sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -17

17

காந்தளை தன் ரூமிற்கு அழைத்து வந்த மதிமாறன் தன் பாக்கெட்டில் இருந்த ரூம் சாவியை எடுத்து கதவை திறந்தான்.



காந்தளுக்கு சற்று பதட்டமாக இருந்தது அதை கண்டா மதி " உள்ளே வா காந்தள் . நான் உன்னை ஏதும் செய்துட்டு மாட்டேன் " என்று அவள் கை பிடித்து அழைக்க .. அவளும் கூச்சத்தோடு முதல் முறை மதி தங்கி இருந்த அறைக்குள் நுழைத்தாள் .



அவளை உள்ளே அழைத்து வந்ததும் அரை விளைக்கை ஒளிர விட்டவன் கதவை சாற்றிவிட்டு வேகமாக காந்தள் முன்பு வந்து நின்றவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத காந்தள் முதலில் அதிர்ந்தாலும் அவன் அணைப்பிற்கு அவள் மறுப்பு சொல்லவில்லை.



காந்தள்ள்... என்று சூடான மூச்சுக்காற்றை அவள் காதில் படர விட அதில் அவள் உடல் சூடேறியது. காந்தளின் கைகள் தானாகவே சென்று மதியை தழுவிக்கொள்ள... அவள் இடம் இருந்து தன் முகத்தை பிரித்து காந்தளை விழி இமைக்காமல் பார்க்க.. அவளோ மதியின் முகத்தை பார்த்தவள் " என்ன மதி அப்படி பாக்குற... என்னை என்னவோ இதுக்கு முன்ன பார்க்காதவன் போல இப்படி வெறிச்சு பாக்குற... " என்றாள் .



"வழக்கத்தை விட நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க காந்தள் . அதனால் தான் உன்னை இப்படி ரசிக்குறேன் " என்றவன் .



"இன்னிக்கு நம்ம பஸ்ட் லவ் அனிவேர்சரி , நீ எனக்கு கொடுக்றேன்னு சொன்ன கிப்ட்டிற்காக நான் ஆர்வமா காத்துட்டு இருக்கேன் " என்றான் அவள் செர்ரி நிற உதட்டையும் அதன் கீழ் இருந்த மச்சத்தையும் பார்வையால் பருகியபடி ஏக்கமாக கேட்டான் .



" இப்படி வெச்ச கண்ணு மாறாம என்னை குறுகுறுன்னு பார்த்துட்டு இருந்தா எப்படி மதி நான் ... " என்று காந்தள் தயங்க .



" அப்போ நான் என்ன சொய்யட்டும் நீயே சொல்லு " என்றான் எதுவும் தெரியாதவன் போல.



காந்தள் தலையை குனிந்து கொண்டே " நீங்க கண்ணை மூடுங்க அப்போ தான் என்னால ... " என்று அவள் வார்த்தையை முடிக்க முடியாமல் அவன் நெருக்கத்தில் மூச்சுவிட மறந்தவளாய் நின்று இருந்தாள் .



" சரி நான் கண்ணை மூடுறேன் . நீ நிருத்தி நிதானமா பொறுமையா என்னோட கிப்ட்ட்டை எனக்கு கொடு " என்றவன் அவள் முகத்திற்கு நேராக குனிந்து அவள் உதட்டை ஆசையாக பார்த்தவன் கண்களை மூடிக்கொள்ள...



காந்தள் தயம்மும் வெட்கமுமாக அவன் முகத்தருகில் வந்தவள் அவன் முகத்தை அவள் கைகளில் பிடித்துக்கொண்டு அவன் இதழில் தன் இதழை லேசாக ஒற்றினாள்.



அதில் ஏமாற்றம் அடைந்த மதிமாறன் " என்ன காந்தள் இதுக்கு தான் ஒரு வருசமா காத்துட்டு இருந்தேனா சொல்லு " என்று கண்கள் திறந்து காந்தளை பார்க்க... அவன் காந்தள் முகம் பார்த்ததும் சட்டென அவனை அணைத்துக்கொண்டு வெட்கத்தில் காந்தள் தன் முகத்தை அவன் மார்போடு அழுத்திகொண்ட்னு நின்று இருந்தாள் .



" ம்ச்... காந்தள் என்ன இது இப்படி வெட்கப்பட்டா எப்படி ? " என்றவன் தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன் . " உனக்கு வெட்கமா இருக்குனு முன்னயே என்கிட்டே சொல்லி இருந்தா நானே உனக்கு முத்தம் கொடுத்து இருப்பேனே " என்றவன் கண்கள் மூடி இருந்த அவள் இமைகளில் மென்மையாக முத்தமிட... அதில் காந்தள் பரவாசமானால் . அவள் மீதி இருந்த விழிகளில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் காந்தளின் கருவிழிகள் இரண்டும் இங்கும் அங்கும் அலைபாய ... அதை கவனித்தவன் மீண்டும் அவள் கண்களில் முத்தம் வைத்தவன் அவள் முகம் முழுவதும் சிறு சிறு முத்தங்களாக கொடுக்க ஆரம்பித்தான்.



இருவரின் உடலும் தகிக்க துவங்கியது . மெல்ல அவள் முகத்தை கையில் ஏந்திய மதி அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளை ரசித்துக்கொண்டே காந்தள் காந்த இதழ்களில் தன் இதழை பொருத்தினான்.



அவள் மூடி இருந்த இதழில் தன் இதழை பொருத்தி அவள் இதழ்களை பிரித்து தீவிரமாக முத்தமிட ஆரம்பித்தான். காந்தள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மதிமாறனை இறுக்கி அணைத்துக்கொள்ள ... அவளை அப்படியே இடையோடு சேர்த்து அணைத்து தன் உயரத்திற்கு தூக்கிய மதி காந்தளை முத்தமிட்டுக்கொண்டே கட்டிலை நோக்கி நடந்தான் .



கட்டிலில் தான் அமர்ந்து கொண்டு காந்தளை தன் மடியில் படுக்க வைத்தவன் அவள் இதழில் இருந்து தன் இதழை பிரித்துவிட்டு காந்தள் சிவந்து போய் இருந்த அழகான முகத்தை பார்த்தான் . அவள் இதழுக்கு கீழே இருந்த மச்சத்தை தன் விரல் கொண்டு தடவிக்கொடுத்தவன் அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு உயர்த்தியவன் பார்வையாலேஏ தான் மறந்து இருந்த கட்டிலை தட்டிக்காட்டி சம்மதமா என்றான் குறும்பு சிரிப்போடு .



காந்தளோ மதியின் முகத்தை பார்க்க வெட்கப்படுவாள் அவன் தொழில் முகம் புதைக்க அடுத்த நொடி தன் மடிமீது அமர்ந்து இருந்தவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது விழுந்தான் . அவளுக்கு முத்தமிட்டுக்கொண்டே காந்தளின் உடைகளுக்கு விடுதலை கொடுத்தவன் தன் ஆடைகளையும் துறந்துவிட்டு பிறந்த மேனியாய் கட்டிலில் படுத்திருக்கும் பதுமையை பார்வையாலேயே பருகினான்.



அவன் கண்கள் தன் உடலில் மேயவும் அதை காண கூச்சப்பட்டுக்கொண்டு மதியின் கையை பிடித்து தன் மீது இழுத்து போட்டுக் கொண்டவள் அவனை கட்டிக்கொண்டு அவனையே தனக்கு ஆடையாக்கினாள் . காந்தளின் வெற்று உடல் அவன் உடலோடு மோத ... அவளை கட்டிக்கொண்டு தீவிரமாக முத்தமிட்டபடி தன் தேடலை துவங்க ஆரம்பித்து இருந்தான் .



அவளோடு தன்னை ஒன்றர கலந்து கொள்ள முன்னேறினான் மதி . பெண் அவளுக்கு வலியில் அவளையும் அறியாமல் " அம்மாஆஆ..." என்று அலறிவிட...



அதுவரை கனவில் காந்தளோடு கனவில் சல்லாபித்துக்கொண்டு இருந்த மதிமாறன் திடுக்கிட்டு கண்கள் திறந்தான் . அவன் கண் முன் காந்தள் பதட்டம் நின்று இருந்தாள் .



ஒரு முறை தன்னை சுற்றிலும் பார்த்தவன் "தாங்கள் இருவரும் இன்னமும் ட்ரைனில் தான் இருக்கிறோமா ? அப்போது இதுவரை நான் பார்த்தது , முத்தமிட்டது, காந்தளும் , தானும் ஒன்றாக ஒரே பெட்டில் ஒன்றாக இருந்தது எல்லாம் கனவா?" என்று உணர்ந்தபோது . "அது கனவாக இல்லாமல் உண்மையாக இருந்திருக்கக்கூடாதா!!" என்று ஏக்கம் கொண்ட மதி தன் முன் [அதட்டமாக நின்று இருந்த காந்தளை பார்த்தவன் தன் யோசனைகளை எல்லாம் துறந்துவிட்டு அவளை பார்த்தவன்.



" என்ன ஆச்சு காந்தள் ஏன் உன் முகம் பதட்ட்மா இருக்கு .ஏன் ? எதுவும் பிரச்சனையா ? இல்லை என்னோட என் ரூமுக்கு வரதுல ஏதும் சங்கடமா பீல் பண்றியா ?" என்றான் புரியாமல் .



" ஐயோ மதி அதெல்லாம் ஒன்னும் இல்லை. உங்களை நம்பி என் வாழ்க்கை முழுக்க ஒண்ணா பயணிக்க போறேன் . உங்க கூட உங்க ரூமுக்கு நான் வரமாட்டேனா என்ன" என்றவள் .



" என் அத்தை பத்மினி எனக்கு கால் பண்ணினாங்க . என் அம்மாவோட ரெஸ்டாரெண்ட்ல தீ பிடிச்சு மொத்தமும் எரிஞ்சு சாம்பல் ஆகிருச்சின்னு இப்போதான் சொன்னாங்க. எனக்கு பயமா இருக்கு நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி வேற ற்றின் பிடிச்சு வீட்டுக்கு போறேன் மதி . அங்கே என் அம்மாவும் ,அத்தையம் தனியா என்ன செய்வாங்களோனு கொஞ்சம் பயமா இருக்கு" என்றாள் .



" ஹேய் என்ன சொல்றே... உன் அம்மாவுக்கும் , அத்தைக்கும் ஏதும் ஆகளையே அவங்க நல்லா தானே இருக்காங்க " என்று அக்கரையாக விசாரித்தவன் அடுத்த ஸ்டாப் வந்ததும் தானும் காந்தளுடன் இறங்கி அவளை அவள் ஊருக்கு செல்லும் ட்ரைனில் ஏற்றி அனுப்பி வைத்தான்

தன் ஊருக்கு காந்தள் வரவே நள்ளிரவை கடந்துவிட்டது. அவளை ஏற்கனவே கேப் புக் செய்து இருந்ததால் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

நள்ளிரவில் வரும் தன் மகளுக்காக சித்ராவும், பத்மாவும் காத்திருக்க... காலிங் பெல்லை காந்தள் அழுத்திய மறுநொடி ஓடி வந்து பார்வதி கதவை திறந்தார்.

வாசலலில் பதட்டமாக நின்று இருந்த தன் அண்ணன் மகளை பார்த்ததும் பத்மா வெடித்து அழ ஆரம்பித்தார்.

அம்மு... என்று அவர் வாசலில் நின்று இருந்த காந்தளை கட்டிக்கொண்டு அழ...

சித்ராவும் வந்து தன் மகளை கட்டிக்கொண்டு தங்களுக்கு இருந்த ஒரே ஆதாரமான ரெஸ்டாரண்ட் தீக்கிறையானதை எண்ணி உள்ளம் வெடித்து அழுத்தனர். இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்வில் நடந்தைதில்லை. மிகவும் மோசமான ஒரு சம்பவம் அவர்கள் வாழ்வில் இதுவரை எதிர்கொண்டதில்லை.

மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்துப் போய் இருந்தனர்.

மெல்ல பொழுதுவிடிந்தது. மூவரும் கிளம்பி தங்கள் ரெஸ்டாரண்டிற்கு சென்றனர். தீக்கிறையாகி முற்றிலும் சாம்பலாகி இருந்த தங்கள் ரெஸ்டாரண்ட்டை பார்த்ததும் காந்தளுக்கு மனம் மிகவும் வலித்தது.

அவளை கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய... " அழாத அம்மு.. இது ஏதோ நமக்கு போதாத காலம்னு நினைக்குறேன். அதான் இந்த மாதிரி எல்லாம் ஆகிருச்சு. நானும், அத்தையும் கொஞ்சம் காசு சேர்த்து வெச்சிருக்கோம். நீ எங்களுக்கு அனுப்பி வெச்ச பணமும் பாங்கில் அப்டியே இருக்கு. அதை எல்லாம் வச்சு நாம இதை சரி செஞ்சிடலாம் " என்று அந்த நிலையிலும் தன் மகளுக்கு தைரியம் சொன்னார் சித்ரா.

அவரை தொடர்ந்து பத்மாவும் காந்தளுக்கு ஆறுதல் சொல்ல... இவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தனக்கு தன் அம்மாவும், அத்தை தைரியம் சொல்வதை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அப்போது அவள் மொபைலுக்கு கால் வந்ததும் யாரென எடுத்து பார்த்தவள் ராணியிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்தவள் அப்போதுதான் தான் ஊருக்கு கிளம்பி வந்த அவசரத்தில் ராணியிடம் சொல்ல மறந்துவிட்டதை உணர்ந்தவள் போனைஅட்டென்ட் செய்து காதில் வைக்க...

அங்கே ராணி சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியாகிவிட்டாள் காந்தள்.

அவளை முகம் அதிர்ச்சியில் இருப்பதை பார்த்த சித்ராவும், பத்மாவும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்தவர்கள் அடுத்து காந்தள் சொன்ன விஷயத்தை கேட்டு உறைந்து போய் இருந்தனர்.
 
Top