sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -13

புதிதாக சேர்ந்து இருந்த பிரஷர்களுக்கான பார்ட்டி களைகட்டி இருந்தது . இளனுக்கு சொந்தமான சிட்டியிலேயே மிகவும் பெரிய ரெஸ்டாரண்டுக்கு அனைவரும் வந்திருந்தனர் .


கூட்டம் கூட்டமாக ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க... காந்தள் வந்ததிலிருந்து தான் வேலை செய்த ஆபீஸில் யாருடனும் நெருங்கி பழகவில்லை . எப்போதும் வேலை வேலை என்று இருப்பவள் அதிகமாக ராணியுடன் தான் இருப்பாள். அவள் ராணியுடன் வேலை செய்தியில் அவர் சொல்லிக் கொடுக்கும் சில தொழில் யுத்திகளை கையாண்டு தனக்கு தெரிந்ததையும் தான் கற்றுக் கொண்டதையும் சேர்த்து தன் வேலையில் கவனமாக இருந்ததால் இப்போது இங்கே காந்தள் தனக்கு நண்பர் வட்டம் இல்லாமல் தாம் மட்டும் தனியாக இருப்பது போல உணர்ந்தாள் .


அவள் தயக்கமாக ஓரமாக நின்றிருப்பதை பார்த்த ராணி அவராகவே காந்தளின் முன்பு வந்து "இதுக்கு தான் என் பின்னாடி சுத்தாதேன்னு சொன்னேன். வெளியில பார்ட்டின்னு வந்தால் பிரண்ட்ஸோட சேர்ந்து சந்தோஷமா என்ஜாய் பண்ணனா தானே நல்லா இருக்கும். இந்த 40 வயசானவ கூட சேர்ந்தா இப்படித்தான் என்ன மாதிரியே தனியா இருக்க வேண்டிவரும்" என்றாள்.




"மேடம் உங்களுக்கு 40 வயசுன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது. உங்கள பார்த்தா அப்படி எல்லாம் எதுவுமே தெரியல நீங்களும் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க . எனக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க மேடம் ஆனா அவங்கள இங்க கூட்டிட்டு வர முடியாது" என்றாள் .


"அதுவும் சரிதான் இங்கு நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸ் மட்டும் தானே இருக்கோம்" என்று ராணி பேசிக் கொண்டிருக்கும் போது.


"ஏன் உங்க பிரெண்ட்ஸையும் தாராளமா இந்த பார்ட்டிக்கு நீங்க வரவழைக்கலாமே. வெளி ஆட்கள் இங்க வரக்கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே" என்று ஒரு குரல் காந்தளுக்குப் பின்னால் மிகவும் நெருக்கமாக கேட்டது.


அந்த குரலை கேட்டதும் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே இளன் சிரித்த முகமாக அவள் அருகில் நின்றிருந்தான் .


அவனைப் பார்த்ததுமே காந்தளுக்கு தூக்கி வாரி போட்டது. எப்படியாவது இவனை பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனாகவே தன் முன் வந்து நிற்பதை பார்த்து அதிர்ச்சியானது .


இருந்தாலும் அவனை இப்போது பார்த்ததும் ஒருவகையில் நல்லதாக போய்விட்டது அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இப்போதே தூக்கி கொடுத்து விட வேண்டும் என்று எண்ணியவள் அதைப்பற்றி அவனிடம் பேசப் போக..


அதற்குள் ராணி அவர்களுக்கிடையில் புகுந்து "சார் நம்ம ஆபீஸ்ல இருக்குற ஸ்டேப்க்கு தானே இந்த பார்ட்டியை அரேஞ்ச் பண்ணி இருக்கோம். அப்படி இருக்கிறப்போ வெளியாட்கள் எப்படி... அப்படியே ஆட்கள் அதிகமான செலவு அதிகம் ஆகும்" என தயக்கமாக கேட்க .


"இது என்னோட ஹோட்டல் தானே செலவு பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க ராணி. அத பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல உங்க ஸ்டாஃப்க்கு இங்க தனியா இருக்க கஷ்டமா இருந்தா அவங்க பிரண்ட்ஸ் வரவழைச்சுக்க சொல்லுங்க. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.


அவன் சொன்னதை கேட்டு ராணி காந்தளை பார்க்க... காந்தளோ வேகமாக தலையை அசைத்து "இல்ல மேடம் வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரத்துல பார்ட்டி முடிய போகுது நான் கிளம்பிடுவேன் . என் பிரண்ட்ஸ்க்கு இப்போ லாஸ் பண்ணிட்டு சொல்லி அவங்கள அலைய வைக்க நான் விரும்பல" என்றவள் "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றாள் .


இதுக்கு மேல் என்ன சொல்வது என்று ராணிக்கு தெரியவில்லை. அப்போது பிரிண்டிங் டிபார்ட்மெண்டில் இருந்து அதனுடைய ஹெட் ராணியை பெயர் சொல்லி அழைத்து கையை அசைத்தவர். அவரை இங்கே வரும்படி அழைக்க ராணி காந்தள் இளன் இருவரையும் பார்த்து "ஒன் மினிட் வந்துடறேன்" என அங்கிருந்து நகர்ந்தார் .


ராணி அங்கிருந்து சென்றதும் வேகமாக காந்தள் இளனை பார்த்து "தயவுசெய்து உங்களுடைய அக்கௌன்ட் நம்பரை எனக்கு கொடுங்க உங்க பணத்தை நான் அக்கவுண்ட்ல வச்சுட்டு இருக்கிறது எனக்கு எதுவும் ரொம்ப பாரமா இருக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு உங்களோட பணம் வேண்டாம்னு ப்ளீஸ் உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க" என்றாள் .


"என்ன boo ... நீ, நான் எத்தனை முறை அந்த பணம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு பதிலா தானே உன்னோட முத்தத்தை நான் எடுத்துகிட்டேன்" என்று ஒரு பேச்சுக்காக அவளிடம் முத்தத்திற்கு பணம் என்று சொன்னான்.


"என்னுடைய விருப்பம் இல்லாம எனக்கு முத்தம் கொடுத்துட்டு அதுக்கு விலையும் பேசுற உங்கள என்னன்னு நான் சொல்றது எனக்கு உங்க பணம் வேண்டாம். தயவு செய்து உங்க அக்கவுண்ட் நம்பரை எனக்கு கொடுங்க இல்ல நான் ஆபீஸ் அக்கவுண்டுக்கு இந்த பணத்தை டிரான்ஸ்பர் பண்ணிடவா?" என்றாள் மீண்டும் .


எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காந்தள் பிடிவாதமாக பணத்தை அவனுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருப்பதை கண்டு எரிச்சலுடன் இளன் அவள் கையைப்பிடித்து அங்கிருந்து தனியாக இழுத்துச் சென்றான் .


அவர்கள் பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்றிருக்க ... இளன் காந்தளை இழுத்துச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.


தன் கையை இழுத்துச் செல்லும் இளனை பார்த்த காந்தளுக்கு கோபம் வந்தது .


"என்ன பண்றீங்க? நீங்க முதல்ல என்ன விடுங்க. இத்தனை பேர் இங்க இருக்கும்போது எல்லார் முன்னாடியும் என்னை இப்படி இழுத்துட்டு போறது நல்லா இருக்கா. யாராவது நம்மள இப்படி பார்த்தால் என்ன நினைப்பாங்க" என்று கோபமாக அவன் கையில் இருந்த தன் கையை உதறினாள் .


அதை கண்டு மீண்டும் கோபம் அடைந்த இளன் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தான் .


அவன் அந்த ரூமிற்குள் தள்ளி கதவை அடைத்ததும் காந்தளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நடுங்கிய குரலில் இப்ப எதுக்கு கதவை சாத்துனீங்க. முதலில் வழி விடுங்க நான் இங்கிருந்து போகணும்" என்று அவனை தாண்டி கதவை நோக்கி காந்தள் செல்ல போக...


அவளை இழுத்து கதவோடு சேர்த்து அழுத்தி நிற்க வைத்தவன் இரு பக்கமும் தன் கைகளில் வைத்து அனைக்கட்டி அவளை அங்கிருந்து செல்ல விடாமல் பிடித்துக் கொண்டான்.
 
Top