- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
Episode -3
காந்தள் குடும்பம்
🔥
"சும்மா சொல்லக்கூடாது உன் கையில ஏதோ ஒரு மேஜிக் இருக்கு என் அம்மா சமையல் விட உன்னோட சமையல் தான் எப்போதும் எனக்கு பிடிக்குது ஏன்னு தெரியல அவ்வளவு ருசியா செய்ற அத்தை என்று காந்தள்" பத்மாவின் சமையலைப் பாராட்டினாள்.
"அப்போ இனிமேல் நான் சமைக்கல உன் அத்தையையே சமைக்க சொல்லு எனக்கு ஒரு வேலை மிச்சம்" என்றார் சித்ரா.
"பாத்தியா காந்தள் உன் அம்மா இதுதான் சமயம் என்று வேலை செய்றதிலிருந்து எஸ்கேப் ஆக பார்க்கிறா... அப்படி எல்லாம் விட்டுடுவேனா நான்" என்று சொல்லி சிரித்தார் பத்மா.
எங்கள் மூவரின் வாழ்க்கையும் மிகவும் சாதாரணமாக எளிமையாக தான் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் ஆடம்பரமாக வாழும் அளவிற்கு நாங்கள் இன்னும் இல்லை இந்த வேலை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இவர்களெல்லாம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு ஒரு வேலையாக கிச்சனில் வேலையை முடித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்ததும் காந்தளின் இன்டர்வியூ கார்டை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கி சந்தோஷமாக பிரித்துப் பார்த்தவள். அவள் முகத்தில் எழுந்த சந்தோஷத்தை கண்டு காந்தளின் தாயும் அத்தையும் சந்தோசமாவதை பார்த்தவள்.
" அம்மா அத்தை இந்த வேலை எனக்கு கண்டிப்பா கிடைக்கணும்னு கடவுள வேண்டிக்கோங்க என்னோட நீண்ட நாள் கனவு கண்டிப்பா பலிக்கணும்னு வேண்டிக்கோங்க" என்றாள்.
"இத நீ சொல்லனுமா எங்க ரெண்டு போர்டு ரெண்டு பேரோட பிரார்த்தனை எப்பவுமே பற்றி மட்டும் தான் இருக்கும்" என்றார் பத்மா.
"ஒரு நிமிஷம் இரு" என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றவர் வரும்பொழுது ஒரு சிறிய பெட்டியை கொண்டு வந்து காந்தள் முன்பு நீட்டினார் பத்மா .
அதை கையில் வாங்கியவாறு "என்ன அத்தை இது" என கேட்டபடி அவர் கொடுத்த அந்த சிறிய பெட்டியை திறக்க அதற்குள் ஒரு நகை பெட்டி இருந்தது.
அதை பார்த்து ஆச்சரியமான காந்தல் நிமிர்ந்து பத்மாவை பார்க்க "என்னை ஏண்டி பார்க்கிற முதல்ல அந்த பெட்டியில் இருக்கிறதை பிரிச்சு பார்த்து உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு" என்றார் பத்மா.
காந்தள் சிரித்த முகமாக... தன் அம்மாவை பார்த்தவள் அந்த சிறிய நகை பெட்டியை திறந்து பார்க்க அதில் மிகவும் சன்னமான ஒரு சிறிய தங்கச் சங்கிலி இருந்தது.
அதை கையில் எடுத்தவள் "அத்தை என்ன இது? எப்ப வாங்கின? எனக்கா!" என ஆர்வமாக கேட்டாள்.
"ஆமா காந்தள் நான் சேர்த்து வைத்திருந்த பணத்துல தான் உனக்காக வாங்கினேன். நல்லா இருக்கா? உனக்கு பிடிச்சிருக்கா? போட்டு பாரு!" என்று தன் அண்ணன் மகளை ஆசையாக பார்த்தார் பத்மா .
"என்ன பத்மா இது உனக்காக சேர்த்து வைத்திருந்த காசை எல்லாம் எதுக்கு நீ இவளுக்காக செலவு பண்ற அது உனக்காக தனியா வெச்சிருக்கற பணம் தானே" என்றார் சித்ரா.
"என்ன சித்ரா நீ எனக்கு என்ன குடும்பமா பிள்ளையா இத சேர்த்து வச்சு இந்த காச நான் என்ன பண்ண போறேன். என் அண்ணன் மகளுக்கு செய்யறதுக்காக தான் இந்த காசை சேர்த்து வைத்திருந்தேன். பாவம் அவளும் எத்தனை நாளைக்கு தான் கவரிங் செயினை போட்டுக்கிட்டு வெளியே வேலைக்கு போவா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு இந்த செயினை வாங்கினேன் அது அவ போட்டுக்கிட்டு அழகா இருக்கும் அவளுக்கு" என்ற பத்மா அவள் கையில் இருந்து செயினை வாங்கி காந்தள் கழுத்தில் மாட்டிவிட்டு அவளுக்கு அது அழகு பார்த்தார்.
தன் கழுத்திலிருந்து செயினை இருவரிடமும் காட்டி மகிழ்ந்த காந்தள் "நல்லா இருக்கா?" என்றாள்.
"செயினை போட்டதும் நீ ரொம்ப அழகாயிட்ட " என்று சித்ரா சொல்ல.
" போம் மா!" என அவர் தோளில் அடித்த காந்தள்.
" அத்தை இது எனக்கு ரொம்ப நல்லா இருக்கு. நான் போட்டதும் உனக்கு சந்தோஷமா.... " என்றவள்.
"சரி இந்தா நீயே வச்சுக்கோ எனக்கு வேண்டாம் எனக்கு இந்த நகை மேல எல்லாம் ஆசை இல்லைன்னு தெரியும் தானே. நீ தான் ஆசையா எனக்கு வாங்கிக் கொடுத்தேன்ற. அதனாலதான் சந்தோஷமா உனக்காக அதை போட்டு பார்த்தேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம் அத்தை நம்ம எப்பவும் ஒரே மாதிரி இருந்துட்டா எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு வேண்டாம்" என்று சொல்லி திரும்ப பத்மாவின் கையிலே அந்த செயினை கழட்டி கொடுத்தாள் காந்தள் .
காந்தல் பத்மா ஆசையாக வாங்கி கொடுத்த செயினை திருப்பிக் கொடுத்ததும் பத்மாவின் முகம் மாறிவிட்டது சரிடி தாயே நீ இப்படியே இரு இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் எப்படி மேக்கப் பண்ணிக்கிட்டு கண்டதுக்கு எல்லாம் வாங்கி காதலியும் கழுத்துலையும் மாட்டிக்கிட்டது சுத்திக்கிட்டு இருக்காங்க ஆனா நீ மட்டும் இப்படி எதுவும் இல்லாம சாமியார் மாதிரியே திரி என்னவோ பண்ணு இதுவே உன் அம்மா வாங்கி கொடுத்திருந்தா பேசாம போட்டு இருப்ப இல்ல நான் தானே என்னதான் இருந்தாலும் நான் மூன்றாவது மனுஷி தானே பத்மா எழுந்து செல்ல.
ஐயோ அத்தை புலம்ப ஆரம்பிச்சிட்டியா சரி கொடு நானே போட்டுக்குறேன் என்று காந்தல் அந்த செயினை வாங்கப் போக...
இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ தான் அதை வேண்டாம் என்று கழட்டி கொடுத்துட்டியே அப்புறம் என்ன என்று அவளிடம் கொடுக்க மாட்டேன் என பத்மா எழுந்து சென்றார்.
வேகமாக எழுந்து வந்த காந்தல் பத்மாவை பின்னிருந்து அணைத்துக்கொண்டு காரியத்தை உனக்கு வீணா செலவுன்னுதான் நான் அதை வேண்டாம் என்று சொன்னேன் நான்தான் இப்ப குடுன்னு சொல்றேன்ல அத்தை கொடு என அவர் கையில் இருந்து செயினை வாங்கி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டவள் முகம் பார்க்கும் கண்ணாடியில் போய் அந்த செயினை பார்த்தாள்.
பிறகு மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு சென்று படுத்து விட்டனர்.
மறுநாள் காலை இண்டர்வியூ செல்வதற்காக தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து அழகிய ஒரு ஆடையை வாங்க வேண்டும் என்று காந்தல் வீட்டிலிருந்து சற்று தள்ளி இருந்த இருந்த ஒரு சிறிய ஷாப்பிங் மாலுக்கு சென்றாள்.
ஃபர்ஸ்ட் இம்ப்ரசன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஸின் என்று சொல்வார்கள் அது போல தான் இன்டர்வியூவிற்கு செல்லும் பொழுது தன்னுடைய ஆடையும் தானும் பார்ப்பதற்கு ஆடம்பரமாக இல்லை என்றாலும் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தான் ஆடை எடுக்க சென்றிருக்கிறாள்.
அவளோடு சித்ராவும் பத்மாவும் வந்திருந்தார்கள்.
"ஒரு இன்டர்வியூ போறதுக்கு தானே நான் டிரஸ் எடுக்க வந்திருக்கேன் ஏதோ எனக்கு கல்யாணத்துக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கிற மாதிரி இப்படி ரெண்டு பேரும் கூட வரணுமா? நானே இதையெல்லாம் செலக்ட் பண்ணிக்க மாட்டேன்னா?" என்றாள் காந்தள்.
"ஏய் நாங்க ரெண்டு பேரும் சும்மா தானடி கூட வரும் நீ உனக்கு என்ன பிடிக்குதோ அதை எடு நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். நீ என்ன எடுக்கிறேன்னு நாங்க வேடிக்கை மட்டும் தான் பார்க்க வந்திருக்கோம் நாங்களும் எப்ப பாரு கடை வீடுன்னு அதுக்குள்ளேயே இருக்கிறோமே அதனாலதான் கொஞ்சம் வெளியே வரலாம் என வந்தோம். இது பொறுக்கலையா உனக்கு" என்றார் சித்ரா.
கடைக்காரரிடம் வந்த காந்தள் அவளுக்கு ஆடைகளை எடுத்து போடச் சொல்ல நாளை போட்டுக் கொள்ள தனக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்தாள்.
அவள் பின்னால் வந்த பத்மாவும், சித்ராவும் "என்ன மொத மொதல்ல வேலைக்கு போகும்போது இப்படித் தான் கருப்பு கலர்ல டிரஸ் எடுப்பியா? இது வேண்டாம்" என்று பத்மா அவள் தேர்ந்தெடுத்த உடையை புறக்கணிக்க.
மீண்டும் வேறு உடைகளை பார்க்க ஆரம்பித்திருந்தாள் "ஏண்டி உனக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லை. இப்படித்தான் துணி எடுப்பியா? அங்க பாரு வெளியில ஒவ்வொரு பிள்ளைகளும் எவ்வளவு அழகழகா துணி போட்டுட்டு போறாங்க . நீ என்னடான்னா பீத்த துணியா பாத்தில்ல எடுக்கிற" என்று சித்ரா கூற.
அதைக் கேட்ட கடைக்காரரின் முகம் கோபம் அடைந்தது. அவர் எடுத்துப் போட்ட உடைகள் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அவர்களோ தங்கள் ஒரு கடையில் இருக்கும் உடைகளை பார்த்து குறை சொல்வதை கேட்டு அவருக்கு கோபம் வந்துவிட்டது.
"ஏம்மா இத்தனை குறை சொல்றீங்களே நீங்களே உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல துணியா பார்த்து எடுத்து கொடுங்க பார்க்கலாம்" என்றார்.
"அதுக்கென்ன எடுத்துட்டா போச்சு" என்ற சித்ரா "பத்மா வா நம்ம போய் அவளுக்கு டிரஸ் செலக்ட் பண்ணலாம்" என்று பத்மாவை அழைத்துக் கொண்டு அந்த கடையையே ஒரு முறை சுற்றி வந்தவர்கள் அங்கே சோக்கேஸிற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மையில் மாட்டப்பட்டிருந்த உடையை பார்த்தனர்.
அதை பார்த்ததும் இருவருக்கும் மிகவும் பிடித்து போய்விட அதை கடைக்காரரிடம் காட்டி "இந்த துணி என் பொண்ணுக்கு நல்லா இருக்கும். இதையே கொடுத்துடுங்க" என்றார் சித்ரா.
சரி என்று அவர் தலையாட்டிவிட்டு அந்த ஆடையை எடுக்கப் போக...
"அண்ணா ஒரு நிமிஷம் இருங்க " என்ற காந்தள் வேகமாக அவர்கள் இருவரிடமும் வந்து உங்களுக்கு என்ன அறிவு எதுவும் கெட்டுப் போச்சா அந்த ட்ரெஸ்ஸோட விலை எவ்வளவு தெரியுமா 2000 அவ்வளவு காசு கொடுத்து அதை எடுக்கணுமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பேசாம வாங்க நான் பார்த்து வெச்ச துணியை நல்லாத்தான் இருக்கு" என்று அவர்களை அந்த ஆடையை எடுக்க விடாமல் காந்தல் தடுக்க.
"இவ இப்படித்தான் சொல்லுவா தம்பி நீங்க அந்த டிரஸ்ஸ பேக் பண்ணுங்க. என் பொண்ணுக்கு இது சரியா இருக்கும் தானே" என்றார் சித்ரா.
"உங்க பொண்ணுக்குண்ணே அளவெடுத்து தைத்த மாதிரி இருக்கும் மா" என்று அவர் சிரிக்க .
"துணி விக்கணும்னு வாய்க்கு வந்ததை எல்லாம் அடிச்சு விடுறது பாரு அந்த ஆளு" என்று பத்மா சித்ராவிடம் கூற..
"அய்யோ ரெண்டு பேரும் கொஞ்சம் மெதுவா பேசுங்க அது அவர் காதில் விழுந்திட போகுது" என்றாள் காந்தள்.
அவள் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த ஆடைக்கு பணத்தைச் செலுத்தி விட்டு அவளோடு கடையை விட்டு வெளியே வந்தனர் பத்மாவும் சித்ராவும்.