sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
Episode -4



கனவு நாள்

கடையிலிருந்து புறப்பட்ட மூவரும் வீட்டிற்கு வந்தனர். நான் வீட்டுக்கு வந்ததும் அவள் வாங்கி வந்த உடனே போட்டு காட்டி தன் அம்மாவிடமும் அத்தை இடமும் சந்தோசப்பட்டாள் காந்தள்.



அவள் செல்லவர்க்கும் இன்டர்வியூவின் எழுத்து தேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது அதற்குள்ளாக என்னால் எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு முடிந்தவரை படித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டு நாளும் தீவிரமாக படிக்க ஆரம்பித்து இருந்தாள் காந்தள்.



தேர்வு மற்றும் இன்டர்வியூக்கான முந்தைய நாள் இரவு.



மூவரும் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தனர்.



என்ன ஆச்சு ஏன் உங்க ரெண்டு பேர் முகமும் கவலையா இருக்கு என்று கேட்டால் காந்தள்.



எல்லாம் ஒன்னும் இல்ல காந்தல் உன் அத்தைக்கு நீ நாளைக்கு போற இன்டர்வியூல நல்லபடியா எழுதி பாஸ் ஆகணும்னு பதட்டமா இருக்கா எந்த பிரச்சினையும் வராம நீ நல்லபடியா அந்த தேர்வில் பாஸ் ஆகணும்னு தான் எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றார் சித்ரா.



அம்மா அதை பத்தி கவலையே படாதீங்க கண்டிப்பா நான் அந்த டெஸ்ட்ல பாஸ் ஆயிடுமா எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ஏன்னா நான் அவ்வளவு பிரிப்பேர் பண்ணி இருக்கேன் இந்த ரெண்டு நாள்லயும் நீங்க கவலையே படாதீங்க நான் நாளைக்கு கையில அப்பாயின்மென்ட் ஆர்டர் ஓட தான் வீட்டுக்கு வருவேன் என்றாள் .



நெஜமாத்தான் சொல்றியா காந்தள் உனக்கு பயம் எல்லாம் எதுவும் இல்லையா நானும் உன் அத்தையும் தான் தேவையில்லாம உன்னோட இன்டர்வியூ பத்தி யோசிச்சு பயப்படறோம்னு நினைக்கிறேன் ஆனா நீ சாதாரணமாக தான் இருக்க என்றார் பத்மா.



அத எனக்கு இந்த வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருக்கு ஆனா... என்று காந்தள் நிறுத்த.



என்னடி ஆனா அவனானு சொல்ற சொல்ல வந்தது முழுசா சொல்லு ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் பயந்து சாப்பிடும் இதுல நீ வேற என்று கடிந்து கொண்டார் சித்ரா.



என்ன மாதிரியே அந்த கம்பெனில என் வேலைக்கு சேர பல வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்குறவங்க நிறைய பேர் இருப்பாங்க அவங்களும் என்ன மாதிரி தானே கஷ்டப்பட்டு நடக்கப்போற இன்டர்வியூவுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்திருப்பாங்க அவங்களையெல்லாம் பீட் பண்ணி நான் எப்படி பாஸ் ஆகணும்னு எனக்கும் கொஞ்சம் உள்ளுக்குள்ள பயம் இருக்கத்தான் செய்யுது என்றாள் காந்தள்.



எத்தனை பேர் வந்தாலும் உனக்கு தான் அந்த வேலை கிடைக்கும் நீ வேணா பாரு உன்னை கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்க என்று சித்ரா தன் மகளுக்கு ஆதரவாக பேசினார்.



சரி ம்மா...நான் போய் கொஞ்ச நேரம் படிக்கிறேன் நேரமே தூங்கினாள் தான் இன்டர்வியூ செய்கிற ஆபீஸ்க்கு நேரமே கிளம்பி போக முடியும் அது ரொம்ப தூரம் இல்லையா அதுவும் இல்லாம நான் சீக்கிரமே கிளம்பினா தான் காலையில பிரெஷா போய் இன்டர்வியூக்கு அட்டென்ட் முடியும் என்று காந்தள் எழுந்து தன் அறைக்குச் செல்ல .



சித்ராவும் பத்மாவும் அங்கே இருந்த கோரப்பாயை எடுத்து ஹாலில் போட்டவர்கள் டிவியில் நடக்கும் வைத்து விட்டு சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உறங்கி போனார்கள்.



மறுநாள் காலை நேரமே எழுந்து விட்டால் காந்தள் சிறிது நேரம் படித்துவிட்டு சென்று குளித்து உடைமாற்றி வெளியே வர..



அவளுக்காக சாப்பிட சமைத்து வைத்துவிட்டு பத்மாவும் சித்ராவும் காத்திருந்தனர்.



அவள் வந்த பிறகு மூவரும் சாமி போட்டோக்கள் மாற்றி வைத்திருந்த சாமி படங்களும் அதற்கு இடையில் இருந்த காந்தலின் அப்பாவின் படத்திற்கும் பூவெல்லாம் போட்டு பூஜை செய்ய தயாராக ஏற்கனவே செய்து வைத்திருந்தால் பத்மா .



மூவரும் சுவாமி படத்திற்கு முன்பு வந்து நின்று விளக்கேற்றி கண் மூடி பிரார்த்தனை செய்தனர்.



தன் மகளுக்கு இந்த வேலை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று சித்ராவும்.



எத்தனை நாள் தாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் காந்தலுக்கு கிடைக்கப் போகிற இந்த வேலையில் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து இனிமேல் அவள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பத்மாவும் காந்தளுக்காக வேண்டிக் கொண்டார்.



பூஜை முடித்து சாப்பிட்ட பிறகு இருவரிடமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு இன்டர்வியூவிற்கு கிளம்பினாள் காந்தள்.





ஒரு மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் காந்தள் கலந்து கொள்ளும் எழுத்துப்பூர்வமான இன்டர்வியூ விற்காக சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் முன்பு வந்து நின்றாள்.



பெயருக்கு ஏற்ப வானுயர்ந்த அந்த கட்டிடம் சூரியனின் வெளிச்சக் கீற்று அந்த கட்டிடத்தின் மேல் பட்டு வெள்ளி கம்பிகளாக சிதறிக்கொண்டு இருந்தது காண்பதற்கே கண்கள் கூசும் அளவிற்கு மிகவும் பளபளப்பாக அந்த கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.



இந்த கட்டிடத்திற்குள் செல்வதற்கு என்று ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதி தனக்கு எப்போது கிடைத்துவிட்டதாக உணர்ந்தாள் காந்தள்.



சற்று பயமும் பதட்டமும் அவள் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது உள்ளங்கைகள் இரண்டும் வேர்த்து விட அதை தன் ஆடையில் துடைத்தபடியே தயங்கி படி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.



இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கட்டடத்திற்குள் நான் நுழைந்திருக்கிறேனா என்று அவளால் நம்ப முடியவில்லை தன்னைத்தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டவள் அது வலிக்கவும் கையை தேய்த்து விட்டுக் கொண்டு லேசாக அச்சரித்தபடி அவளுக்கு நடக்க இருக்கும் எழுத்து தேர்வு அறைக்கு வேகமாக சென்றாள்.



அவளைப் போலவே பல நூறு ஆட்கள் அந்த எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.



தனித்தனியாக கல்லூரியில் எழுதியது போல அவரவருக்கென்று மேதை வழங்கப்பட்டு இருக்க அதில் சென்று அமர்ந்தவள் மனதில் தன் அப்பாவை வேண்டிக் கொண்டு இந்த எழுத்துத் தேர்வில் தான் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று மனமார பிரார்த்தித்தவள்.



அவளுக்காக கொடுக்கப்பட்டிருந்த சீட்டில் உள்ள வினாக்களை படித்து அதற்கான விடைகளை குறிக்க ஆரம்பித்தாள்.



அவளுக்கு கொடுத்திருந்த வினாத்தாள் மொத்தத்தையும் எழுதி பூர்த்தி செய்துவிட்டு நிமிர்த்தபொழுது மதியம் ஆகிவிட்டிருந்தது நேரம் போனதே அவளுக்கு தெரியவில்லை எழுதி முடித்ததில் அவள் முகம் முன்பிருந்த கலவரம் இல்லாமல் திருப்தியாக இருந்தது அதிலேயே அவள் இந்த எழுத்து தேர்வை நன்றாக செய்திருக்கிறாள் என்று உணர்ந்து கொள்ளலாம்.



தேர்வருகை விட்டு வெளியே வர அடுத்து நடக்கவிருக்கும் நேர்கானளுக்கு தயாராக அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஓரமாக போய் யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமர்ந்து கொண்டாள்.



பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த உணவுகள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டது கூடவே குடிக்க தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள்.



காலையில் இங்கே வரும் அவசரத்தில் சரியாக சாப்பிடாத காந்தள் அவர்கள் உணவை கொடுத்ததும் அவசர அவசரமாக அதைப் பிரித்து சாப்பிட்டு முடித்தாள்.



சாப்பிட்டு முடித்த பின்பு எப்போது தன்னை அழைப்பார்கள் என அங்கே காத்திருந்தாள் .





இன்டர்வியூ ஹாலில் நூற்றுக்கணக்கான ஆட்கள் அவளை போலவே அவர்கள் முறைக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர்.



ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தார். ஒரு முதியவர்.



அப்பொது இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் இருந்து ஒரு நபர் போனில் யாருடனோ மிகவும் பவ்யமாக பேசிக்கொண்டு வெளியே வந்தார்.



சார் இது எக்ஸிக்யூட்டிவ் லெவலில் நடக்கவிருக்கும் இன்டர்வியூ இந்த இன்டர்வியூவுக்கு நீங்கள் நேரில் வர வேண்டும் என்று அவசியமும் இல்லை என்றார்.



பேச வேண்டியது பேசி முடிச்சிட்டீங்களா என்றது மறுமுனையில் இருந்து ஒரு குரல் கம்பீரமாக அதே சமயம் இறுக்கமாக.



சாரி சார் சொல்லுங்க என்று பவ்யமாக அந்த நபர் பதிலளித்தார்.



குட், புதிதாக வந்திருக்கும் ஆட்களை நானே நேரில் வந்து இன்டர்வியூ பண்ணனும்னு நினைக்கிறேன் இதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இருக்கா என்று கேட்டான் மறுமுனையில் சிரித்தபடி.



ஆனா சார் இன்னைக்கு மதியம் இன்டர்வியூ ஆரம்பிச்சாச்சு என்றார் அந்த நபர் தயக்கத்தோடு.



அப்போ வந்திருக்கிற அத்தனை பேரையும் இன்னைக்கே இன்டர்வீவ் பண்ணி அனுப்பி விடுவிங்களா நீங்க என கேட்டான் போனில் அவரோடு பேசிக் கொண்டு இருந்தவன்.



எதுவும் பேசாமல் மறுமுனையில் அமைதியாக இருக்க இதுவரைக்கும் எத்தனை பேரை இன்டர்வியூ பண்ணி இருக்கீங்க என கேட்டான்.



ஒரு 30 பேர் இருக்கும் சார் என்றார் அந்த நபர்.



ஓகே அந்த 30 பேரையும் நாளைக்கு வரட் திரும்ப வர சொல்லிடுங்க இப்போ நடக்க இருக்கிற இன்டர்வியூ கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு மதியம் எல்லாரையும் டைமுக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வரச் சொல்லி அனுப்பி வச்சிடுங்க என்றான் சாதாரணமாக.





சார் என்று அந்த நபர் சற்று தயக்கமாக மறுமுனையில் இருந்தவரிடம் பேச முயற்சிக்க.



முடிவெடுத்துட்டேன் நாளைக்கு தான் இன்டர்வியூ எல்லாரையும் அனுப்பிடுங்க இந்த கம்பெனியுடைய அடுத்த சி ஏ ஓ வா வரப்போறவன் நான். கொஞ்சம் சீக்கிரத்திலேயே அந்த பொறுப்பேற்க போறேன் அப்படி இருக்கும்போது எனக்கு கீழே வேலை பார்க்கிறவங்க எப்படி இருக்கணும் அவர்களுடைய வேலை பார்க்கும் திறன் எப்படிப்பட்டதுன்னு நான் நேரில் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டாமா என்றவன் சற்று இறுக்கமான குரலில்.



நான் ஏன் இந்த இன்டர்வியூ திரும்ப வைக்க சொல்றேன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு கீழ வேலை பாக்குறவங்க எப்படி இருக்கணும்னு நான் முடிவு பண்ணனும்னு நினைக்கிறேன் கூடிய சீக்கிரத்திலேயே பொறுப்பேற்க போகும் போற நான் என்னுடன் பணியாற்றுபவர்கள் தலைசிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றான்.



அந்த நபர் போனை காதில் வைத்துக் கொண்டு அவன் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்.



ஓகே சார் நீங்க சொன்னது போலவே செய்கிறேன் நாளைக்கு உங்களை எல்லாம் திரும்ப இன்டர்வியூவுக்கு வரவழைத்து விடுவேன் என்றவர் சுரத்தே இல்லாமல் போனை வைத்தார்.



போன் பேசிவிட்டு ஹாலிற்கு வந்தவர் அங்கிருக்கும் இருப்பவர்களை பார்த்து இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்துனால இந்த இன்டர்வியூ நடக்காது நாளைக்கு மதியம் எல்லாரும் சரியா ஒரு மணிக்கு இங்கே வந்துடுங்க... என்றவர் அங்கே நிற்காமல் திரும்பி உள்ளே சென்று விட...



வெகு தொலைவில் இருந்து இந்த இன்டர்வியூக்கு என்று கிளம்பி வந்திருந்தவர்கள் எல்லாம் அவர் சொல்வதைக் கேட்டு அதிர்த்தி அடைந்தனர் சார் இப்படி திடீர்னு இன்டர்வியூவ நாளைக்கு மாற்றி வைத்துவிட்டால் என்ன அர்த்தம். முன்கூட்டியே சொல்றது இல்லையா என சிலர் கேட்க.



உள்ளே செல்ல இருந்தவர் திரும்பி அவர்களை பார்த்து இந்த கம்பெனில வேலை பார்க்கணும்னு விருப்பப்படுறவங்க மட்டும் நாளைக்கு வந்தா போதும். நாளைக்கு அறை எண் 11ல் இன்டர்வியூ நடக்கும் என்று விட்டு திரும்பி உள்ளே சென்று விட்டார்.
 
Top