sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -11

பிரியா முகுந்தும் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுத்ததை பார்த்து அவர்கள் வழியில் செல்லாமல் தன் வீட்டிற்கு செல்வதற்காக வேறு வழியில் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தால் காந்தள் .



பிரியா முகுந்தும் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுத்ததை பார்த்து அவர்கள் வழியில் செல்லாமல் தன் வீட்டிற்கு செல்வதற்காக வேறு வழியில் ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தால் காந்தள்.


தன் ஊருக்கு செல்லும் ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காந்தள் காத்துக் கொண்டிருக்க.. அப்போது அங்கே இருந்த தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் அவள் கவனம் பதிந்தது. ஏனென்றால் அந்த டிவி சேனலில் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது சில்வர் லைன் ஸ்டுடியோவை பற்றிய செய்திகள் .



ஒரு பக்கமாக காதில் மாட்டி இருந்த ஹெட் போனை கழட்டியவள் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்னாள் சிஇஓ ஆதிதேவ் அவர்களின் மகன் இளன் புதிய சிஇஓவாக பதவியேற்றார் .


இனி வரும் காலங்களில் சில்வர் லைன் ஸ்டுடியோவிற்க்கான அதனுடன் தொடர்புடைய அனைத்து தொழில்களையும் திரு இளன் அவர்களே முன் நின்று வழிநடத்த போகிறார் . ஏற்கனவே அவர் அமெரிக்காவில் தனக்கென தனியாக லக்கி என்ற விளம்பர கம்பெனி வைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வந்து கொண்டு இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தன்னுடைய தந்தையின் தொண்டிகையும் இப்போது அவர் முன் நின்று நடத்தப் போவதால் இந்தியாவிலும் அவருடைய கால் தடம் பதிப்பதை தொழில் வட்டத்தில் அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று டிவியில் இளம்பெண் ஒருத்தி சில்வர் லைன் ஸ்டுடியோவில் அடுத்த சிஇஓவாக பதவி ஏற்றிருக்கும் இளன் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க...


அதை டிவியில் பார்க்க காந்தள் அதிர்ச்சியானாள் . ஷாப்பிங் மாலையில் வைத்தும் சில்வர் லைவ் ஸ்டுடியோவின் வாசலில் வைத்தும் தன்னை முத்தமிட்டவனை பற்றித்தான் டிவியில் இப்போது செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவளால் நம்ப முடியவில்லை .


அதிர்ச்சியிலிருந்து மீளாமல் காந்தள் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்க அவள் செல்ல வேண்டிய ட்ரெயின் சரியாக அந்த நேரம் வந்து விட அவசரமாக எழுந்தவள் டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை ஒரு முறை நின்று பார்த்துவிட்டு ட்ரெயினில் ஏறி புறப்பட தயாரானாள் .



இளன் பற்றிய செய்திகளை கேட்டதிலிருந்து அவனைப் பற்றிய யோசனையோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள் காந்தள் . இன்னமும் அவள் பார்த்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்க நீண்ட நேரம் கழித்து தான் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவளாக சித்ராவிடமும் பத்மாவிடமும் தான் நாளையே சென்னைக்கு செல்ல இருப்பதாக ப்ரியாவுடன் அவளோடு அவள அறையில் தங்கி கொள்வதாகவும் கூறினாள்


சித்ராவும் , பத்மாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . தினமும் வேலை முடிந்து அவள் வீட்டு வர தாமதமாகிவிடும் அவளுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று ஏற்கனவே இவர்கள் இருவரும் பேசி இருந்ததாள் காந்தள் சொன்னதும் அவள் பிரியாவுடன் தங்கிக் கொள்ள இருவருமே முழுக்க சமதித்திருந்தனர் .


வழக்கம் போல அன்றைய இரவை ஒன்றாக பேசி சிரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர் . மறுநாள் காலை பரபரப்பாக காந்தள் தனக்கு தேவையானவற்றை எடுத்து பேக் செய்து கொண்டு இருந்தாள் சித்ரா அவளுக்கு வேண்டியது எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவிக் கொண்டிருக்க ... பத்மாவோ காந்தளுக்கு அங்கே பிடித்த பதார்த்தங்களை செய்து அதை பேக் செய்து அவளிடம் கொண்டு வந்து கொடுத்தார் .


அம்மு இதுல உனக்கும் பிரியாவுக்கும் சாப்பிடுவதற்காக கொஞ்சமா ஸ்னாக்ஸ் செஞ்சு வெச்சிருக்கேன் தீர்ந்ததும் எனக்கு போன் போட்டு சொல்லு நானும் அம்மாவும் செஞ்சு எடுத்துட்டு வரும் இல்லன்னா உனக்கு கொரியர் வைத்து விடுவோம் என்றார் பத்மா


இது என்ன இவ்வளவு ஸ்னாக்ஸ் கொடுத்து இருக்கீங்க இத தனியா நான் தூக்கிட்டு போகணும் போல இருக்கே . இவ்வளவு எல்லாம் எனக்கு வேண்டாம் இத நீங்களே வச்சுக்கோங்க அடுத்த முறை வரும்போது நான் எடுத்துட்டு போறேன் என்றாள் காந்தள் . நீ இங்க இருந்து எதையும் சுமந்துட்டு போக வேண்டாம் இத்தனை லக்கேஜையும் எடுத்துக்கிட்டு தனியா நீ ட்ரைன்ல அவ்வளவு தூரம் போயிட்டு வரணும்னு தான் நாங்க ஏற்கனவே உனக்காக டாக்ஸி புக் பண்ணிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் நீ நிம்மதியா ஊருக்கு போகலாம் என்றார் சித்ரா.


அதைக் கேட்டு ஆச்சரியமான காந்தள் என்னது டாக்ஸி புக் பண்ணி இருக்கீங்களா இதெல்லாம் உங்களுக்கு எப்போ இருந்து தெரிய ஆரம்பிச்சது என்கிட்ட சொல்லவே இல்லையே என்றால் சிரித்துக் கொண்டே..




அம்மு நீ தானே இதையெல்லாம் எனக்கும் உன் அத்தைக்கும் சொல்லிக் கொடுத்த மறந்துட்டியா ? நீ ஊர்ல இல்லாத நேரத்துல நானும் உன் அத்தையும் இந்த மாதிரி டாக்ஸி புக் பண்ணி தான் போயிட்டு வரோம் . நாங்க புக் பண்ணி இருக்கிற டாக்ஸி ஓட்டுற தம்பி எங்களுக்கு தெரிஞ்சவன் தான் ரொம்ப தங்கமான பையன் பத்திரமா உன்ன கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துருவான் நீ எதை பத்தியும் யோசிக்காத சரியா என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது .


அந்த பையன் தான் வந்துட்டான் இரு நான் போய் பேசிட்டு வரேன் என்று சித்ரா வெளியே செல்ல பத்மா காந்தளிடம் வந்தவர் சித்ரா போய் விட்டாரா என்று உறுதி செய்து கொண்டு தன் லவ் சிக்கல் வைத்திருந்த பர்ஸை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து காந்தளின் கையில் அவசரமாக திணித்தவர். இந்தா இத வச்சுக்கோ உன் அம்மாகிட்ட சொல்லிடாத அப்புறம் நான் தான் உன்னை செல்லம் கொடுத்து கெடுக்குறேன்னு என்னை திட்டுவா.


உனக்கு எதுவும் வேணும்னா வாங்கிக்கோ வேலைக்கு போறப்போ இந்த மாதிரி டிரஸ் எல்லாம் இனிமேல் போட்டுட்டு போகாத. நல்ல டிரஸ் வாங்கி போட்டுட்டு போ நீ வேலைக்கு போக போறது வேற பெரிய கம்பெனின்னு சொன்ன அங்க எல்லார் முன்னாடியும் நீயும் நல்லா இருக்கணும் இல்லையா என்றார் தன் அண்ணன் மகளின் மீது அக்கறையாக.


அத்தை என்கிட்ட பணம் நிறைய இருக்கு இதை நீ உன் செலவுக்கு வச்சுக்கோ எனக்கு வேண்டாம் என்று அவர் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் ஏற்கனவே அவள் வேலை செய்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணமும் அவள் கையில் தான் இருக்கிறது . அதுவும் இல்லாமல் இளன் அவரிடம் கொடுத்த பணம் அக்கவுண்டில் இருப்பதை யோசித்த பாரு பத்மாவிடம் சொன்னாள் .


உன்கிட்ட இருக்கிற பணத்தை நீ அப்படியே வச்சுக்கோ அதை செலவு செய்யாத உனக்கு வேற எதுவும் பின்னாடி அது உதவியா இருக்கும் இதனை செலவுக்கு வச்சுக்கோ என்று வலுக்கட்டாயமாக அவள் கையில் இருந்த பரிசை வாங்கி அதில் பணத்தை வைத்து காந்தளின் கைகளில் திணித்தார் பத்மா.


அதற்குள்ளாக சித்ராவும் வந்துவிட ... வரும்பொழுது சித்ராவும் கையில் பணத்தோடு வந்தவர் இந்த காந்தள் இதை நீ செலவுக்கு வச்சுக்கோ எதுவும் வேணும்னா எனக்கு போன் பண்ணு நான் உனக்கு அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுறேன் சரி சீக்கிரம் கிளம்பு அந்த தம்பி ரொம்ப நேரமா வெயிட் பண்ண போகுது அப்புறம் அதுக்கும் காசு கேப்பாங்க என்று அவளை அவசரப்படுத்தினார்


சித்ரா கொடுத்த பணத்தை வேண்டாம் என்று காந்தள் மறக்க போக பத்மா அதையும் வாங்கி காந்தள் கையில் பிடித்தவர் வச்சுக்கோ என்று கண்ணடித்து அவளிடம் சொல்ல ... தன் மீது போட்டி போட்டு அக்கறை செலுத்தும் இருவரையும் நினைத்து உள்ளம் உருகினாள் காந்தள் . அவர்கள் இருவரையும் கட்டிப்பிடித்து மொத்தம் வைத்தவள் அங்கிருந்து பிரிய மனமில்லாமல் கிளம்பினாள்


சித்ராவும் , பத்மாவும் முதன்முறையாக காந்தளை விட்டு பிரிந்து இருக்கப் போவதை நினைத்து வருத்தம் அடைந்தாலும் தங்கள் மகளுக்கான எதிர்காலம் நல்ல முறையில் அமைவதால் அவளை பிரிந்து இருக்க தங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு சென்னைக்கு அவளை அனுப்பி வைத்தனர்


சென்னைக்கு வந்த காந்தள் டாக்ஸி டிரைவரின் உதவியோடு தன்னுடைய பொருட்களை எல்லாம் பிரியாவின் அறையில் சேர்த்து விட்டு டிரைவருக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தாள் . அன்றைய இரவு பிரியா காந்தளுக்கு தான் நாளை இரவு தான் வரப்போவதாக மெசேஜ் அனுப்பி இருந்தாள் .


புதிதாக அன்றைய காலை புத்துணர்வாக உதித்தது . காந்தளுக்கு புதிதாக இன்று தான் சேர போகும் வேலையை நினைத்து ஒருபுறம் படபடப்பாக இருக்க ... அங்கே புதிய சிஇஓவாக பதவியேற்றிருக்கும் இளன் குறித்த நினைவுகளும் அதனோடு சேர்ந்து அவளை அலைகழித்தது


அவனோடு சேர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகிவிடுமோ தனக்கும் அவனுக்கும் ஆன சம்பந்தம் வேலையில் எப்படி இருக்கும் என்று யோசித்தவள் அவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தில் சிஇஓவாக இருக்கும் இள்ன் எங்கே ? விளம்பரத் துறையில் சாதாரண அசிஸ்டெண்டாக சேர்ந்திருக்கும் தான் எங்கே கண்டிப்பாக அவனுக்கும் தனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத பொருத்தம் தான் வேலையில் அதனால் அவனை நான் சந்திப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் என்று நினைத்தவாரே வேலைக்கு கிளம்பினாள் காந்தள் .


இன்று அவளைப் போலவே சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மீட்டிங் ஹால் இருக்கு வந்து காத்திருந்தவள் அவளைப் போலவே நிறைய பேர் அங்கு கூடியிருப்பதை பார்த்து அமர்ந்திருந்தாள் .


அந்த ஹால் முழுவதும் அங்கே குடியிருந்த அவர்களின் பேச்சு சட்டங்கள் எதிரொலித்துக் கொண்டு இருக்க அதை கவனித்து வாரே சுற்றிலும் நோட்டமிட்டபடி அமர்ந்திருந்தாள் .


திடீரென்று அந்த ஹாலின் கதவு திறக்கப்படவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அப்படியே அமைதியாகி கதவை நோக்கி திரும்பி பார்த்தனர் .
 
Top