- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
காந்தள் ப்ரியாவிடம் வந்து "ஏய் நீ நம்ம காலேஜ் படிச்ச அப்போ இவனை பார்த்து இருக்கியா? நான் ஒரு முறை கூட பார்த்தது இல்லையே " என்று சந்தேகமாக கேட்டவள். அப்போது தான் ப்ரியா இன்னமும் மாறனின் கையை பிடித்துத் இருப்பதை பார்த்தாள். "ப்ரியா அதான் உன்னை இண்ட்ரோடியூஸ் செய்தாச்சில்ல... இன்னமும் ஏன் டி அவர் கையை விடாம பிடிச்சிட்டு இருக்க... அவர் கையை விடு டி.." என்று சற்று பொறாமையோடு காந்தள் ப்ரியா காதிற்குள் கிசுகிசுத்தாள் .
"ஏய் எனக்கு என்ன உன் புருஷன் கையை பிடிச்சுக்கிட்டே இருக்கணும்னு ஆசையா டி.... நல்லா பாரு டி முதல்ல... நான் எங்கே அவர் கையை பிடிச்சிட்டு இருக்கேன். அவர் தான் கையை விடாம பிடிச்சிட்டு இருக்காரு. கை வலிக்குது டி ... நான் தெரியாம உன்கிட்ட இவரையா கல்யாணம் செய்துகிட்டேன்னு கேட்டுட்டேன். அப்போ இருந்து மனுஷன் என்னை மொறைச்சு தள்ளுறாரு. நானாவது அவரு முறைக்குறதை பார்த்து அலெர்ட் ஆகி இருக்க வேணாம் . வாலன்டியரா நானே என் கையை இவரு கிட்டே கொடுத்து இப்போ பொறிக்குள்ள மாட்டிக்கிட்ட எலி மாதிரி திண்டாடுறேன் டி... ப்ளீஸ் உன் புருஷன்கிட்ட சொல்லி என் கையை விட சொல்லு... இப்படியே இவரு என் கையை நசுக்கிட்டு இருந்தாருன்னா... இன்னும் கொஞ்ச நேரத்துல என் எலும்பெல்லாம் நொறுங்கிரும் டி... " என்றாள் ப்ரியா .
அப்போது தான் அதை கவனித்த காந்தள் மாறன் தான் கோபமாக ப்ரியா கையை பிடித்துக்கொண்டு இருந்தான். உடனே அவன் கையை பிரியா கையில் இருந்து சற்று கஷ்டப்பட்டு பிரித்தவள் தன் கையோடு மாறனின் கையை கோர்த்துக்கொள்ள... ஆனால் மாறனோ காந்தள் கையில் இருந்து தன் கையை உதறியவன் அவளை முறைத்தபடி திரும்பி முகுந்திடம் பேசத்துவங்கினான்.
அதை கவனித்த ப்ரியா "என்ன டி ஆச்சு... உனக்கும் உன் புருஷனுக்கும் எதுவும் பிரச்சையா அவர் என்கிட்டே தான் கோபமா இருக்காருன்னு பார்த்தா உன் மேலயும் கோபமா இருப்பாரு போலயே " என்றாள்.
"ஆமா ப்ரியா , நான் கொஞ்ச நாள் இங்கயே இருக்கேன் . எங்க ரெண்டு பெருக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை கொஞ்ச நாளைக்கு யார்கிட்டயும் சொல்லாம மறைச்சிடலாம்னு சொன்னேன் . அதுக்கு தான் அவருக்கு என் மேல கோபம் " என்றாள் காந்தள்.
"என்ன டி சொல்றே... இப்போதானே உனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு... அதுக்குள்ள அவரை விட்டு பிரிஞ்சு நீ தனியா இங்கே இருக்கேன்னு சொல்றே!!" என்றாள் ப்ரியா .விடம் மட்டும் கேட்கும்படி சொன்ன விஷயத்தை அனைவர்க்கும் கேட்கும்படி சத்தமாக கூறிவிட...
ஆரத்தி வெளியே ஊற்றிவிட்டு வந்த சித்ராவும், அனைவர்க்கும் காபி போட்டு வந்த பத்மாவும் , சோபாவில் அவர்களோடு அமர்ந்து இருந்த முகுந்திருக்கும் ப்ரியா சொன்னது கேட்டு அதிர்ச்சியானது.
"என்ன பிரியா சொல்றே!" என்று முகுந்த் அவளிடம் கேட்க...
"டேய் இவ கல்யாணம் ஆனதுக்கு பிறகு அவ புருஷன் கூட அவர் வீட்டுக்கு போகாம இங்க இருந்தே வேலைக்கு போராளாமா... இவங்க ரெண்டு பெருகும் கல்யாணம் ஆன விஷயத்தை கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம மெயின்டெய்ன் பண்ண போறேன்னு சொல்றா..." என்றாள் ப்ரியா விளக்கமாக.
v
அதை கேட்டு பத்மாவும், சித்ராவும் ஒருவரை பார்த்தனர் . பின் சித்ரா காந்தளிடம் "என்ன அம்மு இதெல்லாம் ப்ரியா சொல்றது உண்மையா ? நீ நிஜமா தான் கல்யாணம் செய்திருக்கியா ... இல்லேன்னா கல்யாணம் ஆனதுக்கு பிறகு உன் புருஷன்கூட அவர் வீட்டில் போய் வாழாம நம்ம வீட்டுலயே இருக்கேன்னு சொல்றே... " என்றார் நம்பமுடியாமல்.
"அம்மா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க... நாங்க ரெண்டு பெரும் உண்மையாவே கல்யாணம் செய்துகிட்டோம் . நான் இவரோட ஆஃபிஸில் தானே வேலை பாக்குறேன். அப்படி இருக்க அப்போ நான் இவரை கல்யாணம் செய்துகிட்டு அங்கே வேலை பார்த்தா .. என்னை எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க . என்கிட்டே யாரும் முன்னன மாதிரி சகஜமா பேச மாட்டாங்க. என்னை அவங்க கிட்டே இருந்து தள்ளி வெச்சு நடத்துவாங்க... அதே போல வேளையில் எதுவும் பிரச்சனை வந்தா அதை நானே முயற்சி செய்து சமாளிச்சாலும் எல்லாரும் இவர் தான் எனக்கு சப்போர்ட் பண்றதா பேசுவாங்க . அதுக்காக தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். கொஞ்ச நாளைக்கு தான் மா... " என்றாள் காந்தள்.
"காலையில் இருந்து இதையே தான் திரும்ப திரும்ப என்கிட்டே சொல்லி டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கா அத்தை . நீங்க சொல்லுங்க வேலைக்கு போற இடத்துல வேணும்னா எங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்லிக்கலாம் . இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம நான் சமாளிச்சுக்குவேன். அதுக்காக கல்யாணம் ஆன மறுநாளே இங்கே வந்து இருக்கேன்னு சொல்றா... எனக்கு இது சுத்தமா பிடிக்கல... ஏன் என்கூட என் வீட்டில் இருந்துகிட்டே இவளால் வேளைக்கு போக முடியாதா என்ன... நீங்களே இவகிட்டே கேளுங்க அத்தை " என்று உரிமையாக காந்தள் மீது குற்றசாட்டுகளை அவள் அம்மாவிடம் கூறினான் மாறன்.
ஆஃபிஸில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்குபவன் . யாரையும் சமாளிக்கும் திறமை கொண்டவன் . வாய் திறந்து சேர்ந்தாற்போல வார்த்தைகள் பேசாதவன் இன்று இவ்வளவு பேசுகிறான். தன்னை பற்றி தன் அம்மாவிடம் கோல் மூட்டுகிறான் என்று அவனை அதிசயம் போல பார்த்தாள் காந்தள் .
சித்ராவோ மாறன் வார்த்தைக்கு வார்த்தை தன்னை மாறன் அத்தை என்று உரிமையாக அழைப்பதை பார்த்து சந்தோஷமடைந்தவர் ." அம்மு மாப்பிள்ளை பேசினதை நீயும் தானே கேட்டே... அவர் சொன்னதுல என்ன டி தப்பு இருக்கு... நீ கல்யாணம் செய்துட்டு நம்ம வீட்டில் இருக்கிறது சரியா வராது . அதை முதல்ல புரிஞ்சுக்கோ... அது முறையும் இல்லை " என்று வந்த சிறிது நேரத்திலேயே தன் அம்மா மாறன் பக்கம் சாய்ந்ததை எண்ணி அதிர்ச்சியடைந்தாள் காந்தள்.
"அம்மா... அது வந்து... " என்று காந்தள் இழுக்க...
அப்போது வாசலில் இருந்து "உள்ளே வரலாமா ?" என்று குரல் வரவும் அனைவரும் வாசலை திரும்பி பார்த்தனர். அங்கே மாறனின் அம்மா மரகதம் நின்று இருக்க... அவர் அருகில் மாறனின் அப்பா தமிழ் மாறன் நின்று இருந்தார். அவர்கள் இருவரையும் காந்தள் , மாறனை தவிர அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை . அவர்களை பார்த்து சித்ரா விளித்தாலும் வீட்டிற்கு வந்தவர்களை , அதுவும் உள்ளே வர அனுமதி கேட்டு வாசலில் நின்று இருந்தவர்களை அவசரமாக வாசலுக்கு சென்று உள்ளே வரும்படி அழைத்தார்.
அவர்கள் இருவரும் சிரித்த முகமாக வீட்டிற்குள் நுழைய காந்தள் சோபாவில் இருந்து எழுந்து நின்றவள். வாங்க மாமா... வாங்க அத்தை என்று இருவரையும் வரவேற்றவள் சோபாவில் அவர்களை அமர செய்தாள் . பின் பத்மாவிடம் வந்து அவர் கையில் இருந்த காபி ட்ரேயை வாங்கி முதலில் மாறனின் பெற்றோருக்கு காபி கொடுத்தவள் பின் மாறன் பக்கம் காபி ட்ரேயை நீட்ட...
காந்தளை முறைத்தபடியே காபியை மாறன் எடுக்க கையை நீட்ட... அவனை காபியை எடுக்கவிடாமல் ட்ரேயை பின்னுக்கு இழுத்தவள் மாறனை பார்த்து உதட்டை சுழித்துவிட்டு அவனை தாண்டி ப்ரியாவிடம் ட்ரேயை நீட்டினாள். ப்ரியாவும் காபியின் நறுமணம் நாசியை துளைக்க... வேகமாக கை நீட்டி காபியை எடுத்துக்கொண்டாள் . பின் முகுந்தனுக்கும் கொடுத்துவிட்டு வந்து தன் அம்மாவிடம் நின்றுகொண்டாள்.
மாறன் காந்தள் தனக்கு காபி கொடுக்காமல் எடுத்து சென்றது மாறனை கடுப்பேற்றிவிட்டது. ஏற்கனவே தன்னோடு வீட்டிற்கு வர மறுப்பவள் மீது கோபமாக இருந்தவன் மேலும் அவள் மீது கோபமாக வந்தது அவனுக்கு அவள் தற்போது செய்த செயலால்.
"எங்களை மன்னிக்கணும் என் மகன் திடீர்னு உங்க பொண்ணை கல்யாணம் செய்துட்டு வந்து நிப்பான்னு எங்க யாருக்குமே தெரியாது .உங்க வீட்டு பொண்ணை அவன் கல்யாணம் செய்துட்டு வந்ததுல கண்டிப்பா உங்களுக்கு வருத்தம் இருக்கும் . அதான் உங்கள நேரில் பார்த்து எங்க பையன் செய்த காரியத்துக்காக உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு போலாம்னு வந்தோம் " என்று தமிழ்மாறன் சித்ராவையும் , பத்மாவையும் பார்த்தார் .
அவர்கள் இருவரில் யார் காந்தள் அம்மா என்று தெறியாமல் அவர் விழிக்க... அதை கவனித்த காந்தள். "மாமா இவங்க என் அம்மா சித்ரா... இவங்க என் அத்தை பத்மா. என் அப்பாகூட பிறந்தவங்க.. என் அப்பா சின்ன வயசுலயே எங்களை எல்லாம் விட்டு போய்ட்டார் . ஆனா என் அம்மாவையும் , என்னையும் என் அத்தை தான் இப்போ வரை பத்துக்குறாங்க . எங்க ரெண்டு பெருகும் ஆதரவா இப்போ வரை என் அத்தை இருக்காங்க " என்று பத்மாவை பற்றி சொல்லி இருவரையும் அறிமுகம் செய்த்து வைத்தாள்.
அவள் சொன்னதும் தன் குழப்பத்தை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல நடந்து கொண்ட காந்தளை நினைத்து மெச்சிக்கொண்டவர் . "அப்போ இவங்களும் உனக்கு இன்னொரு அம்மா மாதிரின்னு சொல்லும்மா... " என்றவர் ." என் மகன் செய்த காரியத்துக்காக உங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் " என்று அவர் கையெடுத்து கும்பிட...
அதை பார்த்து பதறிய பத்மா "ஐயோ... என்ன இது அப்படி பார்த்தா எங்க வீடு பொண்ணும் தான் தப்பு பண்ணி இருக்கா... அவளும் விரும்பி தானே இந்த கல்யாணத்தை செய்துகிட்டா . அப்போ நாங்களும் எங்க பொண்ணு செய்த காரியத்துக்காக உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுகிறோம் " என்று பத்மா கூற...
"அடடே... என்ன இது இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டுட்டு இருந்தா என்ன அர்த்தம் . போகட்டும் விடுங்க .. எப்படியோ இத்தனை வருசமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் . உங்க பொண்ணை பார்த்ததுக்கு அப்பறோம் கல்யாணம் செய்த்தது வந்தது ஒரு வகையில் எங்களுக்கு சந்தோசம் தான் " என்றார் மரகதம்.
" என் சின்ன மகன் மதிமாறன் உங்க பொண்ணை ஏமாத்தினத்துக்காக நான் உங்க கிட்டே மன்னிப்பு கெடுக்கிறேன். அவன் செய்த காரியத்தை எங்களால ஜீரணிச்சுக்கவே முடியலை. அவனை கண்டிக்க மட்டும் தான் என்னால முடிஞ்சது . ஆனா தண்டிக்க முடியலை. என் ரெண்டு மகன்களும் எனக்கு உயிர் என்னால் அதுக்கு மேல ஏதும் செய்ய முடியலை . " என்று மரகதம் மதி செய்த காரியத்திற்காக கையெடுத்து கும்பிட...
அவசரமாக அவரிடம் வந்த சித்ரா "என்ன இது... இப்படி எல்லாம் செய்யாதீங்க.. ஏதோ நடந்தது நடந்திருச்சு. என் பொண்ணு உங்க வீடு மருமகளா ஆகிட்டா.. பழசை எல்லாம் பெருசா எடுத்துக்காம நீங்க அவளை மன்னிக்கணும் " என்றார் .
" நாங்க நடந்தை பெருசா எடுத்துக்கல ... என் வீடு மருமகள் எனக்கு மகள் மாதிரி . எனக்கு பொண்ணு இல்லாத குறையை உங்க பொண்ணு தீர்த்து வைப்பான்னு நான் நம்புறேன் " என்றார் மரகதம் காந்தளை பார்த்து.
"கண்டிப்பா இருப்பேன் மா... " என்றாள் சிலிர்த்துகொடனே காந்தளும் .
"எப்படி நீ இங்கே உன் வீட்டில் இருக்க போற... என் அம்மாகூட எப்படி நீ அவருக்கு மகளா இருக்க முடியும் " என்று சமயம் பார்த்து மாறன் அவன் பெற்றோரிடமும் காந்தளின் முடிவை போட்டு கொடுத்து விட...
அவனை முறைத்தவள் மாறனின் பெற்றோரை தயக்கமாக பார்த்தாள் .
"நாங்க ரெண்டு பேரும் வரும்போது நீங்க பேசுனதிற் எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தோம் " என்ற தமிழ்மாறன்.
"இங்கே பாரு மா... நீ நம்ம வீட்டில் இருந்தே வேளைக்கு போகலாம். உனக்கு எந்த பிரச்னையும் ஆஃபிஸில் வராம நாங்க பாத்துகிறோம். அதுக்காக கல்யாணம் ஆனா மறுநாளே உன் வீட்டி்ல் வந்து தங்குறேன்னு சொல்றது எல்லாம் நியாயம் இல்லை. இதுக்கு என் மகன் சம்மதம் சொன்னாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம் " என்றார் தமிழ்மாறன்.
"ஆமா நீங்க சொல்றது தான் சரி "என்று பத்மாவும்,சித்ராவும் காந்தள் முடிவுக்கு எதிராக நிற்க... இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டவள்