- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
வீரா டெக்சாசில் இருந்து வந்தவன் ஏர்போர்ட்டில் அவன் அம்மா அப்பாவை பார்த்துவிட்டு ஆஃபிஸில் வேலை இருக்கிறது என்று கூறி கிளம்பினான்.
மீனு யாராவையும், வினுவையும் அழைத்துக் கொண்டு விக்ரமுடன் வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு செல்லும் வழியில் யாராவிடம் அவள் காலேஜ் குறித்தும், அவள் தோழிகள் குறித்தும் மீனு கேட்டு தெரிந்து கொண்டாள்.
பேச்சினுடே யாராவிடம் உன்னோட INSTAGRAM போஸ்டில் நீ உன் ஃபிரெண்ட்ஸ் உடன் பிக்னிக் போயிருந்தியே அந்த போட்டோவிள் உனக்கு பின்னால் இருந்து ஒரு பையன் உன்னை அப்பாடி பாக்குறானே நேர்ல அவன் எப்படி? என்று கேட்டாள்.
மீனு யாரை சொல்கிறாள் என்று ஒரு நிமிடம் யோசித்த யாரா.. அம்மா அவன் என்னோட ஜூனியர் மா... நீ நினைக்குற மாதிரி எல்லாம் அவன் கிடையாது.
என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் எங்க கூட பிக்னிக் வந்தான் அவன் என்னோட நல்ல ஃபிரெண்ட் என்றாள்.
அப்போ அவன் உனக்கு ஃபிரெண்ட் மட்டும் தானா என்றாள் மீனு.
அம்மா.... நீங்க என்ன நினைச்சு அவனை பத்தி கேட்டீங்கன்னு எனக்கு புரிஞ்சுது. நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் அவன் கிடையாது தவிற எனக்கு இப்போதைக்கு லவ் பண்றதுக்கு எல்லாம் நேரம் இல்லை. நான் இப்போதான் காலேஜ் முடிச்சிட்டு வந்து இருக்கேன் சோ... கொஞ்ச நாள் உங்க கையாள சாப்பிட்டுட்டு ஊரை சுற்ற போறேன் என்று யாரா சொல்ல...
அதுக்கென்ன யாரா உனக்கு என்ன வேணுமோ சொல்லி நான் உனக்கு எல்லாமே சாப்பிட செய்து தரேன் என்று மீனு சொன்னதும் தான் தாமதம்.
அவள் அருகில் இருந்த விக்ரம் திரும்பி தன் சிரிப்பை அடக்க மிகவும் பிரயத்தனப் பட... அதை கவனிந்துவிட்ட மீனு திரும்பி விக்ரமின் காதை பிடித்து திருகி இப்போ எதுக்கு டா நீ அந்த பக்கம் திரும்பி சிரிக்குற... நேரடியா என்னோட சமையல் நல்லா இருக்காதுன்னு முகத்துக்கு நேரா சொல்ல வேண்டியயதுதானே...என்றாள்.
ஏய் மீனு... வலிக்குது டி... என்று தன் காதில் இருந்து அவள் கையை பிரித்துவிட்டவன். அவள் கையில் முத்தம் வவைத்து.
இந்த கையாள நான் எத்தனை வருஷமா சாப்பிட்டுட்டு இருக்கேன். உன்னோட சமையலை நான் குற்றம் சொல்லுவேனா என்று அவளை தாஜா செய்ய...
அதில் வேண்டுமென்றே தன்னை புகழும் தன் ஆசை கணவன் விக்ரமை பார்த்து மீனு சிரித்தாள் .
அம்மா அப்பா சொல்றது அப்பட்டமான பொய் என்று உங்களுக்கே தெறியும்.
ஆனா ஏன் அப்பா சொல்றது பொய் என்று தெரிந்தும் நீங்க அவர் கிட்டே எதுவும் கேட்காமல் அமைதியா சிரிச்சிட்டு இருக்கீங்க என்றாள் யாரா.
ஏய் இப்போ தானே என் கையால நல்லா சாப்பிட்டு ஓட சுத்தணும்னு சொன்ன அதுக்குள்ள உன் அப்பா கூட சேர்ந்து நீயும் என்னை சமையல் நல்லா செய்றதில்லைன்னு என்றால் மீனு
ஐயோ அம்மா நான் அப்படி எல்லாம் சொல்லல... அப்பா உங்க சமையல் பத்தி ரொம்ப பெருமையா பேசு அப்போ நீங்க அவர் பொய் சொல்றாருனு தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்களே அதுதான் ஏன்னு கேட்டேன் என்றால் யாரா.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோவப்பட்டு சண்டை போட்டா குடும்பத்துக்குள்ள நிம்மதியே இருக்காது யாரா.
அப்பா எப்பவும் எங்கேயும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்போ அப்போ என்னை கிண்டல் பண்ணி பேசுவார் அதை நான் ஒன்னும் பெருசா எடுத்துக்க மாட்டேன்.
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் தான் நம்ம வாழ்க்கையை அழகா நகர்த்திட்டுப் போகும்.
அவர் என்னைக் கிண்டல் பண்றாருன்னு எனக்கு நல்லாவே தெரியுது. அவ அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டை போட்டா நல்லா இருக்காது இல்லையா என்றால் மீனு.
நான் என்னிக்கி உன் அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தேன் அன்னையிலிருந்து இப்போ வரைக்கும் உங்க அப்பா என்னை எந்த தப்பும் சொல்லி திட்டினதே கிடையாது.
நான் செய்யுற சின்ன சின்ன தப்ப கூட பெருசா எடுத்துக்காம எனக்கு சப்போட்டா இருந்து ஏன் தப்பை சரி செஞ்சுக்க உன் அப்பா நிறைய உதவி இருக்காரு.
உன் அப்பா மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என்றால் மீனு.
மீனு சொல்வதை அவள் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த விக்ரம். தன்னைப் பற்றி தன் மனைவி இவ்வளவு தூரம் ஒரு நாளும் பேசியது இல்லை.
இன்று தன் மகளிடம் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசும் தன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார்.
இவர்கள் இருவரும் அன்னியோன்யமாகவும் பாசமாகவும் இருப்பதை பார்த்த யாரா, வினு அம்மாவையும் அப்பாவையும் பார்த்தியாடா இவங்கள மாதிரி ஒரு கப்புல நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை இனியும் பார்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.
வேர்ல்டிலேயே என்னோட அம்மா அப்பா தான் பெஸ்ட் பேர். நான் சொல்றது சரிதானே என்று கேட்டால் யாரா வினு இடம்.
100 இல்ல 200% கரெக்ட் யாரா.... அம்மா அப்பா தான் எப்பவுமே பெஸ்ட் என்றவன்.
பியுச்சர்ல நானும் நான் கல்யாணம் பணிக்க போற பொண்ணும் அம்மா அப்பா மாதிரிதான் ஒருத்தரும் ஒருத்தர் புரிஞ்சுகிட்டு எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் ரொம்ப க்ளோசா இருக்கனும்னு ஆசைப்படுறேன் என்றான் வினு.
ஏய் வினு என்னடா நேத்து வரைக்கும் எந்த பொண்ண பார்த்தாலும் பிடிக்காது... கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவ.
ஆனா இன்னைக்கு என்ன கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்றால் யாரா.
ஆமா யாரா அம்மா அப்பாவை பார்க்கும் போது எல்லாம் எனக்கு அவங்கள மாதிரி ஒரு லைஃப் என்னோட பார்ட்னரோட சந்தோசமா வாழனும்னு ஆசையா இருக்கும்.
என்ன செய்றது மனசு ஒரு சமயம் கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்குது இன்னொரு சமயம் அம்மா அப்பா மாதிரி ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்து அனுபவிக்கனும்னு ஆசையாகவும் இருக்கு என்று சொல்லி சிரித்தான் வினு.
உன்ன மாதிரி நானெல்லாம் இருக்க மாட்டேன் பா.... எனக்கு கல்யாணமும் வேண்டாம்...ஒன்னும் வேண்டாம். நான் ஜாலியா இப்படியே அம்மா சமையல சாப்பிட்டு,அப்பாவோட செல்ல பொண்ணு இருந்துட்டு போறேன் எனக்கு இதுல எல்லாம் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை என்றால் யாரா.
யாரா சொன்னதை கேட்ட மீனு விக்ரமின் தோளில் சாய்ந்தபடியே விக்ரம் இவ சொல்றத நல்லா நோட் பண்ணி வச்சுக்க. நீ வேணா பாரு இவள் தான் முதல்ல யாரையாவது காதலிச்சுட்டு வந்து நம்ம முன்னாடி நிக்க போறா என்றாள் மீனு.
அப்படி சொல்லிட்டாங்க நமக்கு வேலை மிச்சம் மீனும் வீணா மாப்பிள தேடி இவளுக்காக அடைய வேண்டியது இல்லை பாரு என்றான் விக்ரம்.
அவர்கள் இருவரும் தன்னை கிண்டல் செய்து பேசுவதை பார்த்தாயா உங்க அப்பா என்று சிணுங்கி அவன் தோளில் அடித்தவள் நீங்களும் அம்மா கூட சேர்ந்து என்ன கிண்டல் பண்றீங்க பாத்தியா என்றாள்.
சரி சரிடா அப்பா சும்மா கிண்டல் தானே செய்தேன் என்றான் விக்ரம்.
அனைவரும் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
நான்கு வருடங்கள் கழித்து யாராவது இப்போது தான் முதன்முதலாக அவள் வீட்டிற்கு வருகிறாள்.
அதனால் அவள் வருவதை தடுப்படலாக யாராவே வரவேற்க ஏற்பாடுகள் செய்திருந்தார் மௌலி .
யாராவை வரவேற்பதற்காக வாசலிலேயே ஆரத்தி தட்டுடன் சீராவும் செல்வியும் காத்திருந்தனர்.
காரை விட்டு இறங்கியதும் யாராவையும் வினுவையும் பார்த்து சிரித்தவர்கள் அவர்கள் இருவரையும் பாசிலிலேயே நிற்க வைத்து ஆரத்தி சுற்ற ஆரம்பித்தனர்.
அவர்கள் ஒவ்வொரு முறையும் ஆரத்தி தட்டை சுற்றும் போதும் யாராவும் அவர்கள் சுற்றுவதற்கு ஏற்ப தன் தலையை அதனுடன் சேர்த்து சுற்றிக்கொண்டு இருந்தால்.
மீனு யாரா செய்யும் சேட்டையை பார்த்து ஒழுங்கா நில்லு பாட்டுக்கு ரெண்டு பேரும் ஆர்த்தி சுத்தும்போது இப்படி பண்ணாத என்று யாராவை கண்டிக்க....
சிரா மீனுவிடம் உன் பொண்ணு உன்னை மாதிரி தானே இருப்பா அப்படியே உன்ன மாதிரியே சேட்ட பண்ணிக்கிட்டு என்று சொல்லி சிரா கிண்டல் செய்ய...
விக்ரம் உன் அம்மா எப்ப பாரு என்னை காலை வாரிகிட்டே இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி வை.... என்று விக்ரமிடம் கம்ப்ளைன்ட் செய்ய...
அவங்க பேத்திக்கு சப்போர்ட் பண்றாங்க... நான் எப்பவும் என் பொண்டாட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் அம்மா பேசுனா பேசிட்டு போறாங்க... அவங்களே அவங்க பேத்திய உள்ள கூட்டிட்டு வரட்டும் வா மீனு நம்ம ரெண்டு பேரும் உள்ளே போகலாம் என்று சொல்லி மீனுவை தன் கைகளில் ஏந்தியவாறு வீட்டிற்குள் சென்றான் விக்ரம்.
இந்த வயதிலும் விக்ரமும் மீனும் இப்படி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது பார்த்து சந்தோஷப்பட்டவர் யாராகவும் வினுவும் வீட்டிற்குள் செல்ல பார்ட்டிகள் இருவரும் ஆரத்தி எடுத்து முடித்து ஆரத்தி தட்டு வேலையாட்களும் கொடுத்து அவர்கள் யாராவது உடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
யாரா உள்ளே வந்ததும் தன் கைகள் இரண்டையும் வெடித்து தலையை தூக்கி தன் வீட்டின் கண்கள் மூடி அனுபவித்தவள் அப்பா.... எவ்வளவு நாள் ஆச்சு நம்ம வீட்டுக்கு வந்து ஐ மிஸ் மை ஹோம் என்று சொன்னவள்.
நேராக ஓடிச்சென்று ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் படுத்துக்கொள்ள....
அருகில் இருந்த சோபாவில் விக்ரமின் மடியில் அமர்ந்து இருந்த மீனு ஏய் யாரா என்ன இது இப்பதானே வீட்டுக்கு வந்த போயி பிரஷ் ஆகிட்டுவா உனக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சு வச்சு இருக்கேன் வந்து சாப்பிடு என்று சொன்னால்.
அம்மா ப்ளீஸ் எனக்கு பசிக்குது இப்பவே சாப்பிட குடுங்க பிரஷர் ஆகிட்டு வர டைம் ஆகும் என்று தன் வயிற்றை தடவி காட்டி மீனுவிடம் யாரா கெஞ்சினாள்.
அதெல்லாம் முடியாது நீயும் வினுவும் போய் முதல்ல பிரஷ்ஷா ஆகிட்டு வாங்க அதுக்கப்புறம் எல்லாரும் சாப்பிடலாம் என்று மீனு சொல்ல...
மாம் ஆல்ரெடி நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று வினு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு வாரே மீனுவிடம் சொன்னான்.
அவனைப் பார்த்த யாரா சிரித்தபடியே சோபாவில் இருந்து வேகமாக எழுந்து ஓடியவள் வாஸ்பேஷனுக்கு சென்று கையை கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தால்.
இவர்கள் இருவரும் எவ்வளவு பெரியவர்கள் ஆகியும் கூட இன்னும் பொறுப்பில்லாமல் இருப்பதை பார்த்த மீனுவுக்கு டென்ஷன் தான் ஆனது.
பாரு விக்ரம் இவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு இவ்வளவு பெருசாகிட்டு கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்காங்களே என்று மீனு கம்ப்ளைன்ட் செய்ய...
விடு மீனுமா நீ கூட நமக்கு கல்யாணம் ஆன புதுசுல இப்படித்தானே இருந்த என்று விக்ரம் அவளை வார...
டேய் மெதுவா பேசுடா அவங்க காதல விழுந்துருச்சுன்னா இதையே சொல்லிக்காட்டி என்ன ஒரு வழி பண்ணிடுவாங்க என்று விக்ரமின் வாயை பொத்தினால் மீனு.
மாம் அப்பா சொன்னது எங்களுக்கு இங்க நல்லா கேட்டுச்சு நீங்களும் எங்கள மாதிரி தானே இருந்திருக்கீங்க.
நாங்க மூணு பேரும் உங்க பசங்க தானே உங்கள மாதிரியே தான் இருப்போம் என்றான் வினு.
நீங்க ரெண்டு பேரும் என்ன மாதிரி வேணா சொல்லுங்க வீராவை இதுல இழுக்காதீங்க அவன் எல்லாத்துலயுமே ரொம்ப பெர்பெக்ட்.
அவன்கிட்ட எதையும் சொல்லி சொல்லி இப்படி செய் அப்படி செய் என்று வீராவுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது அவன் அப்படியே உங்க அப்பா மாதிரி மிஸ்டர் பர்ஃபெக்ட் என்றால் மீனு.
சரி சரி என்ன இருந்தாலும் வீரா தானே உங்க செல்ல மகன் அவனை நீங்க விட்டுக் கொடுத்து பேசுவீங்களா என்று வினு சொல்ல...
அவன் மட்டும் இல்ல நீங்க ரெண்டு பேரும் கூட என்னோட செல்ல பசங்க தான் என்ற ஒரு விக்ரமின் மடியில் இருந்து எழுந்து வந்து அவர்களுக்காக செய்து வைத்த உணவுகளை ஆசையாக தன் பிள்ளைகளுக்கு பரிமாறினால் மீனு

Author: layastamilnovel
Article Title: வசீகரா 4
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.