sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
மறுநாள் காலை ஆஃபீஸிற்கு ஒருவித பதட்டத்துடன் கிளம்பி இருந்தால் காந்தள் . தன்னுடைய டிசைன் பிடித்துப்போய் சில்வர் லைன் ஸ்டுடியோவின் முக்கியமான மிகவும் அனுபவம் வாய்ந்த ஆட்கள் வேலை செய்யும் பிரிவில் தன்னையம் வேளைக்கு அமர்த்தி இருப்பதாய் அவளால் நம்பமுடியவில்லை .



ஆஃபீஸிற்கு வந்து ராணியை சந்தித்துவிட்டு நீராக டிசைனிங் தேபர்த்மேன்ட் இருக்கும் இடத்திற்கு சென்றவள் தன்னை அங்கிருந்தவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டவள் அதன் தலைமாய் பொறுப்பில் இருக்கும் நீலகண்டனை பார்க்க சென்றாள்.



அவளை வரவேற்ற நீலகண்டன் "மிஸ் காந்தள் உங்க ஒர்க், டிசைன்ஸ் , ப்ராஜெக்ட் எல்லாமே பார்த்தோம் கடந்த ஒரு வருசமா உங்களோட ஐடியாஸ், நீங்க கொடுத்த மாடலை வெச்சு நாங்க ரெடி செய்த அனைத்து ப்ராஜெக்ட்டுமே ரொம்ப நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கு " என்று அவரை பாராட்டியவர்.



" நீங்க எங்களோட அடிக்கடி மீட்டிங் கலந்துக்க வேண்டி இருக்கும் . உங்க ஐடியாக்களை எங்களோட ஷேர் செய்துக்கோங்க... அதே போல நீங்க இங்கே கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு " என்றார்,



" என் மேல நம்பிக்கை வெச்சிருக்குறது ரொம்ப நன்றி சார் " என்றவள் .



" எனக்கு இப்போ எங்கே ? என்ன வேலையின்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? என்னோட கேபின் எங்கேன்னு நீங்க சொன்ன நல்லா இருக்கும் " என்றால் காந்தள் மிகவும் பணிவாக .



" ஓஹ் .. சியூர் " என்ற நீலகண்டன் தன்னுடைய பியேவை உள்ளே இன்டெர்காமில் அழைத்தார் .



அவர் பிஏ உள்ளே வந்ததும் " இவங்க மிஸ் காந்தாள் இவங்களை தான் நம்ம சிஇஓ இளமாறன் சாருக்கு பியேவா அப்பொய்ண்ட் பண்ணி இருக்கோம் . நீங்க அவங்களை அழைச்சிட்டு பொய் சார் கிட்டே இவங்களை பற்றி சொல்லிட்டு வந்திருங்க " என்று தன் பியாவுடன் காந்தளை போக சொன்னார். .



காந்தளுக்கு நீலகண்டன் வாயில் இருந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டு நம்பமுடியாமல் அவரை பார்க்க... அவரோ காந்தளுக்கு வாழ்த்து சொல்லி அவளை தன் பியேவுடன் அனுப்பி வைத்தார்.



இத்தனை வருடங்களாக யாரை திரும்ப சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்தாளோ ... இதனை வருடங்களாக யாரை சந்திப்பதை தவிர்த்து வந்தாளோ .. அவனை இன்று சந்திக்க போகிறோம், அதுவும் அவனுக்கு பிஏவாக தான் வேலை பார்க்க போகிறோம் என்று நம்பமுடியாமல் நீலகண்டனின் பியாவின் பின்னல் அவள் கால்கள் சென்று கொண்டு இருந்தது .
 
Top