layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
EPISODE 4


தாமரை சோக முகத்தோடு குனிந்த தலை நிமிராமல் வாசலில் நின்று இருக்க.. அவள் அருகில் விஜய்யை உரித்து வைத்தது போல விஜய்யின் ஒட்டிப்பிறந்த தம்பி வம்சி சக்ரவர்த்தி இறுகிய முகத்தோடு அவள் அருகில் மாலையும் கழுத்துமாக நின்று இருந்தான்.

தாமரையின் அம்மா யாராவும் , விஜய், வம்சியின் அம்மா அதிதியும் சேர்ந்து மாலையும் கழுத்துமாக புதிதாக திருமணம் ஆன வம்சிக்கும், தாமரைக்கும் ஆரத்தி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களின் இந்த திடீர் திருமணத்திற்கு காரணமான அவர்களுடைய விக்ரம் சக்ரவர்த்தி தாத்தா நெஞ்சை பிடித்துக்கொண்டு ஹோச்பிடலுக்கு கூட போகாமல் புதுமண தம்பதிகளாக தன் பேரனும், பேத்தியும் வீட்டிற்குள் நுழைவதை பார்ப்பதற்காக நின்று இருந்தார் .

இருவருக்கும் ஆரத்தி சுற்றி நெற்றியில் பொட்டிட்டு அவர்களை வீட்டிற்குள் அழைத்தாள் அதிதி . இருவரும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வந்திருக்க ... அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நொடி விக்ரம் மயங்கி வீல் சேரில் சரிய ... அதை பார்த்ததும் விஜய், வம்சியின் அப்பா வீராவும் தாமரையின் அப்பா தேவ்வும் அவசரமாக அவரிடம் வந்தவர்கள் தங்கள் கூடவே அழைத்து வந்திருந்த நர்ஸோடு சேர்ந்து அவரை அழைத்துக்கொண்டு ஹோச்பிடலுக்கு விரைந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக முதலில் ஹாஸ்பிடல் போக கூடாது என்று வம்சியின் பாட்டி மீனு சொல்லிவிட்டு தன் கணவர் விக்ரமுடன் ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டார்.

தித்திக்கும், யாராவிற்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு புறம் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சந்தோசப்படுவதா ... இல்லை விக்ரம் சக்கரவர்த்திக்கு இப்படி ஆனது என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

மழையும் கழுத்துமாக உள்ளே நுழைந்த தாமரை ஹாலில் நின்று இருக்க... வம்சி தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிவைத்துவிட்டு தன் ரூமிக்குரு செல்ல போக...

அதை பார்த்த அதிதி " டேய்.. டேய்... என்ன பங்கிட்டு இருக்க... இப்போ எதுக்கு மாலையிட்ட கலைத்துறை... இன்னும் விளக்கேத்தி பூஜை எதுவும் பண்ணல... அதுக்குள்ள ..." என்று அவனை அதட்டியவள்.

"முதல்ல அந்த மாலையை கழுத்துல போடு... தாமரை நீ இங்கே வா... வந்து என் புல்லை பக்கத்துல நில்லு " என்ற அதிதி .

"யாரா நீ இவங்க ரெண்டு போரையும் பூஜை அறைக்கு கூட்டிட்டு போ.. நான் போய் அவங்க பாலும் பலமும் சாப்பிட எடுத்து வெச்சிட்டு வரேன் " என்று அவர்களை அனுப்பிவிட்டு கிச்சனுக்கு வந்தவள் வெள்ளி டம்பளரில் பாலம், ஒரு வெள்ளி கிண்ணத்தில் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு கூடவே வாழைப்பழத்தையும் எடுத்து வர சொல்லி வேலையாளிடம் கூறியவள் பூஜையறைக்கு வந்தாள்.

அங்கே அதற்குள்ளாக யாரை பூஜை செய்ய எல்லாம் தயாராக எடுத்த்து வைத்து இருக்க... "வம்சி... நீ தாமரை கையைப் பிடிச்சு பூஜை ரூம்குள்ள கூடிய போ... " என்றாள்.

அவன் அப்படியே நின்று இருக்க... "என்ன டா நான் பேசிட்டு இருக்கேன் நீ அப்படியே நின்னுட்டு இருக்க... " என்று அதட்ட..

அவன் இவ்வளவு நேரம் யோசனையோடு நின்று இருந்தவன் அதிதியின் அதட்டல் குரல் கேட்டதும் சட்டென்று தன் அருகில் நின்று இருந்த தாமரையின் கையை பிடித்து பூஜையறைக்குள் இழுத்துச்செல்ல... விஜய்யின் நினைவுகளோடு வம்சியின் பின்னால் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

உள்ளே இருவரும் சென்றதும் "தாமரை... அந்த தீப்பெட்டியை எடுத்து அந்த குத்துவிளக்கு ரெண்டையும் பத்த வெச்சிட்டு ம்மா..." என்று தன் மருமகளிடம் கரிசனமாக பேசினாள் அதிதி .

சரி என்று தலையாட்டியவள் வம்சியை பார்க்க... அவன் என்ன என்று புரியாமல் தாமரையை பார்த்தான்.

தாமரை தயங்கிக்கொண்டே குனிந்து தன் கையை பிடித்து இருந்த வம்சியின் கையை பார்க்க... அதை கண்டதும் சட்டென்று அவள் கையை விட்டவன் தாமரையை விட்டு விலகி நின்றாள் .

வம்சிக்கும் தன்னை போலவே இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்பதை தாமரை அவன் விலகிய விதத்திலும், அவன் முகத்தில் இருந்த சோகத்தையும் பார்த்ததும் கண்டுகொண்டாள் . அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அருகில் இருட்னஹா தீப்பெட்டியை எடுத்து அங்கே விளக்கு ஏற்ற தயாராக வைத்து இருந்த வெள்ளி விளக்கில் இருந்த திரியை பற்றவைத்தாள்.

அடுத்து வம்சியை பார்த்து "வம்சி நீ அந்த கற்ப்பூரத்தை ஏத்தி தீபாராதனை கட்டுப்பா..." என்றாள் அதிதி .

அவள் சொன்னது போலவே செய்தவன் தீபாராதனை தட்டை எடுத்து சூடம் ஏற்றி பூஜை செய்ய ஆரம்பித்தான் வம்சி.

தாமரை கையெடுத்து கும்பிட்டு கண்கள் மூடி கடவுளிடம் தன் குமுறல்களை கொட்ட ஆரம்பித்தாள். "கடவுளே ... எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை . நான் என்ன செய்வேன். என் விஜய் அத்தான் வந்து ஏன் டி இப்படி பண்ணினேன்னு ... என்னைக்கேட்டா நான் என்ன சொல்லுவேன் அவர்கிட்டே. இத்தனை வருசமா அவர் என் கழுத்துல தாலி காட்டுவாரு எதிர்பாத்துட்டு இருந்த எனக்கு இப்படி ஒரு கல்யாணம் தேவை தானா ? இப்படி என் வாழ்க்கையை குழி தொண்டு பொதச்சத்துக்கு நீ தொண்டினை குழிக்குள்ள பேசாம என்னை தள்ளி கொன்னிருக்கலாமே ... ஏன் இப்படி என் வாழ்க்கையை கெடுத்தீங்க... அண்ணனை காதலிச்சுட்டு இப்டி அவரோட தம்பியை எனக்கு கல்யாணம் செய்து வெச்சியூட்டிங்களே ,,, இது நியாயமா! இது சரியா? நீங்களே சொல்லுங்க... எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்க... எனக்கு இந்த வாழ்க்கை வேணாம் . என் விஜய் அத்தான் தான் வேணும் "என்று கடவுளிடம் சண்டை போட்டுகொண்டு இருந்தாள்.

அப்போது தாமரையின் தோளில் கைவைத்து அவளை மெல்ல பெயர் சொல்லி அழைத்த யாரா "தாமரை... தாமரை.. ஆரத்தி எடுத்துக்கோ..." என்றாள்.

அவள் குரல் கேட்டு கண்களை திறந்து பார்த்த தாமரையின் முன்பு அவளை கூர்ந்து பார்த்தபடி கையில் ஆரத்தி தட்டுடன் நின்று இருந்தான் வம்சி.

தாமரை கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தவள் உடனே தன் பார்வையை தாழ்த்திக்கொண்டு அவன் நீட்டிய ஆரத்தி தட்டை ஒற்றி கண்களில் வைத்துக்கொண்டாள் .

அனைவர்க்கும் ஆரத்தி தட்டை கொடுத்தவன் கண்ணீரோடு நின்று இருந்த தாமரையை ஒரு பார்வை பார்த்தவன் "அம்மா இப்போவாவது நான் என் ரூமுக்கு போகட்டுமா ?" என்றான் கோபமாக .

"டேய் வம்சி அப்டியே அந்த பாலும் பழமும்... " என்று அதிதி இழுக்க... அவளை கோபமாக முறைதான் வம்சி அதை பார்த்ததும் அதன் பின் அவள் ஒன்றும் சொல்லவில்லை

வம்சி தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி பூஜை அறையில் வைத்துவிட்டு வேகமாக படிகளில் ஏறி தன் அறைக்கு சென்றான் .

"போ.. டா... அதுக்கு ஏன் இவ்ளோ கோபமா கேட்குறா.. "என்றாள் அதிதி .


இப்படி தாமரையை தனியாக விட்டு சென்ற வம்சியை மனதிற்குள் திட்டிக்கொண்டே தாமரை அருகில் வந்த அதிதி அவளை அழைத்துவந்து ஹாலில் இருந்த சோபியாவில் அமர வைத்தவள் யாராவையும் தன்னோடு பிடித்து இழுத்து அமர்த்திக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள் அதிதி .

"நீங்க ரெண்டு பெரும் இப்போ என்ன மனநிலையில் இருக்கீங்கன்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது . மாமா இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வம்சிக்கும், தாமரைக்கும் கல்யாணம் செய்துவெச்சே ஆகணும்னு சொல்லி இவங்க கல்யாணத்தை திடீர்னு செய்து வெச்சுட்டார். நமக்கும் அந்த நேரத்துல என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை . ஆனது ஆகிருச்சு இவங்க கல்யாணம் நடந்தும் முடிஞ்சாச்சு... இனி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை" என்று யாராவை பார்த்தவள்.

உனக்கும் என் அண்ணாவுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இல்லை என்றாலும் ரெண்டு பெரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தானே கல்யாணம் செய்துக்கிட்டிங்க.. ரெண்டு பேருமே கல்யாணத்துல விருப்பம் இல்லாம தானே உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சீங்க... இப்போ என்ன கேட்டுப்போச்சு நீயும் , என் அண்ணாவும் நல்லபடியா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சந்தோசமா வாழலையா ... அதனால தானே கௌதமும், தாமரையும் பிறந்தாங்க " என்றால் அதிதி ,

"நாங்க இப்படி திடீர்னு கல்யாணம் செய்துக்க காரணமே நீங்க பண்ணினது தானே... மணமேடை வரைக்கும் வந்துட்டு நீங்க உங்களுக்கு ஏற்பாடு பண்ணின அந்த முகிலை வேணாம்னு சொல்லிட்டு என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு வந்து திடீர்னு நின்னா என் அண்ணா என்ன செய்வான் . அவரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க தானே உங்க அன்னான் என்கழுத்துல கட்டாய தாலி கட்டி அவரை பிளாக் மேல் செஞ்சாரு " என்றாள் யாரா.

அவளை முறைத்த அதிதி "ஏன் டி இப்போ அதெல்லாம் ரொம்ப முக்கியமா ... ஏன்டா நேரத்துல எதை பேசணும்னு இதனை வயசாகியும் உனக்கு இன்னமும் தெரியலை . உன்னை எல்லாம் கல்யாணம் செய்துட்டு என் அண்ணன் தான் போவோம் " என்றாள் அதிதி .

"இவர்கள் இருவரும் தனக்கு சமாதானம் சொல்ல அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு இப்படி அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறர்களே "என்று இருந்தது தாமரைக்கு .

அவர்கள் பேசிக்கொண்டு இருக்க... அப்போது குறுக்கே புகுந்து "அத்தை எனக்கு தலை வலிக்குது நான் பொய் உங்க ரூமில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமா ?" என்றாள் தாமரை.

அவள் பேசிய பிறகு தான் தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று இருவருக்கும் உரைத்தது . உடனே அதிதி " போம்மா... போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... " என்று தன் அறைக்கு தாமரையை அனுப்பி வைத்தாள் அதிதி .

அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ..."உனக்கு அறிவே இல்லையா ? " என்று ஒன்று போல கூறிக்கொண்டவர்கள் தலையில் அடித்துக்கொண்டனர்.

மதியம் போல ஹோச்பிடலில் இருந்து வீதிக்ரு வந்த வீராவும், தேவ்வும் சோர்வாக சோபாவில் வந்து அமர அவர்கள் இருவரையும் பார்த்த அத்தையும், யாராவும் கிச்சனில் இருந்து வந்தவர்கள் விக்ரமின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

"அவருக்கு பயப்படும்படியா ஒன்னும் இல்லை . வயசானதுனால கொஞ்சம் லேசா மைல்டா உடம்பு முடியாம போயிருக்கு மத்தபடி ஒன்னும் இல்லை " என்றான் வீரா.

"அப்பாடா நான் கூட பயந்து போய்ட்டேங்க... உங்க ரெண்டு பேருக்கும் நானும் யாராவும் மாத்தி மாத்தி ரெண்டு மூணு தரம் கால் பண்ணி பார்த்துட்டோம் . நீங்க எடுக்கல.. சரி வம்சிக்கும், தாமரைக்கும் சாப்பாடு செய்துவெச்சிட்டு ஹாஸ்பிடல் கிளம்பலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க " என்றாள் அதிதி.

"சரி அவங்க ரெண்டு பெருகும் திடீர்னு கல்யாணம் செய்துவெச்சுட்டோம் . அதை பத்தி எதுவும் சொன்னகளா ... நீங்க எதுவும் அவங்க கிட்டே பேசுனீங்களா ? " என்றான் தேவ் .

"இல்லைங்க... ரெண்டு பேரும் ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு அழுக்கு ஒரு ரூமுக்குள்ள பொய் கதவை பூட்டிட்டாங்க.. எங்களுக்கும் அவங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை " என்றாள் யாரா தேவ்விடம் .

இவர்கள் பேசிக்கொண்டு இருக்க.. அப்போது வாசலில் விஜய்யின் கார் வந்து நின்றது . கார் சத்தம் கேட்டதும் வீரா தன் வாட்சில் மணியை பார்தான் யோசனையோடு வாசலை பார்க்க... காரில் இருந்து இறங்கி விஜய் மிகவும் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தான்.

வந்தவன் ஹாலில் இருந்த தேவ் , யாராவை தான் முதலில் பார்த்தான் அவர்களை பார்த்ததுமே தாமரை இங்கு தான் இருப்பாள் என்று யூகித்துக்கொண்டவன் முகம் புத்துணர்ச்சியானது அவளை பார்க்க போகிறோம் என்று .

உள்ளே வந்தவனை பார்த்து " ஏன் விஜய் நீ மோர்னிங்க்கே இந்தியா வந்திருக்க வேண்டியது ... என்ன ஆச்சு இவ்ளோ லேட்டா வரே ..." என்றான் வீரா.

"அது.. அது வந்துப்பா... நான் நேரமே கிளம்பி ஏர்போர்ட் வந்துட்டேன். ஆனா நம்ம பிளையிட் தான் டேக் ஆப் ஆகுறதுல ஒரு ப்ரோப்லேம் . அது எல்லாம் சரி செஞ்சதுக்கு அப்பறோம் தான் கிளம்பினோம் " என்றான்.

" சரிப்பா வேற எந்த பிரச்னையும் இல்லையே " என்றான் வீரா .

அவர்களிடம் தன்னோடு இனியாவை அழைத்து வந்த விஷயத்தை விஜய் சொல்லவில்லை சொன்னால் எதுவம் தப்பாகி விடும் என்று விட்டுவிட்டான்.

"இல்லை ..." என்று தலையாட்டியவனின் கண்கள் அந்த இடம் முழுவதும் தாமரையை தேடியது .

APOTHU THN AMAMVIN ARIAKUL IRUNTHU SORNTHA MUGATHODU KALUTHIL MANJAL KAYITRODU AVARGALAI NOKI VANDHUKONDU IRUNTHA THAAMARAIYAI PARTHTHAVAN URAINTHU PONAN .
 
Top