sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
EPISODE -2

அவனுக்கு நானும்..

மிகவும் சாதாரணமாக அதன்

தன் ஆபீஸ் இருக்கு சீக்கிரம் கிளம்ப சொல்லி டிரைவரை இப்போதுதான் நிதானமாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

நேற்று நடந்த நினைவுகள் அவளுக்கு இங்கொன்றும் அங்குன்றமாய் மனக்கண் முன்பு வந்து தோன்றியது

"இல்ல இது எப்படி என்னையும் அறியாமல் நடந்துச்சு என்னால இதை நம்பவே முடியலையே நான் எப்படி என் முகம் தெரியாத ஒருத்தன் கூட ஒண்ணா ஒரே அறையில் இருந்து இருக்கேன் " என்று யோசித்தாள் நேற்று நடந்ததை ஏற்க மறுத்தாள்.

அவள் உடலில் ஏற்பட்டிருந்த தழும்புகளும் சுதந்திரத்தை பற்த்தடங்களும், அவருடைய அந்த இடமும் அனுபவித்த திருப்தியை அவளுக்கு உணர்த்தியது.

"நேற்று நைட் நான் ரொம்ப சந்தோசமா இருந்து இருக்கேன். அவன் என்கிட்ட முழு திருப்தியையும் அனுபவிச்சு இருக்கான்னு என் உடம்பில் அங்கங்க ஏற்பட்டு இருக்கிற தழும்பு புரிய வைக்கிறது.

யாருன்னே தெரியாதவனோடு நேற்று ஒரே அறையில் இருந்தது. அவன் கூட நானும் என் கூட அவனும் இரவு முழுவதையும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் அனுபவித்ததை நான் எப்படி எடுத்துக்கிறது. இத ஒன் நைட் ஸ்டாண்ட் என்று சொல்லலாமா?" என யோசித்த அவள் மனம்.

'ம்ம்... அப்படியே வச்சுப்போம் எப்படியும் அவனை நான் திரும்ப பார்க்கப் போறது இல்ல. அவனுக்கும் கண்டிப்பா நான் திரும்ப தேவைப்பட மாட்டேன். அப்படியே அவனைப் பார்த்தாலும் என்னால அடையாளம் சொல்ல முடியாது. ஏன்னா நான் நேற்று யாரோட ஒன்னா இருந்தேன் என்று ஞாபகம் எனக்கு இப்போ வரைக்கும் வரலையே " என்று உறுதியாக நம்பினாள்.

இப்படி எல்லாம் யோசித்தவள் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு "என்ன சொன்னாலும் சரி நான் அனுபவித்த முதல் ஒன் நைட் ஸ்டேண்ட் இதுதான். என்னுடைய முதல் முறையும் இதுதான். என்னுடைய வாழ்க்கையிலேயே நான் சந்தோசமாக கழித்த இரவாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்லலாம் அவ்வளவு திருப்தியா இருக்கு என் மனமும் உடலும்" என்ற நினைத்தவள்.

"இனி இதை பத்தி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை. அடுத்தது நடந்துடுச்சு இனி இதையே மனசுக்குள்ள ஓட்டி பார்த்து எந்த பிரயோஜனமும் இல்லை இனி அடுத்து நடத்த நடக்க போறத பாப்போம். யாரா வேணா இருக்கட்டும் அவனை நான் திரும்ப சந்திக்க போறதே கிடையாது. நீ போய் நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான் இந்த இங்கு நடந்த விஷயம் அதோட முடிஞ்சது" என்று யோசித்துக்கொண்டு இருந்தவளுக்கு

திடீர் என... " நேத்து அவன் என்கூட ஒன்னா செய்த போது... நான் திருப்தி பட்ட மாதிரியே அவனும் என்கூட திருப்தி பட்டிருப்பானா? அப்படி இருந்ததால் தானே நான் இவ்வளவு தழும்பிகள் உடல் முழுக்க வாங்கி இருக்கேன். ப்பா.... உடம்பெல்லாம் எப்படி வலிக்குது... அதே போல தானே அவனுக்கும் இருக்கும்.அப்போ அவனுக்கு நானும்... செய்.... " என்று தன் மனதில் எழுந்த நினைவுகளை தலையை தட்டி சீராக்கியவள். "ஒழுங்கா நடந்ததை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு அடுத்து என்ன செய்ய போறன்னு வேலையை பாரு டி முட்டாள் " என்று தன் கவனத்தை திசை திருப்பினாள்.

அவள் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே டாக்ஸி டிரைவர் கொண்டு வந்து அவள் ஆபீசின் முன்பு காரை நிறுத்தவும் வாட்சில் மணி பார்த்தவள் சந்தோஷமாக டிரைவரிடம் நன்றி கூறிவிட்டு கொடுக்க வேண்டிய பணத்தோடு சேர்த்து டிப்சையும் அதிகமாகவே கொடுத்து அவசரமாக இறங்கி ஆபீஸ் நோக்கி ஓடினாள்.



அவள் கொடுத்த டிப்ஸில் திருப்தி அடைந்த அந்த டாக்ஸி டிரைவர் பதட்டமாக ஓடும் அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு காரை கிளப்பினார்.



கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பாக...



"அஹ்ஹ்.... அம்மா என்ன சொல்றீங்க நிஜமாவே சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து எனக்கு இன்டர்வியூ வந்திருக்கா? உண்மையா தான் சொல்றீங்களா?" என்றாள்.



"ஆமா காந்தள் அம்மா உன்கிட்ட இந்த விஷயத்துல பொய் சொல்லுவேனா நிஜமாவே நீ ஆசைப்பட்ட மாதிரி சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து இன்டர்வியூ காண லெட்டர் இப்போ தான் என் கைக்கு வந்தது . அதை பார்த்ததும் தான் அம்மா உனக்கு போன் பண்ணினேன்" என்றார் காந்தளின் அம்மா.



மறுமுனையில் இருந்த காந்தளுக்கு அவள் அம்மா சொன்னதை இன்னமும் நம்ப முடியவில்லை வீட்டிற்குச் சென்று அந்த கடிதத்தை தன் கையால் வாங்கிப் பார்த்தால்தான் திருப்தியாகும் என்று நினைத்தவள்.



" அம்மா இன்னும் அரை மணி நேரத்துல நான் வீட்டில் இருப்பேன். இத நம்ம கொண்டாடியே ஆகணும். நைட்டு டின்னருக்கு நாம ரெண்டு பேரும் வெளியே போகலாம் " என்றவள் போனை வைத்துவிட்டு தான் பார்ட் டைம் வேலை செய்து கொண்டு இருந்த காபி ஷாப்பில் அதன் முதலாளியிடம் வந்து விஷயத்தில் சொல்லி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பர்மிஷன் வாங்கிவிட்டு கிளம்பினாள்.



பேருந்து நிலையம் வந்து அவர்கள் வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறியவள் ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள் காந்தள்.



இத்தனை வருடமாக தன் அம்மாவும் தானும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி காணாமல் போகப்போகிறது. தனக்காக இத்தனை காலம் ஒற்றைய ஆளாக உழைத்து களைத்திருக்கும் தன் அம்மாவிற்கு இந்த வேலை தனக்கு கிடைத்து விட்டால் நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பழைய நினைவுகளை அசை போட்டால் காந்தள்.



சிறுவயதிலேயே அவளையும் அவள் தாயையும் விட்டுவிட்டு அவள் அப்பா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட கொஞ்ச காலம் அவர்களுடைய கிராமத்திலேயே கிடைத்த வேலைகளை செய்து தன் மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார். காந்தளின் அம்மா சித்ரா.



எந்த வேலை கிடைத்தாலும் அதை செய்வதற்கு ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை தன் தாய் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தன் மகள் படிப்பிற்காக அதை செலவழித்துக் கொண்டிருந்தார்.



வயலில் இறங்கி வேலை செய்வது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது, அவர் வீட்டில் பாத்ரூம் கழுவுவது துணி துவைப்பது அவர்களில் வயதானவர்களை பராமரிப்பது என ஒன்று விடாமல் அனைத்து வேலைகளையும் செய்து வந்தார் சித்ரா.



இப்படி கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தாலும் தாங்கள் எதிர்பார்த்தது போல வருமானம் எதுவும் அமையாததால் கிராமத்தை விட்டு நகர்ப்புறம் வரலாம் என இருவரும் முடிவு செய்து. தங்கள் சொந்த பந்தங்களை விட்டு இருவரும் சிட்டிகை நோக்கி கிளம்ப... அவர்களோடு சேர்ந்து காந்தலின் அப்பாவுடன் பிறந்த அவளுடைய அத்தை பத்மாவும் அவர்களோடு கிளம்பி வருவதாக உறுதியாக நின்றுவிட அவரையும் அழைத்துக் கொண்டு மூவரும் சிட்டியை நோக்கி பயணப்பட்டனர்.



கையில் கிடைத்த பணத்தை வைத்து ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கே தங்கி கொண்டு அவர்களுக்கு வேலை தேட ஆரம்பிக்க உங்களின் அம்மாவிற்கு ஒரு உணவகத்தில் பாத்ரூம் கழுவும் நிரந்தர வேலை கிடைத்தது.



காந்தளின் அத்தை பத்மா நான் படிக்கச் சென்ற பள்ளிக்கு முன்பாகவே ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்து அங்கே வியாபாரம் செய்ய ஆரம்பித்திருந்தார் காலையில் நான் பள்ளி செல்லும் போது வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு இருவரும் தன்னோடு கிளம்பி விட சித்ரா அவர் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கும் பத்மா காந்தளை அவள் பள்ளிக்கும் அழைத்துச் செல்வார்.



கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் வேலை செய்து ஓரளவிற்கு முன்பை விட கஷ்டத்திலிருந்து சற்று முன்னேறி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இப்போதும் அவள் அம்மா.



வீட்டிற்கு அருகிலேயே சிறிய ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டிருக்க அவரோடு அவருக்கு உதவியாக பத்மாவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.



காந்தலும் தனக்கு கிடைக்கும் நேரம் எல்லாம் அந்தக் கடையில் அம்மாவிற்கும் அத்தைக்கும் உதவியாக வேலை செய்து கொண்டு இருப்பாள் அந்த நேரம் போக கல்லூரிக்கு செல்வது படிப்பது என இப்போது பார்ட்டைம்மாகா இந்த காபி ஷாப்பிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.



சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டு கதவை தட்டிவிட்டு சந்தோசமாகவும் மனதில் எழுந்த உணர்வு சொல்ல முடியாத உணர்வுகளோடும் நின்றிருந்த காந்தளுக்கு கதவை திறந்து விட்டார் பத்மா.



அவரைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்ட காந்தள் "அத்தை அம்மா சொன்னாங்களா எனக்கு இன்டர்வியூ கார்டு வந்திருக்கு... நான் எத்தனை வருஷமா வேலை செய்யணும்னு ஆசைப்பட்ட சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து தான் வந்திருக்கு " என்று சொல்லி துள்ளிக் குதித்தாள்.



"நானும் கேள்விப்பட்டேன் காந்தல் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீ நெனச்ச மாதிரி உனக்கு பிடிச்ச வேலையை செய்யப் போற, இனிமேலாவது நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் வரும்னு நம்புறேன்" என்றார் பத்மா.



ஆமா அத்தை கண்டிப்பா நான் நினைச்ச மாதிரி அந்த கம்பெனில எனக்கு வேலை கிடைச்சிடுச்சுன்னா இப்போ நம்ம எல்லாரும் சேர்ந்து சம்பாதிக்கிற பணத்தைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமா வரும் அதை வச்சு நம்ம நமக்கு பிடிச்ச மாதிரி வாழலாமே என்று சொல்லி சந்தோஷப்பட கையில் ஸ்வீட்டோடு தன் மகளை எதிர்கொண்ட சித்ரா அவள் வாயில் தான் வீட்டிலேயே செய்திருந்த கேசரியை ஊற்றிவிட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி என் பொண்ணு நெனச்ச மாதிரி சந்தோஷமான ஒரு வாழ்க்கையை வாழப் போறா என்று சித்ரா சொல்லும் பொழுது அவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.



அதை பார்த்த பத்மா "என்ன சித்ரா நீ சந்தோஷமா இருக்கிற நேரத்துல இப்படி அழுது வழியுற பாவம் புள்ள முகம் சுணங்கி போய்டும். கண்ணை தொட இப்போ நம்ம எல்லாம் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம்" என்று சொன்ன பத்மா.

காந்தளிடம் திரும்பி "காந்தள் நான் உனக்கு பிடிச்ச மட்டன் சுக்கா செஞ்சு வெச்சிருக்கேன் வா.. வந்து சாப்பிடு" என்று அவளை அழைத்துச் செல்ல..

என்ன அத்தை இப்போ நான் இன்டர்வியூக்கு தானே போறேன் என்னவோ எனக்கு வேலை கிடைச்ச மாதிரி இப்படி வீனா செலவு செஞ்சு மட்டும் எல்லாம் எடுத்து செஞ்சிருக்கீங்க" என்று தன் அத்தை பத்மாவை கடிந்து கொண்டாள் காந்தள்.



"எவ்வளவு காசு செலவு பண்றோம் உனக்கு பிடிச்சத அதுவும் சாப்பிட தானே நான் வாங்கி செஞ்சு வச்சிருக்கேன். இது எல்லாம் நான் சேர்த்து வைத்திருந்த காசிலிருந்து தான் இதை வாங்கினேன். எதுவும் குறை சொல்லாம ஒழுங்கா வந்து சாப்பிடு" என்று பத்மா காந்தளை அழைத்துக் கொண்டு போய் ஹாலில் அமர வைத்தவர்.



கிச்சனிலிருந்து செய்து வைத்த உணவை சித்ராவும் பத்மாவும் எடுத்து வந்து காந்தள் முன்பு வைத்தனர்.





அவர்கள் செய்திருந்த உணவுகளை எல்லாம் பார்த்து வாயைப் பிளந்த காந்தள் " இப்போ எதுக்கு தேவையில்லாமல் இத்தனை செஞ்சு வச்சிருக்கீங்க. ஏன் இப்படி செலவு பண்றீங்க" என்று இருவரையும் காந்தள் திட்டினாள்.



ஏய் பேசாம சாப்பிடுடி உனக்காக உன் அத்தை பார்த்து பார்த்து செய்து வைத்திருந்தா நீ எங்களை குறை சொல்றியா ஒரு நாள் தானே இதனால ஒன்னும் குடி மொழிக்கு போகாது வந்து சாப்பிடு" என்று சொல்லி அவளுக்கு தட்டில் உணவை பரிமாறினார் சித்ரா.



மூவரும் பேசிக்கொண்டு சந்தோசமாக சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்
 
Top