layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
இதோ பாருங்க நீங்க என் கழுத்துல கட்டின தாலி இன்னும் என் கழுத்தில் தான் இருக்கு.



என்ன தெரியலையா மாமா நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க என்று அவன் எதிரில் நின்றிருந்த அந்தப் பெண் அவனிடம் வலிய வந்து பேச....



அந்த பெண்ணின் குரல் தேனை விடவும் மிகவும் கேட்பதற்கு இனிமையாக இருக்க அவள் கேட்ட கேள்விக்கு தானாக இல்லை என்று தலையாட்டினான்.



உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்டுனது ஞாபகம் இருக்காது மாமா அது எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் நீங்க எப்போ என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ அப்போல இருந்து நான் உங்களை மட்டும் தான் நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்.



சீக்கிரமா என்னை வந்து உங்க கூட அழைச்சிட்டு போங்க மாமா இந்த இடம் பார்க்கறதுக்கு சொர்க்கமாக தெரிந்தாலும் இங்கே எனக்காக இருப்பது யாருமே இல்லை நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.

என்னை உன் கூடவே வச்சுக்கோ மாமா என்னை உன் கூட கூட்டிட்டு போ மாமா என்று அவனை நோக்கி கை நீட்டிக்கொண்டு அந்தப் பெண் வர...

என்னை வந்து அழைச்சிட்டு போய் உங்க கூடவே வச்சுக்கோங்க மாமா நான் எப்பவும் உங்க பக்கத்திலேயே இருக்கணும்னு ஆசைப்படுறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த பச்சை நிற விழியுடைய பெண் வீராவை நெருங்கி வந்தவள்

அந்தப் பெண் தன்னைத்தான் அவளுடைய கணவன் என்று சொல்லி உரிமை கொண்டாடிக் கொண்டு வீராவின் அருகில் வர...



அவளை அருகில் வரவிடாமல் தடுக்க வீரா பின்னால் நகர்ந்து கொண்டே சென்றவன் பின்னால் இருந்த ஏரியில் காலிடரி உள்ளே விழுந்தான்.

தண்ணீருக்குள் விழுகிறோம் என்று நினைத்துக் கொண்டு கனவில் இருந்த வீரா மெத்தையிலிருந்து கீழே விழ...

தூக்கத்தில் இருந்து விழுந்த வேகத்தில் கண் விழித்த வீரா தன்னைச் சுற்றிலும் பார்க்க.... வினுவும் யாராவும் வீராவை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.

அவர்களை கண்விழித்ததும் புரியாமல் வீரா பார்க்க என்ன வீடு அப்படி பாக்குற இந்தியா வந்துடுச்சு சீக்கிரம் எழுந்து வா என்ற யாரா...

நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் குடும்பத்தை சந்திக்க போகும் சந்தோஷத்தில் அவனை எழுப்பி விட்டு பிளைட்டிலிருந்து கீழே இறங்கி செல்ல....

அவள் பின்னாலேயே சிரித்துக் கொண்டு சென்ற வினோ ஏன் யாரா பார்த்து போடி கீழே விழுந்துடாத என்று அவள் பின்னால் செல்ல...

ஆனால் வீராவோ மிகவும் குழப்பத்தோடு எழுந்தவன் தன் கோட்டையும் டையையும் எடுத்து மாட்டிக்கொண்டு ஃப்ளைட்டிலிருந்து கம்பீரமாக இறங்கினான்.

வீரா தனி விமானத்தில் இருந்து இறங்கி வர... தங்கள் மூன்று பிள்ளைகளும் ஒன்றாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வருவதை காண்பதற்காக மீனு விக்ரம் இருவரும் அங்கே வந்து இருக்க...

யாரா பிளைட்டிலிருந்து இறங்கியதும் புறத்தில் நின்று இருந்த மீனவையும் விக்ரமையும் பார்த்தவள்.

அவர்களை நோக்கி தன் கைகள் இரண்டையும் நீட்டிய வாரே அம்மா.... அப்பா... என்று அழைத்துக் கொண்டு ஓடிப் போய் விக்ரமையும் மீனுவையும் சேர்த்து கட்டிக் கொண்டாள்.

இருவரும் யாராவே நெற்றியில் முத்தமிட்டவர்கள். எப்படி இருக்க யாரா உன் காலேஜ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது தானே என்று கேட்க..



ஐயம் குட் அப்பா... என்று சொன்னவள். விக்ரமின் தலையை பார்த்து என்னப்பா உங்களுக்கு முடி இல்லம் நறைஞ்சிருச்சு என்று சொல்ல...

உடனே மீண்டும் ஏன் உன் அப்பாவுக்கு ஒன்னும் அவ்வளவா நினைக்கல இருக்கிற கருப்பு முடியல அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று வெள்ளை முடி மட்டும்தான் தெரிகிறது என்றால் மீனு.

அப்பாவை மட்டும் எதுவும் சொல்லிட கூடாதே உடனே என்கிட்ட வம்புக்கு வந்துருவ நான் இப்போதுதான் இந்தியா வந்திருக்கேன் வந்ததுமே நீ என்ன வம்பு கீழ இருக்காத மம்மி என்றவள் சரி வாங்க போகலாம் என்று அவர்கள் இருவரையும் அழைக்க...



என் பிள்ளைங்க ரெண்டு பேரும் வரட்டும் அவங்களோட போகலாம் என்று மீனு யாரா உடன் செல்லாமல் நின்று இருக்க....



பின்னால் வந்து வினோ மீனுவை கட்டிக் கொள்ள.... அதை அருகில் இருந்து பார்த்த விக்ரம். வந்துட்டாண்டா அம்மா பிள்ளை எப்ப பாரு அம்மாவோட முந்தானைய பிடிச்சுக்கிட்டு இனி சுத்த ஆரம்பிச்சிடுவேன் என் பொண்டாட்டி பக்கத்துல என்ன போகவே விடமாட்டான் என்று வினுவை திட்டிய விக்ரம்.

பிளைட்டில் இருந்து இறங்கி ஏதோ யோசனை உடன் வீரா நடந்து வருவதை விக்ரம் பார்த்தவன் தன் அருகில் வீரா வந்ததும்.



வீராவின் தோளில் கை போட்டு நண்பன் போல அவனுடன் பேசிக்கொண்டு சிறிது தூரம் அங்கிருந்து நகர்ந்து வந்தவன்.

வீராவின் தோளிலிருந்து கையை எடுத்த விக்ரம் தனக்கு எதிரே வீராவை நிற்க வைத்து அவன் முகத்தை பார்த்து.

என்ன ஆச்சு வீரா ஏதோ குழப்பத்திலேயே இருப்பது போல தெரிகிறது. உனக்கு பிசினஸ்ல எதுவும் பிரச்சனையா இல்ல எதுவும் ஒர்க் டென்ஷனா என்று கேட்டால் விக்ரம்.

நோ டேடு அது எல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான் நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்விடும் என்று சொல்ல...



சரி வா வீர அப்போ சீக்கிரமா கிளம்பலாம் என்று சொல்லி விக்ரம் வீராவை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல...



மீனு யாராவிடமும் வினுவிடமும் பேசிக் கொண்டு இருந்தவள். தன் மற்றொரு மகன் வீரா வந்ததும் தன்னை மறந்து விட்டு விக்ரம் அவர்கள் மூவரையும் தாண்டி செல்வதை பார்த்தவள்



உன் அப்பாவுக்கு அவர் செல்ல மகன் வீராவை பார்த்ததும் நம்மையெல்லாம் மறந்துவிட்டார் என்று சொல்லிற் சிரித்தவள் சரி வாங்க நம்மளும் கிளம்பலாம் இல்லன்னா நம்ம மூணு பேரையும் மறந்துட்டு அவங்க ரெண்டு பேரும் போயிடுவாங்க என்று சொல்லி யாராவையும் வினுவையும் அழைத்துக் கொண்டு அவர்களோடு சென்றால் மீனு.



யாரா மீனு வினோ விக்ரம் நால்வரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டிற்கு செல்ல சொல்ல..

இப்போதான் டெக்ஸாஸ் போய் ஒரு வாரம் கழிச்சு இந்தியாவுக்கு வந்திருக்க வந்ததும் ஆபீஸ் வேலைன்னு மறுபடியும் ஓய்வு இல்லாம சுத்தணுமா வீரா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு கூட போகலாம் இல்ல என்று தாயின் அக்கறையோடு மீனும் கூற

வீரா தனக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு காரில் கிளம்பினான்

இவனை திருத்தவே முடியாது என்று நால்வரும் கிளம்பி வீட்டிற்கு செல்ல...



எங்கே வீரா தன் கனவில் வந்து தன்னை உரிமையாக கணவன் என்று சொல்லும் அந்த பச்சை நிற விழியுடைய பின் யாராக இருக்கும் என்ற யோசனையோடு ஆபிஸ் இருக்கு பயணப்பட்டான்
 

Author: layastamilnovel
Article Title: வசீகரா 3.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top