sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -10

தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை காந்தள் தன் தோழி பிரியாவிற்கும் அவர்கள் இருவரோடு சேர்ந்து படித்த முகுந்தனுக்கும் தெரிவித்தவள். அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க போவதாக சித்ராவிடம் கூறிவிட்டு சிட்டிக்கு சென்றாள்.


சென்னையில் இருந்து அப்புறமாக இருக்கும் காந்தளின் ஊரிலிருந்து மாலை போல பேசஞ்சர் ட்ரெயினில் பயணித்தாள்.


இன்று பிரியாவின் அறையிலேயே தங்கிக் கொள்வதாக சித்ராவிடம் கூறி விட்டு தான் கிளம்பி இருந்தாள்.


நேராக மூவரும் வழக்கமாக சந்திக்கும் ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தனர். நீண்ட நாள் கழித்து தன்ன நண்பர்களே பார்த்த சந்தோஷத்தில் காந்தள் துள்ளி குதித்தாள்.


அமர்ந்திருந்த டேபிளில் இருந்து எழுந்த பிரியா முகுந்தன் இருவரையும் நோக்கி கையை வேகமாக அசைத்தவள் நான் எங்கே இருக்கேன் என்று அவர்களுக்கு தன் இருப்பிடத்தை காட்டனாள்.


பிரியா காந்தளை கண்டதும் வேகமாக அவளிடம் ஓடி வந்து காந்தளை கட்டிக்கொண்டவள். ஹே ப்ரியா வாழ்த்துக்கள் டி நீ நெனச்சத நடத்தி காட்டிட்ட உன்னை ஆசைப்பட்ட மாதிரியே உன் அப்பா வேலை செஞ்சா அதே கம்பெனியில உனக்கும் வேலை கிடைச்சிடுச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று தன் தோழியை கட்டிக் கொண்டு சத்தமாக பேசி அவளோடு சேர்ந்து பிரியாவும் துள்ளி குதிக்க...


முகுந்தனுக்கு தன் தோழிகள் இருவரும் கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் கத்திக் கூப்பாடு போடுவது அந்த ரெஸ்டாரண்டில் இருந்த அனைவரும் திரும்பி பார்ப்பதை கவனித்தவன் சங்கடமாக உணர்ந்து அவர்களிடம் வந்தவன்.


போதும் போதும் உங்களோட பாசத்தை இப்படித் தான் எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி வெளிக்காட்டுவீங்களா ஒழுங்கா வந்து ரெண்டு பேரும் டேபிள்ல உட்கார போறீங்களா? இல்ல நான் எழுந்து வெளியே போகவா? என்றான்.


அவர்கள் இருவரும் முகுந்தனை செல்லமாக முறைத்தவர்கள் அமைதியாக வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.


காந்தள் அப்புறம் சொல்லு உன்னோட நீண்ட நாள் கனவு நினைச்சு ரொம்ப ஹேப்பியா இருக்கு அப்படி பண்ணுடி என்றாள் பிரியா.


ஆமா பிரியா இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினது எனக்கு வேலை கிடைச்சது வரைக்கும் எதுவுமே என்னால நம்ப முடியல எங்க நடக்கிறது எல்லாம் கனவா நினைவா என்று இருக்கு என்றாள்.


இது கனவில் நிஜம் தானே நான் உனக்கு காட்டட்டுமா என்றான் முகுந்தன் சிரித்துக் கொண்டே...


எப்படிடா என்றாள் காந்தள் புரியாமல் அவனைப் பார்த்து.


இதோ இப்படித்தான் என்று சொல்லி அவள் கையை நறுக்கென்று எட்டி முகுந்தன் கிள்ளி வைக்க...




ஷ்... டேய் முகுந்த் என்னடா இது இப்படி கிழிக்கிற என்று சொல்லி அவன் கையை தட்டி விட்டவள் அவன் கீழே இடத்தை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டே தன் நண்பனிடம் செல்லமாக கோபம் கொண்டாள்.


டேய் சும்மா இருடா எப்ப பாரு அவளை நோண்டிக்கிட்டே இருக்க வேண்டியது நீ என்ன லவ் பண்றியா இல்ல இவளை லவ் பண்றியான்னு தெரியல என்கிட்ட எல்லாம் எப்படி விளையாடிடாத சரியா என்றாள் பிரியா கோபமாக அவனைப் பார்த்து.


இப்ப என்ன உன் கூட விளையாடனும் உனக்கு அவ்வளவு தானே விளையாட போச்சு என்றவன் பிரியாவின் எடையை பிடித்து நறுக்கென்று கிள்ளி வைக்க..




ஷ்... எருமை எரும இப்படியாடா கிள்ளிவைப்ப பலி உயிர் போகுது என்று அவனை தோளில் வேகமாக அடித்தவள் தன் இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டே அவனை முறைத்தாள்.


நீ தாண்டி உன்கிட்ட இப்படி விளையாடலன்னு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணின. நான் விளையாடினா இப்படி சண்டைக்கு வர பிரியாவை குறும்பு பார்வை பார்க்க.


செல்லம்மா விளையாடவே உனக்கு தெரியுமா கொஞ்சமாவது லவ் பண்ணி ஒரு மூடோட வந்து விளையாடனும் தோணுதா பாரு உனக்கு. அவளை கிள்ளி வச்சு விளையாடின மாதிரி என்கிட்டயும் அதே மாதிரி விளையாடுன்னு சொன்னா. நீ என்னவோ விளையாட்டுக்கு இல்லாம வேணும்னு எனக்கு வலிக்கிற மாதிரி கிள்ளுற...என்று முகுந்திடும் சண்டையிட்டாள்.


சரி சரி இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை நம்ம எப்பவாவது ஒரு நாள் தான் மீட் பண்றோம் சண்டை போட்டது நிறுத்துங்க என்று அவர்கள் இருவரையும் குறுக்கே புகுந்து தடுத்தாள் காந்தள்.


ஏய் கந்தாள் நீயே சொல்லுடி இவனும் நானும் எப்பவாவது ஒரு நாள் தான் மீட் பண்றோம். இவன் என்கிட்ட லவ் சொன்னதோடு சரி அதுக்கப்புறம் என்னை வந்து மீட் பண்றதே ரொம்ப அதிசயமா இருக்கு.


நாங்க ரெண்டு பெரும் தனியா பேச இவனுக்கும் சரி எனக்கும் சரி நேரமே கிடைக்கல. இப்படி என்னைக்காவது ஒரு நாளைக்கு மீட் பண்ணினா ஆசையா நாலு வார்த்தை பேசுறானா பாரு. எப்ப பாரு என்ன வம்பு இழுத்துகிட்டு இருக்கான் என்றாள் பிரியா.


ஏய் பிரியா இந்த மாதிரி செல்லம்மா உன்கிட்ட விளையாடுறது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டி... இந்த சின்ன சின்ன சந்தோஷம் நீ என்கிட்ட முறைக்கிறது சண்டை போடுவது இதையெல்லாம் நெனச்சுக்கிட்டு அடுத்த தடவை உன்னை மீட் பண்ற வரைக்கும் நான் சந்தோஷமா இருப்பேன். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது என்றான் முகுந்தன்.


சும்மா பார்க்கும் போதெல்லாம் வம்பு இழுத்துட்டு சண்டை போட்டுட்டு இருந்தா போதுமாடா. கொஞ்சமாவது ரொமான்ஸ் ஏதாவது உன்கிட்ட இருக்கா? இல்லையா? ஒரு சின்ன ஹக் அட்லீஸ்ட் ஒரு சின்ன கிஸ் இப்படி ஏதாவது ஒன்னாவது எனக்கு கொடுக்கணுன்னு இதுவரை உனக்கு என்கிட்டே தோணினதே இல்லை ம்ஹும்... நீ எல்லாம் love பண்ணவே லாயக்கு இல்லை டா... என்று பிரியா வேண்டும் என்றே முகுந்த்தை வம்பிற்கு இழுக்க..


ஏய் வேணாம் டி... இப்படி எதுவும் பேசி என்னை வெறுப்பேத்தாதே அப்பறோம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்றான்.


நீ தான் எதும் செய்ய மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியுமே.. கேட்டா கொள்கை, அது இதுனு பேசுவ.. கல்யாணத்துக்கு அப்பறோம் தான் எல்லாமும்னு சொல்லுவே... என்றவள் அவனை பார்த்து நான் என்ன கல்யாணத்துக்கு முன்ன முதல் இரவுக்கு ட்ரையல் பார்க்கவா சொன்னேன். ஒரு முத்தம், ஒரு hug தானே டா கேட்டேன் என்றாள்.


ஏ பிரியா கொஞ்ச நேரம் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் வந்ததிலிருந்து அவனை நோண்டிக்கிட்டே இருக்க உனக்கு கோபம் வந்திட போகுது டி என்றாள் காந்தள் பிரியாவை அடக்கி


கோபம் தானே வந்தா வந்துட்டு போகுது அப்படியாவது இவன் என்னை எதுவும் செய்வானான்னு பார்க்கிறேன். ஆனா கல்லுளி மங்கன் எப்படி உட்கார்ந்து இருக்கான்னு பாரு இவனை எல்லாம் என்று தலையில் அடித்துக் கொண்டாள் பிரியா.


நீயா பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டு முகுந்தன் கோபம் கொண்டானே ஒழிய அவள் எதிர்பார்த்தது போல எந்த ஒரு எதிர் வினையையும் கட்டவில்லை அவளிடம்.


பிரியாவிற்கு முகுந்தனுக்கும் இடையில் புகுந்து ஒரு வழியாக பேசி சமாதானம் செய்து வைத்தால் காந்தள்.


மூவரும் சேர்ந்து இரவு உணவை ஆர்டர் செய்து சந்தோஷமாக பேசி சிரித்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினர் .


மூவரும் பேசிக்கொண்டே கிளம்பும் வேளையில் பிரியா காந்தளிடம் காந்தள் நீ வேலைக்கு ஜாயின் பண்ண பிறகு டெய்லியும் வீட்டுக்கு போயிட்டு வரதா இருக்கியா? இல்ல இங்கேயே இதுவும் தங்கலாம்னு பிளான் பண்ணி இருக்கியா? என கேட்டாள்.


இல்லை டி.. என்ன செய்றதுனு நான் இன்னும் முடிவு பண்ணல என்றாள்.


இங்கே பாரு டெய்லி ட்ரைன்ல போய்ட்டு வந்து வேலை பாக்குறது. அப்பறோம் வேலை முடிச்சு லேட்டா வீட்டுக்கு போறது நடக்குற காரியம் இல்லை. பேசாம நீ என் கூடவே வந்து தங்கிடு நான் தனியா தானே இருக்கேன் என்றாள்.


சிறிது யோசித்த காந்தள் பிரியாவுடன் ஒரே அறையில் தங்க சம்மதம் சொன்னாள்.


அவள் சொன்னது கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக காந்தளை கட்டிக் கொண்டவள். சரி டி எப்போ இருந்து வேலைக்கு ஜாயின் பண்ண சொல்லி இருக்காங்க என்றாள்.


இன்னும் ரெண்டு நாள்ல ஜாயின் பண்ணனும் என்ற காந்தள் நான் நாளைக்கு உன்னோட ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டுறேன் டி என்றாள்.


ஓ... நாளைக்கே வா என்று யோசித்த பிரியா சரி ஓகே ஒரு நிமிஷம் இரு என்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து அவள் அறை சாவி ஒன்றை எடுத்து கொடுத்தவள். நான் நாளைக்கு என் நேரமே என்னோட ஆபீஸ்ல ஒரு கிளைன்ட் மீட் பண்ண கிளம்பனும். நான் வந்து உன்ன பிக்கப் பண்ண முடியாது நீயே வந்துடுறியா என்றாள் பிரியா.


நான் எதுக்கு இங்கே இருக்கேன் எனக்கு நாளைக்கு ஒர்க் கம்மி தான் நான் இவளை பிக்கப் பண்ணி உன்னோட ரூம்ல டிராப் பண்ணிடுறேன் என்றான் முகுந்த்.


அவன் சொன்னது கேட்டு பிரியா அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறித்துக் கொண்டு நின்றிருக்க ஏன் இப்ப எதுக்குடி என்ன தேவையில்லாமல் முறைக்கிற என்றான் புரியாமல்.


அவன் விழிப்பதை பார்த்து காந்தளுக்கு சிரிப்பு தான் வந்தது தலையில் அடித்துக் கொண்டு சிரித்தவள் பிரியா நீ சொன்ன மாதிரி இவன் லவ் பண்றதுக்கு எல்லாம் லாயக்கே இல்லடி என்றாள்.


என்ன காதல் நீயும் அவள் கூட சேர்ந்துட்டு அவளை மாதிரியே பேசுற அப்படி நான் என்னதான் பண்ணிட்டேன் இப்போ. என்ன பண்ணி இவளோட ரூம்ல டிராப் பண்றேன்னு சொல்றது ஒரு தப்பா என்றான்.


அது தப்பில்லடா அவை கொஞ்ச நேரம் முன்ன என்ன சொன்னா அவளோட கிளைன்ட் மீட் பண்ண மார்னிங் நேரமே போகணும்னு சொன்னாலே நீயும் உனக்கு வேலை இல்ல ஃப்ரீயா இருக்கேன்னு சொன்னியே.


அப்ப நீ என்ன பண்ணி இருக்கணும். ப்ரியா நாளைக்கு நான் ப்ரீத்தா நான் உன்னோட க்ளைண்ட மீட் பண்ண நான் உன்ன கூட்டிட்டு போறேன்னு வான்டடா அவகிட்ட போய் வழிந்து பேசி இருக்கணுமா இல்லையா அதை விட்டுட்டு என்னை ரூம்ல கொண்டு வந்து டிராப் பண்றேன்னு சொல்ற முட்டாள் என்று சொல்லி சிரித்தாள்.


ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ நான் இதை யோசிக்கவே இல்லை என்று முகுந்த் திரும்பி பிரியாவை பார்க்க ஆனால் அவளோ அவர்களை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.


டேய் முகுந்த் இப்பவும் ஒன்னும் கெட்டு போகல போய் ஒழுங்கா அவளை ஏதாவது பண்ணி சமாதானம் பண்ணிடு இன்னைக்கு அவ உன் மேல பயங்கரமாக காண்டுல இருக்கா என்று முகுந்தனுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தாள் காந்தள்.


அவள் சொன்னது கேட்டதும் சரி காந்தள் நீ பார்த்து கிளம்பு. நான் அவளை சமாதானம் பண்றேன் என்று சொல்லி ப்ரியா பின்னால் சென்றவன் அவளை கையை பிடிக்க போக...


ஆனால் பிரியாவோ அவனிடம் கோபம் தனியாமல் நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தாள்.


அவர்கள் பின்னாலேயே இருவரையும் கண்டு சிரித்துக்கொண்டே பின்னால் சென்ற காந்தள் திடீர் என்று முகுந்த், பிரியாவை தன்னிடம் இழுத்து அவள் இதழில் முத்தம் வைக்க ஆரம்பித்தான்.


சாலையில் வைத்து பிரியாவிற்கு முகம் திடீரென முத்தம் கொடுக்கவும் பார்த்த காந்தளுக்கு அதிர்ச்சியானது சட்டென அவர்கள் சென்று கொண்டிருந்த வழியை விட்டு திரும்பி வேறு பக்கம் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.


ஐயோ இந்த லவ்வர்ஸ் இருக்கிற பக்கமே வரக்கூடாது இன்று புலம்பி கொண்டு அங்கிருந்து வேகமாக ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்று கொண்டு இருந்தவள் நினைவில் ஷாப்பிங் மாலில் வைத்து ஸ்டூடியோவின் வாசலில் வைத்தும் தனக்கு முத்தம் வைத்தவனின் நினைவும் ஸ்பரிசமும் காந்தளுக்கு வந்துவிட அவள் உடல் முழுவதும் சூடேறி முகம் சிவந்துவிட்டது.


அவன் நினைவு வந்த அடுத்த நொடி அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காந்தளின் மூலையை முற்றுகையிட்டது.


அவனை பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்று அவளை யோசித்துக் கொண்டே ரயில் நிலையம் சென்றவளுக்கு அங்கே கண்ட காட்சியை அவளால் நம்பமுடியவில்லை.


தான் யாரை பார்க்க வேண்டும் என்று தோன்றியதோ, யாரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதோ... அவள் நினைத்தது முழுதும் அங்கே நடக்க போவதை அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை.
 
Top