- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
சித்ராவும் , பத்மாவும் அவர்கள் அறைக்கு சென்று விட ப்ரியா காந்தள் தள்ளிக்கொண்டு பெடரூமிற்குள் நுழைந்தாள். காந்தளும் ப்ரியாவும் பெட்டில் அமர
"ப்ரியா என்ன டி இது ஏன் இவ்ளோ அவசரமா என்னை இழுத்துட்டு வர..."
"நீ பேசாம என் கூட வாடி .. உன்கிட்டே நிறைய கேட்கணும் "
"என்ன டி கேட்கணும் "
"ம்ம்ம்... நீயும் உங்க பாஸும் எப்படி டி கல்யாணம் செய்துக்கிட்டிங்க... நேத்து வரை அந்த மதி உனக்கு செய்த துரோகத்தை நினைச்சு நீ புளப்பிகிட்டு இருந்த... அப்பறம் எப்படி இவரை கல்யாணம் செய்துகிட்டே ... அதுவும் ஒரே நாளில் "
"நேத்து வரைக்கும் மதி எனக்கு செய்த துரோகத்தை நினைச்சு நான் வருத்தப்பட்டத்த்து உண்மை தான் டி.. ஆனா அவன் பண்ணின வேலையை எல்லாம் ஒரு வீடியோவில் என் வீட்டுக்காரர் போட்டு காட்டினதை பார்த்த பிறகு தான் மதியோட சுயரூபம் எனக்கு தெரிஞ்சுது .அதுக்கு பிறகு தான் நான் அவரை கல்யாணம் செய்துக்கவே முடிவு செய்தேன் "
"வீட்டுக்காரரு ... ம்ம்... ம்... , சரி நேத்து தான் இவரை கல்யாணம் செய்துக்க முடிவு செய்தேன்னு சொல்ற... நைட் எனக்கு ஒரு கால் பண்ணி சொல்லி இருக்கலாமே . இப்படி நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற . அடலீஸ்ட் ஒரு மெசேஜ் அச்சும் பண்ணிருக்கலாமே "
"நேத்து... நைட்... நான் எந்த நிலைமையில் இருந்தேன்னு உனக்கு எப்படி டி சொல்லி புரியவைப்பேன் " என்று நேற்று இரவு முதல் முறையாக மாறனுடன் ஒரு இரவு முழுவதையும் அவனுடன் கழித்ததை நினைத்துப்பார்த்தாள் . அதை நினைத்த அடுத்த நொடி அவள் கன்னம் இரண்டும் சிவந்துவிட...
"என்ன டி மறுபடியும் உன் கன்னம் சிவக்குது " என்று காந்தள் கன்னத்தை தொட்டு பார்த்தாள்.
அவள் கையை தட்டிவிட்டுவள் தன் கன்னத்தை தானே தடவிக்கொண்டே அவள் கன்னத்தை நேற்று முத்தம் வைத்தே சிவக்க வைத்ததை நினைத்து தானாகவே வெட்கப்பட்டு சிரித்தாள்.
என்ன டி நீயா கன்னத்தை தடவுற... நீயா எதையோ யோசிச்சிட்டு சிரிக்குற... அப்போ ... அப்போ... " என்று யோசித்த பிரியாவிற்கு விஷயம் பிடிபட...
"அடிப்பாவி கல்யாணத்துக்கு முந்தின நாள் ரெண்டு பேரும் பஸ்ட் நைட் கொண்டாடிட்டு தான் இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா ... "என்று அவள் கன்னத்தை கிள்ளினாள்.
காந்தள் வெட்கப்பட்டவள் "சி... போடி... " என்று மெத்தையில் படுத்திட்டு அருகில் இருந்த தலையணையில் முகம் புதைத்தாள்.
"நீ இன்னிக்கு மட்டும் இங்கே தங்கிட்டு நாளைக்கு உன் புருஷன் வீட்டுக்கு போறேன்னு சொன்ன அப்போ நான் நினைச்சேன். என்ன டா இது இன்னிக்கு காலையில தான் கல்யாணம் ஆகியிருக்கு இவை என்ன என்னடான்னா புருஷன் கூட போய் பஸ்ட் நைட்டை கொண்டாடாம இங்கே இருக்காளேன்னு யோசிச்சேன். இப்போதான் தெரியுது நீ நேத்து ராத்திரி முழுக்க உன் புருஷன் கொடாஅ முதல் ராத்திரி கொண்டாடிட்டு தான் இங்கே வந்திருக்கேன்னு " என்று படுத்திருந்த காந்தள் மேல் போய் விழுந்து அவளை கட்டிபிடித்தபடி சத்தமாக கேட்டாள் ,
ப்ரியாவை கீழே தள்ளிவிட்டு அவள் வாயை பொத்திய காந்தள் "இப்போ எதுக்கு டி இவளோ சத்தம் போட்டு பேசுற... அம்மா , அத்தை காதுல விழப்போகுது "என்றாள் .
"விழட்டுமே அவங்க அருமை பொண்ணு பண்ணின காரியம் அவங்களுக்கும் தெரியட்டுமே "என்று மீண்டும் வாசலை பார்த்து சத்தமாக ப்ரியா கத்தி பேச...
அவளை இழுத்து மெத்தையில் தள்ளியவள் தலையணையை வைத்து ப்ரியாவின் முகத்தில் வைத்து லேசாக அழுத்தி "வாயை மீது ப்ரியா " என்று அவளை பேசவிடாமல் செய்தாள்.
தன் முகத்தில் இருந்த தலையணையை விலக்கிவிட்டு காந்தளை பார்த்த பிரியா "இன்னிக்கு காலையில் நான் உன்கூட பேசும்போது நீ ஒரு மாதிரி பேசுனியே... அப்போ நீயும் உன் புருசனும் என்கூட போன் பேசிக்கிட்டே காலையிலயும்... ம்ம்...ம்ம்...ம்ம்ம்ம்... ஆஹ்... அப்படியா ..." என்று கண்ணடிக்க ..
தன் கையில் இருந்த தலையணையை கொண்டு ப்ரியாவை அடித்து அவளை மேலும் பேசவிடாமல் செய்தாள் காந்தள் . ப்ரியாவும் பதிலுக்கு அருகில் இருக்கும் தலையணையை எடுத்தது காந்தளை அடிக்க துவங்கினாள் . தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து விளையாடி சிறிது பேசி நேரம் பேசி சிரித்தவர்கள் அப்படிய்யே அசதியில் உறங்கியும் போய் இருந்தனர் .
நள்ளிரவு போல தூக்கம் களைந்து எழுந்த ப்ரியாவிற்கு தாகம் எடுக்க இரவு தூங்கும்போது தண்ணீர் எடுத்து வைக்க மறந்து இருந்தாள் .
"ச்சே... இவ ரொமான்ஸ் கதையை கேக்குற ஆர்வத்துல தண்ணியை எடுத்து வைக்க மறந்துட்டேனே " என்று சலித்துக்கொண்டே எழுந்து பெட் ரூம் கதவை திறந்து கொண்டு தண்ணீர் எடுக்க கிச்சனுக்கு சென்றாள் .
ஹாலை தாண்டி தாண்டி கிச்சனுக்கு சென்றவள் யாரோ இருட்டில் சத்தம் இல்லாமல் வாசல் பக்கம் செல்வதை பார்த்தவள் அதிர்ந்து அப்படியே தண்ணீர் பாட்டலுடன் அப்படியே நின்றவள் " என்ன இது யாரோ வீட்டுக்குள்ள வந்து திருடிட்டு சத்தம் இல்லாம வெளியே போவாங்க போல இருக்கு... இப்போ என்ன செய்றது சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பலாமா "என்று யோசித்துக்கொண்டே அங்கே இருந்த ஷோ கேசின் பின்னால் ஒளிந்துகொண்டு வாசல் கதவை திறக்கும் அந்த நபரை பார்த்தாள்.
இருட்டில் தெரிந்த அந்த உருவம் வாசல் லைட்டை போட்டுவிட்டு கதவை திறக்க .. அங்கே வாசலுக்கு வெளியே மாறன் நின்று இருக்க... அவனுக்கு கதவை திறந்து விட்டு உள்ளே வர செய்தது காந்தள் அத்தை பத்மா . அதை பார்த்தவள் "என்ன இது இந்த அத்தை இந்த வேலையெல்லாம் செய்யுதா !! ஆமா இவரு எதுக்கு இந்த அர்த்த ராத்திரியில் இங்கே வந்து இருக்காரு . எதுவம் முக்கியமான விஷயமா இருக்குமோ..."என்று யோசனையில் அவர்களை பார்த்தபடி நின்று இருந்தாள்.
கதவை திறந்ததும் மாறனை பார்த்து புன்னகைத்த பத்மா வாங்க தம்பி நீங்க சொன்ன மாதிரியே சரியாய் வந்து கதவை திறந்தேனா " என்று சிரித்தார்.
மாறனும் சிரித்துக்கொண்டே "ஆமா அம்மா , நான் எப்படி கதவை தட்டுறதுனு யோசிச்சுட்டு இருந்தேன் நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க.. இல்லேன்னா கொஞ்ச நேரம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணி இருப்பேன் " என்றான்.
"சரிங்க தம்பி உள்ளே வாங்க "என்று மாறனை உள்ளே வர சொல்லி வழிவிட்டவர் "அம்மு ரூம் தெரியும் தானே நீங்க அவ ரூமுக்கு போங்க நான் கதவை சாத்திக்குறேன்"என்று அவனை காந்தள் அறைக்கு அனுப்பி வைத்தவர் வாசல் கதவை தாளிட்டு பூட்டிய பத்மாவிற்கு அப்போதுதான் காந்தளுடன் ப்ரியா உறங்குவது நினைவிற்கு வந்தது .
"ஐயோ!! ப்ரியா வேற அம்மு ரூமில் இருக்காளே... இப்போ இவரு போனா நல்லா இருக்காதே "என்று நினைத்தவர் வேகமாக ஓடிச்சென்று மாறனின் முன்பு நின்றவர் "தம்பி தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க... " என்று அவனை காந்தள் அறைக்கு செல்ல விடாமல் தடுத்தார்.
"என்னம்மா... என்ன ஆச்சு " என்று கேட்டான்.
"அது ஒன்னும் இல்லை தம்பி அம்மு மட்டும் இப்போ ரூமில் இல்ல... கூட அந்த குள்ளச்சி ப்ரியாவும் தூங்குறா... நீங்க இருட்டுல போய் அம்முன்னு நினைச்சு அந்த குள்ளச்சியை... "என்று தன் சேலை தலைப்பை பிடித்து திருகிக்கொண்டே வெட்கபட்டுக்கொண்டு விபரத்தை கூற .
"என்னது குள்ளச்சியா ! நானா? ஏய் அத்தை என்னை பார்த்தா உனக்கு குள்ளச்சி மாதிரியா தெரியுது. ஏதோ உன்னைவிட நான் ஒரு இன்ச் ஹைட் கம்மியா இருக்கேன் அதுக்கு நான் என்ன குள்ளச்சியா உனக்கு... இரு அத்தை கிழவி உனக்கு வெச்சிருக்கேன் "என்று பத்மாவை முறைத்தபடி மறைந்து நின்று அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள் .
"அம்மா அவ இருட்டுல இல்ல... இந்த உலகத்துல எந்த இடத்துல இருந்தாலும் நான் அவளை சரியா கண்டு பிடிச்சிடுவேன் மா..." என்றான்.
"அச்சோ.. அபப்டி இல்லை தம்பி நீங்க ஒரு நிமிஷம் இருங்க நான் போயி அந்த குள்ளச்சியை எழுப்பி வெளியே சத்தமில்லாம கூட்டிட்டு வரேன் அதுக்கு பிறகு நீங்க போங்க ... "என்று மாறனிடம் சொல்லிவிட்டு காந்தள் அறைக்கு செல்ல போக...
"ஓய் அத்தை... " என்று பத்மாவை அழைத்துக்கொண்டு ப்ரியா அவர்கள் அருகில் வந்தாள்.
அவள் குறளைக்கேட்டு பத்மா பதட்டம் அடைய ஆனால் மாறனோ அவளை சாதாரணமாக பார்த்தான்.
"என்ன சார் இந்த நேரத்துல இங்க என்ன செயிரிங்க ... "என்று மாறனை பார்த்து கேட்டவள் திரும்பி பத்மாவை பார்த்து
"ஆமா அத்தை கிழவி இப்போ யாரையோ நீ குள்ளச்சின்னு சொல்லிட்டு இருந்தியே யாரு அது ?" என்றாள் அவர் தோளில் கை போட்டு.