sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
இங்க பாரு மாறனுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயம் எல்லாம் கிடையாது மதி . நீ பொறுப்பா நடந்துக்க உன்னோட வேலை இல்ல நீ நியாயமா இருக்க கத்துக்க எல்லாமே உன்னதானா தேடி வரும் அதுவரை நீ என்ன சொன்னாலும் என்கிட்ட கெஞ்சியே கேட்டாலும் நான் எதுவும் செய்யப் போறது இல்ல என்றார் .

சரி பாட்டி நீ சொன்ன மாதிரி நான் என்ன மாத்திக்கிறேன் . உங்களோட நம்பிக்கையை சம்பாரிச்சு இவன அந்த சிஇஓ போஸ்ட்ல இருந்து தூக்கிட்டு. நான் அந்த இடத்தில் வந்து உட்காரத்தான் போறேன் என்று அவரிடம் சவால் விடுவது போல பேசினான்.

சரிடா நீ ஏதோ சவால் விடுற மாதிரி பேசுற நான் அப்படி நினைச்சு உன்கிட்ட சொல்லல என்றவர் திரும்பி மாறனை என்ன மாறா இவன் இப்படி சொல்றான் என்றார் .

சிறிது நேரம் அமைதியாக மதியையே ஆழ்ந்து பார்த்தவன் பாட்டி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீ என்ன வற்புறுத்துனதுனால தான் நான் இந்த போஸ்டிங்க்கே வந்தேன் என்னோட ட்ரீம் ஜாப் இன்னும் எனக்காக காத்துட்டு இருக்கு நீ இப்ப கூட சொல்லு இந்த வேலையை இப்படியே விட்டுட்டு நான் உடனே கிளம்பி விடுவேன் என்றான் .

அப்புறம் என்ன பாட்டு அவனே இந்த போஸ்டிங் வேண்டாம் என்று சொல்கிறான் அப்புறம் எதுக்காக நீ பிடிவாதம் பிடிக்கிற பேசாம அவனை இங்க இருந்து அனுப்பிடு நான் மத்ததெல்லாம் பார்த்துக்கிறேன் என்றான் மதி .

இங்க பாருடா நான் சொன்னா சொன்னதுதான் நான் சொன்ன மாதிரி இந்த வேலைக்கு தகுதியானவன உங்க மாத்திட்டு வா அதுக்கப்புறம் நீ சொன்னதை பத்தி யோசிக்கிறேன் என்ற வசுந்தரா உனக்கு சரியா இன்னும் ரெண்டு மாசம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள நான் நெனச்சிட்டு போல நீ மாறி இருக்கனும் அப்படி இல்லன்னா இனிமேல் இதை பத்தி பேச்சே நீ எடுக்க கூடாது என்றார் .

பாட்டி என்று மதி அவரிடம் பேச வர ... நான் சொன்னா சொன்னதுதான் என்றவர்

மரகதம் எனக்கு பசிக்குது எதுவும் சமைச்சு வச்சிருக்கியா என்றார் .

அத்தை இப்பதான் சமையல் செய்யச் சொல்லி ஆளுங்க கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கேன் கொஞ்சம் பொறுங்க சாப்பாடு ரெடி ஆயிடும் நீங்க இப்படி திடீர்னு வருவீங்கன்னு எனக்கு தெரியாது ஒண்ணுமே தெரிஞ்சிருந்தா எல்லாமே சீக்கிரமா செய்து வச்சிருப்பேன் என்றார் மரகதம் சற்று பயம் கலந்த மரியாதையோடு .

இத்தனை ஆகியும் நீ இன்னும் சமையல் கட்டுப்பக்கம் போறது இல்ல ஒன்னு சொல்லி என்ன செய்யறது எல்லாம் என் பையன் பண்ற வேலை என்று தமிழ் மாறனை முறைக்க..

அம்மா நம்ம வீட்ல என்ன வசதிக்கு என்ன குறைச்சல் வேலை செய்ய இத்தனை பேர் இருக்கும் போது நான் ஏன் மரகதத்தை அடுப்படியில் கிடந்து கஷ்டப்பட வைக்கணும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் சமைச்சு தர சொல்றேன் மரகத செஞ்சு கொடுத்து தான் நீங்க சாப்பிட போறீங்களா என்ன என்று இப்போதும் இந்த வயதிலும் மரகதத்தை விட்டுக் கொடுக்காமல் தமிழ் மாறன் பேச ..

சரி தாண்டா நான் எதுவும் சொல்லடா உன் பொண்டாட்டிய என்றவர் சரி சமைச்சு வச்சுட்டு கூப்பிடுங்க நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன் என்றவர் காந்தளையும் கயல்விழியையும் பார்த்து நீங்களும் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க மத்தியானம் எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம் அங்கே அவருக்காக இருந்த அறையில் ஓய்வெடுக்க சென்று விட்டார் .

அவர் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்ட மரகதம் கணவரை பார்த்து ரொம்ப தேங்க்ஸ்ங்க அத்தைகிட்ட என்ன விட்டு கொடுக்காமல் பேசுனதுக்கு என்றார்.

தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க மரகதம் உனக்கு நான் தான் சப்போர்ட் பண்ணனும் வேற யாரு சப்போர்ட் பண்ணுவா சரி நீ வா நம்ம போய் ரெஸ்ட் எடுப்போம் என்றவர் கிச்சனில் எட்டிப் பார்த்து வேலை முடிந்ததும் எங்களை கூப்பிடுங்க என்று மரகதத்தின் தோள் மீது கை போட்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார் .

அவர் சென்றதும் மாறன் காந்தலை பார்த்தான் அவள் இன்னமும் மதியை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க... அவள் அருகில் வந்தவன் அவன் கைப்பிடித்து வா என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றான் .

அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட மதியும் கயல்விழியும் மட்டும் அந்த ஹாலில் நின்றிருந்தனர் . மதி கோபத்தோடு பெருத்து மூச்சுக்கள் எடுத்து கயல்விழியிடம் வந்தவர் உன்னை எப்படி என் பாட்டி இங்க கூட்டிட்டு வந்தாங்க நான் தான் இந்த ஊரிலேயே உன்னை இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு வந்தேனே அதையே மீறி இங்கே இருந்ததும் இல்லாம எவ்வளவு தைரியமா என் வீட்டுக்குள் வந்து இருப்ப நீ என்றான் .

அவன் பேசுவதை கேட்டு பயந்த கயல்விழி இந்த ஊரை விட்டு போவதற்காக தான் கிளம்பிட்டு இருந்தேன் ஆனா அதுக்குள்ள உங்க பாட்டியோட ஆளுங்க என் வீட்டுக்கு வந்து என்ன நீங்க கூட்டிட்டு வந்துட்டாங்க நானா வேணும்னு வரல என்றால் அவனை பயந்த விழிகளோடு பார்த்து .

ஓஹோ அவங்க வந்து vaaனு கூப்பிட்டா உடனே நீயும் இங்க வந்துடுவியா என்றவன்

கயல்விழியை முறைத்துவிட்டு திரும்பி தன் அறைக்கு செல்ல... அவன் பின்னால் செல்லலாமா? வேண்டாமா? என்று தயங்கியபடி அவன் அறைக்கு சென்றாள் .

அவன் அறை வாசல் வரை வந்தவள் உள்ளே செல்லாமல் நின்றாள்.

அறைக்குள் சென்ற மதி திரும்பி வாசலில் நின்று இருந்த கயல்விழியை பார்த்தவன் "அதான் வாசல் வரை வந்துட்டு உள்ளே வாரத்துக்கு உனக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா ? உள்ளே வந்து தோலை அப்பறோம் இதுக்கும் என்னை கூப்பிட்டு ஆளாளுக்கு பாடம் எடுப்பாங்க " என்று சிடுசிடுத்தான்.

அப்போதும் அவள் உள்ளே வராமல் இருக்க... " ஏய் இப்போ உள்ளே வர போறியா? இல்லையா ? " என்று கத்தினான்.

"இப்போ எதுக்கு தேவை இஇல்லாம கத்துறிங்க. நியாயப்படி பார்த்தா நீங்க என்னை நம்ப வெச்சு ஏமாத்தி கழுத்தறுத்தத்துக்கு உங்கள திட்டிருக்கணும். ஆனா போனா போகுது என் குழந்தைக்கு அப்பாவாகிட்டீங்களேன்னு அமைதியா போனா ரொம்ப தான் வாய் பேசுறீங்க.. என்னை புழுவை பாக்குற மாதிரி பாக்குறீங்க. இல்ல தெரியாம தான் கேக்குறேன் அப்படி என்ன தப்பை நான் பண்ணிட்டேன் உங்களை காதலிச்சதை தவிர... உங்களை நம்பினது மட்டும் தான் நான் செய்த பெரிய தப்பு . அதையும் நான் இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். " என்றால் கோபம் கொண்டு மதியை பார்த்து மூச்சு வாங்க பேசினாள்.

அவள் பேசியதை வாய் பிளந்து பார்த்தவன் "ஏய்!!! என்ன டி... என்ன ... வாய் ரொம்ப நீளுது இத்தனை நாள் என்னை பார்த்தாலே பம்மிக்கிட்டு பேசவே பயப்படுவ... ஆனா இன்னிக்கு என்ன டி ரொம்ப பேசுற.. எப்படி உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு. " என்று அவளை அடிப்பதற்கு கை ஓங்கிக்கொண்டு வந்தான் மதி.

அவன் அடிக்க வருவதை பார்த்ததும் " ஐயோ! அம்மா... என்னை அடிக்காதிங்க. நான் எந்த தப்பும் பண்ணல.. என்னை தயவு செய்து அடிக்காதிங்க " என்று அந்த வீடே அதிரும்படி கத்தி கூப்பாடு போட்டாள் கயல்விழி .

அவள் சத்தம் கேட்டதும் அறைக்குள் சென்றவர்கள் எல்லாம் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வெளியே வர.. மேலே மாடியில் மதியின் அறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டு இருந்தாள் கயல்விழி . அழுவது போல நடித்துக்கொண்டு இருந்தாள்.

அதை பார்த்ததும் மரகதம் பதறியவர் "கயல்... கயல் .. ஏன்மா அழற என்ன ஆச்சு ? " என்று படி ஏரி மேலே வர... அவரோடு சேர்ந்து காந்தளும் கயல்விழியை பார்க்க வந்தாள்.

மதி அடிக்க கையை ஓங்கிக்கொண்டு தான் சென்றான் ஆனால் அவன் அடிக்கவில்லை. தன் அம்மாவும் , காந்தளும் பதறி வருவதை பார்த்த மதிக்கு கயல் நடித்ததில் அதிர்ச்சியாக இருக்க அவளையே செய்வதறியாது பார்த்தவன் "ஏய் நான் எங்கே உன்னை அடிச்சேன் . இப்படி கத்தி கூப்பாடு போட்டு எல்லாரையும் நான் உன்னை அடிக்கிற மாதிரி நம்ப வைகுறியா ... உன்னை" என்று மீண்டும் அவளை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு நெருங்கி வர...

"டேய்... மதி ... " என்று கீழ் இருந்து வசுந்தரா அவனை அதட்டும் தோரணையில் அழைக்க.. அவர் குரல் கேட்டதும் ஓங்கிய கையை கீழிருங்கியவன் அமைதியாக நின்றான்.

அதற்குள் படி ஏறி மேலே வந்து இருந்த மரகதம் வந்த வேகத்தில் மத்தியில் முதுகில் ஓங்கி அடித்து " என்ன டா பழக்கம் இது கட்டின பொண்டாட்டியை கை நீட்டி அடிக்குறது . எங்கே இருந்து இந்த மாதிரி பழக்கம் எல்லாம் உனக்கு வருது " என்று அவனை மீண்டும் ஒரு அடி முதுகில் வைத்துவிட்டு கண்களை கசக்கி கொண்டு இருந்த தன் இரண்டாவது மருமகளிடம் வந்தார்.

கயல்விழியை சமாதானம் செய்து கொண்டு இருந்த காந்தள் மரகத்திடம் "அத்தை மதி கயலை அவர் ரூமுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லி இருக்காரு " என்றாள் .

" என்ன காந்தள் சொல்ற... அவன் ரூமுக்கு போகாம இவ எங்க போவா " என்றார் அதிர்ச்சியாக .

"அத்தை நான் இவர் கூட இவர் ரூமில் தங்கக்கூடாதுன்னு சொல்லுறாரு . நான் உங்க கூட தான் இருப்பேன் . என்னை ஏன் உள்ளே விட மாட்டேங்குறீங்கன்னு கேட்டதுக்கு இவரு... இவரு... " என்று மேலும் பேசமுடியாமல் கயல் அழ..

"என்னம்மா .. என்ன சொன்னான் உன்னை இவன் " என்று கேட்டார் மரகதம் மதியை முறைத்துக்கொண்டு .

" நான் இவருக்கு தகுதியானவை கிடையாதாமா ... இவர் கூட இந்த ரூமில் தங்குறதுக்கு எனக்கு எந்த அருகதையும் இல்லை . அதனால நான் போய் செர்வெண்ட்ஸ் எல்லாரும் தங்குற இடத்துல போய் தங்கிக்கணுமா. என் வயித்துல வளர இவரோடட புள்ளையை பெத்துகொடுத்துட்டு உங்க யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுன்னு சொல்லி என்னை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டுட்டாரு " என்று மீண்டும் ஆலா துவங்க ....

"டேய் மதி என்ன டா இது இப்படி தான் பேசுவியா நீ வயித்து புள்ளைக்காரியை கழுத்தை பிடிச்சு தள்ளி இருக்க.. " என்று கோபமாக அவள் அழுகையை தாங்க முடியாமல் படி ஏய் வந்திருந்தார் வசுந்தரா அவர் பின்னால் தமிழ்மாறனும் வந்துவிட ... இங்கே நடப்பதை எல்லாம் தன் அறைக்கு வெளியே சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் மாறன் .

தன் குடும்பம் முழுவதும் தன்னை கேவலமாக பார்ப்பதை கண்டு கடுப்பானவன் "ஐயோ... நான் அவளை எதுவும் பண்ணல யாரும் என்னை நம்ப மாட்டிங்களா ... "என்றான் .

"டேய் புள்ளத்தாச்சி புள்ள பொய்யாடா சொல்ல போறா சும்மா நான் ஏதும் பண்ணலன்னு சொல்லிட்டு இருக்க... ஒழுங்கா கயலை வெச்சு நல்லா வாழுற வழியை பாரு . இனிமேல் இவளை ஏதும் பேசுனேனு வை அப்பறோம் நீ தான் போய் செர்வெண்ட் கூட சேர்ந்து தான் இருக்கனும் பார்த்துக்க " என்று மரகதம் மதியை எச்சரிக்க ...

அவன் அம்மா பேசுவதை கேட்டு வாயடைத்து போனவன் இத்தனைக்கும் காரணமான கயலை திரும்பி பார்த்தான் . அவளோ ஒன்றும் தெரியாதவள் போல கண்ணை கசக்கிக்கொண்டு காந்தளின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்தாள்.

அவனை எச்சரித்த மரகதம் "கயல் நீ உள்ளே போம்மா இவன் ஏதாவது சொன்னா உடனே என்னை கூப்பிடு " என்றவர் "டேய் இவ கூட சேர்ந்து ஊரை சுத்துற அப்போ எல்லாம் இவை அந்தஸ்த்து பார்க்கலையா நீ ... அவகூட சேர்ந்து அவ வயித்துல பிள்ளையும் கொடுத்துட்டு இப்போ கூட சேர்த்துக்க மாட்டேன் உள்ளே விடமாட்டேனு சொல்லிட்டு இருக்க... இனியும் இப்டி பேசிட்டு இருக்கேன்னு வை அப்பறோம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது " என்றவர் அங்கிருந்து சென்றுவிட...

தமிழ் மாறனும், வசுந்த்ராவும் மதியை முறித்துவியோடு கயலுக்கு ஆதரவாக பேசிவிட்டு சென்றனர் .

காந்தள் கயலை சமாதானம் செய்துகொண்டு இருக்க... மாறனும் அவள் வரட்டும் என்று அவர்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

மதிக்கு தான் ஒன்றும் புரியவில்லை திரும்பி கயலையும், காந்தளையும் பார்த்தவன் "ஏய் அதான் எல்லாரையும் உனக்கு சாதகமா பேச வெச்சுட்டே இல்ல.. இன்னமும் எதுக்கு நீலிக் கண்ணீர் வடிக்குற.. போதும் உன் நடிப்பு உள்ளே வா..." என்று அவன் அறைக்குள் சென்றுவிட...

அவன் சென்றதும் காந்தளை பார்த்து "அக்கா நான் உள்ளே போறேன் " என்று அவளை பார்த்து சிரித்துக்கொண்டே மதி அறைக்குள் சென்றாள் கயல்.

தன் அறைக்குள் காந்தள் நுழைய அவளை இடையோடு சேர்த்து கட்டிக்கொண்டு தூக்கி சுற்றியவன் "மதியை பழிவாங்க நீ போட்டு கொடுத்த பிளான் நல்ல வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல.. " என்று தலைக்கு மேலே தூக்கி சுற்றியவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான்
 
Top