நிலைமை தெரியாம பேசிட்டு இருக்காதிங்க... என்னை நீங்க பேசாம காரை ஏத்தி கொன்னு இருக்கலாம் . நான் சந்தோசமா செத்து போயிருப்பேன்" என்றாள் அவளும் ஆங்கிலத்தில் .
"வாட்!!" என்று அதிர்ச்சி ஆனவன் ." அம்மா உன்னை கார் ஏத்தி கொன்னுடுட் நான் ஜெயிலுக்கு போக வேண்டியது தான் " என்று தமிழில் அவன் முணுமுணுக்க...
"சார் நீங்க தமிழா! " என்று ஆச்சர்யமானால் .
அப்போது தான் அவள் நெற்றியில் வழிந்த ரத்தத்தை பார்த்த விஜய் "அம்மா நான் தமிழ் தான் " என்றவன் . "உன் நெற்றியில் ரத்தம் வழியுது பாரு... வேற எங்கயும் அடி பட்டிருச்சா ?" என்று அவளை ஆராய்ந்தான் .
"சார் தயவு செய்து என்னை..." என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ... அவளை நோக்கி இரு ஆஜானுபாகுவான ஆட்கள் வந்து பிடித்துக்கொண்டு அங்கிருந்து இழுத்து செல்ல போக ... "டேய்... விடுங்கடா ... விடுங்கடா என்னை " என்று அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு தப்பிக்க முயன்றாள் .
விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை அவன் இங்கே என்ன நடக்கிறது என்பது போல புரியாமல் பார்க்க ...
அப்போது அந்தப் பெண் சார் தயவு செய்து இவங்க கிட்ட இருந்து என்ன காப்பாத்துங்க ப்ளீஸ் என்று அவள் கெஞ்சினாள் ..
அவள் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த இரு ஆட்களும் அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் தாங்கள் வந்த காரைக்குள் தள்ளி கதவடைத்தனர் அதை பார்த்த விஜய் அவசரமாக அந்த காருக்கு அருகில் சென்றவன் . காரில் ஏறப்போன அந்த அடியாள் போல் இருந்தவனை அழைத்து யார் நீங்க அந்த பொண்ணு எதுக்கு இழுத்துட்டு போறீங்க என்றால் ஆங்கிலத்தில் .
அவர்களோ இது உனக்கு தேவையில்லாத விஷயம் வீனா இதுல தலையிட்டு ஆபத்துல மாட்டிக்காத முதல்ல இங்கிருந்து கிளம்புற வழியை பாரு என்ற அந்த அடியால் விஜய்யின் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளினான்.
அந்த அடியாள் தள்ளியே வேகத்தில் விஜய் இரண்டடி பின்னால் போய் கீழே விழாமல் சமாளித்து நின்றவன் . ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்தவன் . வேகமாக ஓடி வந்து காரில் ஏறப்போன அந்த அடியாளின் சட்டையை பிடித்து இழுத்து அவன் கன்னத்தில் ஓங்கி குத்தினான் .
இதை எதிர்பாராத அந்த அடியால் காரில் மோதியவன் .
சரிந்து தரையில் விழ அதைப் பார்த்து மற்றொரு அடியால் விஜய்யை நோக்கி வந்தவன் அவனை தாக்க ஆரம்பித்தான்.
இருவரும் நட்ட நடு சாலையில் சண்டையிட்டுக் கொண்டு இருக்க காரில் ஏறிய அந்தப் பெண் கதவை திறந்து கொண்டு வெளியே வர முயற்சிக்க அப்போது தரையில் விழுந்திருந்த அந்த அடியால் அந்தப் பெண்ணை மீண்டும் காருக்குள் தள்ளி கதவடைந்து காரை லாக் செய்தவன் விஜய் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் சென்றவன் விஜய்யின் கழுத்தில் பின்னால் ஓங்கி அடிக்க... அவன் அடித்த வேகத்தில் விஜய் அப்படியே மயங்கி தரையில் சுருண்டு விழுந்தான் .
இதை காருக்குள் இருந்த அந்தப் பெண்ணும் பார்த்து அதிர்ச்சியானால் அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விஜயை காலை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவன் கார அருகில் போட்டவர்கள் திரும்பி வந்து காரில் ஏறி ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு கிளம்பினர் .
யார் அந்தப் பெண் ? எதற்காக அந்த தடியர்கள் அந்த பெண்ணை கடத்துகிறார்கள். மயங்கி விழுந்த விஜயின் நிலை என்ன? கடத்தப்பட்ட அந்தப் பெண்ணின் நிலை என்ன? நாளை பார்க்கலாம் .