- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
"இங்க பாரு பாட்டி நான் என்ன சிச்சுவேஷன்ல கல்யாணம் பண்ணிக்கில்ல உன் கிட்ட சொல்லிட்டேன். நீ இன்னமும் பேச மாட்டேன் தூக்கி வெச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்" என்றான் மாறன் இறுகிய குரலில் .
"என்னடா சிச்சுவேஷன் பொல்லாத சிச்சுவேஷன் உன் வீட்ல தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லல அதெல்லாம் எனக்கு பிரச்சனையே கிடையாது. ஆனா என்கிட்ட சொல்லாம நீ எந்த விஷயத்திலும் செய்ய மாட்டியே அப்புறம் ஏன் உன்னோட கல்யாணத்தை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லல சரி பரவால்ல கல்யாணம் தான் என்கிட்ட சொல்லாம பண்ணிக்கிட்டு கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு நாள் ஆகுது இந்த ரெண்டு நாள்ல உனக்கு என்னோட ஞாபகம் கொஞ்சம் கூட வரல வந்திருந்தா நீ எனக்கு போன் போட்டு சொல்லி இருக்கியா இல்லையா கோபமாக வசுந்தரா .
பாட்டி தப்புதான் நான் வேணும்னு உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு நினைக்கல என்று மேலும் மாறன் பேச வர ...
போதும்டா என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவனை முறைத்தவர் . நீயாச்சு கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் ஆனா உன் தம்பி ஒரு படி மேல போயிட்டான் எனக்கு கொள்ளு பேரனையோ பேத்தியையோ ரெடி பண்ணிட்டு தான் சொல்லி இருப்பான் போல ... யார் கண்டது அதையும் என்கிட்ட இருந்து மறைத்தாலும் மறைச்சிடுவான் என்று புளுங்கியவர் .
எங்கடா அவன் இன்னும் ஆளையே காணோம் என்றார் .
நான் கொள்ளுப்பேரன் பேத்திய ரெடி பண்றதுன்னு இல்லையோ அது வேற விஷயம் உன்ன நான் இன்னைக்கு எதுக்கு பாட்டி மீட்டிங் அரேஞ்ச் பண்ணி வர சொன்னேன் வந்த வேலையை விட்டுட்டு தேவையில்லாத வேலை எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க என பேசிக்கொண்டே மதி வீட்டுக்குள் நுழைந்தான் .
ஆமாம்மா நானும் அதைத்தான் கேட்கணும்னு நினைச்சேன் திடீர்னு எனக்கு போன் பண்ணி ஆஃபீஸ்க்கு கிளம்பி வா ன்னு சொல்லிட்டீங்க அங்க வந்து பார்த்தா நம்மளோட ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் மீட்டிங் ஹால்ல இருக்காங்க என்ன விஷயமா எங்கள வரச் சொன்னீங்க என்றார் தமிழ் மாறன் .
அதுவா அது ஒன்னும் இல்லடா இதோ உன் புள்ள இருக்கானே இவன் தான் திடீர்னு எனக்கு போன் போட்டு உன் மூத்த பேர உன்கிட்ட சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டான். இப்படி நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கிற பொண்ண கல்யாணம் பண்ணி ஆபீஸ் ரூல்சையும், நம்ம குடும்பத்தோட கட்டுப்பாட்டையும் மீறிட்டான். அதனால உடனே மீட்டிங் போட்டு அவனை சிஇஓ போஸ்டிங்கில் இருந்து தூக்கணும்னு சொல்லி என்ன ஆபீசுக்கு வரச் சொன்னான் என்றார் வசுந்தரா.
வசுந்தரா சொன்னதே கேட்டு மாறன் திரும்பி மதியை பார்க்க மதியின் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு வேகமாக வசுந்தராவிடம் வந்தவன் . சும்மா என்ன முறைக்கு அதனால எனக்கு எதுவும் ஆகிட போறது இல்ல இப்படி பொறுப்பில்லாமல் நீ யாரையும் இழுத்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு நம்ம குடும்பம் ஒத்துக்கணும்னு நினைக்கிறியா அம்மா அப்பாவுக்கு தான் அவன் மேல பாசம் ஜாஸ்தி அதனால அவன் ரோட்ல போற பிச்சைக்காரிய கூட்டிட்டு வந்தாலும் இவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று மதி பேசி முடிக்கவில்லை மாறனின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது .
மதி வார்த்தையை அளந்து பேசு தேவையில்லாமல் வார்த்தையை விட்டு வீணா என்னை கோபப்படுத்தி பார்க்காதே அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது என்றான் மாறன் .
தன் கன்னத்தில் கை வைத்தபடி மதிமாறன் சுற்றி இருந்தவர்களை பார்க்க அவன் பெற்றோருக்கு மாறனிடம் மதி அடி வாங்கியதை பார்த்து வருத்தம் இல்லை மாறாக அவனுக்கு இது தேவைதான் என்பது போல அவனை பார்த்தபடி நின்று இருக்க வசுந்தராவோ உனக்கு எதுக்கு இதெல்லாம் என்பது போல அவனை பார்த்தார்.
அவரை முறைத்துக் கொண்டே நிமிர்ந்த மதி அங்கே நின்றிருந்த காந்தலைத்தான் பார்த்தான் அவள் கோபத்தில் உச்சத்தில் மதியை முறைத்துக் கொண்டு நின்றிருக்க அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பிக் கொள்ள கயல்விழி அவனை ச்சீ... ஒரு மனுஷனா என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தாள் .
அதை எல்லாம் பார்த்தவனுக்கு தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது காந்தள்தான் என்று அவள் மீது மேலும் ஆத்திரம் பொங்கி பொங்கியது இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் வசுந்தராவிடம்
பாட்டி முடிவா என்ன சொல்றீங்க இவனை சில்வர் லைன் ஸ்டுடியோ சி இ ஓ பொசிஷன் ல இருந்து தூக்க போறீங்களா இல்லையா என்றான் .
டேய் அவன் இப்போ என்ன தப்பு பண்ணிட்டான்னு நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க ... சொல்ல போனால் நம்ம சில்வர் லிங்க் ஸ்டுடியோவோட சிஇஓவா எப்போ பொறுப்பேத்தானோ அப்போ இருந்து அதனோட வளர்ச்சி அசுர வேகத்துல உயர்ந்திருக்கு அப்படிப்பட்டவன வேலை பார்க்க வேண்டாம்னு முட்டுக்கட்டை போட சொல்றியா ? என்றார் மாறனை விட்டுக் கொடுக்காமல் .
அதானே அவன் மட்டும் தான் உங்க பேரன் . நான் இல்ல அதனால தான் எல்லாரும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்றான் கோபமாக .
டேய் புரியாம பேசாத அவன் உன்னை விட 5 வயசு மூத்தவ உன்ன விட தொழில் இல்ல மத்த விஷயங்கள் அவனுக்கு அனுபவம் நிறைய இருக்கு அதனாலதான் நம்ம சில்வர் லைன் ஸ்டுடியோவை அவனால இவ்வளவு திறமையா முன்னேற்றக் கொண்டு வர முடிஞ்சிருக்கு என்றவர் இப்போ உனக்கு என்ன பிரச்சனை அதை முதல்ல வெளிப்படையா மறைக்காம சொல்லு என்றார்.
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை அவன் அந்த போஸ்டிங்கில் இருக்கக்கூடாது ஏன் எனக்கு எதுவும் திறமை இல்லைனு நினைக்கிறீர்களா? என்னை நம்பி ஏன் அந்த பொறுப்பை கொடுக்க முடியாதுன்னு நினைக்கிறீங்க என்றான் .
உன்னை நம்பி அந்த பொறுப்பை கொடுக்க முடியாத நீ யாருடா சொன்னா உனக்கு அந்த அளவுக்கு அனுபவம் பத்தாதுன்னு சொல்லி தானே நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கவே அனுப்பினோம். ஆனா நீ என்ன பண்ண ஆபீஸ்ல வேலை பார்க்கிறது விட்டுட்டு பேருக்கு வந்துட்டு போயிட்டு இருந்த . சரி அப்படியாவது கொஞ்சம் கொஞ்சம் வேலை கற்றுக்கொள்வேன் என்று பார்த்தால் நீ உன் இஷ்டத்துக்கு பார்ட்டி குடி கூத்து கும்மாளம்னு சுத்திக்கிட்டு ஆபீஸ் வேலையே ஒன்னு கூட கத்துக்காம இருந்த . போதாக்குறைக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆசை வரத்தை காமிச்சு அவளை ஏமாத்தி அவ வயித்துல பிள்ளைகையும் கொடுத்துட்டேன் இப்படி பொறுப்பில்லாமல் அடுத்தவங்கள பத்தி கொஞ்சமா யோசிக்காம இருக்கிற உன்னை நம்பி எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்க முடியும் அது என்னுடைய ஒரு காலம் நடக்காது என்று வசுந்தரா விருட்டென்று சோபாவில் இருந்து எழ ...
பாட்டி அதெல்லாம் இப்ப எதுக்கு பேசிட்டு இருக்கீங்க மாறன் இந்த கம்பெனியில் இருக்கக் கூடாது என்றான் மாறனை அந்த சிஇஓ பதவியிலிருந்து விலக்கி ஆக வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு .
சரிடா இப்ப என்ன சில்வர் லைன் ஸ்டுடியோவோட சிஇஓவா மாறன் இருக்கக்கூடாது அவ்வளவு தானே . இப்ப என்ன பண்ணனும் அதையும் நீயே சொல்லிடு என்றார் .
நீங்க பார்ப்பாட்டி அவன் அந்த போஸ்டிங்கில் இருக்கக் கூடாது. அதேபோல நீ இன்னைக்கே இப்போவே அந்த சிஇஓ போஸ்ட்டிங்கிலிருந்து இவனை எடுத்துட்டு என்ன அந்த பதவியில உட்கார வைக்கணும். இதை முறையா நீ பிரஸ் கூப்பிட்டு எல்லாரும் முன்னாடியும் சொல்லனும் என்றான் .
டேய் உன் மனசுல நீ என்னதான்டா நினைச்சுட்டு இருக்க நீ சொன்னதும் நான் எல்லாத்தையும் செஞ்சுட்டுமா இது என்ன பொம்மை விளையாட்டா ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி அந்த சீட்டில் உட்கார வைத்து பார்ப்பதற்கு அதுல போறதுக்கு ஒரு தகுதி வேணும் அந்த தகுதி மாறனுக்கு மட்டும்தான் இருக்கு என்றவர். நீ முதல்ல உன்னோட தகுதியை உயர்த்திடுவா உன்மேல நாங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நீ நடந்துக்கோ அதுக்கு பிறகு மத்ததை பத்தி நான் யோசிக்கிறேன் என்றவர் அவனை நோக்கி வர ...
அவர் கோபத்தையும் வேகத்தையும் கண்டு மதி இரண்டடி பின்னால் செல்ல அவனைப் போலவே காந்தலும் கயல்விழியும் வசுந்தராவின் கோபத்தை பார்த்து நடுங்கி விட்டனர்.