sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
பதட்டமான அவளை விழிகளை பார்த்து "இப்போ எதுக்கு இவ்வளவு சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்க. நான் தான் அந்த பணம் எனக்கு வேண்டாம்னு சொன்னேனே அதை என்கிட்ட கொடுப்பதிலேயே குறியா இருக்க "என்றான் .


"நீங்க யாரு எனக்கு? முதல்ல எனக்கு எதுக்கு நீங்க பணம் கொடுக்கணும். உங்க பணம் எனக்கு தேவையில்லைனு நான் அன்னைக்கே சொல்லிட்டேன். இப்படி வலுக்கட்டாயமா பணத்தை என்கிட்ட கொடுத்து என்ன காரியம் சாதிக்கலாம் நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க" என்று அவனை காயம் படும்படி பேசினாள் காந்தள்..


"காந்தள் வார்த்தையை யோசித்து பேசு உன்கிட்ட காரியம் சாதித்து கொள்வதற்காக நான் அந்த பணத்தை கொடுக்கல. உன் மேல இருக்கிற அக்கறையில் ஒருவித அன்புல தான் அந்த பணத்தை நான் உனக்கு கொடுத்தேன். அது உனக்கு ஏதாவது ஒரு வகையில உதவியா இருக்கும்னு தான் அந்த பணத்தை உன் கிட்ட கொடுத்தேன்" என்றான் .


"நான் உங்ககிட்ட எனக்கு உதவி வேணும்னு கேட்டேன் அப்படி கேட்காமல் கொடுக்கறதுக்கு பேரு என்ன அர்த்தம்" என்றால் அவனை கோபமாக பார்த்து .


"காந்தள்!!" என்று இளன் கோபமா அவளை பார்க்க . .. என்ன மிஸ்டர் இளன் உங்களுடைய வசதி வாய்ப்புகளை என்கிட்ட காட்டி என்ன உங்களுக்கு அடிபணிய வைக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பணத்தை கொடுத்து எனக்கு முத்தம் கொடுத்து உங்களோட காரியத்தை சாதிக்க நினைக்கிறீங்க. அப்படித்தானே 11நான் எவ்வளவோ முறை சொல்லிட்டேன். நானும் என் முத்தமும் விற்பனைக்கு இல்ல அப்படி நீங்க பணத்தை கொடுத்து என் முத்தத்தை வாங்குறீங்கன்னா அதுக்கு பேரு என்ன அர்த்தம். என்னை எந்த மாதிரி நீங்க மனசுல நினைச்சு இருக்கீங்கன்னு இதிலிருந்து புரிய வேண்டாம். அப்போ காசு கொடுத்து ஒரு பொண்ணு கிட்ட போறவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். என்னை அந்த இடத்தில் தானே நீங்கள் வச்சிருக்கீங்க" என்றாள்.


அவள் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை "தான் இன்னும் அவளிடம் ஒருமுறை கூட மனது விட்டு பேசி இருக்காதபோது காந்தள் தன்னை பற்றி இப்படியான ஒரு எண்ணத்தை தன் மனதில் விதைத்து இருக்கிறாள்" என்று நினைக்கையில் அவன் மனம் கனத்தது .




"காந்தள் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. என் மனசு விட்டு உள்ளதை உன்கிட்ட பேசணும்னு தான். இந்த பார்ட்டியை நான் அரேஞ்ச் பண்ணினேன் . இன்னைக்கு இந்த பார்ட்டியை நான் இங்கே அரேஞ்ச் பண்ணதுக்கு காரணமே நீதான் உனக்காக மட்டும் தான்" என்றான் .


"பாருங்க இப்ப கூட உங்களோட வசதிய காட்டித்தானே என்னை மடக்க பார்க்கிறீங்க . அது ஒரு காலும் நடக்காது " என பேசியவள்




"முதல்ல என்னை விடுங்க "என்று தன் அருகில் இருந்தவனை தள்ளிவிட்டு திரும்பி கதவை திறக்க போக காந்தளின் இந்த பேச்சும், செயல் இரண்டுக்கும் இளனுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்த...


திரும்பி இருந்தவர்களின் கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் கதவில் அழுத்தி காந்தளை நிற்க வைத்து குனிந்து அவள் இதழில் இந்த முறை வலுக்கட்டாயமாக முத்தம் வைத்தான் .


இதற்கு முன்பு கொடுத்த முத்தங்கள் மென்மையாக இருக்க.. இப்போது அவன் கொடுக்கும் முத்தம் அவளை காயப்படுத்தும் விதமாக இருந்தது. அவனின் இந்த செயலை காந்தள் எதிர்பார்க்கவே இல்லை. தன்னால் முடிந்த மட்டும் பலத்தை பிரயோகித்து அவன் மார்பில் கை வைத்து தன்னை விட்டு இளனை விளக்கி நிற்க வைத்தவள் மூச்சு திணறிய படி அவனை பார்த்தாள்.


இளனின் கோபம் இன்னும் குறைந்த பாடில்லை மீண்டும் குனிந்து அவள் இதழில் இளன் முத்தம் வைக்கப் போக..


இதற்கு மேல் காந்தளால் அவனை தடுக்க முடியாது என்று முடிவு செய்தவள் சிறிதும் யோசிக்காமல் இளனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .


இதை சற்றும் எதிர்பாராத இளன் காந்தளை சிவந்த விழிகளோடு ஏரிடா...


"இங்க பாருங்க நீங்க நினைச்ச போதெல்லாம் வந்து எனக்கு முத்தம் கொடுப்பதற்கு நான் ஒன்னும் உங்க காதலி கிடையாது. நீங்க பணம் கொடுத்து விலைக்கு வாங்குற பொண்ணும் கிடையாது. நான் ஏற்கனவே ஒருத்தர மனசார விரும்புறேன் தயவு செய்து என் வழியில குறிக்கிடாதீங்க" என்றாள் .


அவள் இன்னொருவனை காதலிக்கிறேன் என்று சொன்னதை கேட்டு இளனுடைய இதயம் வெடித்து விடும் போல இருந்தது . அவள் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்தவன்.


காந்தளை நம்பமுடியாமல் பார்த்தவன் "என்ன சொல்ற!! நீ வேற ஒருத்தனை லவ் பண்றியா?" என்றான் அதிர்ச்சி மாறாமல்.


"ஆமாம் நம்ம ஆபீஸ்ல தான் அவர் வேலை பார்க்கிறார் இந்த பாட்டிக்கு கூட அவர் வந்திருக்கிறார். அவரை தான் நான் லவ் பண்றேன் என்றாள் காந்தல் . நம்ம ஆபீஸ்ல என்று புருவம் சுருங்க இளன் பார்க்க ...


ஆமாம் என்று தலையாட்டியவள் தன்னை பிடித்திருந்ததனின் கையை பிரித்து விட்டு திரும்பி கதவை திறந்து வெளியே சென்றாள் . அவள் பின்னாலேயே வந்த இளன் அவளை பின்தொடர தன் பின்னால் இளன் வருவதை பார்த்ததும் வேகமாக காந்தளின் கண்கள் கூட்டத்தில் மதி எங்கே இருக்கிறான் என்று தேடியது.


அவன் தூரத்தில் நின்று யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருக்க வேகமாக அவனை நோக்கி ஓடிய காந்தள் மதி என அவனை அழைக்க ...


காந்தளை பார்த்ததும் மதியும் சிரித்த முகமாக எங்கு போயிருந்த காந்தள் உன்னை நான் இவ்வளவு நேரம் தேடிக்கிட்டு இருந்தேனே என்றான் . தூரத்தில் இன்று தனக்கு பின்னால் தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் இளனை ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி நான் இங்க ராணி மேடம் கூட தான் பேசிகிட்டு இருந்தேன். உன்னை தான் தேடிட்டு இருந்தேன் நீ என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன அது என்றாள்.


அவள் அப்படி கேட்டதும் தயங்கிய மதி இங்கேயே சொல்லனுமா நம்ம கிளம்பும்போது வெளியே போய் பேசிக்கலாமா என கேட்டான் .


இல்ல மதி எனக்கு இப்பவே இங்கேயே தெரிஞ்சாகணும் சீக்கிரம் சொல்லு என்றார் அவனை அவசரப்படுத்தினாள்.


தாங்கள் நின்றிருந்த இடத்தை விட்டு காந்தளின் கைப்பிடித்து தனியே அழைத்து வந்த மதி அவள் கைகள் இரண்டையும் தன் கையோடு கோர்த்து பிடித்தவன் நீ ரொம்ப அவசரப்படுற எனச் சொல்லி சிரித்துவிட்டு எனவே எப்படியும் உன்னிடம் நான் சொல்லித்தான் ஆகணும் என்றவன்.


எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு காந்தள். நான் உன்னை விரும்புறேன் நீயும் என்ன விரும்புறதா எனக்கு தோணுது. அதனால தான் தைரியமா உன்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன் முடிவு உன் கையில தான் இருக்கு என்றாள் தீர்க்கமாக அவளைப் பார்த்து .


அவன் பேசியதை எல்லாம் காந்தள் கேட்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது அதேபோல பேசியதை மதி பேசியதை அவர்களை விட்டு சற்று தள்ளி நின்ற இளன் கேட்டிருப்பான் என்று உறுதி செய்து கொண்டவள். அவன் இடம் இருந்த தன் கையை விடுவித்தவள் அவனை கட்டிக்கொண்டு நானும் தான் உன்ன விரும்புறேன் என்று சொல்லி சந்தோஷப்பட்டாள் .


மதிக்கு காந்தளும் தன்னை விரும்புவதை கேட்டு மிகவும் சந்தோஷமானது. அவனும் அவளை இருக்க அணைத்துக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் காந்தள் நான் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோனு கொஞ்சம் பயமாவும் எனக்கு இருந்தது. அந்த பயம் இப்போ சுத்தமா இல்லை என்று சொல்லி அவளை மேலும் இருக்க அணைத்துக் கொண்டான் .


காந்தள் அவன் பேசியதை கேட்டு சிரித்தவள் அவனை விட்டு விலகி நின்று சரி வா நம்ம வெளியே போகலாம் இனி நமக்கு இங்கே வேலை இல்லை என்றவள்.


அவன் கைகோர்த்து அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லும் முன்பு தூரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த இளனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து மதியின் கைகோர்த்த படி கிளம்பினாள் .
 
Top