sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
அவள் கையை தட்டிவிட்ட பத்மா "தம்பி இந்த குள்ளச்சி இங்க தான் இருக்கா . இவளை நான் என் கூட கூட்டிட்டு போறேன் . நீங்க அம்மு ரூமுக்கு போங்க "என்று அவனை அனுப்பி வைத்தவர்.

மாறன் காந்தள் அறைக்குள் சென்று கதைவடைத்ததும் திரும்பி ப்ரியாவை பார்த்தவர் "ஏன் டி ப்ரியா நீ எப்போ டி அம்மு ரூமில் இருந்து வெளியே வந்தே.. "என்றார் .

"ம்ம்... திருட்டு தனமா இருட்டுல நடந்து போய் அவருக்கு கதவை திறந்துவிட்டியே அப்போவே வந்துட்டேன். யாரோ நம்ம வீட்டுக்கு திருட வந்துட்டாங்களோன்னு நினைச்சு தான் ஒளிஞ்சு நின்னு உன்னை பார்த்தேன் . அப்பறோம் தான் தெரிஞ்சுது கதவை திறந்தது திருடன் இல்லே... உன் மருமகளுக்கு மாமி வேலை பார்க்க வந்திருக்கேன்னு... " என்று அவர் தடையை பிடித்து இங்கும் அங்கும் ஆட்டினாள்.

"அது என்ன டி மாமி..." என்று பத்மா புரியாமல் கேட்க...

"ம்ம்ம் உன் அம்முவுக்கு அவ புருஷனை யாருக்கும் தெரியமா வரவழைச்சு செட் பண்ணி விடுறியே ... இதை தான் மாமா வேலைன்னு சொல்லுவாங்க . நீ ஆம்பளையா இருந்திருந்தா உன்னை மாமான்னு கூப்பிடலாம். நீ வேற அவ அத்தையா போய்ட்டியே அதான் கொஞ்சம் டீசெண்டா உன்னை மாமின்னு கூப்பிட்டேன் "என்றாள்.

"ஏய் குள்ளச்சி என்னை பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது "என்றார்.

"ஆமா மாமி ... அப்படிய்யே தான் தெரியுது "என்று அவர் கன்னம் கிள்ளினாள்.

"ஷ்... வலிக்குது டி... "என்றவர் .

"அது.. அது வந்து அந்த தம்பி இங்கே இருந்து கிளம்பும்போது யாருக்கும் தெரியாம என்னை தனியா கூப்பிட்டு..."என்று பத்மா வெட்கப்பட...

"என்ன தனியா கூப்பிட்டாரா!!! கூப்பிட்டு... அப்பறோம் என்ன மாமி சொல்லு..."என்றாள் ப்ரியா பதற்றமாக .

"அடியே அறிவு கெட்டவளே... அவரு என்னை தனியா கூப்பிட்டு நம்ம அம்முவுக்கும் அவருக்கும் இன்னிக்கு தானே கல்யாணம் ஆச்சு... கல்யாணம் ஆனா மொத ராத்திரியே அவளை தனியா விட்டு பிரிஞ்சு இருக்க முடியலை. அவளும் என் கொடாஅ வரமாட்டேங்குறா.. அதனால நான் நைட் 12 மணிக்கு மேல வரேன் . நீங்க எனக்கு வாசல் கதவு மட்டும் திறந்து விடுங்கன்னு சொல்லிச்சு ..."

"அதனால நீயும் காந்தளுக்கு அத்தையா இல்லாம அவ புருசனுக்கு மாமி வேலை பக்க கிளம்பிட்டியா.." என்று அவர் கன்னம் இடித்தாள்.

"ஏய் மறுபடி மறுபடி என்னை மாம்மின்னு சொன்னேன்னு வை நீ அந்த முகுந்தனை தானே லவ் பண்ணுரே... அப்பறோம் உங்க ரெண்டு போரையும் பிரிச்சு விட்டுருவேன் பாத்துக்கோ..." என்று ப்ரியாவை பயமுறுத்த...

"அயோ அத்தை கிழவி... அப்படி எதுவம் செய்துறத தாயே... "என்று அவரை கையெடுத்தது கும்பிட்டாள்.

"ம்ம்ம்... அப்படி வா வழிக்கு. அம்மு புருஷன் என்னை அம்ம்மான்னு கூப்பிட்டு இப்படி உதவி கேட்டுச்சா... நானும் பாவம் சின்னஞ்சிறுசுங்களை அதுவும் கல்யாணம் ஆகி முதல் ராத்திரி கூட முடியாம ரெண்டு பேரையும் பிரிச்சு வெக்க கூடாதுன்னு அந்த தம்பியை வர சொன்னேன் " என்றார்.

"அட வேஸ்ட் பீஸு... உனக்கு விஷயம் தெரியாதா... காந்தள் இருக்காளே... அதான் உன் அண்ணன் பொண்ணு ... உன் ஆசை மருமக... அம்மு அவளுக்கு அவ புருஷன் கூட முதல் ராத்திரி கொஞ்ச நாள் முன்னடியே நடந்து முடிஞ்சிருச்சு... அதுக்கு அப்பறோம் நேத்தும் அவ... "என்று வெட்கப்பட்ட ப்ரியா.

"நேத்திக்கு அவ புருஷன் கூட நயிட்டெல்லாம் ஒண்ணா இருந்துட்டு தான் இன்னிக்கு காலையில் கல்யாணமே நடந்திருக்கு அது தெரியுமா உனக்கு "என்றாள்.

"என்ன டி சொல்லுற... இன்னிக்கு தானே ரெண்டு பெரும் கல்யாணம் செய்துகிட்டாங்க அப்பறோம் எப்படி " என்று பத்மா தீவிரமாக யோசிக்க...



ஹலோ வேஸ்ட் பீசு... நீ எல்லாம் அந்த காலத்து ஆளு... உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது . நீ வா எனக்கு தூக்கம் வருது "என்று அவரை இழுத்த்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

"ஏய்... யாரை பார்த்து அந்த காலத்து ஆளுன்னு சொல்றே டி... நீ இப்போ என்ன சொல்ல வர... அம்மு அந்த தம்பி கூட ஏற்கனவே one night stand இருந்திருக்கான்னு சொல்ல வரியா"என்றார்.

அவர் சொன்னது கேட்டு வாயை பிளந்த ப்ரியாவை பார்த்து சிரித்தவர்."வாயை ரொம்ப பிளக்காத கொசு உள்ளே போகுது "என்று அவள் வாயில் போட்டவர் "எனக்கு ஒன்னு புரியல ப்ரியா . அம்மு ரெண்டு நாள் முன்ன வர அந்த மதியை தானே லவ் பண்ணிட்டு இருந்தா... அப்பறோம் எப்படி இந்த தம்பி கூட one night stand , அப்பறோம் கல்யாணம் எல்லாம் ... எப்படி... இதெல்லாம் ரெண்டே நாளில் நடந்துச்சு.."என்றார்.

"ஏய் அத்தை கிழவி நீ பாக்குறதுக்கு வேஸ்ட் பீசா இருந்தாலும் ரொம்ப விபரம் தான் இருக்கே..."என்றவள்.

"நீ வா... நான் உன்கிட்டே எல்லாத்தையும் விலாவாரியா சொல்றேன் "என்று அவரை கழுத்தில் கைபோட்டு உள்ளே இழுத்தது சென்றாள்.

இங்கு காந்தள் அறைக்குள் நுழைந்த மாறன் என்ன செய்றான்னு அடுத்த எபியில் பார்க்கலாமா...

ithan thodarchi naalai parkalam
 
Top