- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
Episode -5
இண்டெர்வியூ மறுநாள் ஒத்தி வைத்துவிட செய்தி கேட்டதும் அந்த ஹாலில் காத்திருந்தவர்கள் எல்லாம் அடுத்த நாள் நடக்கவிருக்கும் நேர்காணலுக்காக விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து ஒவ்வொருவராக கலைந்தனர்.
மாலை வரை நேர்காணல் இருக்கும் என்று நினைத்து அவள் வீட்டிற்கு திரும்ப ரயில் டிக்கெட்டை மாலை 5 மணிக்கு புக் செய்து இருந்தால் அதுவரையில் நேரம் கடத்த வேண்டுமே .. என்ன செய்வது என்று யோசித்தவள் . சில்வர் லைன் ஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்து கால் நடையாக இந்த ஊரின் அழகை ரசித்துக்கொண்டே ரயில் நிலையத்திற்கு நடந்து செல்வது என்று தீர்மானித்தாள் .
மொபைலை எடுத்து தனது wired headphones -ஐ எடுத்து காதில் அணிந்தவள் தனது play லிஸ்ட்டில் இருந்து பாடலை ஓடவிட்டு கேட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடி அவள் நடந்து சென்று கொண்டு இருந்தாள் . அந்த நகர வீதிகளில் அமைந்து உள்ள பெரிய பெரிய ஷாப்பிங் மால்களையும் , தியேட்டர்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் . இங்கே வருவதற்கென்றே தனியாக சம்பாரிக்க வேண்டும் போல் இருந்தது . அந்த இடங்களுக்கு எல்லாம் வந்திருக்கும் அவள் வயதை ஒத்த மனிதர்களை பார்த்தாள் .
மிகவும் ஸ்டைலாக ஆடம்பரமான உடை உடுத்தி தங்கள் ஜோடிகளுடன் சிறிது பேசிய படியும், உரசிக்கொண்டு நெருக்கமாகவும், கைகளை கோர்த்துக்கொண்டும் சிலர் மட்டும் வீதிகளில் நடந்து சென்றனர். இது வேலை நாட்கள் என்பதால் makal;இந்த கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது . அவர்களை எல்லாம் பார்க்கும்போது அவளுக்கும் அது போல எந்த கவலையும் இன்றி சுற்றித்திரிய வேண்டும் என்று தோன்றியது . அதே யோசனையில் அவளையும் அறியாமல் அவள் கால்கள் அந்த பிரம்மாண்ட மாலிற்குள் நுழைந்தது .
இவ்வளவு நேரம் மத்திய வேலை வெயிலில் நடந்து வந்தவளுக்கு அந்த மாலுக்குள் நுழைந்ததும் அவளை முகத்தில் குளிர்காற்று தழுவி இதமாக வரவேற்றது . கண்கள் மூடி அதை அனுபவித்தவள் சட்டென்று கண் திறந்து பார்த்து " இங்கே எப்படி நான் வந்தேன்?" என்பது போல யோசித்தவள் . தன் மொபைலை எடுத்து மணி பார்த்தாள் மணி 2 என்று காட்டியது . ட்ரைனிற்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கிறது . தவிர இங்கே இருந்து அவள் செல்ல வேண்டிய ரயில் நிலையம் அரை மணி நேர பயணத்தில் சென்று விடலாம் . அதனால் இந்த வானுயர்ந்த ஷாப்பிங் மாலில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு றையில் நிலையத்திற்கு புறப்படலாம் என்று தோன்றியது காந்தளுக்கு .
மற்றவர்களை போல இந்த மாலை வெட்டியாக சுற்றி பார்க்கவோ , இல்லை பெற்றோர் சம்பாரித்து வாய்த்த காசை ஊதாரித்தனமாக செலவு செய்வதிலோ அவளுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை . கல்லூரி படிப்பை முடித்ததும் தன் அம்மாவின் ரெஸ்டாரண்டில் வேலை செய்து அவருக்கு உதவியும் , பகுதி நேர வேலைகள் செய்து தன் செலவுகளையும் பார்த்துக்கொள்ளும் 21 வயது பொறுப்புள்ள பெண் நம் காந்தள் .
அதனால் வெயிலில் அலைந்து தெரிவதற்கு பதிலாக இந்த மாலில் சற்று இளைப்பாற முடிவெடுத்தாள் . மெதுவாக அந்த மாலை வேடிக்கை பார்த்துக்கொண்டே தனக்கு ஓய்வு எடுக்க ஒரு அமைதியான இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே சென்றாள் .
முதல் தளத்தின் முடிவில் லிப்ட்டிற்கு அருகில் சற்று தள்ளி ஒரு பெஞ்ச் இருந்தது . அதை பார்த்ததும் அடஙக பெஞ்சின் அருகில் சென்று சுற்றிலும் பார்த்தாள் . அந்த இடம் யாரேனும் சிறிது நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட இடம் போல இருந்தது . அதை பார்த்து நிம்மதி அடைந்தவள் அந்த பெஞ்சில் நொடியும் தாமதிக்காமல் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
பாட்டு ஒரு பக்கம் அவள் காதில் ஓடிக்கொண்டு இருக்க... அதன் மேட்டிற்கு ஏற்ப அவள் கைகளும் கால்களும் தாளம் போட்டுகொண்டு இருந்தது . அந்த இடத்தின் அமைதி அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது . அதை அனுபவித்தவாறு அமர்ந்து இருந்தாள் .
அந்த இடத்தை சுற்றிலும் நோட்டமிட்டு கொண்டிருந்தாள் இது வேலை நாள் என்பதால் அந்த மாலுக்குள் கூட்டம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது ஒன்று இரண்டு மனிதர்கள் மட்டுமே இங்கும் அங்கும் சென்று கொண்டிருக்க அவர்களும் காலேஜை கட்டடித்து விட்டோம் வேலை நேரத்தில் இடையில் பொழுதை கழிக்கவும் இங்கே வந்திருப்பது போல அவர்களை பார்க்கும்போது உணர்ந்தாள் .
சில ஜோடிகள் கைகள் கோர்த்துக்கொண்டு ரகசியம் பேசியபடி நின்று இருக்க அதை பார்த்து பெருமூச்சு விட்டவள் கண்கள் மூடி பாடலை கேட்டுக்கொண்டே தன் எண்ண ஓட்டங்களை அலைய விட்டாள் . காலையில் தான் எழுதி வந்த இன்டர்வியூவை பற்றி யோசிக்கலாம் ஆரம்பித்தால் அந்த இன்டர்வியூ தேடி விடுவேன் என்றும் உறுதியாக சொல்ல முடியாது தோற்றுவிடுவேன் என்றும் தளர்ந்து போக முடியாது ஓரளவிற்கு திருப்திப்படும் படியே அந்த இன்டர்வியூவை எழுதி இருந்ததாக அவளுக்கு தோன்றியது .
தன்னுடைய நீண்ட நாள் கனவான சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோவில் முக்கியமான வேலையில் தான் வேலை செய்ய வேண்டும் என்பது கனவாகவே இல்லாமல் நனவாகும் வாய்ப்பு என்பது சதவீதம் இருக்கிறது என்று நம்பினாள் .
ஏற்கனவே எழுதி முடித்த தேர்வை பற்றி யோசித்து மனதை குழப்பத்தில் ஆள்வது எந்த பிரயோஜனமும் கிடையாது நடந்து முடிந்ததை நினைத்து கவலைப்பட்டு நேரத்தை கடத்துவது விட அடுத்து நடக்க இருப்பதையும் நடக்கப் போவதையும் எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்க வேண்டும் என நினைத்தாள் .
அடுத்த நாள் நடக்கவிருக்கும் இன்டர்வியூவில் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் எப்படிப்பட்ட ஆட்களை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று யோசனையாக அவளுக்கு இருந்தது தனக்கு இந்த துறையில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் போதுமான அளவிற்கு எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது .
அவள் இந்த வேலைக்கு சேர வேண்டும் என்று நிறைய கனவுகள் கண்டிருந்தாலும் அதற்கான உழைப்பை சிறிதளவு தான் செலவிட்டிருக்கிறாள் அவளுடைய பகுதி நேர வேலைகள் போக கிடைக்கும் நேரத்தில் தான் சில்வர் லிங்ஸ் ஸ்டுடியோவில் சேரப் போகும் வேலைக்காக நேரம் ஒதுக்கி அதைப்பற்றி படித்து சில வேலைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் .
திடீர் என்று "ஊ அண்ட வா ... மாமா உ ..உ.. அண்டவா ... மாமா! " என்ற பாடல் சத்தமாக ஒழிக்க ஆரம்பிக்க .. கண்கள் மூடி அமர்ந்து இருந்தவள் அவசரமாக கண்களை திறந்து தன மொபைலை பார்க்க... அதில் கனெக்ட் செய்து இருந்த அவளது headphone கழட்டிவிட்டு இருந்தது . அவள் கேட்டுக்கொண்டு இருந்த பாடல் சத்தமாக அந்த பிளோரில் எதிரொலிக்கவே அங்கே சென்ற சிலர் அவளை நின்று திரும்பி பார்த்துவிட்டு செல்ல... அவசரமாக தன் மொபைலை ஆன் செய்து அந்த பாடலை நிறுத்தியவள் .
" எப்படி தன் மொபைலில் மாட்டி இருந்த headphone கழண்டு போனது" என்று யோசனையில் திரும்பி பார்க்க.. அவளுக்கு மிக அருகில் லேசாக புன்முறுவல் செய்தபடி ஒரு ஆண்மகன் அவள் அருகில் அமர்ந்திருந்தான். இருந்த அவள் அமர்ந்திருந்த மர பெஞ்சில் அவ்வளவு இடம் இருக்கையில் அவளை லேசாக உரசியபடி காந்தளின் அருகில் அமர்ந்திருந்த அந்த ஆண்மகனை புரியாமல் பார்த்தாள் .
"உங்களுக்கு இந்த மாதிரியான பாடல் தான் அதிகம் பிடிக்குமா?" என்று கேட்டான்.
தன் அருகில் அமர்ந்திருந்தவன் மீது கோபம் வராமல் அவன் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கணும்னு நினைச்சேன் ஆனா தூங்கிடக்கூடாது இல்லையா என் மூளையை தூங்க விடாமல் செய்வதற்காகத்தான் இந்த பாட்ட ஓட ஓட விட்டேன் . இல்லைன்னா தலைப்பில் என்னையும் அறியாமல் தூங்கிடுவேன் என்று தன்னுடைய ஹெட் போனை எடுத்து கையில் வைத்து சுருட்டியவள் அதை தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்து படி அவனிடம் பேசினாள் .
அவனும் சிரித்துக்கொண்டே சில்வர் லைன் ஸ்டுடியோவின் இன்டர்வியூ நல்ல முறையாக போனதா என்று கேட்டான் .
அவன் கேட்ட கேள்வியில் ஆச்சரியப்பட்டவள் இவனுக்கு எப்படி நான் இன்று இண்டர்வியூ சென்று வந்தது தெரியும் என யோசித்தவாறு தன்னைப் பார்க்க இன்டர்வியூவில் அட்டென்ட் செய்வதற்காக அவர்கள் கொடுத்திருந்த டேக்கை கழுத்தில் அணிந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள் . அதை வைத்துத்தான் அவன் கேட்டிருக்க வேண்டும் என்று நினைத்தவள் "ம்ம்ம்....பரவாயில்லை ஓரளவுக்கு நல்லா எழுதி இருக்கேன்" என்றாள் அவனைப் பார்த்து சினேக புன்னகை பூத்தபடி.
அவனை மிக அருகில் பார்க்கும் போது என் வயிற்றுக்குள் ஏதோ ஒரு ஒருவித பயமோ பதட்டமோ வலியோ என்று சொல்ல முடியவில்லை ஆனால் ஏதோ ஒன்று தோன்றியது. இதயம் லேசாக படபடுத்தது. தனக்கு மிக அருகில் அமர்ந்து மென்மையாக பேசியபடி அழகான முகத்தோட்டத்தோடு அமர்ந்திருந்த அந்த ஆண்டவனை அப்போதுதான் முழுவதுமாக கவனித்தாள் .
அவன் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் அதே சமயம் கவர்ச்சியான முகத்தோற்றத்தோடும் இருந்தான் அவனின் பார்வை அவளை ஊசியாக குத்தி துலைத்தது போல அவள் இதயம் உணர்ந்தது . அவள் அருகில் அவன் அமர்ந்திருந்தாலும் அவனுடைய உயரம் வழக்கமானவர்களை விட சற்று உயரமாக இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்தியது கண்டிப்பாக ஆறடிக்கும் மேல் தான் அவன் இருக்க வேண்டும் .
ஒரு வெள்ளை நிற சர்ட்டும் ,ப்ளூ நிற ஜீன்ஸும் அணிந்திருந்தான். சட்டை அவன் உருவத்திற்கு சற்று பெரிதாக இருந்தது இருந்தாலும் சட்டைக்குள் இருக்கும் அவன் உடற்கட்டு ஓரளவிற்கு எப்படி இருக்கும் என்று காந்தளால் யூகிக்க முடிந்தது .
"ம்ம்ம்ம்... யார் இவன்? எதுக்காக என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கான். என்னோட இன்டர்வியூ பத்தி எல்லாம் எதுக்காக இவ்வளவு அக்கறைய கேட்கிறான்" என்று யோசனையோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தால் காந்தள் .
"இன்னைக்கு எழுதின தேர்வில நீங்க பாஸ் ஆயிடுவீங்கன்னு நம்புறீங்களா?" என மெலிதாக அதே சமயம் கனிவாக அவளை பார்த்து சிரித்தபடி கேட்டான்
அவன் பார்வையில் இருந்த கனிவு முகத்தில் இருந்த வசீகரம் அவளுக்கு அவனிடமிருந்து தன் பார்வையை திருப்ப முடியாமல் சிரமமாக இருந்தது.
அவளையும் அறியாமல் தன் அருகில் அமர்ந்திருக்கும் அந்த ஆணை அவள் மனம் ரசித்தது . சிரமப்பட்டு அந்த எண்ணத்தில் இருந்து அவன் கேள்வியில் வெளிவந்தவள் . "ம்ம்ம்... பாஸாகிடுவேன்னு நம்பிக்கை இருக்கு இன்னைக்கு மதியம் நடக்கவிருக்கிற நேர்முக தேர்வு நாளைக்கு ஒத்தி வச்சுட்டாங்க" என்றாள் அவன் கேட்காமலேயே.
" ஓ ... ஆமா நான் அதை மறந்துட்டேன்" என்றான்.
அவன் சொன்னது அவள் காதுகளில் சரியாக விழவில்லை "சாரி , நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் சரியா கவனிக்கல" என்றாள் குழப்பமாக அவனைப் பார்த்து.