- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
அதித்தியை பார்த்துவிட்டு அங்கருந்து நேராக ஆபீசிர்க்கு வந்த வீரா உள்ளே நுழையும் போது அவனது பியே விஷ்ணு வீராவிடம் வேகமாக வந்து . வெல்கம் வீரா என்றவன். நம்மளோட கிளைண்டுகிட்ட நம்மளோட ஆர்டர் எல்லாம் கேன்சல் செய்ய சொல்லி மிரட்டின முகுந்தன் இப்போ நம்ம கஸ்டடியில் தான் இருக்கான்.
நம்ம எந்த கம்பெனியில ப்ராஜெக்ட் செய்தாலும் அந்த ப்ராஜெக்டில் நம்ம கோட் பண்ண விலையை விட இன்னும் கம்மியா செய்து தரேன்னு சொல்லி நமக்கு வர ஆர்டர் எல்லாம் அவனோட கம்பெனிக்கு திருப்பி விடுகிறான்.
சில கஷ்டமர்ஸ் அவன் சொன்ன பிறைஸ்காக நம்மகிட்ட இருந்து அவனோட கம்பெனிக்கு அவங்களோட ஆர்டர் கொடுத்துட்டாங்க.
ரொம்ப வருஷமா நம்மகிட்ட டீலிங்ல இருக்க கஷ்டமர்ஸ் எல்லாரும் அவன்கிட்ட ஆர்டர் கொடுக்க மறுத்து இருக்காங்க அப்படி கொடுக்க மருத்தவங்களை இவன் மிரட்டி ஆர்டர் கொடுக்க வைக்கிறான்.
வீராவின் முதல் எதிரியான முகுந்தனை பற்றி விஷ்ணு கூறிக்கொண்டே வீராவின் பின்னால் சென்றான்.
இப்போ நீ சொன்ன விஷயம் எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் விஷ்ணு.
வேற எதுவும் புது தகவல் இருந்தா சொல்லு இப்படி பழைய விஷயங்களை ஒரு மேட்டரா கொண்டு வந்துட்டு நிற்காதே என்றான்.
அடப்பாவி அப்போ இவ்வளவு நேரம் நான் துண்டை தண்ணி பத்த உன் கிட்ட பேசிட்டு வந்தது எல்லாம் எப்பவும் போல வீணா...
ஏற்கனவே இந்த விஷயம் தெரியும்னு என்னிடம் முதலிலேயே சொல்லி இருக்கலாமே நானாவது அதை சொல்லாம இருந்திருப்பேன் என்றான் விஷ்ணு .
நீ அப்படியே இதுவும் புதுசா சொல்லுவேனு தான் நான் நீ என்ன சொல்றன்னு கேட்டுட்டு அமைதியா வந்தேன் என்றான் வீரா.
புதுசா ஒரு தகவல் சொல்லணும்னாஅந்த முகுந்தன் ஒரு பிளேபாய். அவனோட வீக் பாயிண்ட்டே பொண்ணுங்க தான்னு சொல்லலாம்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அவன் நம்ம யாராவை பற்றிய விஷயங்களை தெரிஞ்சு வச்சிருக்கான்.
தன் கேபினுக்குள் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்த வீரா விஷ்ணு சொன்ன செய்தியை கேட்டு வாட் என்று அதிர்ச்சியாக அவனைப் பார்க்க...
ஆமா வீரா இவன் நம்ம யாராவது ஃபாலோ பண்ணிட்டு இருக்கான்.
டெக்ஸாஸில் யாரா படிக்கிற காலேஜ்ல அவ என்ன பண்ற யார் கூட பேசற பழகுறா அவ எப்போ இந்தியா வர எந்த பிளைட்ல வர இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க விஷயம் வரைக்கும் இவனுக்கு நியூஸ் வந்து இருக்கு என்றான் விஷ்ணு.
இவன் எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான் என்று வீர புருவம் சுருக்கி விஷ்ணுவை பார்க்க..
உன்ன பிசினஸ்ல பீட் பண்ணி ஜெயிக்க முடியலன்னு சொல்லிட்டு உன்னோட தங்கச்சியை கரெக்ட் பண்ணி அவ முடியுமா உன்னோடு பிசினஸை கைப்பற்றலாம்னு நினைக்கிறான் என்றான் விஷ்ணு.
வீரா திரும்பி விஷ்ணுவை முறைக்க....
நான் என்னடா பண்ணுனேன் என்னை ஏன் முறைக்கிற உனக்கு தம்பியா பொறந்தது தான் நான் செய்த குற்றமா? மனதில் நினைத்துக் கொண்டான் விஷ்ணு.
என்னடா வீராவுக்கு தம்பியா பொறந்தது ஒரு குற்றமானு சொல்றானே அப்போ இந்த விஷ்ணு யாருன்னு தானே பாக்குறீங்க வேற யாரும் இல்லைங்க நம்ம லக் ஸ்ரீவி உடைய மகன்தான் விஷ்ணு வீரா கிட்ட பிஏவா வொர்க் பண்ணிட்டு இருக்கான்.
வீரா பிசினஸ் எடுத்து நடத்தறதுல இம்ப்ரஸ் ஆகி லக்கு விஷ்ணு காலேஜ் முடிச்சதும் நேரா வீராவிடம் கூட்டி வந்து அவனுக்கு பிஏவா விஷ்ணுவ வச்சுக்க சொல்லி சொல்லிட்டு போயிட்டாரு.
அன்றிலிருந்து நம்ம விஷ்ணு ரொம்ப பாவம். வீரா எவ்வளவு ஷார்ப்பா பிசினஸ் கவனிச்சுக்கிறானோ அவனுக்கு ஈகுவலா அவனுக்கு வேணுங்கிற அனைத்து விஷயங்களையும் விஷ்ணு ஒருத்தனை செய்து கொடுத்துட்டு இருக்கான்.
உன் வீரா விஷ்ணுவை முடித்துக் கொண்டு இருக்க அவனைப் பார்த்து ஞாயமா நீ இப்படி முறைக்கிறத அந்த முகுந்தன் கிட்ட தான் காட்டணும் உனக்கு நான் நல்லது தான் பண்ணி இருக்கேன் என்றான் விஷ்ணு.
இப்போ அவன் எங்கே என்று வீரா கோபமாக கேட்க அந்த அறைக்குள்ளே இருந்த மற்றொரு அறையைக் காட்டி அங்கே என்று சொன்னான்.
தன் சேரில் இருந்து கோபமாக இருந்த வீரா நேராக அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன்.
அந்த அறையில் இருந்த மூலையில் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டு இருந்த முகுந்தனை பார்த்ததும் அதே கோபத்தோடு வேகமாக போய் அவன் மார்பில் தன் புக்ஸ் காலால் ஓங்கி உதைக்க...
வீரா உதித்த வேகத்தில் சேர்ரோடு சேர்ந்து தரையில் விழுந்தான் முகுந்தன்.
வீரா முகுந்தனின் மார்பில் உதைத்த வேகத்தை பார்த்து அதிர்ந்தான் விஷ்ணு.
டேய் அண்ணா பார்த்து... நீ உதைக்கிற உதய பார்த்தா அவன் இங்கேயே ரத்தம் கக்கி செத்துடுவான் போல இருக்கு சொல்லிக்கொண்டு தரையில் விழுந்து கிடந்த விஷ்ணுவைச் சாரோடு தூக்கி வீராவின் முன்பு நிறுத்தினான்.
முகுந்தன் வலியால் முகத்தை சுருக்கி கொண்டு வீராவை பார்க்க...
தன் இரண்டு பாக்கெட்டிலும் கைவிட்டபடி நின்று இருந்த வீரா முந்தனை பார்த்து உனக்கு பிசினஸ்ல நேரடியா என்கிட்ட மோது இப்படி பின்னால இருந்து வேலை பார்க்கிறது எல்லாம் இத்தோட நிறுத்திக்கோ...
அதேபோல என் தங்கச்சி பின்னாடி இதுவும் சுத்துறத நான் பார்த்தேன் அன்னைக்கு தான் உன்னோட கடைசி நாளா இருக்கும் அதை ஞாபகம் வச்சுக்கோ என்றவன் திரும்பி நடக்க போக....
உன் தங்கையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவள எனக்கு கல்யாணம் பண்ணி கொடு என்று சொன்னான் முகுந்தன்.
அவன் அருகில் நின்ற விஷ்ணு முகுந்தன் பேசியதை கேட்டு அதிர்ந்தவன் வீராவை பார்க்க வீரா கண்கள் இரண்டும் சிவக்க ஆத்திரத்தோடு முகுந்தன் சொன்னதை கேட்டு நின்று இருந்தான்.
அடப்பாவி எமன் வாய்க்குள்ள போய் இவனே வாண்டடா விழுந்துட்டானே... அவன் தங்கச்சியை சும்மா பார்த்ததுக்கே தாண்டா அவன்கிட்ட வயித்துல அவ்வளவு பெரிய உதய வாங்கினேன் அந்த வலி கூட இன்னும் போய் இருக்காது அதுக்குள்ள அடுத்த அடிக்கு தயாராகிறானே ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருப்போம் போல இந்த முகுந்தன் என்று மனதில் நினைத்துக் கொண்ட விஷ்ணு.
திடீரென்று அதிர்ச்சியில் நினைவுக்கு வந்தவன் போல பார்க்க.... வீரா முகுந்தன் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்தவன்.
உடனே உதைத்து தரையில் தள்ளி அவன் கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்தி கழுத்தை நெரித்தவரே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி என்கிட்டயே கேட்பேன் என்று அவன் கழுத்தை மேலும் அழுத்தினான் வீரா.
முகுந்தன் கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் முகுந்தன் மூச்சு விட திணறிக்கொண்டு தரையில் கிடக்க....
அதை பார்த்து பதறிய விஷ்ணு டேய் அண்ணா என்ன பண்ணிட்டு இருக்க...
நீ அவன் கழுத்துல கால வச்சு அழுத்துற அழுத்துல அவன் செத்துர போறான்.
இவன நான் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்னு எல்லாருக்கும் தெரியும். நீ பாட்டுக்கு இவன கொன்னுட்டு போயிட்டா கடைசியில் இவனை கூட்டிட்டு வந்த பாவத்துக்கு என்ன பிடிச்சு தான் ஜெயில்ல போடுவாங்க என்று சொல்லி வீராவின் காலை பிடித்துக் கொண்டு முகுந்தன் கழுத்திலிருந்து காலை எடுக்க கெஞ்சிக் கொண்டு இருக்க....
விஷ்ணு சொல்வதை எதுவும் காதில் வாங்காமல் முகுந்தன் கழுத்தில் இருந்த தன் காலை மேலும் அழுத்தினான்.
வீரா அழுத்தியதில் முகுந்தனின் கண்கள் இரண்டும் சிவந்து சிவந்து வெளியே விடுவது போல இருக்க....
அதை பார்த்து பதறிய விஷ்ணு இரும்புத் தூண் போல இருந்த வீராவின் காலை முகத்தின் கழுத்தில் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்து விட்டான்.
வீரா குப்பமாக நின்று இருக்க முகுந்தனை சேர்ரோடு தூக்கி அமர வைத்தவன். அவனை கட்டி வைத்திருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு.
டேய் முதல்ல நீ இங்கிருந்து போடா என்னவோ வில்லன் கிட்ட இருந்து ஹீரோவை காப்பாத்துற மாதிரி இவன் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சி நான் உன்னை காப்பாற்றி இருக்கேன்.
சீக்கிரமா எஇங்கிருந்து ஓடிடு இல்ல உன்ன இவன் புட்ஸ் காலிலேயே மிதிச்சு கொன்னுடுவான்.
சீக்கிரம் போ... என்று அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு முகுந்தனை அந்த அறையை விட்டு போகச் சொல்லி விஷ்ணு துரத்த...
சேரில் இருந்து திரும்பிக் கொண்டே எழுந்த முகுந்தன் வீராவை பார்த்து என்ன நீ இப்போ அடிச்சதுக்கு எல்லாம் பின்னாடி வருத்தப்பட போற என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி நகர...
நான் என்ன சொன்னேன் இவன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் கட்டு கழட்டிவிட்டதும் பேசாம தப்பிச்சோமோ பொழச்சோமான்னு வெளியே போகாமல்.
அவனே இவனை கொல்ற ஆத்திரத்துல இருக்கான்னு இவன் சும்மா போகாம இவனை சொறிஞ்சு விட்டுட்டு போறானே என்று விஷ்ணு வீராவை பார்க்க...
உன் முகுந்தன் பேசியதை கேட்டதும் வீரா அவனை அடிக்கச் செல்ல வேகமாக வந்த விஷ்ணு வீராவை கட்டிக்கொண்டு அவனை தடுத்து பிடித்தவன் முகுந்தனை பார்த்து டேய் அவன் முன்னாடி நின்னு ஏன்டா அவனை டென்ஷன் பண்ணி தொலைகிறேன் முதல்ல இங்கிருந்து போய் தொலை என்று கத்த....
முகுந்தன் விஷ்ணுவை பார்த்து சிரித்தவாரே தேங்க்ஸ் படி....என்று சொல்லிக்கொண்டு அந்த அறையை விட்டு தன் வாயில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே வெளியே சென்றான்.
இவன் எனக்கு எதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்கிறான் என்று யோசித்துப்படியே விஷ்ணு திரும்பி பார்க்க...
அவன் கைக்குள் நின்றிருந்த வீரா தோழாள் விஷ்ணுவின் முகத்தில் எத்த....
அவன் லேசாக ஏற்றியதற்கு விஷ்ணு போய் தரையில் விழுந்தான்.
தன் தாடையைப் பிடித்து தேய்த்துக் கொண்டே டேய் அப்பா நான் உன்ன சின்ன வயசுல வெச்சி செஞ்சதற்கெல்லாம் நீ இவன்கிட்ட என்ன பிஏவா சேர்த்து விட்டு என்ன பழி வாங்கிட்டே இல்ல.
இரு தகப்பா....நீ சாப்பிடும் போது சாப்பாட்டுல பேதி மாத்திரையை கலந்து விடுறேன் என்று அவன் அப்பா லக்கை திட்டிக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றான் விஷ்ணு.

Author: layastamilnovel
Article Title: வசீகரா 5
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.