sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE-15

இளன் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க அவன் அலுவலக அறை முன்பு காந்தள் காத்திருந்தாள். உள்ளே சென்ற அவன் பியே வந்து காந்தளை இளன் அறைக்குள் போக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றால்.




இருக்கையில் இருந்து எழுந்த காந்தள் நேராக கதவை திறந்து கொண்டு இளன் அறைக்குள் சென்றாள் . உள்ளே சென்றதும் இளன் இருக்கையை பார்க்க அவன் அங்கு இல்லை. புருவங்கள் முடிச்சிட அறையை முழுவதும் தன் பார்வையால் சல்லடை போட்டாள் இளனை தேடி .




அப்போது பின்னல் இருந்து அவன் அறைக்கதவு வேகமாக சாத்தும் சத்தம் கேட்டு வேகமாக தனக்கு பின்னல் திரும்பி பார்த்த காந்தள் அதிர்ச்சி அடைந்தாள் . கதவை சாற்றி உள் பக்கம் தாளிட்டு அவள் அருகே நெருங்கி வந்தான் ஆஜானுபாகுவாக இளன் .




அவனை மிக அருகில் பார்த்ததும் காந்தளுக்கு வயிற்றிற்குள் பயபந்து உருண்டது . இரண்டு ஆதி தன்னிச்சையாக பின்னல் நகர்ந்தவள் தன்னை நோக்கி இருக்கியா முகத்தோடு நெருங்கி வந்த இளனை பார்த்து எச்சில் விழுங்கினாள் .




" என்ன மிஸ் காந்தள் . என்னை பாக்கணும்னு சொன்னிங்கலாமே ! என்ன விஷயம்" என்று அவள் அருகில் வந்து காந்தளை இடித்துவிடுவது போல நின்றான் .




" அது... அது வந்து " என்று காந்தள் பேச வார்த்தடைகள் கிடைக்காமல் தடுமாறியபடி அவனை பார்த்தவள் ஒயின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " நீங்க எனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் " என்றாள் .




அவளை முறைத்துப் பார்த்தவன் " இந்த பணத்தை என்கிட்டே கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை . அதுக்கான காரணத்தையும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் . அப்படி இருக்க அப்போ எதுக்காக திரும்பவும் இந்த பணத்தை என்கிட்டே எடுத்துட்டு வரீங்க மிஸ் காந்தள் " என்றவன் அவளை தாண்டி அங்கே போடப்பட்டு இருந்த சோபாவில் பொய் அமர்ந்தான் .




தன்னை வார்த்தைக்கு வார்த்தை காந்தால் என்று பெயர் சொல்லி இன்று இளன் அழைப்பது காந்தளுக்கு வித்யாசமாக தோன்றியது. இருந்தும் தன்னை எப்போதும் போல BOO என்று அழைக்காமல் இப்படி அழைப்பதே மேல் என்று நினைத்தவள் அவனை பார்த்தது " நானும் ஏற்கனவே என்னுடைய முத்தம் விற்பனைக்கு இல்லை" என்றாள்.




" ஓஹோ ! அதனால் தான் நேத்து லவ் ப்ரொபோஸ் பண்ணின அந்த மதிமாறன் உங்களை முத்தம் கொடுக்கும்போது அமைதியா இருந்திட்டிங்களா ? " என்றான் அவளை I அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து .




நேற்று தன் அப்பார்ட்மென்டின் முன்பு தானும் மதியும் முத்தம் கொண்டது இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல ஆச்சர்யமாக காந்தள் இளனை பார்த்தாள் .




அவள் முகத்தில் இருந்த அதிர்ச்சியை கண்டுகொள்ளாதவன் " எப்போதுமே இலவசத்திற்கு தான் மக்களின் மனம் அலைபாயும் . அது போல தான் அவன் உனக்கு கொடுத்த முத்தத்தின் மதிப்பும் " என்றான்.




அவன் சொன்னதை கேட்டு விழித்த காந்தள் " இப்போ இவன் என்ன சொல்ல வரான் . இவன் கொடுத்த பணத்துக்கு முத்தமும் கொடுத்தான் . அப்போ அது விலை உயர்ந்தது . ஆனால் தானும் மதியும் முத்தம் கொடுத்துக்கொண்டது தரமற்றது என்று சொல்கிறானா ? " என்று அவனை பார்த்தாள் .




அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் " எனக்கு கொடுத்ததை திரும்பி வாங்கி பழக்கம் கிடையாது. எனக்கு இந்த பணம் தேவை இல்லை " என்று அவளை பார்த்தான் .




" நானும் என் முத்தத்தை இப்படி பணத்தை வைத்து ஆட்களை விலைக்கு வாங்குபவருக்கு. மனிதர்களை பற்றிய தப்பான புரிதல் கொண்டவருக்கு விற்கவில்லை " என்றவள் தன் கையில் இருந்த கவரை அவன் முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட அங்கிருந்து கிளம்பப்போனாள் .




வேகமாக சோபாவில் இருந்து எழுந்து வந்த இளன் கோபமே உருவாக அவள் முன்பு வந்து நின்றவன் " நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க காந்தள் . என்னை இப்படி புறக்கணிச்சிட்டு அந்த மதிகிட்டே போற அளவுக்கு அவன் என்ன செய்தான் உனக்கு " என்றான் கோபமாக .


" உங்களோடு அவரை சேர்த்து பேசாதீங்க சார் . அவன் பெண்களை மதிக்க தெரிஞ்சவன் . என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னை புரிஞ்சு நடந்துக்குறார் . இப்படி அடுத்தவங்க மாதிரி பணத்துக்கு என்னை விலை பேசுற ஆள் அவர் இல்லை" என்றாள் .



காந்தள் மதிமாறனை பற்றி உயர்வாக பேசியது கேட்டு கொதித்து எழுந்தது இளனின் மனம் . அவள் அருகில் நெருங்கி வந்து காந்தள் கைபிடித்து தன அருகே இழுத்தவன் " நான் உன்னை விலை பேசினேன்னு நீ சொல்றியா ?" என்றான் கோபம் காக்கும் பார்வையோடு .

" இல்லையா ? " என்று எதிர் கேள்வி கேட்டாள் காந்தள்

அவள் கையை விட்டவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த தலையை கோதியபடி இங்கும் அங்கும் அந்த அறைக்குள்ளேயே நடந்தான் . அதை கண்டும் காணாமல் சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தவள் " நான் கிளம்புறேன் . இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. உங்கா ஆஃபிஸில் வேலை செய்யும் ஒரு ஸ்டாப் மட்டும் தான் நான் . நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி அவ்வளவு தான் " என்றவள் கதவை நோக்கி செல்ல..


அவள் பேசியதை எல்லாம் தன் மனதிற்குள் எதிரொலித்துக்கொண்டு இருக்க... தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இளன் வேகமாக காந்தலிடம் வந்தவன் அவளை இழுத்து கதவில் அழுத்தி நிற்க வைத்தவன் எப்போதும் அவளை பார்த்தம் முத்தம் கொடுக்க தூண்டும் லிப்ஸ்டிக் அணியாமலேயே சிவந்து இருக்கும் அவள் உதடும் , அதன் கீழ் இருக்கும் மச்சமும் அவனை இப்போதும் அவளை முத்தமிட தூண்டியது


ஆனால் நேற்று தான் முத்தம் கொடுத்த இந்த உதட்டில் வேறு ஒருவன் முத்தம் கொடுத்துவிட்டான் என்ற ஆத்திரம் அவனை கோபத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது. தன் கைகளை அவள் கழுத்தில் வைத்து அழுத்தியவன் . " அப்போ என்னை விட அவன் பெருசா தெரியுறான் உன் கண்ணனுக்கு அப்படி தானே" என்றான் அவள் கழுத்தில் அழுத்தம் கூட்டிகொண்டே ...




அதில் வலி ஏற்பட்ட போதிலும் " ஆ...அ.. ஆமாம் " என்று ஒரே வார்த்தையில் இளனுக்கு பதிலளித்தாள் .




அவள் பதிலில் மேலும் ஆத்திரம் கொண்டவன் குனிந்து அவள் உதட்டருகில் தன் உதட்டை கொண்டு செல்ல... எங்கே இளன் தன்னை முத்தமிட்டுவிடுவானோ என்ற பயத்தில் காந்தள் தன் உதட்டை வாய்க்குள் மடித்துக்கொண்டு அவனை பார்த்தாள் .




இளனின் அனல் காக்கும் பார்வையும், சூடான மூச்சுக்காற்றும் அவளுக்கு மிக அருகில் வந்து காந்தளின் உடலில் ஊசியாய் பாய்ந்த்தது .




அவள் கன்னங்களை பிடித்து இளன் அழுத்தம் கொடுக்க... மூடி இருந்த அவள் இதழ் தானாக திறந்து கொள்ள..." என்னால இப்பவே உன்னை முழுசா எடுத்துக்க முடியும் . ஆனா உன் மனசுல இப்போ அந்த மதிமாறன் இருக்கான் . அவன் இருக்குற இந்த இதயத்தை நான் வெறுக்குறேன் . அவன் கொடுத்த இந்த உதட்டை எனக்கு பிடிச்ச இந்த உதட்டை நான் வெறுக்கிறேன் " என்றவன் அவள் கண்களில் இருந்த தன் கைவிரல்களை அவள் இதழ் நோக்கி கொண்டு வந்தவன் . காந்தள் இதழை தன் விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினான் .




கழுத்தின் இருந்த அவன் கையை விடுவித்து கதவில் ஊன்றி நின்றவன் அவள் இதழில் இருந்த தன் விரல்களை மட்டும் விடாமல் அழுத்தம் கூட்ட... காந்தள் வலியில் முகம் சுருங்கினாள் . அதை கண்டும் இளன் மனம் இளகவில்லை . அவள் அவனிடம் இருந்து பிரிய முயற்சிக்க... தன் உடலை வைத்து அவள் உடலை அழுத்தி நிற்க வைத்தவன் ரோஸ் நிறத்தில் இருந்த காந்தள் உதட்டை சிவப்பேற்றிவிட்ட பிறகுதான் தன் விரல்களை அவள் உதட்டில் இருந்து எடுத்தான் .




அவளை விட்டு பின்னாள் நகர்ந்து நின்று சிவந்து கன்னிப்போய் இருந்த அவள் உதட்டை பார்த்து திருப்தி அடைந்தவன் " முதல்ல இங்கே இருந்து போ... இனிமேல் நான் உன்னை பார்க்கவே கூடாது " என்று அந்த அறையே அதிருமளவு கத்தினான் .




கண்களில் கண்ணீரும் உதட்டில் அவன் தந்த வலியோடும் நின்று இருந்தவள் அவனை பார்த்து " நானும் இனிமேல் உங்களை சந்திக்க கூடாதுன்னு நினைக்குறேன் " என்றவள் கதவை திறந்துகொண்டு வீங்கி இருந்த தன் உதட்டை யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்று மறைத்தபடி அங்கிருந்து வெளியேறினாள் .




அதன் பின் வந்த நாட்களில் தன் உதட்டில் இருந்து வீக்கம் வடிந்து சரியாகும் வரை மதிமாறனை அவள் சந்திப்பதையோ , அவனோடு ரயிலில் ஒன்றாக செல்வதை தவிர்த்தாள் . தன் உதடு இப்படி ஆனதுக்கு என்ன காரணம் என்று மதி கேட்டாள் அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று காந்தளுக்கு தெரியவில்லை .




ஒரு அளவு நார்மல் ஆனா பின்பு வழக்கம் போல மதியுடன் தினமும் ரயிலில் ஆபீஸ் வருவதும் , அவள் ரூம் வரை வந்து காந்தளை விட்டு செல்வதுமாக இருவரின் நாட்கள் நகர்ந்தது .




இந்த இடைப்பட்ட காலத்தில் மதி , காந்தள் இருவரும் நன்கு நெருங்கி பழக ஆரம்பித்து இருந்தனர் . முன்பை விட மதி காந்தலிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளோடு நெருங்கி பழக ஆர்மபித்து இருந்தான் . அவனின் இந்த நெருக்கம் ஒருவித தயக்கமும், கூச்சமும் காந்தளுக்கு அளித்து இருந்தாலும் அவள் மனம் அதை எதிர்பார்க்க செய்திருந்தது .




கிட்டத்தட்ட இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு ஒரு வருடம் ஆகப்போகிறது . அன்று இளனை அவன் ஆபீஸ் அறையில் சென்று சந்தித்து வந்ததற்கு பிறகு ஆபீஸ் விஷயமாக நடக்கும் மீட்டிங்கில் ஓரிரு முறை இந்த் ஒரு வருடத்தில் அவனை காந்தள் பார்த்திருப்பாள் . ஆனால் அவன் இவளை ஒரு முறை கூட ஏறெடுத்தட்டும் பார்க்கவில்லை .அதுவே காந்தளுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தது .




ராணியுடன் இணைந்து மும்முரமாக , பரபரப்பாக வேளையில் ஈடு பட்டுக்கொண்டு இருந்த காந்தளின் மொபைல் வைப்ரேட் ஆனது . பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தாள் மதியிடம் இருந்து தான் மெசேஜ் வந்து இருந்தது . அவன் பெயரை பார்த்ததும் காந்தள் முகம் புன்னகையை தத்தெடுத்துக்கொள்ள .. அதை கவனித்த ராணி யாரு டி .. உன் மனதை கவர்ந்த அந்த மதியா மெசேஜ் பண்ணி இருக்கான் என்றார் .




காத்தலும் சிரித்துக்கொண்டே ஆமா அக்கா என்றால் சிரித்துக்கொண்டே .




" என்னவாம் அவனுக்கு வேலை செய்யுற நேரத்தில் மொபைலை நோண்டிகிட்டு . உன்னையும் வேலை செய்ய விடாமல் என்ன செய்யுறான் " என்று அவள் மொபைலை ஓரக்கண்ணால் பார்க்க.




" அக்கா அடுத்தவங்க மொபைலை இப்படி கள்ளத்தனமா எட்டி பாக்குறீங்களே இது உங்களுக்கே நல்லா இருக்கா " என்று தன் மொபைலை மறைத்துக் கொண்டாள் .




" போடி பெரிய இவ நாங்க எல்லாம் பார்க்காததையா நீங்க செஞ்சுற போறீங்க " என்று ராணி அங்கிருந்து எழுந்து போக..




அவள் சென்றதும் தன் மொபைலை எடுத்து பார்த்தாள் அதில் நாளையோடு தாங்கள் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி ஓராண்டு நிறைவடைகிறது . இந்த ஓர் ஆண்டும் காந்தளிடம் நெருங்கி வராமல் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டு அவளை பேச்சிற்க்கு கட்டுப்பட்டு முதல் நாள் அவளிடம் காதல் சொன்னபோது அவளுக்கு முத்தம் கொடுத்தது. அதனால் நாளை இருவரும் ஒன்றாக இருக்க போவதையும் , இருவரும் சேர்ந்து வெளியில் பார்க், பீச், சினிமா என்று நாளை முழுவதும் தன்னோடு நேரம் செலவிட வேண்டும் என்றும் நாளை அவளாகவே தனக்கு முத்தம் கொடுக்க சம்மதம் சொன்னதையும் சுட்டி காட்டி நீ வாக்கு கொடுத்திருப்பதை மறந்துவிடாதே என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் .




அதை பார்த்ததும் வெட்கப்புன்னகை சிந்த நிமிர்ந்து அவள் விழிகள் மதிமாறனை தேட... அவளுக்கு நேராக தூரமாக நின்று காந்தலின் முகத்தில் எழுந்த உணர்வுகளை ரசித்தபடி நின்று இருந்தவன் காந்தள் அவனை பார்த்தம் தங்களை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றிலும் கவனித்துவிட்டு அவளுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் பறக்க விட்டவன் . நாளை தயாரா என்றான் செய்கையில்.


காந்தளும் வெட்கபட்டுக்கொண்டே சரி என்று தலையாட்டினாள்.


அவள் சம்மதம் சொன்னதும் குதூகலம் ஆனவன் மீண்டும் ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றான் நாளையை எதிர்பார்த்து . காந்தளும் அதே மனநிலையில் தான் இருந்தாள்
 
Top