sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE-19


இளனின் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்ற நீலகண்டனின் பிஏவை நிமிர்ந்தும் பார்க்காமல் ஏதோ அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தான்.



உள்ளே வந்த பெண் எதுவும் பேசாமல் நின்று இருக்க..." ம்ம்... சொல்லுங்க நீலகண்டன் இப்போ தான் எனக்கு கால் பண்ணினாரு. நம்ம நித்யா பிளேசை பில் பண்ண ஒரு பொண்ணை அப்பாயிண்ட் பண்ணி இருக்குறதா சொன்னார். ஏன் அவங்க இங்கே வரலையா? " என்றான் தன் கோர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டே...



" சார் அவங்க வெளியே தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. நான் தான் அவங்களை வெளியே இருக்க வெச்சிட்டு வந்தேன். உங்க கிட்டே அவங்களை பத்தி சொல்லிட்டு அப்பறோம் உள்ளே அழைச்சிட்டு வரலாம்னு... " என்று அந்த பெண் இழுக்க..



அவளை நிமிர்ந்து அப்போது தான் பார்த்தான் இளன். அவன் பார்வையில் என்ன இருக்கிறது என்று அந்த பெண்ணால் கனிக்க முடியவில்லை . இளன் அந்த பெண்ணிடம் "பரவாயில்லை அவங்களை உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க..." என்றான்.

இளன் எதற்காக காந்தளை தன்னோடே கூட்டி செல்ல சொல்கிறான் என்று புரியாமல் அந்த பெண் அவனை தயக்கமாக பார்க்க... அவளிடம் சில விபரங்களை சொல்லிவிட்டு மேஜை மேல் இருந்த அதன் மொபைலை எடுத்து கோர்ட பாக்கெட்டில் வைத்தவன் அவன் அறையில் இருந்த மற்றொரு வழியாக கிளம்பி சென்றான்.

இளன் அறைக்குள் சென்று வந்த நீலகண்டனின் பியே அங்கே மிகவும் பத்தட்டமாக இளன் அறைக்கு வெளியே அமர்ந்து இருந்த காந்தளிடம் வந்தாள்.

நீலகண்டனின் பியே வந்ததும் எழுந்து நின்ற காந்தள் அவளைக் கேள்வியாக பார்க்க...

"மிஸ் காந்தள் சார் ஒரு முக்கியமான விஷயமா பாரீஸ் கிளம்பிட்டாரு. அவர் வரதுக்கு எப்படியும் 10 டேஸ்க்கு மேல ஆகும்னு சொன்னாரு. அதுவரை நீங்க நீலகண்டன் சார் டீமில் வேலை செய்ய்யணும்னு சொல்லி இருக்காரு. அவர் திரும்பி வந்ததும் உங்களுக்கு என்னென்ன வேலைன்னு சொல்லுவாரு" என்று அந்த பெண் கூற..

அதை கேட்டு ஒரு பக்கம் அதிர்ந்தாலும், மற்றொரு பக்கம் சந்தோசமாக இருந்தது ஒரு பத்து நாளைக்கு இளனை சந்திக்க வேண்டியதில்லை என்று பெருமூச்சுவிட்டாள் காந்தள்.

இருந்தும் அந்த பியேவிடம் " சார் அவ்ளோ தான் சொன்னாரா? வேற எதும் கேட்கலையா? " என்று ஆர்வமாக கேட்டாள்.

" இல்லை மாம் "என்ற அந்த பெண் வாங்க என்று காந்தளை தன்னோடு அழைத்து சென்றாள்.

இங்கே தனக்கு பிஏவாக அப்பாயிண்ட் ஆகி இருப்பது காந்தள் தான் என்று இளனுக்கு தெரியாது . ஒருவேளை தெரிந்து இருந்தால் அவளை இளன் தன்னோடு பாரிஸ் அழைத்து சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

இளன் ஏன் தன்னை ஒரு முறை கூட உள்ளே அழைத்து பேசவில்லை. அப்படி என்ன அவசரம் அவனுக்கு முதல் முறையாக வேலைக்கு வந்த தன்னை உள்ளே அழைத்து பெயருக்கு கூட எதுவும் கேட்காமல், பேசாமல், ஏன் தன்னை ஒரு முறை கூட பார்க்காமல் தன்னை அனுப்பி திரும்ப அனுப்பி வைத்துவிட்டான் என்று காந்தளுக்கு அவன் மீது கோபம் வந்தது.

பின் அவன் தன்னை பார்த்தாள் என்ன பார்க்காவிட்டால் என்ன என்று நினைத்தவள் நீலகண்டனின் அறை முன்பு மீண்டும் வந்து நின்றாள்.

"சாரி மா சார் அவசரமா வெளியே கிளம்புற விஷயம் எனக்கு தெரியாது " என்று வருத்தம் தெரிவித்தார் நீலகண்டன்.

" இட்ஸ் ஓகே சார் " என்று அமைதியாக காந்தள் அங்கு நின்று இருக்க...

தன் கையில் ஐ பேடை எடுத்தவர் அதை காந்தள் கையில் கொடுத்து அதன் பாஸ்வோர்ட்டை சொல்லி உள்ளே நுழைய சொன்னான்.

காந்தளுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒரு சேர வந்து இருந்தது. அவருடைய பெர்சனல் ஐ பேடின் பாஸ்வேர்ட்டை தன்னிடம் எந்த நம்பிக்கையில் கூறினார் என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்க...

காந்தளிடம் தன் அடுத்த மீட்டிங்கிற்கு தேவையான விபரங்கள் எல்லாம் அதில் இருப்பதாக சொன்னவர் அதை எல்லாம் படிடித்துவிட்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த மீட்டிங்கிற்கான அனைத்து ஏற்படுகளையும் காந்தளையே முன் நின்று ஏற்பாடு செய்ய சொன்னவர் அவளுக்கான கேபினை காட்டி அங்கு செல்ல சொன்னார்.

அடுத்தடுத்து யோசிக்க நேரம் இல்லாமல் தன் வேளைகளில் மூழ்கி இருந்தாள்.

மாலை வேலை முடிந்து மிகவும் சோர்வாக ஆபீசை விட்டு காந்தள் வெளியே வர...

அப்போது காந்தள் பின்னால் இருந்து "ஆ...." என்று கத்திக்கொண்டே அவளுக்கு சர்பிறைஸ் செய்தனர் மதிமாறன், பிரியா, முகுந்தன் மூவரும்.

அவர்களை இங்கு சற்றும் எதிர்பார்க்காவள் மூவரையும் பார்த்து உற்சாகமானவள் " நீங்க எல்லாம் எப்படி இங்கே... ஏய் ப்ரியா காலையில் நான் கிளம்பின அப்போ கூட நீ என்கிட்டே இதை பத்தி பேசவே இல்லையே" என்றாள்.

" நான் தான் இவங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன் காந்தள் " என்று கையில் பூங்கொத்துடன் அவள் முன் வந்து நின்றான் மதிமாறன்.

அவனையும், அவன் கையில் இருந்த பூங்கொத்தையும் பார்த்துக்கொண்டே காந்தள் நின்று இருக்க... அவளிடம் வந்தவன் வாழ்த்துகள் காந்தள் என்று அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.



அதை வாங்கிக்கொண்டு அவனுக்கு நன்றி சொன்னவள் " சரி எல்லாரும் எதுக்காக இங்கே வந்து இருக்கீங்க?" என்றாள்.

" ஏய் உனக்கு இன்னிக்கு நாங்க ட்ரீட் கொடுக்க போறோம் டி... நீ உன்னோட வேளையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்க அதுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு அப்படியே உன்னோட இன்னிக்கு பார்ட்டி பண்ணலாம்னு வந்திருக்கோம் " என்ற ப்ரியா அவள் கையில் இருந்த பேகை வாங்கிக்கொண்டு அவள் தோள் மீது கைப்போட்டு தன்னோடு அழைத்து செல்ல..

அவர்கள் பின்னால் மதிமாறனும், முகுந்தனும் சிரித்துக்கொண்டே சென்றனர்.

காந்தளுக்காக ஆபீஸ் பரிசாக வழங்கி இருந்த வீட்டிற்கு இன்று குடி பெயர்ந்தாள். பிரியாவையும் தற்போது இருக்கும் அப்பார்ட்மெண்ட்ட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வந்து தங்க சொல்லி எவ்வளவோ கூப்பிடும் அவள் ஆபீஸ் செல்வதற்கு இங்கு தான் சௌகரியமாக இருக்கும் என்று சொல்லி காந்தளுடன் வந்து தங்க மருந்துவிட்டாள்.

பிரியாவும், காந்தளும் புதிய வீட்டிற்கு காந்தளின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டன்னு இன்று வந்து இருந்தனர். வந்ததும் சித்ரா சொன்னது போல நல்லா நேரம் பார்த்து இன்டக்சன் அடுப்பில் சில்வர் பாத்திரம் வைத்து பால் காய்ச்சியாகியிற்று.

பூஜை செய்து பிரியாவும், காந்தளும் பாலை குடித்து முடித்தனர். முகுந்தனுக்கும், மதிமாறனுக்கும் வேலை இருப்பதால் இரவு காந்தள் வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டனர்.

காலை சீக்கிரமே கிளம்பி காந்தளும், பிரியாவும் இங்கு வந்து இருந்ததால் சிறிது நேரம் இருவரும் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலாம் என்று இருவரும் பெட்ரூமிற்கு சென்றனர்.

அந்த அறைக்குள் நுழைந்ததும் ப்ரியா வாயை பிளந்தாள். "என்ன டி இது உன்னோட உனக்கு பரிசாக கொடுத்த இந்த அப்பார்ட்மென்ட்ட்டில் எல்லா வசதியுயும் செய்து கொடுத்து இருக்காங்க. எனக்கும் உங்க ஆஃபிஸில் எதும் வேலைஇருந்தா வாங்கி கொடு டி.. உன்னை மாதிரி வேளைக்கு சேர்ந்த ஒரே வருசத்துல ப்ரோமோஷன் கொடுத்து சம்பளத்தை அதிகப்படுத்தி இருக்காங்க. புதுசா உனக்கே உனக்குன்னு வீடு அதுவும் உன்னோட வேளைக்காக கொடுத்து இருக்காங்க. எங்க ஆபீஸ்ல எல்லாம் ஒரு பென்சில் கேட்டா கூட ஏற இறங்க பார்ப்பாங்க" என்றாள்



காந்தளும் சிரித்துக்கொண்டே "ஆமா டி நானும் இதை முதல்ல நம்பள நான் ஊருல இருக்க அப்போ ராணி மேடம் எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்ன அப்போ என்னால நம்பவே முடில.. இங்கே வந்து இதை எல்லாம் பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சு" என்றாள் அங்கே இருந்த கிங் சைஸ் பெட்டில் படுத்தபடி.

அவள் அருகில் மெத்தையில் குதித்து படுத்துக்கொண்டு ப்ரியா "... இந்த மெத்தை ரொம்ப சாப்ட்டா இருக்குல்ல டி... ம்ஹும் நீயும், உன் ஆளும் இங்கே இந்த மெத்தையில்... ம்ம்ம்... ம்ம்ம்... " என்று காந்தளை ப்ரியா கிண்டல் செய்ய

"ஏய் ச்சி.. போடி " என்று காந்தள் வெட்கப்பட..

" என்னடி வெட்கப்படுறீயா? அப்போ நான் சொன்னதை நீயும் உன் மனசுக்குள்ள நினைச்சு பார்த்து இருக்க... அப்படித்தானே" என்று காந்தளை பார்க்க..

ஆமாம் என்று வெட்கத்தோடு தலையை காந்தள் ஆட்ட... " ஏண்டி நிஜமாவே இத்தனை நாள் நீ சொன்னதை கேட்டு அவன் உன் பக்கத்துலயே வரலையா?" என்றாள் பிரியா.

ஆமாம் என்று காந்தள் தலையை ஆட்ட...

" என்ன டி இது நீங்க ரெண்டு பெரும் LOVE பண்ணி ஒருவருசத்துக்கு மேல ஆச்சு இன்னமும் உங்க ரெண்டு பேருக்குள்ள எதுமே இல்லையா? அவனும் உன்கிட்டே எதுவும் கேட்டு போர்ஸ் பண்ணலையா? " என்றாள் அதிசயமாக.

'இல்லை டி.. " என்ற காந்தள் ஏழுந்து அமர்ந்து பிரியாவை பார்த்தாள்.

அவள் முகம் ஏதோ போல இருப்பதை கவனிதா பிரியவும் எழுந்து காந்தளின் முன் அமர்ந்தவள் " என்ன டி ஆச்சு! முகம் ஏதோ போல இருக்கு " என்றாள்.

" ஏய் காதலிச்சலே கல்யாணத்துக்கு முன்ன எல்லாமும் நடக்கும்னு எதுவும் இருக்கா என்ன சொல்லு. நான் மதியை கல்யாணம் பண்ணினதுக்கு பிறகு தான் எங்களுக்குள்ள எல்லாமும்னு நினைச்சிருக்கேன் " என்றாள்.

"அதுவும் சரி த்தான் காந்தள் நீ சொன்னதும் சரி தான். வயசு கோளாறு ஆர்வகோளாறுல எல்லாமே செய்துட்டு பின்னாடி எதுவும் பிரச்சனையின்ன பாதிக்கப்படுறது பசங்க கிடையாது நம்ம மாதிரி பொண்ணுங்க தான் " என்று காந்தளின் முடிவிற்க்கு மரியாதை கொடுத்தாள் பிரியா.

இருவரும் பேசிவிட்டு களைப்பில் இருவரும் உறங்கிவிட்டனர். லேசாக தூக்கம் கலைந்து கண் விழித்த காந்தள் எழுந்து மணியை பார்க்க அப்போது இரவு மணி 8ஐக் காட்டியது.

"ஐயோ இவ்வளவு நேரமா தூங்கிட்டோமா ரெண்டு பேரும் " என்று பதறியவள் " ஏய் பிரியா!! எழுந்திரு டி.... எழுந்திரு " என்று ப்ரியாவை எழுப்பினாள்.

"காந்தள் ப்ளீஸ் டி இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.. இந்த பெட்ல படுத்தா நல்லா தூக்கம் வருது டி.." என்று தூக்கம் கலையாமல் ப்ரியா பேசினாள்.

"ஏய் மதியும், முகுந்தனும் வர நேரம் ஆச்சு நான் வேற நைட் இங்கே டின்னெர் சாப்பிட வர சொல்லி இருந்தேன் ஆனா இப்பவே மணி ஐ ஆகிருச்சு டி.. அவங்க வந்திட போறாங்க எழுந்திரு" என்று பிரியாவை உளுக்கினாள்.

"என்ன டி சொல்ற நைட் 8 மணியா" அலறி எழுந்தவள்.

" இப்போ என்ன டி பண்றது அவங்க வரதுக்குள்ள எதுவும் சமைக்க முடியுமா நாம வேற எதுவும் வாங்க சமைக்க வாங்கவே இல்லையே " என்றாள்.

"அவங்க வரதுக்குள்ள நான் சமைக்க எதுவும் வாங்கி வரேன். நீ பாத்திரம் எல்லாம் எடுத்து வை வந்துறேன் " என்று எழுந்து முகம் கழுவிவிட்டு கடைக்கு கிளம்ப போக..

வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அடடா ரெண்டு பேரும் வந்துட்டாங்க போல என்று அவசரமாக காந்தள் சென்று கதவை திறக்க அங்கே முகுந்தன் மட்டும் தனியே நின்று இருந்தான் .

அவனை பார்த்ததும் உள்ளே அழைத்த காந்தள் " மதி வரலையா? நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து தானே வராதா பிளான் " என்றாள் காந்தள்.

" ஆமா , நான் ஒர்க் முடிச்சிட்டு மதிக்கு கால் பண்ணினேன் இன்னிக்கு ஆஃபிஸில் ஏதோ முக்கியமான ஒர்க் இருக்கு அதனால இன்னிக்கு வரலையின்னு சொன்னான் . உன்கிட்டயும் சொல்ல சொல்லிட்டு போனை வெச்சுட்டான். அவன் பேசுற அப்போவே ரொம்ப பிசியா இருந்தது போல எனக்கு தோணிச்சு" என்றான் முகுந்த் .

" சரி திடீர்னு எதுவும் ப்ராஜெக்ட் வந்திருக்கும் பரவாயில்லை நான் அவன்கிட்ட அப்பறோம் பேசிக்கிறேன்" என்றவள் " நீ கொஞ்சம் ப்ரியாவுக்கு ஹெல்ப் பண்ணு . நான் கொஞ்சம் கடை வரைக்கும் போயிடு வரேன் " என்று காந்தள் வெளியே கிளம்ப ..

" எங்கே போற காந்தள் அதுவும் இந்த நேரத்துக்கு . என்ன வேணும்னு சொல்லு நான் பொய் வாங்கிட்டு வரேன் " என்றான் முகுந்தன் .

" என் வீட்டுக்கு வந்த முதல் நாளே நான் உனக்கு வேலை சொன்னா நல்லா இருக்காது . நீ இரு நான் போயிடு வரேன்" என்று தன் பரிசையும் பேகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

காந்தள் வெளியே சென்றதும் முகுந்தன் நேராக ப்ரியாவை பார்க்க கிச்சனுக்கு செல்ல... அங்கே அவள் ஸ்டூல் மேல் ஏறி நின்று காந்தள் வாங்கி வந்த பொருட்களை அங்கிருந்த அலமாரியில் வைத்துக்கொண்டு இருந்தாள் .
 
Top