- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
காரில் ஏறியதிலிருந்து பிளைட்டில் தான் கண்ட கனவை பற்றிய யோசனையிலேயே வீரா இருந்தான்.
அந்த பச்சை நிற கண்களை வைத்துக் கொண்டு தன்னை உரிமையாக வீரா மாமா என்று அழைக்கிறாள்.
அவள் கழுத்தில் நான் தாலி கட்டி விட்டேன் எனக்காக தான் காத்திருப்பதாக இருப்பதாக சொல்கிறாள்.
சாந்தமான அவள் முகமும் அந்த பச்சை நிற விழிகளும் அவன் கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை.
தன்னிடம் அவ்வளவு உரிமையாக பேசிய பச்சை நிற விழிகளை இப்போதே பார்க்க வேண்டும் போல வீராவிற்கு தோன்றியது.
உடனே தன் போனை எடுத்து யாருக்கோ கால் செய்தவன் கால் அட்டென்ட் ஆனதும் எங்கே இருக்க என்றான் அந்த பக்கம் வந்த பதிலை கேட்டு சரி வை நான் வரேன் என்று மட்டும் சொன்னான்.
பேசிவிட்டு போனை வைத்த வீரா டிரைவரிடம் காரை தான் சொல்லும் இடத்திற்கு திருப்பச் சொன்னான்.
கார் நேராக வந்து ஒரு வீட்டில் வாசலில் முன்பு நிறுத்த...
காரில் இருந்து வேகமாக இறங்கிய வீரா அதே வேகத்தோடு வீட்டிற்குள் செல்ல அப்போதுதான் போன் பேசிவிட்டு வைத்தவன்.
அவன் அப்பனை போலவே அவன் புள்ளையும் சரியான அதிகாரம் பிடிச்சவனா இருக்கான்.
கொஞ்சமாவது மாமான்னு மட்டு மரியாதை இருக்கா.... போன் பண்ணினதும் எப்படி இருக்கு மாமா..நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்டிருப்பானா...என்று புலம்பிக் கொண்டே குரு போனை வைத்துவிட்டு திரும்ப....
குருவின் எதிரே கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் வீரா.
அவனைப் பார்த்து வழிந்து படி சிரித்த குரு என்ன அவசரமா போன் பண்ணி எங்க இருக்கேன்னு கேட்டேன் போன் வைக்குறதுக்குள்ள வீட்டுக்கே வந்தாச்சு என்ன விஷயம் என்றான்.
ஒன்றும் இல்லை உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு. அதுதான் ஊர்ல இருந்து வந்ததும் நேரா உன்னை பார்க்க வீட்டுக்கு வந்துட்டேன் என்றான் வீரா.
கையில் சூடாக காபியுடன் வந்த பிரியா ஏங்க வந்த பையன் இப்படி நிக்க வச்சு பேசிக்கிட்டு இருப்பீங்களா என்று சொன்னவள்..
வா... வீரா உட்காரு என்று அவனை சோபாவில் அமர சொல்லிவிட்டு அவன் கையில் சூடாக காபியைக் கொடுத்தால்
இவளும் வந்துட்டாளா இனி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன பேசியே கொன்றுவாங்க என்று நினைத்த குரு நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு குரு கிளம்பினான்.
பிரியா வீராவிடம் யாரா வந்துட்டாளா வீரா என்றாள்.
வந்துட்டா அத்தை அவ அம்மா அப்பா கூட ஏர்போர்ட்ல இருந்து அப்படியே வீட்டுக்கு போயிட்டா நான் இந்த பக்கமா ஒரு மீட்டிங் காக வந்தேன்.
அப்படியே நீங்க எல்லாம் வீட்ல இருக்கீங்களா என்று கேட்டு உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று தேவையே இல்லாமல் பொய் சொன்னான் .
பிரியாவிடம் பேசிக்கொண்டே காபியை குடித்தவன் தன் கண்களை அவள் வீடு முழுவதும் சுழல விட்டான்.
அவன் பிரியா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே அவள் வீட்டை சுற்றி நோட்டுமிட...
அலைந்து கொண்டு இருந்த வீராவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.
அவன் பார்வை நிலை குத்திய இடத்தில் கதவிற்கு பின்னே மறைந்து நின்றபடி ஒரு ஜோடி பச்சை விழிகள் அவனை பார்த்துக்கொண்டு இருந்தது.
காஃபியை குடித்துக் கொண்டிருந்தவனின் உதடுகள் லேசாக மேல் நோக்கி வளைந்தது.
அவன் நிலை குத்திய பார்வையை தாங்க முடியாத அந்த பச்சை நிற விழிகள் சடார் என்று கதவின் பின்னால் மறைந்து கொள்ள...
தன்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்ட அந்த பச்சை நிற விழிகளுக்கு சொந்தமானவளை நினைத்து கோபம் வந்தது வீராவிற்கு.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிரியாவிடம் சகஜமாக பேசியவன் தேவ் எங்க அத்தை என்று கேட்டான்.
அவன் காலையில் நேரமே ஆபீசுக்கு கிளம்பிட்டான் ஏன் அவன் கிட்ட எதுவும் சொல்லனுமா என்று கேட்டால் பிரியா.
அதெல்லாம் ஒன்னும் இல்லாத நான் சும்மாதான் கேட்டேன் என்றான் வீரா.
காஃபி குடித்தவன் டேபிளில் கப்பை வைத்துவிட்டு சரி அத்தை அப்போ நான் கிளம்புறேன் என்றான்.
இரு வீரா போகலாம் ஒரு நிமிஷம் என்றவள். திரும்பி அதி குட்டி...என்று அழைத்தாள்.
இவ்வளவு நேரம் அந்த பச்சை நிற விழியால் தன்னை பார்க்க வராமல் அறைக்குள் ஒளிந்திருந்ததை நினைத்து உள்ளுக்குள் கடுப்பில் இருந்த வீரா.
இப்போது பிரியா தானாகவே அந்த பச்சை நிற விழியாளை அழைத்ததும் உள்ளுக்குள் லேசாக சிரிப்பு வந்தது.
அந்த சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தில் கடுமையோடு வீரா நின்று இருக்க....
அறைக்குள் இருந்து தயங்கியபடியே குரு பிரியாவின் மகள் அதித்தி வெளியே வந்தால்.
அறைக்குள் இருந்து வெளியே வந்து அதித்தி நேராக வந்து பிரியாவின் பின் தோளுக்கு பின்னால் போய் நின்று கொள்ள...
தன்னை பார்க்க பயந்து கொண்டு பிரியாவின் பின்னால் சென்று ஒளிந்தவளை முழுவதுமாக பார்க்க முடியாமல் வீராவிற்கு கடுப்பாக இருந்தது.
ஏய் அதி குட்டி வீரா என்ன வேற ஆளா... ஏன் இப்படி என் பின்னாடி வந்து ஒளிஞ்சிட்டு இருக்க.. இப்படி வா முன்னாடி என்று தன் பின்னால் இருந்தவரின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொள்ள...
பயத்தோடும் படபடப்போடும் பிரியாவின் அருகில் நின்று இருந்த அதித்தியை கீழிருந்து மேலாக பார்த்தான்.
வெண் சங்கு போல பளிச்சென்று இருந்த அவள் மேனியை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் இதயம் எகிறி குதிக்க ஆரம்பித்தது.
பளிச்சென்று இருந்த அவள் பாதத்தில் தங்க நிற கொலுசு கொண்டு இருக்க அதை தாண்டி அவன் கண்கள் மேலே வர....
வாழைத்தண்டு துடைகளை காட்டிக்கொண்டு வீட்டில் இருப்பதினால் சாதாரண உடையில் அரைக்கால் ட்ரவுசர் போட்டு இருக்க....
அவன் கண்கள் அப்படியே மேலே செல்ல அவள் இடை இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு ஒரு பெரிய பணியனை போட்டு மறைத்து இருந்தால் .
அது அவள் டிராயர் வரை இறங்கி இருக்க... அவள் எடையை தாண்டி வீராவின் கண்கள் மேலே செல்ல....
அவன் பார்வை வந்த திசையை கண்டு கொண்ட அதிதி வேகமாக பிரியாவின் பின்னால் சென்று மறைந்து நின்று கொள்ள...
சட்டென்று அதித்தி முகத்தை பார்த்து முறைத்த வீரா... அதித்தியை முறைத்துக் கொண்டே பிரியாவை பார்த்து.
என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்க அத்தை வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கூட கூப்பிட தெரியல.
நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆச்சு என்று சொல்லிவிட்டு அதிதியை ஒரு பார்வை பார்த்து.
அவள் பச்சை நிற விழிகளையும் அவள் பயந்த முகத்தையும் தன் மனதில் நிரப்பிக் கொண்டவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.
டேய் வீரா நில்லுடா அவ எப்பவுமே அப்படித்தான் உனக்கு தெரியாதா உன்கிட்ட மட்டும் இல்ல அவ யார்கிட்டயுமே பேசுறது இல்ல யாறா கிட்டே மட்டும்தான் கொஞ்சம் ஃப்ரீயா பேசுறா...
யாரா ஃப்ரீ ஆனதும் சொல்லு ஒரு நாள் இவளை அழைச்சிட்டு வந்து உன் வீட்டுல விடுறேன்.
கொஞ்ச நாள் யாரை கூட இவ இருக்கட்டும் என்றால் பிரியா.
வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த வீரா யாராவுடன் இருக்க அதிதியை பிரியா கூட்டி வருவதாக சொன்னதும் அப்படியே நின்று திரும்பிப் பார்த்தவன் நான் இப்போ வீட்டுக்கு தான் போறேன் அத்தை.
அவளை என் கூட அனுப்பி வைங்க நான் வீட்ல விட்டுடுறேன் என்று அதித்தியை பார்த்த வாரு வீரா சொல்ல...
பிரியாவின் பின்னால் நின்று கொண்டிருந்த அதித்தி வேகமாக அம்மா வேண்டாம்.
நான் உங்க கூடவே ஒரு நாள் யாரா அக்காவை பார்க்க போய்க்கிறேன் என்று சொல்ல...
அவள் சொல்வதைக் கேட்டு சிரித்த ப்ரியா வீராவிடம் நானே இவளை ஒரு நாள் கூட்டிட்டு வீட்டுக்கு வரேன்.
எனக்கும் மீனுவை பார்த்த மாதிரியும் இருக்கும் நானும் உங்க அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என்றால் பிரியா.
உடன் வர மறுத்த அதிதியை கோபத்தோடு பார்த்து வீரா பிரியா உங்களிடம் அவன் பார்வை திரும்பும் போது சாந்தமானது.
சரி அத்தை அப்போ நான் அம்மாகிட்ட சொல்றேன். நீங்க வீட்டுக்கு வரும்போது எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு திரும்பி வெளியே சென்றவனின் முகம் அப்படியே கோபமாக மாறியது.
தன்னுடன் வர அப்படி என்ன அவளுக்கு பயம் வேண்டி இருக்கிறது. நான் என்ன அவளை விழுங்கியா விடுவேன் என்று இவ்வளவு நேரம் அவளை பார்வையாலே விழுங்கியவன் புலம்பிக்கொண்டு ஆபீசுக்கு சென்றான்.

Author: layastamilnovel
Article Title: வசீகரா 4.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.