- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
மறுநாள் காலையில் தூங்கி எழுந்தவள் "அம்மா காபி..."என்று கண்களை தேய்த்துக்கொண்டே தன் அறையை விட்டு வெளியே வந்த காந்தள் அங்கே மாறன் சோபாவில் டிப் டாப்பாக டிரஸ் செய்தபடி காபி குடித்துக்கொண்டு இருந்தான்.
அவனை இங்கே பார்த்தவளுக்கு அப்போதுதான் மாறன் நினைவே வந்தது . இரவு முழுதும் அவளை தூங்கவிடாமல் இம்சை செய்தவன் இப்பொது இப்படி தனக்கு முன்னே கிளம்பி தயாராகி வந்து சோபாவில் அமர்ந்து இருந்தான் .
கையில் காபியுடன் வந்த சித்ரா "என்ன அம்மு தூங்கி ஏல இவ்வளவு நேரமா. மாப்பிள்ளை இங்கே வந்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா . அவர் உன்னை ஆபிசுக்கு அவரோட அழைச்சிட்டு போறதுக்காக நேரமே வந்துட்டாரு . உன்னை எழுப்புரன்னு சொன்னதுக்கு வேணாம்னு என்னை தடுத்துட்டாரு " என்றவாறு அவளிடம் வந்து காபியை கொடுத்தவர் .
"சீக்கிரம் காபி குடிச்சிட்டு போய் ரெடி ஆகிட்டு வா... "என்றுவர் சமையல் கட்டிற்குள் சென்றுவிட...
அவர் சென்றதும் மாறன் அருகில் வந்தவள் "சார் அம்மா என்ன சொல்லிட்டு போறாங்க . நீங்க என்னவோ காலையில் தான் இங்கே வந்த மாதிரி சொல்லிட்டு போறாங்க .. நீங்க நேத்து ... நேத்து என் ரூமில்.. என் கூட தானே இருந்திங்க."என்றாள் .
"ஆமா.. அது உனக்கும் எனக்கும் தானே தெரியும் . உன் அம்மாவுக்கு தெரியாதே "என்றபடி காபி கொடுத்துக்கொண்டு இருந்தான் .
"நேத்து நைட் நீங்க இங்கே வந்தது . என் பிரெண்ட் ரூமுக்குள்ள போய் கதவை சாத்தினது வரை எங்க ரெண்டு பேருக்கும் தெரியுமே " என்று அங்கே ப்ரியாவும், பத்மாவும் வந்தனர்.
"ஏய் ப்ரியா தம்பி நேத்து நைட் எப்படி அம்மு ரூமுக்கு போறாருனு நினைக்குற... அவர் வரும்போது நான் தானே வீடு வாசல் கதவை நான்தான் திறந்து விட்டேன் "என்றவர் வந்து காந்தள் கன்னம் இடித்தவர்.
"காலையில் தம்பி நேரமே எழுந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாரு "என்றார்.
"அத்தை இதெல்லாம் உன் வேலை தானா ..."என்று அவரை முறைத்தாள்.
"நான் ஏதும் பண்ணல அம்மு தம்பி தான் நேத்து நைட் எனக்கு போன் பண்ணி . உன்னை விட்டுட்டு அங்கே தனியா படுத்தா தூக்கமே வரமாட்டேங்குதுனு சொல்லிச்சு . நான் தான் அவரை கிளம்பி இங்கே வர சொன்னேன் "என்றார் .
"என்னது அவரு உனக்கு போன் பண்ணினாரா ? அவருக்கு எப்படி உன்னோட நம்பர் தெரியும் "என்றாள் ஆச்சர்யமாக .
"ஏன் நான் தானே நேத்து தம்பி கிளம்பும்போது அவர்கிட்டே போய் ... உங்க போன் நம்பர் வேணும்னு கேட்டேன். அவரும் என் போனை வாங்கி அவர் போன் நம்பரை பதிவு பண்ணி கொடுத்துட்டு அவருக்கு என் போனில் இருந்து மிஸ்ட் கால் பண்ணி என்னோட நம்பரையும் பதிவு பண்ணிக்கிட்டாரு"என்றார்.
"அத்தை நீ எதுக்கு போய் அவர்கிட்டே போன் நம்பர் கேட்டே .. அவரு உன்னைய என்னனு நினைப்பார்"என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள் காந்தள் .
"அதெல்லாம் அவர் ஏதும் நினைக்கல "என்றவர் "ஏன் தம்பி நான் உங்க போன் நம்பரை கேட்டதுக்கு நீங்க என்னை ஏதும் தப்பா நினைச்சிட்டீங்களா ?" என்றார்.
காபி குடித்துக்கொண்டு இருந்தவன் பத்மாவை பார்த்து "அம்மா ... நான் உங்க மகன் மாதிரி , உங்க அம்முவை கல்யாணம் செய்திருக்கேன் . உங்களுக்கு என்கிட்டே எல்லா உரிமையும் இருக்கு. என் அம்மா எனக்கு எப்படியோ நீங்களும் எனக்கு அப்படிதான் "என்றவன்.
"நீங்க என் போன் நம்பரை கேட்டதுல எந்த தப்பும் இல்லை . சொல்லப்போனா உங்க அம்மு புருஷன் போன் நம்பர் என்னனு கேட்டு வாங்கிக்குற உரிமை உங்களுக்கு இருக்கு . நான் உங்களை தப்பாவே நினைக்கல "என்றான் .
"ம்ம்ம்... பாத்தியா ..."என்பது போல காந்தளை பார்க்க...
இவன் எப்படி இந்த அளவுக்கு மாறினான் என்று காந்தளுக்கு புரியவே இல்லை அவள் பார்த்த இந்த ஓராண்டு காலத்தில் மாறன் யாரிடமும் சகஜமாக பேசி பார்த்ததே இல்லை . ஆனால் தன்னை திருமணம் செய்துகொண்டதும் தன் குடும்பத்தாரிரிடமும் அவன் இவ்ளளவு சகஜமாக பேசியது தான் இவளுக்கு ஆச்சர்யமே .
கிச்சனில் இருந்து வெளிவந்த சித்ரா "அம்மு நீ இன்னும் ரெடி ஆகலையா மாப்பிள்ளை எவ்வளவு நேரமா வெயிட் பண்ணுவாரு . சீக்கிரம் பொய் ரெடி ஆகிட்டு வா... " அவள் கையில் இருந்த காபி கப்பை பிடுங்கிக்கொண்டு அவளை ரூமுக்கு அனுப்பியவர் .
"ஏய் ப்ரியா உனக்கு ஆபீஸ் போகணும் இல்ல ரெடி ஆகலையா நீ " என்றார் .
"தோ... போறேன் மா..."என்றவள் ஒரே ஓட்டமாக சித்ராவின் அறைக்குள் ஓடிவிட...
"பத்மா நீ வா... வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு. சின்னஜிருசுங்க பேசிகிட்டு இருந்தா அவங்களுக்கு சரி சமமா நீயும் வெட்டிக்கதை பேசிகிட்டு இருக்கியா. நீ இந்த ஊருக்கு வந்ததுல இருந்து ஒரு வேலையும் செய்யமாட்டேங்குற... சும்மா போனை கையில் வெச்சிட்டு அதை தேய்ச்சுடே இருக்க... "என்று திட்டிக்கொண்டே சமையல் அறை சென்றார் ...
"ஆமா என்ன பொல்லாத வேலை . எல்லா வேலையும் நீயே செஞ்சு முடிச்சுடரே... அப்பறோம் எனக்கு என்ன வேலை இருக்க போகுது "என்றவர் கிச்சனுக்கு சித்ராவின் பின்னால் புலம்பிக்கொண்டே சென்றார்.
இவர்கள் இருவரும் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டே காபி குடித்த மாறன் இவர்களின் பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டு இருந்தான். பத்மாவும், சித்ராவும் கிச்சனுக்குள் சென்ற மறு நிமிடம் காபிகப்பை முன்னாள் இருந்த டேபிளில் வைத்துவிட்டு எழுந்தவன் நேராக காந்தள் பெட் ரூமிற்கு சென்றான்
சித்ரா விரட்டிய வீட்டில் அவசரமாக குளித்துவிட்டு வெளியே வெறும் டவலை கட்டிக்கொண்டு வந்த காந்தள் பாத்ரூம் கதவை திறந்தவள் எதிரே மாறன் சுவற்றில் சாய்ந்து ஒரு கையை பேண்டில் விட்டபடி நின்று இருந்தான் .
அவனை பார்த்ததும் அதிர்ச்சியானவள் வந்த வேகத்தில் திரும்பி பாத் ரூம் கதவை சாற்ற போக...
அவள் கட்டி இருந்த டவலை பிடித்து வெளியே இழுத்தவன் "திரும்பவும் போய் குளிக்க போறியா . போ.. போய் ரெடியாகு ஆபீஸ்க்கு டைம் ஆச்சுல்ல "என்றான்.
எங்க அவன் இழுத்த இழுப்பில் டவல் கழண்டு விழுமோ என்று பயந்தபடி டவலை இருக்க பிடித்தவள் அவனை பார்த்து "நீங்க இப்படி நின்னுட்டு இருந்தா நான் எப்படி ரெடியாகுறது. நீங்க எதுக்காக உள்ளே வந்திங்க... போங்க... போய் ஹாலில் வெயிட் பண்ணுங்க சார் . நான் ரெடி ஆகிட்டுக்கு வரேன் " என்றாள்.
"நீ ரெடி ஆகுறதுக்கும் நான் வெளியே போறதுக்கு என்ன சம்மந்தம் இருக்கு " என்றவன் அவளை தாண்டி வந்து கட்டிலில் அமர்ந்தவன் .
"நான் எங்கயும் போக மாட்டேன் . நீ ரெடி ஆகு" என்றான்.
"ம்ப்ச்... சார் நான் டிரஸ் சேஞ் பண்ணனும் . நீங்க இப்படி உக்காந்துட்டு என்னையே பார்த்துட்டு இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்த முடியும் . ப்ளீஸ் சார் வெளியே போங்க.. "என்றாள்.
"நான் இருந்தா உனக்கு என்ன நீ டிரஸ் மாத்த வேண்டியதுதானே " என்றான்.
"சார் நீங்க தெரிஞ்சுதான் பேசுறிங்களா ... உங்களை உக்கார வெச்சிட்டு உங்க முன்னாடி எனக்கு டிரஸ் மாத்த கூச்சமா இருக்கு " என்று வெட்கப்பட்டாள் .
"என்கிட்டே என்ன கூச்சம் " என்று எழுந்து அவளிடம் வந்தவன் "ஏய் முயல் குட்டி நான் உன்னோட புருஷன் டி... நீ டிரஸ் மாத்துறதை நான் பார்க்க கூடாதா "என்று அவள் வெட்கம் கலந்த சிவந்த முகத்தை நிமிர்த்தி கேட்டான்.
"சார்..."என்று அவள் தயங்க...
"நான் எங்கயும் போக மாட்டேன் இங்கே தான் இருப்பேன். என்னவோ நான் இப்போதான் உன்னை முழுசா பாக்குற மாதிரி இல்ல பேசுற நீ... நேத்து நைட் கூட உழைச்சு களைச்சு போயிருந்த என்னை நொண்டி நொண்டியே உசுப்பேத்திவிட்டு என் மேல ஏறி... "என்று அவன் கூறவற ...
"ஐயோ அதெல்லாம் எதுக்கு இப்போ பேசுறீங்க..."என்று அவசரமாக அவன் வாயை பொத்தியவள் அவன் மார்பில் கைவைத்து தள்ளிக்கொண்டே வந்தவள் கூச்சத்திலும் வெட்கத்திலும் அவனை பார்க்க முடியாமல் நெளிந்தவள் அவனை அவள் அறைக்கதவை திறந்து வெளியே தள்ளியவள் மீண்டும் கதவை அடைத்துக்கொண்டாள்.
அவள் தள்ளியதில் ஒன்றும் மாறன் வெளியே வரவில்லை. அவளால் மாறனை தள்ளிக்கொண்டு செல்ல முடியாது . அவன் பேசியது கேட்டு அவள் நெளிந்ததும் , வெட்கப்ட்டதும் பார்த்தவன் அவளை மேலும் பேசி நெளியவைக்க விரும்பாதவன் அவள் வெளியே தள்ளிக்கொண்டு வந்ததும் அவள் போக்கிற்கு வந்தவன் சிரித்துக்கொண்டே சென்று சோபாவில் மீண்டும் அமர்ந்தான் .
சிறிது நேரத்தில் காந்தள் ரெடியாகி கதவை திறந்து கொண்டு வெளியே வர... அவளை திரும்பி பார்த்தவன் கருப்பு நிற சட்டையும் , சிவப்பு நிற பென்சில் ஸ்கர்ட்டும் அணிந்து வந்தாள் . அவர்கள் இருவரையும் அழைத்து ப்ரியாவையும் அவர்களுடன் அமரவைத்து மூவருக்கும் உணவு பரிமாறி சாப்பிட வைத்து காந்தளை மாறனுடன் ஆஃபீஸிற்கு அனுப்பி வைக்கும் முன் இருவரிடமும் "ஒரு நல்ல நாள் பார்த்து நானும் , பத்மாவும் முறையா உனக்கு செய்யவேண்டிய சீரை உண்புகுந்த வீட்டுக்கு கொண்டு வரோம் " சித்ரா கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ப்ரியாவையும் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.
இங்கே காரில் மாறன் பின் இருக்கையில் அமர்ந்து இருக்க அவன் முயல் குட்டி அன்றைய மாறனின் வேலைகள் என்ன என்ன என்று பட்டியல் போட்டவள் அவனிடம் இன்றைய அவன் வேலைகளை சொல்லிக்கொண்டு வந்தாள்.
அவள் சொல்வதை காதில் வாங்காமல் வெறுமனே ம்ம்ம்... என்று மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தவனை காந்தள் திரும்பி பார்க்க... அவன் அவளையே விரித்துகொண்டு இருந்தான்.
"என்ன சார் அப்படி பாக்குறீங்க... "என்றாள் தன் உடை சரியாக இருக்கிறியாதா என்று சரிபார்த்துக்கொண்டே .
"இன்னிக்கு ஏன் நீ இந்த டிரஸ் போட்டுட்டு வந்தே "என்றான்.
"ஏன் இந்த ட்ரேஸுக்கு என்ன நல்லாதானே இருக்கு "என்றாள்.
"நல்லாத்தான் இருக்கு.. ஆனா எனக்கு உன்னை இந்த ட்ரெஸ்ஸில் பார்க்குற அப்போ ,,, "என்று அவளிடம் பேசவர .. அதற்குள் காந்தளுக்கு போன் வந்தது .
"ஒரு நிமிஷம் சார் "என்று அவன் பேச்சிற்கு இடையில் சொன்னவள் போனை அட்டென்ட் செய்த்த்து காதில் வைத்தாள். அவள் போன் பேச ஆரம்பித்ததும் மாறன் சும்மா இருக்காமல் அவளை நோண்டிக்கொண்டு வர... காரில் இருந்த ட்ரைவர் அதை கண்ணாடிவழியாக பார்த்தார் .
மாறனும் அந்த கண்ணாடியை பார்க்க... உடனே ட்ரைவர் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு அவர் சீட்டிற்கு, பின்னால் இருந்த சீட்டிற்கு இடையில் இருந்த தடுப்பை இயக்கி அவர்களை பார்க்காதபடி செய்தார் .
அவருக்கு தான் மாறன் காந்தள் திருமணம் செய்துகொண்டது தெரியுமே.. அதனால் மாறன் அவர் இருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .
மாறனின் சேட்டைகளை சமாளித்துக்கொண்டு போன் பேசிக்கொண்டு வந்தாள் .
"மிஸ் காந்தள் நான் நீலகண்டன் பேசுறேன் . சார் பக்கத்துல இருக்காரா... அவர்கிட்டே நான் அவசரமா பேசணும் "என்றார் .
அவர் குரலில் ஒரு வித பதட்டம் இருக்க... அதை புரிந்து கொண்டவள் அவசரமாக மாறனிடம் போனை நீட்டினாள். அதை கண்டுகொள்ளாதவன் குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தம் கொண்டு இருக்க...
அவன் முகத்தை ஒரு கையால் பிடித்து நிமிர்த்தியவள் "நீலகண்டன் சார் லைனில் இருக்கார் ஏதோ அவசரம்னு நினைக்குறேன் "என்று அவனிடம் மொபைலை நீட்டினாள்.
அவள் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டவன் மொபைலை வாங்கி காதில் வைத்தவன் "சொல்லுங்க நீலகண்டன் "என்றான் சாதாரணமாக .
அடுத்தது அவர் போனில் சொன்ன செய்தி கேட்ட மாறனின் முகம் சீரியஸ் ஆக மரியாதை காந்தள் கவனிக்கவில்லை அடுத்தடுத்து அவன் பேசியதை கேட்டு அவன் குரலில் ஏற்பட்ட இறுக்கத்தை உணர்ந்தவள் தன் தோளில் இருந்து எழுந்தவன் தீவிரமாக பேசிக்கொண்டு இருக்க... அதை காந்தள் பார்த்து என்ன ஆச்சு என்று சைகையில் கேட்டாள் .
அவள் கேட்டதும் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டியவன் தீவிரமாக போன் பேசிக்கொண்டு வர ஒன்றும் புரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள். அதற்குள்ளாக சில்வர் லைன் ஸ்டுடியோவின் முன்பு வந்து கார் நிற்கவும் மாறன் வேகமாக இறங்கி ஆபிஸிற்குள் நுழைய என்ன ஆனது என்று தெரியாமல் காந்தள் அவன் பின்னால் ஊட்டமும் நடையுமாக சென்றாள்.