sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -18

எரிந்து சாம்பலாகிப்போன தன் அம்மாவின் ரெஸ்டாரன்டின் முன்பு அதன் நிலைமையை பார்த்து அதிர்ச்சியாகி காந்தள் நின்று இருக்க...



அப்போது சில்வர் லைன் ஸ்டுடியோவில் அவளுக்கு தேபர்த்மேன்ட் ஹெட் ஆக இருக்கும் ராணி கால் செய்யவும் அப்போதுதான் தான் திடீர் என்று தன் அம்மாவை பார்க்க கிளம்பி வந்ததை சொல்லாமல் வந்துவிட்டதை உணர்ந்தவள் ராணி தன்னை இப்பொது திட்ட போகிறார் என்று யோசனையோடு போனை எடுத்தாள் காந்தள் .



" ஹெலோ மேடம் !... " என்று காந்தள் பேசவர ...



" காந்தள் என்ன உன்னை இன்னும் ஆஃபிஸில் ஆளைக்காணோம் , உன் கிட்டே நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் நீ எங்கே இருக்க ?" என்று ராணி மிகவும் சந்தோசமான மனநிலையில் காந்தலிடம் பேசிக்கொண்டு இருக்க...



அவர் குரலில் இருந்த சந்தோசத்தை கண்டுகொண்ட காந்தளால் ராணியின் சந்தோஷத்துக்கு என்ன காரணம் என்று கேட்கும் மனநிலையில் இப்பொது இல்லை . அவள் சுரத்தே இல்லாமல் "மேடம் சாரி நான் உங்க கிட்டே சொல்லாம என் ஊருக்கு ஒரு முக்கியமான வேலைலயா வந்துட்டேன். என் அம்மாவோட ரெஸ்ட்டாரெண்ட் முழுசும் எரிஞ்சு சாம்பல் ஆகிருச்சு . அந்த விஷயம் கேள்விப்பட்டதும் நான் அவசரமா கிளம்பி இங்கே வந்துட்டேன் " என்றாள் .



" என்ன காந்தள் சொல்லுற !! அங்கே யாருக்கும் எதுவும் இல்லய்யே? அம்மாவும் ,உன் அம்மாவும், உன் அத்தையும் நல்லா இருக்காங்களா ?" என்று மிகவும் அக்கறையாக கேட்டார் ராணி .



" அவங்க நல்லா இருக்காங்க மேடம் எந்த பிரச்சனையும் இல்லை " என்றவள் . " சொல்லுங்க மேடம் ஏதோ சந்தோசமான விஷயம் சொல்ல வந்திங்க நான் வேற என்னோட சொந்த கதையை சொல்லி புலம்பிட்டு இருக்கேன்" என்றாள்.



" இந்த நேரத்துல சொல்லலாமா தெரியலை காந்தள் . ஆனா கேட்துளையும் நல்லது ஒன்னு இருக்குன்னு சொல்லுவாங்க " என்றவர் .



" காந்தள் நம்ம ஆபீஸ்ல நீ ஜாயின் ஆகி ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு. எப்பவுமே வேளைக்கு சேர்ந்த முதல் வருடத்தில் யாருடைய வேலை நல்ல இருக்கோ.. யாருடைய ப்ராஜெக்ட் நல்லபடியா மக்கள்கிட்ட நல்ல வகையில் போய் சேருதோ.. யாருடைய ப்ராஜெக்ட் அதிகம் லாபம் கொடுக்குதோ அவங்களுக்கு நம்ம ஆபீஸ் சார்பா ஒரு வீடு வருசா வருஷம் கிப்ட்டா சில்வர் லைன் ஸ்டூடியோ சார்பா கொடுப்பாங்க..." என்ற ராணி.



"இந்த வருஷம் உனக்கு அந்த கிபிட் கிடைச்சிருக்கு காந்தள் . நீ ஆர்வமாக வேலை செய்தததற்கு .. உன்னோட உழைப்புக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் காந்தள் இந்த கிபிட் " என்று சொல்லி ராணி உண்மையான பாசத்தோடும் அக்கறையோடும் இந்த சந்தோசமான விஷயத்தை கந்தலிடம் சொல்ல...



ராணி சொன்னதை கேட்டு காந்தளால் நம்பமுடியவில்லை அவள் அதிர்ச்சியாக முகத்தை வைத்து இருக்க.. அதை பார்த்தது சித்ராவும், பத்மாவும் என்ன என்று புரியாமல் அவளையே பார்க்க...



அந்த பக்கம் அமைதி நிலவுவதை கண்ட ராணி தான் சொன்ன விஷயத்தை கேட்டு காந்தள் அதிர்ச்சியாகி இருப்பாள் என்று புரிந்துகொண்டவர் ." ஏய் காந்தள் இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி " என்றவர் .



"உன்னோட டிசைன்ஸ் எல்லாமே நம்ம டிசைன் டெபார்ட்மென்டின் மெயின் டீமில் இருக்கவங்களை ரொம்ப இம்ப்ரெஸ்ட பண்ணிருக்கு .. அவங்க டீமில் உன்னை அவங்க கூட ஒண்ணா வேலை பார்க்க அப்பொய்ண்ட் பண்ணி இருக்காங்க . நீ இப்போ வாங்கிட்டு இருக்க சம்பளத்தை விட கிட்டத்தட்ட 5 மடங்கு சம்பளம் உனக்கு வரப்போகுது " என்று அடுத்த ஆனந்த அதிர்ச்சியை காந்தலிடம் சொல்ல...



இந்தமுறை ராணி சந்தோசக் குரலில் பேசியது காந்தள் அருகில் நின்று இருந்த சித்ராவிற்கும், பத்மாவிற்கும் தெளிவாக கேட்டது . அவர்களால் ராணி சொன்னதை கேட்டு சமதோஷப்படாமல் இருக்க முடியாமல் தங்கள் இருவரும் காந்தளை கட்டிக்கொண்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்த ... காந்தளுக்கு இங்கு நடப்பது என்ன என்று ஒன்றும் புரியவில்லை .



அவள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க... இந்த பக்கம் காந்தள் எதுவும் பேசாமல் இருப்பதை உணர்ந்த ராணி " காந்தள் ... காந்தள்... லைன்ல தான் இருக்கியா ? நான் பேசுறது உனக்கு கெடுத்து தானே ? " என்றவர் .



" நாளையில் இருந்து நீ டிசைன் டெபார்ட்மென்டின் ஹெட் ஆஃபிஸில் போய் வேலை பார்க்க போறே... நீ சீக்கிரமே கிளம்பி இங்க வந்திரு " என்றார் ராணி .



ராணி பேசுவதை கேட்டவள் " மேடம் நாளைக்கே எப்படி மேம் நான் அங்கே வர முடியும் . இங்க என் அம்மாவும் , அத்தையும் இப்டி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க அப்போ நான் எப்படி மேம் அங்கே வரது" என்று காந்தள் தனக்கு கிடைத்த பரிசையும் , பதவியையும் நினைத்து சந்தோசமாக பேசாமல் தன் குடும்பத்தின் நிலை குறித்து அவள் பேச...



அதை கண்டதும் உடனே வால் கையில் இருந்த போனை பிடுங்கிய சித்ரா " ஹலோ மேடம் நான் காந்தளோட அம்மா பேசுறேன் " என்றார் .



அவர் குரல் கேட்டதும் குரலில் மரியாதையோடு " அம்மா நல்லா இருக்கீங்களா ? காந்தள் விஷயத்தை சொன்னா . உங்க யாருக்கும் எதுவும் இல்லையே எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே ?" என்றார் அக்கறையோடு.



" எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மேடம் நாங்க நல்ல தான் இருக்கோம் . எங்க கடை தான் தீக்கிரையாகி முழுசா சாம்பல் ஆகிருச்சு . அதை விடுங்க அதை சரி செஞ்சுக்கலாம் "என்றவர் .



" மேடம் நீங்க கவலை படாதிங்க .. காந்தள் நாளைக்கு ஆபீசுக்கு வந்திருவா .. அவளை நாங்க அனுப்பி வெக்குறோம் " என்றார் சித்ரா .



அதை கேட்டதும் அவசரமாக குறுக்கே புகுந்து " அம்மா என்ன சொல்லிட்டு இருக்க... நீ போனை கொடு " என்று சித்ராவின் கையில் இருந்த போனை வாங்க போக...



அவள் கையை பிடித்துக்கொண்ட பத்மா " மேடம் நீங்க கவலைப் படாதீங்க நாளைக்கு காந்தள் ஆபீஸ் வந்திருவா " என்றார் சத்தமாக .



ராணி அவர்கள் பேசியதை கேட்டு மகிழ்ந்தவர் "அப்போ சரி ம்மா... நாளைக்கு வந்து அவளோட நியூ போஸ்டிங்கில் ஜெயின் பண்ணி ஒரு ரெண்டு நாள் காந்தள் வேலை பார்த்துட்டா போதும் அப்பறோம் நானே வழுக்கு எங்க போஸ்க்கிட்டே பேசி லீவு வாங்கி கொடுத்து அவளை ஊருக்கு அனுப்பி வேகுறேன். ஏன்னா முதல் நாளே காந்தள் வேளையில் ஜாயின் பண்ணலையின்னா நல்லா இருக்காது அதனால் தான் நான் காந்தளை நாளைக்கே வந்து வேளையில் ஜெயின் பண்ண சொன்னேன் . என்னை தப்ப எடுத்துக்காதீங்க இந்த மாதிரி ஒரு இக்கட்டான நிலையில் அவளை இங்கே வர சொல்லி கூபிட்றேன்னு நீங்க தப்ப நினைக்காதீங்க " என்றார் ராணி வருத்தத்தோடு .



" அதெல்லாம் எதுவும் இல்லை ம்மா .. நாங்க ஏதும் தப்பா நினைக்கலை " என்ற சித்ரா நாளை கண்டிப்பாக தன் மகளை வேளைக்கு அனுப்பி வைப்பதாக கூறி போனை வைத்தார் .



"அம்மா என்ன இது இப்படி நாளைக்கே வேளைக்கு வரேன்னு சொல்லிட்டீங்க... நீங்க ரெண்ட்னு பேரும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது நான் எப்படி வேளைக்கு போக முடியும். உங்களை இப்படி விட்டுட்டு என்னால போக முடியாது " என்று காந்தள் கூற..



" உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா காந்தள் உங்க மேடம் தான் அவ்வளவு எடுத்து சொல்லுறாங்க இல்ல . நீ பேசாம ஊருக்கு கிளம்பு " என்றார் பத்மா .



" அத்தை நீங்களுமா இப்படி பேசுறீங்க... இங்க நாம இத்தனை வருசமா பாத்துட்டு வந்த தொழில் இப்படி கருகி வீண் ஆகி இருக்கு . இப்ப்போ என்னை ஊருக்கு போக சொல்றிங்க..." என்றாள் ஆற்றாமையோடு .



" காந்தள் இது நமக்கு பெரிய இழப்பு தான் . நானும் , உன் அத்தையும் இவ்வளவு வருசமா நடத்திட்டு வந்த ரெஸ்ட்டாரெண்ட் இப்படி ஆனதுல எங்களுக்கும் வருத்தம் இருக்க தான் செய்யுது அதுக்காக இப்படியே இதை நினைச்சுட்டு அப்படியே உடைஞ்சு போய் உக்கார முடியுமா என்ன ? நானும் உன் அத்தையும் கொஞ்ச நாளைக்கு இந்த வேலையை செய்துட்டு அப்பறோம் இந்த தொழிலை விட்டுட்டு இருக்கலாம்னு நினைச்சோம் . இதுவும் இப்போ ஒரு வழியில் நல்லதா போய்டுச்சு, நம்ம கிட்டே இருக்குற பணத்தையெல்லம் இதுல போட்டுட்டா அப்பறோம் நாளைக்குன்னு நமக்கு எதுவும் இருக்காது . அதனால இந்த கடையை இனி நாங்க நடத்துறதா இல்லை . உனக்கு தான் இப்போ சம்பளம் அதிகம் வரபோகுதே அதை வெச்சு நீ உனக்கு தேவையானத்திற் வெச்சுக்கோ . இந்த கடையை சரி செய்து வாடகைக்கு விட்டு நானும் , உன் அத்தையும் எங்களுக்கு தேவையானதை பார்த்துக்குறோம்" என்றார் சித்ரா .



" அம்மா என்ன இது இங்கே வாரத்துக்கு முன்ன வரை கடையை திரும்ப சரி செய்யணும் . மறுபடி வியாபாரத்தை பார்க்கணும்னு சொன்னிங்க... இப்போ இப்படி மாத்தி பேசுறீங்க " என்றாள் காந்தள் புரியாமல்.



" ஆமா காந்தள் இங்கே வர வரைக்கும் எனக்கும் அப்படி தான் இருந்துச்சு . ஆனா உன்னோட மேடம் அதான் அந்த ராணி சொன்னதை எல்லாம் கேட்டு எங்க மனசை மாத்திகிட்டோம் " என்ற சித்ரா தன் அருகில் நின்று இருந்த பத்மாவை பார்த்து " என்ன பத்மா பாத்துட்டு இருக்க ... எடுத்து சொல்லு இவை கிட்டே " என்று சித்ரா காந்தள் அவரை பார்க்காத வேளையில் பத்மாவை பார்த்து இவளை எப்படியாவது சமாளிச்சு ஊருக்கு பேக் பானு என்று ஜாடை செய்தார் .



பத்மா அதை கண்டதும் காந்தலிடம் பேச வர " இப்ப்போ என்ன நான் ஊருக்கு போகணும் அதானே "என்றாள் .



இருவரும் ஆமாம் என்று ஒரு சேர தலையை ஆட்ட ... " சரி நான் சாயங்காலம் கிளம்புறேன் சந்தோசமா " என்றால் இருவரையும் முறைத்த படி காந்தள் .



"இப்போ எதுக்கு இப்படி முருகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்க... இங்க எல்லாத்தையும் நனையும் உன் அம்மாவும் பாத்துகிறோம் நீ எதை பற்றியும் கவலை படாம போயிட்டு வா அம்மு " என்று காந்தளின் தாடையை பிடித்து பத்மா முத்தம் வைக்க ..



அதில் சிரித்தவள் "சரி வாங்க வந்ததே வந்துட்டோம் மூணு பெரும் சேர்ந்து சாப்பிட்டுட்டு அப்பறோம் வீட்டுக்கு போகலாம்" என்றாள் .



" வீட்டில் உனக்காக அம்மா சமைச்சு வெச்சிருக்கேன் அம்மு " என்றார் சித்ரா .



" ஆமா என்ன பெருசா சமைச்சிட போறே... அதே சாதமும் முருங்கைக்காய் சாம்பாரும் தானே செய்து வெச்சிருப்ப.. அதை ராத்திரி பொய் நீயும் நானும் சாப்பிட்டுக்கலாம் . இப்போதான் என் செல்லம் இந்த அத்தையை நல்ல கடைக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு u வாங்கி கொடுக்கிறேன்னு சொல்றாளே ... வா ஒரு நாள் வெளியே சாப்பிட்டுட்டு போலாம் " என்று சித்ராவை தன்னோடு இழுத்துக்கொண்டு காந்தளுடன் பேசிக்கொண்டே மூவரும் அங்கிருந்து கிளம்பினர்

தனக்கு மகளை பிரிய மனமில்லாமல் சித்ராவும், பதமினியும் காந்தளை ட்ரெயின் ஏற்றிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர் .
 
Top