sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
"சரிங்க மாமா நான் நம்ம வீட்டுக்கே வரேன். அங்கே இருந்தே வேளைக்கு போய்க்கிறேன் . ஆனா நான் தான் இவரோட மனைவின்னு என் ஆஃபிஸில் யாருக்கும் தெறியக்கூடாது. என்னோட லட்சியமே டிசைனிங் பீல்டில் ஒரு உயரத்தை எட்டனும்ங்குறதுதான், அந்த நிலைக்கு நான் வரவரைக்கும் எங்க கல்யாண விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்குறேன் " என்று தன் மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

" உன் விருப்பப்படியே ஆகட்டும் மா... நீயா எப்போ உங்க கல்யாணத்தை பத்தி வெளியே சொல்லணும்னு நினைக்கிறியோ... அப்போ எல்லாருக்கும் சொல்லிக்கலாம் சரியா " என்று அவள் முடிவிற்கு மரியாதை கொடுத்தது அவள் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னார் தமிழ் மாறன் .

"சரிங்க மாமா " என்று காந்தளும் சம்மதம் சொன்னவள் மாறனை ஓரக்கண்ணால் பார்த்து "இப்போ சந்தோசமா" என்று மெதுவாக கேட்டாள் .

ஆனால் மாறன் இன்னமும் கோபம் குறையாதவனாக அவளை முறைத்துக்கொண்டு விறைப்பாக தான் இருந்தான்.

பிறகு காந்தள் மாறனின் பெற்றோரிடம் "நான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் என் அம்மா , அத்தை கூட இருக்கணும்னு ஆசை படுறேன். திடீர்னு எனக்கு கல்யாணம் ஆனது அவங்களுக்கு கண்டிப்பா அதிர்ச்சியா இருக்கும் . இந்த நேரத்துல அவங்க கூட நான் இருக்கணும்னு நினைக்கிறேன் . நாளைக்கு இங்கே இருந்து ஆபீஸ் போயிட்டு ஈவினிங் நம்ம வீட்டுக்கு வந்துடறேன் " என்றாள் .

சிறிது யோசித்துவிட்டு "சரிம்மா.. உன் விருப்பம் . ஆனா நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துடனும் சரியா " என்றார் மரகதம்.

"சரிம்மா வந்துடறேன் " என்றாள் காந்தள் சிரித்தபடி.

பின் சித்ராவும், பத்மாவும் அனைவருக்கும் இரவு உணவு இங்கே தான் என்று உணவு தயாரிக்க சென்றிருந்தனர். தமிழ்மாறன் முகுந்திடம் பேசிக்கொண்டு இருக்க... ப்ரியாவை உள்ளே அழைத்த சித்ரா காந்தளிடம் சொல்லி மாறனை அவள் உணவு தயார் ஆகும்வரை அவள் அறையில் ஓய்வெடுக்க சொல்லி அனுப்பி வைத்தார்.

ப்ரியாவும் வந்து காந்தலிடம் விஷயத்தை சொல்ல... அவள் மாறனை பார்த்தாள் . மாறன் இன்னமும் முறுக்கிக்கொண்டு அமர்ந்து இருக்க... காந்தள் எழுந்து மாறனிடம் வந்தவள் "சார் நீங்க கொஞ்ச நேரம் என் ரூமில் ரெஸ்ட் எடுக்கிறிங்களா?" என்றாள்.

அவள் பேசியதை கவனித்த மரகதம் "என்னம்மா இது உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் ஆகிருச்சே... இன்னமும் ஏன் அவனை சாருன்னு கூபிட்றே... இப்போ தான் புருஷன் பேரை பொண்டாட்டி சொல்லி கூப்பிடறது பேஷன் ஆகிருச்சுல்ல... நீ அவனை உனக்கு பிடிச்சா மாதிரி பேரை சொல்லி கூப்பிட வேண்டியதுதானே" என்றார்.

"அத்தை எனக்கு திடீர்னு அவர் பேரை சொல்லி கூப்பிட வரமாட்டேங்குது . ஆஃபிஸில் சாருன்னு கூப்பிட்டு பழகிட்டேன் .போக போக பழகிக்கிறேன் " என்றாள்.

"சரிம்மா..." என்றவர் தன் மகன் இன்னமும் அமர்ந்து இருப்பதை பார்த்து "டேய் மாறா ஏன் இன்னமும் உக்காந்திருக்க... அதான் உன் பொண்டாட்டி கூப்பிட்றா இல்ல... போ பொய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... இல்லையா அவ ரூம் எப்படி இருக்கு சுத்தி பாத்துட்டு வா..." என்று மாறனை காந்தளுடன் உள்ளே அனுப்பி வைத்தவர் எழுந்து கிச்சனில் சித்ராவிற்கும், மரகதத்திற்கும் உதவ செல்ல அவர்களோடு ப்ரியாவும் சேர்ந்து கொண்டாள்.

கிட்சனுக்கு வந்த மரகதம் "என்ன சமையல் செயிரிங்க... நானும் உங்க கூட அவனது எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா ?"என்று உள்ளே வந்தார் .

"இல்லே சம்மந்தி அம்மா நாங்க ரெண்டு பேருமே செய்துடறோம் . நீங்க ஏன் இங்கே வந்திங்க .நீங்க பிரீயா இருங்க . நாங்க செஞ்சுகிறோம் "என்றார் பத்மா.

"இல்ல பத்மா நீங்க எடுத்து வெச்சிருக்க பொருளை எல்லாம் பார்த்தா நிறைய ஐட்டம் செய்விங்க போல இருக்கு... எங்ககிட்டயும் வெளில்யி பிரிகிச்சு கொடுங்க நானும் ப்ரியாவும் செய்ரோம் " என்று பணம் படைத்தவர் ஏன்டா எந்தவித பண்டாவும் இல்லாமல் மரகதம் கிச்சனுக்குள் வந்தவர் தன் சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு பத்மா கையில் இருந்த கத்தியை வாங்கி " சொல்லுங்க என்ன செய்யணும் " என்றார்.

அவர் கத்தியை பிடித்து இருந்ததை பார்த்த சித்ரா "சம்மந்தி அம்மா நீங்க காய் தானே நறுக்க போறீங்க... என்னவோ ஆளை கொள்ளுற மாதிறி இல்ல கத்தியை பிடிச்சு இருக்கீங்க " என்று சிரித்தார் .

அவர்க சொன்னதும் ப்ரியாவும் சிரித்துவிட... " என்ன செய்ய எனக்கு கல்யாணம் ஆன நாளில் இருந்து என் புருஷன் என்னை கிச்சேன்ல பொய் சமைக்க கூடாதுனு கண்டிஷன் போட்டுட்டாரு . அவருக்கு நான் கிச்சேன்ல செய்ய ஒரே வேலை கோபி போட்டு கொடுக்குறது மட்டும் தான். இதனை வருசத்தத்துல நான் காபி மட்டும் தான் சரியா செய்ய கத்திருக்கேன் " என்று சிரித்தவர்.

"நீங்க ரெண்டு பேரும் வேக வேகமா வேலை செய்யுறதை பார்த்தா எனக்கும் உங்களை போல வித விதமா சமையல் செய்யணும்னு ஆசையா இருக்கு... ஆனா எனக்கு தான் சமைக்கவே வரமாட்டேங்குது " என்று வருத்தப்பட்டார் மரகதம் .

"என்ன ஆன்ட்டி சொல்றிங்க இவோ வருஷம் ஆகியும் நீங்க இன்னமு சமையல் கத்துக்கலையா ! அப்போ வீட்ல யாரு தினமும் சமைப்பாங்க" என்றாள்.

"வேற யாரு சமையல் செய்ய தான் ஆள் போட்டிருக்கே அவங்க கிட்டே யார் யாருக்கு என்ன என்ன ஐட்டம் வேணும்னு முன்னமே சொல்லிட்டா கேட்டது போல செய்து கொடுத்திருவாங்க . எனக்கு அங்கே சுடுதண்ணி வைக்க கூட அவளை இல்லை " என்றார் மரகதம்.

"என்ன ஆன்டி அங்கிள் உங்களை ஒரு வேலையும் செய்யவிடாம ராணி மாதிரி பாத்துக்குறார் . நீங்க ஜாலியா என்ஜாய் பண்றதை விட்டுட்டு இப்படி சமைக்க முடியாலையினு வருத்தப்படுறீங்களே..." என்றால் பிரியா.

"ப்ரியா எல்லா பொண்ணுங்களுக்கு அவங்க புருசனுக்கு தன் கையாள சமைச்சு போட்டு அழகு பாக்குறது ரொம்ப பிடிக்கும். சம்மந்தி அம்மாவுக்கும் அப்படி தான் அவஙக வீட்டுக்காரருக்கு அவங்க கையாள சாப்பாடு செய்து போட்டு பார்க்கணும்னு அவங்க நினைக்குறாங்க " என்ற சித்ரா "என்ன சம்மந்தி நான் சொல்றது சரி தானே " என்றார்.

"சரியா சொல்லிட்டே சித்ரா. இனிமேல் நீங்க ரெண்டு பெரும் என்னை சம்மந்தின்னு கூப்பிடாதிங்க.. அது என்னவோ தள்ளி வெச்சு பேசுறது போல இருக்கு . நான் எப்படி உங்களை உரிமையா பேர் சொல்லி கூப்பிடுறேன் நீங்களும் அப்படியே என்னை பேர் சொல்லி கூப்பிடுங்க " என்றார்.

சித்ராவும், பத்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... "என்ன அப்படி பாக்குறீங்க... இனிமேல் என்னை சம்மந்தினு கூப்பிட்டா நான் இங்கே வரவே மாட்டேன். உங்க கூட பேச மாட்டேன். உங்க பொண்ணையும் இங்கே அனுப்பி வைக்க மாட்டேன் " என்று அவர்கள் இருவரையும் பிளாக் மேல் செய்ய...

"அய்யய்யோ மரகதம் அப்படி எதுவும் செய்துடாதே ம்மா... உனக்கு என்ன இப்போ உன்னை சமைக்க விடணும் அவ்ளோதானே . நீ இங்கே வாம்மா... நான் உனக்கு சமையல்ல எல்லாமே சொல்லி தரேன் . சித்ரா நீ போய் அந்த காய்கறியை நறுக்கு மரகதம் வந்து சமைக்கட்டும் " என்று பத்மா உரிமையோடு மரகதத்தை அழைக்க...

மரகதமும் பத்மா தன்னை நடத்தும் விதம் பிடித்து போய்விட குஷி ஆனவர் பத்மாவிடம் சென்று அவர் கன்னத்தை கிள்ளி " சூப்பர் இதை தான் நான் எதிர்பார்த்தேன் . எல்லாரும் என்னை என்னவோ வேற்று கிரக வாசி மாதிரி பாத்துட்டு தளி வெச்சே பேசி பலகுவாங்க . பணம் இருக்குங்குற காரணத்தால என்கிட்டே ஒரு இடைவெளியோடவே பலகுவாங்க . நீங்க இப்படி பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு " என்று சொன்னவர் பத்மாவிடமும், சித்ராவிடமும் கேட்டு கேட்டு ஒவ்வொன்றையும் பொறுமையாக செய்ய ஆரம்பித்து இருந்தார் .

ப்ரியாவிற்கோ பேசிய சிறிது நேரத்தில் இவர்கள் மூவரும் இவ்வளவு நெருக்கம் ஆனதை பார்த்தது ஆச்சர்யம் அடைந்தாள்
இவர்கள் இங்கே இப்படி இருக்க... நம்ம ஹீரோவை அதான் காந்தள் கிட்டே முறுக்கிக்கிட்டு அவ பின்னாடி கோபமா ரூமுக்கு போன நம்ம மாறன் என்ன செய்திட்டு இருக்காருன்னு பாக்கலாம் வாங்க .

காந்தள் தன் அறைக்கு மாறனை அழைத்து வந்தவள் கதவை திறந்து மாறனை உள்ளே போக சொல்லிவிட்டு அவன் பின்னல் அவளும் அறைக்குள் சென்றாள்.

உள்ளே வந்ததும் தான் பார்த்தாள் தன் அறை நேற்று காலை தான் ஆபீஸ் கிளம்பும்போது எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருந்தது. அலங்கோலமான அரை ஆடைகளை கழற்றி இங்கும் அங்கும் விட்டெறிந்திருக்க... எங்கே அதை மாறன் பார்த்துவிடுவானோ என்று நினைத்தவள் அவசர அவசரமாக களைந்து இருந்த அறையை சுத்தம் செய்தவள் கடைசியில் தான் அவள் படுக்கையை பார்த்தாள் . அதில் படுக்கையி்ன் மேல் அவள் உள்ளாடைகள் பரப்பிவைக்கப்பட்டு இருக்க...

"ஐயோ.... " என்று இருந்தது . எங்கே மாறன் அதை கவனித்துவிடுவானோ என்று அவசரமாக மெத்தையின் மேல் இருந்த உள்ளாடைகளை கையில் எடுத்து திரும்ப... அவள் மார்பை உரசும் அளவுக்கு நெருக்கமாக மாறன் நின்று இருந்தான்.

அவன் காந்தள் அறைக்குள் வரும்போதே அலங்கோலமான அவள் அறையை பார்த்துவிட்டான். அதை அவன் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை . ஆனால் காந்தள் அவன் கண்முன் இங்கும் அங்கும் ஓடி ஓடி வேலையில் பார்ப்பதை கண்டு ரசித்துக்கொண்டு இருந்தவன் அவள் கடைசியாக காட்டில் அருகில் செல்லவும் பெட் ரூம் கதவை உள் பக்கமாக கதவை தாளிட்டவன் கட்டிலில் குனிந்து தன் உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு இருந்தவளை நெருங்கி இருந்தான் .

அதை சற்றும் எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க... மாறன் மேலும் காந்தளை நெறுக்கிக்கொண்டு அவள் மேல் விழுவது போல நெருங்கவும் . அதில் தடுமாறி காந்தள் கட்டிலில் பின்னால் சாய... அவனும் வாகாக அவள் மேல் சாய்ந்தான்.

பாதி உடல் கட்டிலின் மேலும் மீதி உடல் கட்டிலின் வெளியேயும் தொங்கிக்கொண்டு இருக்க... அவள் மேல் தன் உடலை அழுத்தியவாறு படுத்தவன் "வெளியே எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு ஏன் எனக்கு மட்டும் கொடுக்காம விட்டே.. " என்றான்.

"சார் என்ன பங்கிட்டு இருக்கீங்க முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க எல்லாரும் இருக்காங்க... யாரும் வந்துட போறாங்க " என்றாள்.

"யார் வந்த என்ன... முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு " என்றான்.

"என்ன பதில் சொல்லணும் . ம்ம்ம்... முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க ப்ளீஸ் சார் " என்று தன் கையில் இருந்த உள்ளாடைகளை அபப்டியே விட்டுவிட்டு அவன் மார்பில் கைவைத்து தள்ளினாள் .

அவள் கையை தட்டிவிட்டவன் " சொல்லு ஏன் எனக்கு மட்டும் காபி கொடுக்காம போனே..." என்றான் அவள் முகத்தை நெருங்கி வந்து .

"அது... அது வந்து... " என்று முதலில் தயங்கியவள் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நீங்க தானே என்கிட்டே பேசமாட்டேன்னு முகத்தை தூக்கி வெச்சுட்டு இருந்திங்க.. அதான் என்கிட்டே பேசத்தவங்களுக்கு நான் ஏன் காபி கொடுக்கணும்னு யோசிச்சேன். அங்கே இருக்க எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு உங்களுக்கு அதனால் தான் கொடுக்காம போனேன் " என்றாள் .

"ஓஹோ... நான் பேசலைன்னா இப்படி தான் செய்வியா என்ன... " என்று அவள் மேல் தன் உடல் எடையினை அழுத்தம் கூட்டினான்.

காந்தளுக்கு லேசாக மூச்சு முட்டுவது போல இருந்தது இருந்தும் சமாளித்துக்கொண்டு "நீங்க பேசமாட்டேன்னு முறுக்கிக்கிட்டு போனா நானும் அப்படி தான் செய்வேன் " என்றாள்.

"ஓ... அப்போ நான் என்ன செய்தாலும் நீ அப்படியே செய்வியா " என்றான் மாறன் குறும்பாக .

அவன் பேச்சில் இருந்த குரும்பை கவனிக்காத காந்தள் "ஆமாம் " என்றாள்.
 
Top