- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
மீட்டிங் ஹாலில் சில்வர் லைன் ஸ்டுடியோவின் அணைத்து ஷேர் ஹோல்டர்களும் கூடி இருக்க... மாறன் இறுகிய முகத்துடன் தன் இருக்கையில் அமர்ந்து இருக்க..
தனது கவனத்திற்கு வராமலேயே இந்த மீட்டிங்கை இங்கே ஏற்பாடு செய்திருப்பது மதிமாறன் என்று அவனுக்கு சற்று முன்பு நீலகண்டன் மூலம் தெரிந்திருக்க.. அதில் கோபத்தோடு அமர்ந்து இருந்தான் மாறன் .
மாறனின் பின்னால் அவனது பிஏவாக நின்று இருந்தாள் காந்தள் . அவர்கள் திருமணம் செய்துகொண்டது ஆஃபிஸில் யாருக்கும் தெரியாது . சொல்லப்போனால் மாறனின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு கொடாஅ இந்த விஷயம் தெரியாது. காந்தள் வேண்டுகோள் வைத்ததிற்காக இப்போதைக்கு இவர்கள் விசயத்தை வெளியில் சொல்லாமல் தள்ளி வைத்து இருக்கிறார்கள் .
மாறனுக்கு எதிரில் திமிரான அமர்ந்து இருந்த மதி மாறனின் பின்னால் நின்று இருந்த காந்தளை பார்க்கும் பார்வையே அவளை கண்களாலேயே மேய்வதை போல அவள் உணர்ந்தாள் . அவன் பார்வையை கண்டு வெறுப்புடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.
நீலகண்டனுடன் பேசிக் கொண்டு இருந்த மாறன் இதை கவனிக்கவில்லை . எதற்காக இந்த மீட்டிங்கை மதி ஏற்பாடு செய்திருக்கிறான் என்று அனைவரும் ஆர்வமாக இருந்தனர். சில்வர் லைன் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கு மதி இந்த் கம்பெனியின் மற்றொரு வாரிசு என்று தெரியாது . ஆனால் நீலகண்டனுக்கு மட்டும் தெரியும். ஏன் என்றால் அவர் தமிழ்மாறனின் அப்பா காலத்தில் இருந்து இங்கு வேலை பார்த்து வருகிறார்.
அந்த அறை முழுவதும் இருந்த ஆட்கள் தங்களுக்கு பேசிக்கொண்டு இருக்க.. அப்போது மீட்டிங் ஹால் கதவை இரண்டு பாடிகார்டுகள் வந்து திறந்தனர்.
அவர்கள் மாறனுடைய கார்ட்ஸ்கள் அல்ல என்று அவர்கள் அணிந்து இருந்த உடையை வைத்தே தெரிந்து கொண்டான் மாறன் .
அவர்கள் தமிழ் மாறனின் அம்மா , இளன் , மதி இருவரின் பாட்டி வசுந்தரா மாறனுடைய பாடி கார்டுகள் என்று தெரிந்து கொண்டவன் . அவர் தான் இந்த் மீட்டிங்கை இங்கே செய்து இருக்கிறியார் என்று தெரிந்ததுமே அவரை இந்த வேலையை செய்ய சொல்லி தூண்டியது மதியாக தான் இருக்கும் என்று புரிந்து கொண்டான் மாறன்.
உடனே தன் எதிரில் இருந்த மதியை பார்த்தான். அவனோ தெனாவெட்டாக மாறனை நக்கல் பார்வை பார்த்து சிரித்தவன் தன் கோர்ட் பட்டனை அணிந்தபடி எழுத்து நின்றான்.
மாறனும் அவனை முறைத்துக்கொண்டு எழுந்தவன் அவன் பாட்டியை பார்த்தான். அவனோடு சேர்த்து மற்றவர்களும் வசுந்தராவை பார்த்து மரியாதையை செய்யும் விதமாக எழுந்து நின்று வரவேற்றனர்.
அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டபடி அவர் உயர் ரக வெள்ளை காட்டன் புடவை அணிந்து கையில் ஸ்டிக் ஒன்றை பிடித்தபடி மிடுக்கான தோற்றத்தோடு கம்பீர நடை போட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்,
மாறன் எழுந்து நின்று அவரை பார்த்தான். வசுந்தராவும் மாறனை பார்த்தார் ஆனால் அவனை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாது மீட்டிங் ஹாலில் போடப்பட்டு இருந்த டேபிளில் நடுநாயகமாக அவருக்காக போடப்பட்டு இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார் .
அவர் அமர்ந்ததும் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர ... அவர் அருகில் போட்டு இருந்த மற்றொரு சேரில் தமிழ்மாறன் அமர்ந்தார் . பின் அங்கிருந்தவரர்களை பார்த்து
"திடீர்னு இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்து உங்களை எல்லாம் இங்கே வர சொன்னதுக்கான காரணம் என்னன்னு நீங்க எல்லாம் குழப்பமா இருப்பிங்கனு எனக்கு தெரியும் . உண்மையை சொல்லனும்னா எனக்கும் இது முதல்ல குழப்பமா இருந்துச்சு. என்னோட ரெண்டாவது பேரன் திடீர்னு இந்த் மீட்டிங்கை அரேஞ் பண்ணிட்டு அதுக்கு பிறகு என்கிட்டே கூப்டு விபரத்தை சொல்லி என்னை இங்கே வரவழைச்சான் . அதனால இந்த மீட்டிங் எதற்காக ஏற்பாடு செய்திருக்கான்னு அவன் சொல்றதுக்கு முன்னாடி நான் உங்க எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறேன் " என்று அங்கிருந்தவர்களை பார்த்தார்.
அனைவரும் வசுந்த்ரா சொல்லப்போகும் அந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று அவளோடு அவரை பார்க்க.. தனக்கு எதிரே இருபுறமும் அமர்ந்து இருந்த தன் பேரன்கள் இருவரையும் பார்த்தவர் . தன் பியேவிடம் கையசைக்க... அவர் தன் வாக்கி டாகியில் வெளியில் இருக்கும் கார்டிடம் ஏதோ கூற ... அடுத்த நிமிடம் மீட்டிங் ஹால் கதவை கார்ட்ஸ் திறந்து விட... வெளியே இருந்து மதி மாறன் ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றிய கயல்விழி சற்று தயக்கத்தோடு அங்கு வந்தாள்.
அவளை பார்த்ததும் உறைந்த மதி கேள்வியால் தன் பாட்டி வசுந்த்ராவை பார்க்க..
அவரோ அவன் பார்வையை சட்டை செய்யாது "இது என்னோட பேத்தி கயல்விழி என் இரண்டாவது பேரனுடைய மனைவி ஆக போறவ "என்று கயல்விழியை அனைவர்க்கும் அறிமுகம் செய்துவைக்க...
நிறைமாத கர்ப்பிணியாக வயிற்றை தள்ளிக்கொண்டு நின்று இருக்கும் கயல்விழியை பார்த்த அனைவர்க்கும் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை . கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட..
அப்போது வசுந்தரா குடும்பத்து வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிலர் வசுந்த்ராவை கேலியாக பார்க்க.
அப்போது "என்ன மேடம் நீங்க என்னவோ உங்க ரெண்டாவது பேரனுக்கு கல்யாணம் நடக்க போகுதுனு சொல்றிங்க... ஆனா நீங்க அறிமுகம் செய்து வைத்த பொண்ணை பார்த்தா... அவங்களுக்கு வளைகாப்பு நடத்துற மாதிரி இல்ல இருக்கு "என்று கிண்டல் செய்தார் அவர் நெருங்கிய உறவான சிவம் .
"என்ன செய்றது சிவம் இந்த காலத்து பசங்க எங்களுக்கு அதிகம் வேலை வைக்கிறது இல்லை அவங்களே அவங்க வாழ்க்கையை முடிவு பண்ணி கல்யாணமும் செய்துக்கறாங்க. ஆனா மதி ஒரு படி மேலே போய் என்னை கொள்ளுப்பாட்டி ஆக்கின பிறகு கல்யாணம் செய்துகிறான். உங்க பொண்ணு மாதிரி லிவிங் ரிலேஷன்ல ஒரு பையனோட இருந்துட்டு பிறகு அவனை வேணாம்னு சொல்லிட்டு . அந்த பயன்கொடுங் இருந்த அப்போ பிறந்த குழந்தையையும் அவனையும் அனாதையா துரத்திவிட்டு மாதிரி என் பேரன் ஏதும் செய்யலையே . அவன் இந்த பொண்ணை கல்யாணம் செய்துக்க போறான் தானே "என்றார் .
வசுந்தரா தன் மகளை பற்றி இத்தனை பேர் முன்னிலையில் பேசியது கேட்டு கடுப்பான சிவம் "வசுந்தரா அம்மா நீங்க என் மகளோட பெர்சனல் விஷயத்தை தேவை இல்லாம இங்கே பேசுறீங்க.. "என்றார் கோபமாக .
"என் பேத்தியை பத்தி நீங்க பேசும்போது பெர்சனலா தெரியலையா சிவம் "என்று அவரை அழுத்தமாக வசுந்தரா பார்க்க..
மற்றவர்கள் சிவத்தை பார்த்து தங்களுக்கு ஏதோ கேலி செய்து பேசியது கேட்டு அங்கு நிற்க முடியாமல் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறினார்
அவர் சென்றதை சட்டை செய்து மற்றவர்களை பார்த்தவர். "என்னோட இரண்டாவது பேரனுக்கு கூடிய சீக்கிரமே கல்யாண ஏற்பாடு செய்துட்டு உங்களுக்கு முறையா இன்விடேஷன் அனுப்பறேன் "என்றவர் . மதிமாறனை பார்த்து "என்ன மதி நான் சொன்னது சரிதானே "என்றார்.
"சரி தான் பாட்டி "என்று அவரிடம் பதில் கூறிவிட்டு அவர் அருகில் நின்று இருந்த கயல்விழியை பார்த்தான் . அவளை தன் பர்த்டே பார்ட்டியில் சந்தித்ததோடு சரி அதன் பின் அவளை என்ன என்று கூட கேட்டிடாதவன் இப்பொது தன் பாட்டியே இவர்கள் திருமணத்தை அறிவித்த பிறகு அதை ஒத்துக்கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லை .
"பாட்டி இப்போ என்னோட கல்யாண விஷயம் தான் ரொம்ப முக்கியமா முதல்ல நான் உங்களை வர சொன்ன விஷயத்தை சொல்லுங்க.. "என்று அவரிடம் மெதுவாக கூறினான்.
"இரு மதி நான் இங்கே இன்னோரு சந்தோசமான விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் "என்று அனைவரையும் பார்க்க...
"வசுந்திரா மேடம் நீங்க எப்போ மீட்டிங் ஏற்பாடு செய்தாலும் . ஒரே டென்ஷனா இருக்கும் . யாரை லெப்ட் , ரைட் வாங்க போறிங்க.. யாருக்கு எல்லாம் என்ன செய்யப்போறீங்கன்னு இருக்கும். ஆனா இன்னிக்கு நீங்க பேசுறதுலயே ரொம்ப சந்தோசமா இருக்குறது எங்க எல்லாரலையும் உணர முடியுது . போதாக்குறைக்கு நீங்க வந்ததுல இருந்து சந்தோசமான விஷயத்தை மட்டுமே பேசிட்டு இருக்கீங்க.. அடுத்து என்ன நல்ல விஷயம் சொல்ல போறீங்க "என்றார் நீலகண்டன்.
"சொல்றேன் நீலகண்டான் "என்றவர் மாறனை பார்க்க..
அவர் பார்வையை கண்டதுமே அவனுக்கு புரிந்து போனது மாறனுக்கு அடுத்து வசுந்திரா என்ன சொல்ல போகிறார் என்று ...