- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
Episode -8
இன்டர்வியூ ஹாலுக்குள் நுழைந்த காந்தள் அவளை இன்டர்வியூ செய்யும் நபர்களோடு ஒருவராக அமர்ந்திருந்தவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் .
உண்மையாகவே தனக்கு எதிரே இருப்பவன் தான் தன்னை இன்டர்வியூ செய்யப் போகிறானா? என்று அவளுக்கு ஆச்சரியமானது .
நேற்றைய விட இன்று சற்று வித்தியாசமாக இருந்தான் நேற்று ஃபார்மல் உடையில் அழகாக மிகவும் சிம்பிளாக தெரிந்தவன். இன்று மிடுக்கான தொழில்துறையினர் உடை அணிந்திருப்பது போல இருந்தான் . அவனை பார்த்ததுமே காந்தள் அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.
ஆனால் அவனும் அவளை தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு அவளை தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு அவனுடைய பார்வை இருந்தது.
அவள் தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவன் மீது இருந்து தன் பார்வையை அகற்றாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க...
அவளோடு இன்டர்வியூவிற்கு வந்தவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் வேலை அனுபவங்கள் பற்றியும் தங்களை நல்லவிதமாக எடுத்துக்காட்டும் சில விஷயங்களை கூறிக் கொண்டிருந்தனர்
அவனை பார்த்ததிலிருந்து காந்தளுக்கு சுற்றிலும் என்ன நடக்கிறது என்று யோசிக்கும் அளவிற்கு கவனத்தில் இல்லாமல் உறைந்து போய் இருந்தாள் .
நேற்று மாடியில் சந்தித்த அந்த நபர் அவள் எதிரில் அமர்ந்திருந்தும் அவளை தெரியாதவள் போல காட்டிக் கொண்டு அமர் இருந்தவன். காந்தள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான்
அவளோடு வந்திருந்தவர்கள் தங்களுடைய அறிமுக படலத்தை முடித்துக் கொண்ட பிறகு அவளுக்கு எதிரே இருந்த மூவரின் பார்வையும் காந்தளின் மேல் விழுந்தது .
நடுவில் அமர்ந்திருந்தவன் காந்தளை பார்த்து உங்கள பத்தி சொல்லுங்க. நீங்க ஏன் இந்த வேலையில் சேர விரும்புகிறீர்கள் என்றான் .
காந்தள் தன்னைப் பற்றியும் தன்னுடைய படிப்பு வேலை அனுபவம் பற்றி எடுத்துக் கூறியவள் . தான் இந்த விளம்பர துறையில் வேலை சேர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது காந்தளுடைய தந்தை தான் என்றும். அவர் இதே சில்வர் லைன் ஸ்டுடியோவில் 20 வருடங்களுக்கு முன்பாக விளம்பரத் துறையில் ஒரு முக்கிய பதவியில் வேலை செய்து வந்ததை குறிப்பிட்டு கூறியவள் .
என் அப்பாவை போலவே நானும் இந்த துறையில் ஒரு நல்ல பதவியை அடைந்து என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளனும்னு நினைக்கிறேன் என்றாள்.
நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துகிறது என்றாள் முதல்ல இந்த விளம்பர துறை சம்பந்தமாக நிறைய படிங்க அதற்கான இடத்தை தேடி போக வேண்டியது தானே. ஆனா இங்கே இன்டர்வியூ நடந்துட்டு இருக்கு. இங்கே வந்து உங்கள் திறமையை வளர்த்துக்கிறேன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு என்றான் அவள் எதிரி அமர்ந்திருந்தவன் சிறிதும் இரக்கமில்லாமல்.
அவனை வெறுக்கும் பார்வை பார்த்த காந்தள் என் திறமையை வளர்த்துக் கொள்கிறேன் என்றால் எனக்கு ஒன்றுமே தெரியாது என நீங்களாகவே முடிவு எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய பைலில் நான் பிரபல விளம்பர துறைகளில் பார்ட் டைமராக வேலை செய்து கொண்டு வந்ததும். என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து அனைத்து விபரங்களும் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை வேண்டுமானால் ஒரு முறை பரிசீலனை செய்து விட்டு இந்த கேள்வியை என்னிடம் கேளுங்கள் என்றாள் நெஞ்சை நிமுர்த்தி கொண்டு .
அவள் பதிலில் இம்ப்ரஸ் ஆனவன் சிரித்த புன்னகையோடு அவன் முன்னால் இருந்த காந்தளின் பைல்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்
தனது போட்டி கம்பெனியான ஜீப்ரா ஸ்டுடியோவில் அவள் ஓராண்டு காலம் பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டு வந்ததை அதில் போட்டிருக்க அதில் அவருடைய பதவியையும் பார்த்துவிட்டு திருப்தியாக தலையாட்டியவன் மேலும் சில கேள்விகளை அவளிடம் கேட்டுவிட்டு அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்தான் .
அந்த இன்டர்வியூ அறையை விட்டு வெளியே வந்ததும் தான் காந்தளுக்கு சீராக மூச்சு விடுவது போல தோன்றியது. அவனை நேருக்கு நேராக பார்க்க பார்க்க அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டே அவளை சரியான மனநிலையில் இருக்க விடாமல் செய்தது .
அவள் மூளை சரியாக வேலை செய்ததா என்று அவளுக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு தன் முன்னால் அமர்ந்திருந்தவனின் தோற்றம் அவளை நிலை குலைய செய்தது .
அவளுக்கு நடந்த இன்டர்வியூவில் அவள் சரியாக பர்ஃபார்ம் செய்தாளா என்று காந்தளாலேயே உணர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அவள் உள்ளம் தரிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது தனக்கு எதிரே இருந்தவனை பார்த்து .
சிறிது நேரம் அங்கே போடப்பட்டிருந்த சேரில் அமைதியாக அமர்ந்து தன் மூச்சை உள்ளெழுத்து தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்தவள். அவள் மனநிலையும் இதயமும் அவள் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு அந்த அறையை விட்டு வெளியேறினாள் .
அச்சச்சோ அவனைப் பார்த்த அதிர்ச்சியில அவனோட பணத்தை திருப்பிக் கொடுக்க மறந்துட்டேனே. இப்ப எப்படி அதை கொடுக்கிறது எத்தனை நாள் நான் இதை பத்திரப்படுத்தி வச்சிட்டு இருக்க முடியும். இன்னைக்கு எப்படியாவது இந்த பணத்தை திருப்பி கொடுத்துட்டு தான் இங்கிருந்து போகணும் என்று முடிவு செய்தவள் சில்வர் லைன்ஸ் ஸ்டுடியோ வாசலில் அவளுக்காக காத்திருந்தாள் எப்படியும் அவன் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இந்த வழியாக தானே வெளியே செல்ல வேண்டும் என்று அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
அந்த இடைப்பட்ட வேலையில் அவனைப் பற்றிய தன் என்ன ஓட்டங்களை காந்தளால் நிறுத்த முடியவில்லை . இவன் எதுக்காக இங்கே இன்டர்வியூக்கு வந்திருக்கான் அவன் இங்க தான் வேலை பார்க்கிறானா? அவன் பேர் என்னன்னு கூட நான் சரியா கவனிக்கலையே என்று கண்கள் மூடி யோசித்தவள்.
அவனுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் அமர்ந்திருந்தவர்களின் பெயரும் அவர்கள் அங்கே என் வேலை செய்கிறார்கள் என்ற குறிப்பு ஒரு பலகையில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இவன் முன்பு எந்த ஒரு குறிப்பும் இல்லையே. எதுவுமே அங்கு குறிப்பிடவில்லையே என்று யோசனையாக இருந்தது காந்தளுக்கு .
அவள் இந்த சில்வர் லைன் ஸ்டூடியோவில் எந்த பதவியில் இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
அவனைப் பற்றி விவரம் சொல்லி யாரிடம் கேட்பது என்றால் விவரம் சொல்லும் அளவிற்கு அவளுக்கு அவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாது .
அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உயரமாக அதே சமயம் ஹாண்ட்சமாக இருக்கிறான். ட்ரிம் செய்யப்பட்ட மீசை, நேற்று காற்றில் அசந்தாடிய அவன் தலை முடி இன்று படு ஸ்டைலாக சீவப்படிருந்தது . தான் அவன் எதிரே நின்றிருந்தாள் அவனை லாம்போஸ்டில் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயரமாக இருந்தான் . இந்த அடையாளங்களை யாரிடம் சொல்லி அவனைப் பற்றி விசாரிப்பது என்று தோன்றியது. அப்படியே தனக்கு தெரிந்த அடையாளங்களை சொன்னால் தன்னை எல்லோரும் கேலியாக பார்ப்பார்கள் என்று நினைத்தவள் யோசனையோடு அங்கே நின்று இருக்க மாலையை கடந்து விட்டது .
ஆஃபிஸில் இன்டெர்வியு முடிந்து அனைவரும் சென்று இருக்க... அங்கே வேலை. பார்ப்பவர்களும் கிளம்பிவிட்டு இருந்தனர்.
இன்னுமா அவன் இங்கு வரவில்லை இன்டர்வியூ முடிந்து அனைவரும் சென்று விட்டார்களே என்று யோசனையோடு நின்றிருந்தவள். அப்போதுதான் அதை உணர்ந்தாள்.
இந்த பில்டிங்கில் இந்த ஒரு வாசல் மட்டுmn இல்லையே வேறு வாசல்கள் இருக்குமே ஒருவேளை அவன் அந்த வாசல் வழியாக வெளியேறி இருந்தால் என்ன செய்வது என்று யோசித்து குழம்பினாள்.
ஒரு முடிவுக்கு வந்தவளாக அங்கே இருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்தவள். அந்த இடத்தை விட்டு நகரப் போக...
ஹே boo... நீ இன்னும் இங்க தான் இருக்கியா என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரல் அவளை நோக்கி நெருங்கி வந்தது .
கிளம்ப இருந்தவள் குரல் வந்த திசையை யோசனையோடு அதே சமயம் யார் என்ற திரும்பிப் பார்க்க அவள் எதிர்பார்த்தது போல நேற்று ஷாப்பிங் மாலில் சந்தித்தவன், இன்று தன்னை இன்டெர்வியூ செய்தவன் அவளை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தான் .
அவனே பார்த்ததும் அவனிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்து இருந்தாளோ அவையெல்லாம் மறந்து போனது காந்தளுக்கு. அவள் மூளை மழுங்கி விட்டதா என்ன .. அவள் எதுவும் பேசாமல் வாய் பிளந்தபடியே தனக்கு எதிரே நின்றிருந்தவனையே பார்த்துக் கொண்டு இருக்க ..
அவன் மேலும் அவள் அருகில் நெருங்கி வந்து மெல்ல புன்னகைத்தவன் நீ எனக்காக தான் காத்துட்டு இருக்கியா என ஆர்வமாக கேட்டான் .
அ... ஆமாம் என்று தலையாட்டினாள்.
அவள் பதிலில் திருப்தி ஆனவன் காந்தளை மேலும் நெருங்க... அவளை விழிகள் அவன் நெருக்கத்தை கண்டு அகல விரிந்தது.