sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE-16

வழக்கம்போல ஆபீசுக்கு கிளம்பி செல்வது போல காந்தல் தன் அப்பார்ட்மெண்டில் இருந்து மதிமாறனை சந்திக்க கிளம்பி இருந்தாள்.

வழக்கம்போல் அல்லாமல் தன்னை இன்று அழகாக அலங்கரித்து இருந்தாள் காந்தள்.

மதிமாறன் எப்போதும் ஏறும் ரயில் நிறுத்தம் வரவும் மிகவும் ஆவலோடு ரயிலுக்குள் தாங்கள் எப்போதும் பிரயாணம் செய்யும் கம்பார்ட்மெண்டில் ஏறியவனின் விழிகள் அந்த கம்பார்ட்மெண்டில் காந்தளைத் தான் தேடியது .

அவன் நின்றிருந்த இடத்திலிருந்து சில அடி தோறும் தள்ளி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த காந்தல் மாறன் உள்ளே வந்ததும் அவனைப் பார்த்து கையை அசைத்து தான் இருக்கும் இடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

அவளைப் பார்த்ததும் மதிமாறனின் முகம் பிரகாசமானது. கையில் ஒரு சிவப்பு ரோஜா பூங்கொட்டை பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு காந்தலை நோக்கி வந்தவன் அவளிடம் அந்த போங்கத்தை கொடுத்து ஹேப்பி ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி என்று சொல்லி சந்தோஷப்பட்டான்.

காந்தல் இதை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது சந்தோஷமாக அவன் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு காந்தல் சிரிக்க...

அவர்கள் கம்பார்ட்மெண்டில் பிரயாணம் செய்தவர்கள் மதிமாறன் காந்தளிடம் பூங்கொத்தை கொடுத்து அவளுக்கு வாழ்த்து சொன்ன விதத்தை பார்த்து பொறாமைப் பட்டனர்.

காந்தள் மட்டும் அமரும் அளவிற்கு தான் அங்கு இருக்கையில் இடம் இருந்தது. அதனால் அவள் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து மதியோடு சேர்ந்து நின்று கொள்ள..

ஏய் காந்ள் என்ன பண்ற! அங்க இடம் இருக்கு பாரு அங்க உக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இறங்கிடுவோம் இல்ல என்றான் அவளை அமரச் சொல்லி.

இல்ல பரவாயில்ல நானும் உன் கூட நிற்கிறேன் இங்கே வேற சீட்டு எதுவும் இல்லையே என்றாள்.

இரண்டு மூன்று முறை அவளை காலியாக இருந்த இருக்கையில் அமரச் சொல்லிப் பார்க்க காந்தல் முடியாது என்று மறுப்பு தெரிவிக்கவும் சரி நான் அங்கே உட்காரேன் என்று சொல்லி காலியாக இருந்த சீட்டில் மதிமாறன் அமர்ந்தவன் அடுத்த நொடி காந்தளின் கையை பிடித்து இழுத்து அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பார்த்திடாத காந்தள் வெட்கத்தில் முகம் சிவந்து விட கூச்சத்தோடு அவன் மடியில் இருந்து எழுந்திருக்க முயற்சிக்க... அவள் இடையில் கை கொடுத்து இரண்டு கைகளையும் கோர்த்து பிடித்துக் கொண்டவன் அவளை மடியில் மீண்டும் அமர்த்தி விட்டு பேசாம ஏன் என் மடியில் எல்லாம் மேடம் உட்கார மாட்டீங்களா என்றான்.

எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க மதி என்றாள் வெட்கப்பட்டு கொண்டே.

அவங்க பார்த்தா என்ன பாக்காட்டி எனக்கென்ன அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நீ அமைதியா இரு இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடும் என்றவன் அவள் டையை மேலும் இருக்கி தன்னோடு அமர வைத்தான்

அத்தனை பேர் முன்னிலையில் அவன் மடியில் அமர்ந்த கூச்சத்தில் காந்தள் நெளிந்து கொண்டே இருக்க...

இதுக்கே இப்படி நெளிஞ்சா எப்படி என்றவன் காதலின் காதுகளில் இன்னைக்கு எனக்கு நீ முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்க ஞாபகம் இருக்கா நீ முத்தம் கொடுக்காம நான் உன்னை இன்னிக்கு விடப்போறதில்ல என்றான்..

ஐயோ அது என்ன இது எல்லாரும் இருக்காங்க என்று செல்லமாக அவன் தொடையில் கிள்ளினாள்.

ஏய் வலிக்குது என்றவன் அவள் காதருகில் வந்து அதுவும் இல்லாம இந்த ஒரு வருஷத்துல இதுதான் உன்னை என் மடியில் உட்கார வச்சுக்கிறதுக்கு கிடைத்திருக்கிற வாய்ப்பு. இதை நான் மிஸ் பண்ணுவேனா என்று சொல்லி அவன் சிரிக்க..

நல்லாவே தெரியுது சார் இன்னைக்கு ஒரு மார்க்கமாக இருக்கீங்க நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் என்றாள் சிரித்துக் கொண்டே.

ஆமா இல்லையா ஒரு வருஷம் இந்த நாளுக்காக நான் தவம் இருந்து இருக்கேன் என்றான் அவள் முதுகில் தன் மீசை உரசியபடி.

தனக்கு பின்னால் அவன் மூச்சுக்காற்று முதுகில் உஸ்னமாக வந்து உரசிக் கொண்டிருக்க... அதில் கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவன் பேசியதை கேட்டு காந்தளும் சிரித்தாள்.

இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க... அவர்கள் இறங்கும் இடமும் வந்தது ஒன்றாக கைகோர்த்து படி ட்ரெயினில் இருந்து வெளியே வந்த இருவரும் தங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த பிளான் படி.. அந்த சிட்டியை ஒன்றாக கைகோர்த்து வலம் வர ஆரம்பித்திருந்தனர்.

முதலில் அந்த சிட்டியிலேயே மிகவும் பிரபலமான ஒரு மாலுக்கு காந்தளை அழைத்துச் சென்றான் மதிமாறன்.

அந்த பெரிய ஷாப்பிங் மாலுக்கு செல்லும் வரை காந்தளிடம் எங்கே செல்கிறோம் என்று சொல்லவே இல்லை இருவரும் அந்த மாலின் முன்பு வந்து நிற்க காந்தள் அதிர்ந்தாள்.

இங்கே தான் முதல் முறையாக அவள் இளனை பார்த்தாள். அவர்கள் இருவரின் சந்திப்பும் முதல்முறையாக இங்கே தான் நிகழ்ந்தது. அவளுக்கு முதன்முறையாக முத்தமிட்டு அதன் உணர்வுகளை அவளுக்கு வெளிப்படுத்தியவன் அவனே.

இளனின் நினைவு வந்ததும் அவன் தன்னிடம் தன் விருப்பம் இல்லாமல் நடந்து கொண்டதும் நினைவு வர சட்டென காந்தியின் முகம் மாறியது.

அதை கவனித்த மதிமாறன் என்ன ஆச்சு காந்தள் ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு என்று கேட்டான்.

ம்ஹும்... ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள். எதுக்கு என்னை அழைச்சிட்டு வந்த மதி எனக் கேட்டாள்.

வா சொல்றேன் என்று அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவன் அந்த மாளிகையே மிகவும் பரிச்சயமான பிரபலமான ஒரு நகைக்கடை முன்பு அவளை அழைத்துச் சென்றவன் காந்தளுக்கு அழகான ஒரு மோதிரத்தை வாங்கி அவள் விரலில் மாட்டிவிட்டு அவளுக்கு அழகு பார்த்தான்.

என்ன மதி இது வழக்கமா எல்லாரும் சர்ப்ரைஸா மோதிரம் வாங்கி லவ்வ ப்ரொபோஸ் பண்ணி அழகு பார்ப்பாங்க ஆனா நீங்க எதுவுமே இல்லாம டைரக்ட்டா மோதிரம் வாங்கி கொடுத்துட்டீங்க என சிரித்தாள்.

உன்கிட்ட என் காதலை சொன்ன போதே.. இதை நான் செஞ்சிருக்கணும் அப்போ இருந்த படபடப்புல நான் இதை மறந்துட்டேன் திரும்ப உனக்கு மோதிரம் கொடுக்கணும்னு நினைச்சப்போ நம்மளோட ஃபர்ஸ்ட் ஆனிவர்சரி அன்னைக்கு உனக்கு மோதிரம் வாங்கி கொடுக்கணும்னு நினைச்சேன் அதனாலதான் என்று சொல்லி சிரித்தவன் பிடிச்சிருக்கா என கேட்டான்.

ரொம்ப பிடிச்சிருக்கு என்று தன் கையில் அவன் வாங்கி மாட்டி விட்ட மோதிரத்தை பார்த்து சிரித்தவள். மதிமாறனுடன் அங்கிருந்து கிளம்பினாள் .

இருவரும் பார்க் பீச் ரெஸ்டாரன்ட் தியேட்டர் என சுற்றிவிட்டு மாலை போல ரயில் ஏறி தாங்கள் இருப்பிடத்திற்கு செல்ல கிளம்பினர்.

இருவருக்கும் இடையில் நீண்ட அமைதி அவள் கைகளை கோர்த்து படி அவள் அருகில் அமர்ந்திருந்த மதிமாறன் நான் நம்ம பேசிக்கிட்ட மாதிரியே காலையிலிருந்து எல்லாமே நடந்துடுச்சு ஆனா ஒரு விஷயத்தைத் தவிர என்றான்.

அவன் எதற்கு அடி போடுகிறான் என்று புரிந்து கொண்ட காந்தள் எனக்கு ஞாபகம் இருக்கு என்று வெட்கத்தோடு தலை குனிந்து படி அவன் அருகில் காந்தள் அமர்ந்திருக்க...

நானும் இப்போ தருவ அப்போ தருவேன்னு காலையிலிருந்து ஒவ்வொரு முறையும் நீ என்ன பார்க்கும்போதெல்லாம் எதிர்பார்த்து இருக்கேன் என்று சிரித்தவன். நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வரதுக்குள்ள இத்தனை நாள் நான் காத்திருந்த விஷயம் எனக்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன் என்றான்.

காந்தள் வெட்கப்பட்டுக் கொண்டே இங்கே யார் இங்கே எப்படி எல்லாரும் இருக்காங்க மதி என்றாள்.

அப்போ என்னோட ரூமுக்கு போகலாமா அங்க போனா யாரும் இருக்க மாட்டாங்க நீ அங்க வச்சு எனக்கு வேண்டியதை கொடுக்கலாமே என்று அவள் விரல்களோடு கோர்த்திருந்த தன் விரல்களில் அழுத்தம் கூட்டினான்.

அதில் அவள் உடல் முழுவதும் ஒருவித பரவசம் பாய்வதை உணர்ந்த காந்தள் அமைதியாக அமர்ந்திருக்க.

என்ன காந்தள் என்னோட ரூமுக்கு வரமாட்டியா அங்கு யாரும் இல்ல எல்லாருமே அவங்கவங்க வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க. இன்னைக்கு யாரும் வர மாட்டாங்க.

ஒரு முத்தம் தானே கேட்கிறேன். உன்னை நான் ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன். உன்னோட அனுமதி இல்லாம நான் எதையும் உன்கிட்ட இருந்து எடுத்துக்க மாட்டேன் அது உனக்கு நல்லாவே தெரியும் அதனால தானே இந்த ஒரு வருஷமும் நான் இந்த ஒரு முத்தத்துக்காக காத்திருக்கிறேன் என்றான் மதிமாறன் உண்மையாக.

அவன் தன்னிடம் கண்ணியமாக நடந்து கொள்வது காந்தளுக்கு என்றுமே தெரிந்த ஒரு விஷயம் தான். அவன் இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்ததற்கு தான் இதை கூட செய்யவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று அவளுக்கு தோன்றியது.

சற்று தயக்கத்திற்கு பிறகு அவனோடு அவன் அறைக்குச் செல்ல சம்மதிக்கும் விதமாக தலையை மெதுவாக ஆட்டினாள். நான் தன் அறைக்கு காந்தள் வர சம்மதித்ததும் மதிமாறன் அவள் கை பிடித்து இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்து கட்டிக் கொண்டவன். தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டாப்பிற்காக மிகவும் ஆர்வமாக காத்திருந்தான் .
 
Top