sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
" நான் உன்கிட்டே கோச்சுக்கிட்டா நீயும் கோச்சுபியா ?" என்றான்.

"ம்ம்... " என்று தலையாட்டினாள்.

"நான் உன்னை திட்டினா... நீ என்ன செய்வே.."

"நானும் பதிலுக்கு திடுவேன் ".

"நான் உன்னை மிரட்டி அதட்டி உருட்டினா..."

"நான் உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாம இருப்பேன் "

"நான் உன்னை அடிச்சா..."

"நானும் என்னோட உடம்புல இருக்குற பலத்தையெல்லாம் திரட்டி உங்களுக்கு வலிக்குற மாதிரி அடிப்பேன் "

"என்னை அடிக்குற கையை நான் உடைச்சா... "

"இன்னோரு கையாள அடிப்பேன் "

"உன்னை இப்படி இருக்க கட்டிபிடிச்சா..." என்று சொல்லி கட்டிலில் படுத்திருந்தவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு இறுக்கி அணைத்தான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லும் ஆர்வத்தில் மாறன் காந்தளை கட்டிபிடித்ததை அவள் கவனிக்க தவறினாள்.

"உங்களை விட இறுக்கமா நானும் கட்டிப்பிடிப்பேன் " என்று அவனை விட அதிக அழுத்தம் கொடுத்து மாறனை கட்டி அணைத்தாள்.

அவளாகவே தன்னை கட்டி அணைக்கவும் மாறன் அதை ரசித்தவன். "நான் உன் உதட்டுல இப்படி முத்தம் கொடுத்தா... என்ன செய்த... " என்று கேட்டுக்கொண்டே அவள் உதட்டில் முத்தமிட நெருங்க...

தன் மேல் இருந்தவனை அணைத்தபடி அவனை நொடிப்பொழுதில் புரட்டிப்போட்டு தனக்கு கீழே மெத்தையில் சரித்தவள் அவன் மேல் படுத்துக்கொண்டே... " நீங்க முத்தம் கொடுக்குறதுக்கு முன்னே நான் முத்தம் கொடுத்திருவேன் " என்று குனிந்து அவன் இதழில் தன் இதழை பொருத்தி இருந்தாள் காந்தள்.

இது மாறன் எதிர்பாராதது அவளிடம் வார்த்தையில் விளையாடி காந்தளை தன் வழிக்கு கொண்டு வர நினைத்திருக்க... ஆனால் அவளோ மாறனை தனக்கு கீழே கொண்டு வந்து அவனுக்கு முத்தமிட்டுக்கொண்டு இருந்தாள்.

காந்தள் கண்கள் மூடி தீவிரமாக மாறனை முத்தமிட... அவள் முத்தத்தில் கிரங்கியவன் கைகள் அவள் வெற்று இடையில் சேலையை விலக்கிவிட்டு நுழைந்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

அவள் இடையில் ஊர்ந்த கையை மேலே கொண்டு செல்ல போனவன் கையை பிடித்து தடுத்தவள் முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள் .

மாறனும் அவளை பார்க்க... "இப்போ உங்க கோபம் எல்லாம் போய்டுச்சா... " .

"ம்ம்ம் கொஞ்சம் "

"கொஞ்சம் தானா ... ஏன் ?"

"ஏன்னா நீ இன்னிக்கு உன் வீட்ல இருக்கேன்னு சொல்லிட்டியே.. நீயும் என் கூட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லு . மிச்சம் இருக்க கோபம் பறந்து போய்டும் "

"ஏன் இப்படி இருக்கீங்க சார் . நான் அம்மா அத்தை கூட இன்னிக்கு ஒருநாள் தானே இருக்கேனு சொல்றேன். மற்ற பொண்ணுங்க மாதிரி நம்ம கல்யாணம் ஒன்னும் ஊரை கூட்டி சொந்த பந்தங்கள் சேர்ந்து செய்து வைத்த கல்யாணம் இல்லையே . நேத்து நைட் நான் கல்யாணம் பணிக்கிறீங்களான்னு தான் கேட்டேன் . நீங்க என்னடான்னா காலையில் என்னை ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூப்டு போய் கல்யாணம் செய்து என் கழுத்தில் தாலி கட்டி உங்க வீட்டுக்கு கூப்டு போயிட்டீங்க ... என் வீட்டுல இருக்கவங்களுக்கு நான் கல்யாணம் செய்துட்டு இனொரு வீட்டுக்கு வாழ போறேன்னு மனசளவுல ஏத்துக்க கொஞ்சம் தடவை வேணுமே... ரொம்பா நாள் தேவை படலைன்னாலும் இன்னிக்கு ஒரு நாள் அதுவும் ஒரு நைட் தானே இங்கே இருக்க போறேன் . அதுவும் கூடாதுன்னா எப்படி " என்று அவனை பார்த்தாள் .

"நீ பகல்ல எவ்ளோ நேரம் வேணும்னா இருந்துட்டு வா .. ஆனா எனக்கு தூங்கும்போது நீ என் கூட வேணும் "என்று தன் கையை பிடித்திருந்த அவள் கையை விளங்கியவன் அவள் இடையில் அழுத்தம் கொடுத்தது இறுக்கி பிடித்தான்.

"ஷ்... வலிக்குது சார் மெதுவா... " என்று அவனை பார்த்தவள். "அதென்ன தூங்கும்போது மட்டும் நான் வேணும் . அப்போ நீங்க என்னை அதுக்காக தான் கல்யாணம் செய்துக்கிட்டிங்களா ? "

"எதுக்காக கல்யாணம் செய்துட்டேனு சொல்றே நீ " என்று வேண்டுமென்றே தெரியாதவன் போல கேட்டான் .

"ம்ம்ம்... இதோ இப்படி என் உடம்பு முழுக்க உங்க காய் சும்மா இருக்காம மேய்ஞ்சுட்டு இருக்கே... அதுக்கு தான் " என்று தன் இடையில் இருந்து ஊர்ந்து அவள் ப்ளௌஸிற்குள் கை நுழைத்தவனை சுட்டி காட்டி கூறினாள் .

"இது எதுவும் இல்லைன்னாலும் நீ எனக்கு வேணும் . என்கூட எப்பவும் இருக்கனும் நான் உன்னை என் பக்கத்துலயே வெச்சுக்கணும்"

"அப்போ நான் உங்க கூட நைட் இருக்கும்போது என்னை எதுவம் செய்யாம அமைதியா இருந்துடுவீங்களா?"என்று அவனை ஆர்வமாக பார்த்தாள்.

"அதுக்கான காரணம் சரியா இருந்தா நான் உன்னை எதுவும் செய்யாம சும்மா உன்னை கட்டிப் பிடிச்சிட்டு அப்டியே தூங்கிருவேன் . வேற எதுவும் தேவை இல்லை "

"அப்போ காரணம் இல்லேன்னா?"

"இப்படி உன்னை அணைச்சிகிட்டு கட்டிலில் படுத்திட்டு உருளுவேன் " என்று அவளை கட்டிலில் உருட்டி அவனும் அவளோடு உரசிக்கொண்டு உருண்டான் .

"உன்னை கட்டி பிடிச்சு இப்படி விடாம முத்தம் கொடுப்பேன் " என்று அவள் முகடும் முழுதும் முத்தம் வைத்து அவள் மார்புக்கூட்டுக்குள் முகம் புதைத்து புது சேலை தான்டி அவள் உடலில் இருந்து வரவும் பிரயேக வாசத்தை இழுத்து தன் நாசியில் நிறைத்தான் .

"போதும் விடுங்க... நேத்துல இருந்து என்னை அட்டை பூச்சி மாதிரி விடாம ஒட்டிகிட்டே இருக்கீங்க... என்னை கொஞ்சம் விடுங்களேன் சார் ப்ளீஸ் "

"என்னை சாருன்னு கூப்பிடாதே ... உன்கூட இப்படி எல்லாம் சந்தோசமா இருக்கணும்ங்குறது என்னோட ரொம்ப வருஷ கனவு . நீ படிக்கும்போது காலேஜில் உன்னை பஸ்ட் டைம் மீட் பண்ணின அப்போ ஆரம்பிச்சது . இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போதான் என் ஆசை நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. இதை நான் முழுசா அனுபவிக்க வேணாமா "

"ஆமா ஹாலில் வெச்சு நீங்க ப்ரியா கிட்டேயே எங்க மூணு பேரையும் முன்னமே தெரியும்னு சொன்ன அப்போவே கேட்கணும்னு நினைச்சேன் . என்னை எங்கே எப்போ பார்த்திங்க... நான் உங்களை காலேஜில் ஒரு வாட்டி கூட பார்த்ததில்லையே "என்று அவனை பார்த்தாள்.

"அதுவா..." என்று மாறனின் பேச வரும்போது அவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட ...

இருவரும் திரும்பி வாசல் கதவை பார்த்தனர்

"அம்மு சாப்பாடு தயார் ஆகிருச்சு நீயும் மாப்பிள்ளையும் வாங்க சாப்பிடலாம் " என்று சித்ராவின் குரல் வெளியே கேட்டது .

அவர் குரல் கேட்டதும் காந்தள் எழுந்து செல்ல போக... அவளை போக விடாமல் கட்டிலில் இழுத்து படுக்க வைத்தவன் போகாதே... என்று தலையை ஆட்ட..

"ம்ம்... அம்மா இதோ வரோம் " என்றாள்.

காந்தள் வருவதாக சொன்னதும் சித்ரா அங்கிருந்து கிளம்பிவிட ....

"சார் விடுங்க என்ன.."

"கொஞ்ச நேரம் " என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

"சார் விடுங்க ... என்ன பண்றீங்க... அம்மா சாப்பிட கூப்பிட்டது கேக்கலையா உங்களுக்கு "என்று தன்னை தழுவிக்கொண்டு இருந்தவனை விளக்க முற்பட்டாள்.

"எனக்கு இப்போ நீதான் வேணும் . இந்த பசியை முதல்ல தீர்க்கணும் வா "என்று காந்தளை விடாமல் இழுத்துப்பிடித்து அணைத்தான்.

"ம்ச்... சார் விடுங்க... நேத்துல இருந்து எத்தனை முறை... வேணாம் . எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது ப்ளீஸ் விடுங்க... " என்று அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி மாறனை விட்டு பின்னால் தள்ளி சென்றாள்.

"ஏய் BOO ... எங்க போற வா... " என்று அவளை நோக்கி கைகளை நீட்ட...

"ம்ஹும் ... மாட்டேன் முதல்ல எழுந்து வாங்க சாப்பிட போகலாம் . எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருகாங்க வாங்க "என்று அவனை வர சொல்லிவிட்டு அறைக்கதவை திறக்க போனாள்.

அதற்குள் அவள் பின்னால் வந்து இழுத்து இருக்க அணைத்தவன் அவள் விரித்து விட்ட கூந்தலை முன்னாள் நகர்த்தி போட்டவன் அவள் முதுகில் முத்தம் வைக்க துவங்கி இருந்தான்.

காந்தள் அவன் செயலில் அதிர்ந்தாலும் அவன் முத்தம் வைத்ததால் கண்கள் மூடி அவன் முத்தத்தில் லயித்தாள் . முதுகில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே முன்னேறி அவள் கழுத்திற்கு வந்து அவன் கட்டி இருந்த மஞ்சள் கயிற்றின் மேல் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டே கழுத்தில் இருந்து முன்னோக்கி முத்தமிட்டுக்கொண்டே காந்தளை தன் பக்கம் திருப்பினான்.

காந்தள் கண்கள் மூடி மாறன் தந்த முத்தங்களை கூச்சத்தோடு ரசித்தவன் அதில் மூழ்கியும் பொய் இருக்க.. தன்னை மறந்து அவன் முன் நின்று இருந்தாள்.

அவள் முதுகில் இருந்து கழுத்தில் இறங்கி மேலேறி வந்து அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவன் "அம்மு... " என்று அவள் சிவந்திருந்த முகத்தை பார்த்தான்.

"ம்ம்.."

"உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா உனக்கு ..."

அவன் அப்படி கேட்டதும் முத்த மயக்கத்தில் இருந்தவள் கண்கள் திறந்து மாறனை பார்த்தவள் ." நீங்க எனக்காக என் விருப்பத்திற்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டதும் . ஊருக்கு முன்ன என்னை உங்க மனைவியா காட்டிட்டு மத்த நேரத்துல என்னை எப்படி நடத்துவீங்களோனு பயந்து இருந்தேன். ஆனா என்னை கல்யாணம் செய்துகிட்டு உங்க குடும்ப ஆளுங்க முன்னாடியும், என் வீடு ஆளுங்க முன்னாடியும் என்னை பெருமையா உங்க பொண்டாட்டின்னு அறிமுகம் செய்து வைத்த அப்போ தான் உண்மையிலேயே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுது. என்கிட்டே நெருங்கின இந்த ஒரு நாளில் உங்க மனசை என்கிட்டே முழுசா கொடுத்தது பிடிச்சிருக்கு... நான் இல்லாம உங்களால் இருக்க முடியலைன்னு சொன்னது ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னை இப்படி அட்டை மாதிரி ஒட்டிகிட்டே இருக்குறதும் பிடிச்சிருக்கு " என்று சொல்லி வெட்கித்து சிரித்தாள் .

அவள் அப்படி சொன்னதும் இருக்க அணைத்து அவள் நெற்றியில் முத்தம் வைத்து சிறு சிறு முத்தங்களாக வைத்து அவள் கண்கள் கண்ணாம் , கழுத்து காது மடல் என்று முத்தம் வைத்து பின் மெல்ல உதடு நோக்கி நெருங்கி வர...

"ஏய் காந்தள் உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க... அங்க எல்லாரும் சாப்பிட வெயிட் பங்கிட்டு இருகாங்க சீக்கிரம் வா டி ... எனக்கும் பசிக்குது "என்று கதவை விடாமல் ப்ரியா தட்டிக்கொண்டு இருக்க...

அதில் கடுப்பான மாறன் "அஹ்ஹ்... இவளை எப்படி நீ இவ்ளோ வருஷம் பிரெண்டா கூட வெச்சிருக்க... கொஞ்ச நேரம் உன்னை விட மாட்டாளா... "என்று தன் தலையை அழுந்த கோதியவன் " போ.. போய் கதவை திற ..." என்றான்.

காந்தளும் சிரித்துவிட்டு சென்று கதவை திறந்தாள்.

கதவை திறந்ததும் காந்தளை பார்த்த ப்ரியா "என்ன டி ஆச்சு உன் முகமெல்லாம் இப்படி சிவந்து இருக்கு... "என்று அவள் முகத்தை இப்படியும் அபப்டியும் திருப்பி பார்த்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ வா எல்லாரும் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்காங்கனு சொன்னியே போலாம் "என்று அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றவள் திரும்பி மாறனை பார்த்து "சீக்கிரம் வாங்க .. " என்று வெட்கபட்டுக்கொண்டே சொல்ல...

அவள் வெட்கப்பட்டதில் மேலும் காந்தள் முக்கால் சிவந்துவிட... "என்ன டி இது உனக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா . உன் முகம் இப்படி சிவக்குது "என்று அவள் முகத்தை மீண்டும் தொட்டு பார்க்க...

"பேசாம வாடி " என்று அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அனைவரும் சாப்பிட ஏற்கனவே அமர்ந்து இருக்க.. சித்ராவையும் , பத்மாவையும் அவர்களோடு அமர வைத்து காத்தலும் ப்ரியாவும் பரிமாறினார் . அவர்கள் பின்னல் வந்த மாறனையும் அமரவைத்து அவனுக்கு காந்தள் பரிமாற மற்றவர்களுக்கு ப்ரியா பரிமாறினாள் .

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்கு கிளம்ப மாறன் காந்தளை விட்டு பிரிய மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அவர்கள் சென்றதும் முகுந்தும் கிளம்ப பிரியா காந்தளுடன் இன்று இங்கேயே தாங்கிக்கொள்வதாக கூறி கிளம்பினாள் .
 
Top