layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
அதித்தி பெயிண்டிங் கிளாசுக்கு சென்று விட்டு தன் தோழிகளோடு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டே இருக்க தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் வீடு வந்ததும் அப்படியே சென்று விட கடைசியாக தனியாக அவள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள்.

அவள் வந்து கொண்டு இருப்பதை மரத்திற்கு பின்னால் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்த வீரா.

அதித்தியின் வீட்டிற்கு அருகில் வந்ததும். அவளுக்கு பின்னால் வேகமாக சென்றவன் அதித்தியின் வாய புத்தி அப்படியே தூக்கி தன் காரில் அமர வைத்து லாக் செய்தான்.

மிரண்டு போய் தன்னை யார் இப்படி செய்தது என்று அதித்தி அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க...

அதற்குள் வீரா காரின் மறுபுறம் வந்து காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து அவள் அருகில் அமர்ந்தான்.

இந்த நேரத்தில் வீராவை அதித்தி அங்கு எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டாலே ஓடி ஒலிபவள் இப்போது ஒளிந்து கொள்ள இடம் தெரியாமல் என்ன செய்வது என்று பயந்தபடி அமர்ந்து இருந்தால்.

வீராவை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் வேகமாக திரும்பி கார் கதவை திறக்க போக அதை வீரா எப்போதோ லாக் செய்து இருந்தான்.

செய்வதறியாது திரும்பி அதித்தி வீராவை பார்க்க...

அவன் நன்றாக சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவன் அதித்தி அவனை பார்க்கவும் வீராவை பார்க்கவும் என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

அவள் பயந்து கொண்டே வி... வி.... வீட்டுக்கு போகணும் என்றால் சிறு பிள்ளை போல...

போகலாம்... போகலாம்... என்ன அவசரம் இதோ அங்க தானே இருக்கு உன் வீடு என்று காரை விட்டு சற்று தள்ளி இருந்த அவள் வீட்டைக் காட்டி சொன்னவன் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்காகத்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க என்றான்.

என்னது கூட்டிட்டு வந்தானா!!! தூக்கிட்டு வந்துட்டு.. எவ்ளோ அசால்ட்டா சொல்றான் பாரு என்று மனதுக்குள் நினைத்துக் அவனைத் திட்டிய அதித்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க...

காரில் சாய்ந்து அமர்ந்திருந்த வீரா சற்று என்று அதித்தியின் அருகில் வந்து அமர்ந்தவன்.

அவள் விழிகள் இரண்டையும் பார்க்க...அது இங்கே ஓடிச் சென்று ஒளிந்து கொள்ளலாம் என்று தெரியாமல் அவள் பச்சை நிற விழிகள் இரண்டும் கண்களுக்குள் இங்கும் அங்கும் அலைபாய்ந்து கொண்டு இருந்தது.

அவள் கண்களை பார்த்ததும் வீராவிற்குள் எழுந்த உணர்ச்சிகளை அவனுக்கு கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.

வீரா இப்படி தன்னை நேருக்கு நேர் பார்த்ததும் பயத்தில் அதிதி தலையை கீழே குனிந்து கொள்ள...வேகமாக அவள் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு வீரா உயர்த்த....

அவன் கையை வேகமாக தட்டிவிட்ட அதித்தி காரை எவ்வளவு தூரம் தன்னால் அவனை விட்டு ஒதுங்கி அமர முடியுமா அவ்வளவு தூரம் ஒதுங்கி அமர்ந்தவள் அவனைப் பார்த்து பயந்து நடுங்கினால்.

காரணமே இல்லாமல் தன்னை பார்த்து பயப்பவளை கண்டு எரிச்சலான வீரா.

அவள் நகர்ந்து செல்ல முடியாமல் அவள் அருகில் வந்து அமர்ந்தவன் அவள் கன்னத்தைப் பிடித்து என்னை பார்த்தா அவ்வளவு பயமா இருக்கா டி... ஏன் டி....இப்படி பயந்து நான் சாகுற என்றான் சற்று கோபமாக.

உன் லேசாகத்தான் அவளிடம் தன் கோபத்தை காட்டினான். அதற்கே அதித்தி பயந்து கண்களில் கண்ணீர் வந்துவிட... நான் வீட்டுக்கு போகணும் என்ன விடுங்க ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.

ஒரு நிமிடம் தன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு எடுத்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்ட வீரா.

நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் நீ எங்க வேணா போ... உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன் என்றவன்.

பச்சை நிற விழியாலைப் பார்த்து என்ன பார்த்தா உனக்கு ஏன் அவ்வளவு பயமா இருக்கு.

நான் உன் வீட்டுக்கு வந்த போதும் அப்படித்தான் நடந்துகிட்ட இப்போ இங்கேயும் அப்படித்தான் நடந்துக்கிற...

உன் கிட்ட நான் இதுவரைக்கும் சரியா பேசினது கூட கிடையாது. சின்ன வயசுல நீயும் நானும் ஒன்றாக விளையாடி இருக்கோம் அது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு.

ஏன் நீ எதார்த்தமா என்கிட்ட பேச மாட்டேங்குற அப்படி என்னை பாத்தா உனக்கு பயக்கும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடித்து இடம் கேட்டான் வீரா.

கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு அதித்தி எதுவும் பதில் சொல்வாள் என்று ஆர்வமாக அவள் முகத்தையே வீழ பார்த்துக் கொண்டு இருக்க ஆனால் அவள் வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.

இப்படி வாயை திறந்து பேசாம அமைதியா இருந்து என்ன ரொம்ப டென்ஷன் பண்ற.

ஒழுங்கா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு இறங்கி வீட்டுக்கு ஓடிடு இல்லன்னா இப்படியே உன்னை கிட்னாப் பண்ணிட்டு போயிடுவேன் என்றான் கடுப்பாக.

இவ்வளவு நேரம் பயந்து போய் வீராவை போய் பார்த்துக் கொண்டிருந்த அதித்தி என்னை எதுவும் செய்து விடாதீங்க எனக்கு எதுவும் தெரியாது நான் வீட்டுக்கு போகணும் என்று மறுபடியும் பழைய பாட்டை பார்க்க....

அவள் கையைப் பிடித்து இழுத்தவன் அவள் இடையில் கையை வைத்து அப்படியே தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டு அவளை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொண்டவனின் உடல் அவள் முதுகில் உரச...

அவன் முகத்தை அவள் தோளில் வைத்து அழுத்தி இப்போ ஒழுங்கா சொல்ல போறியா இல்ல நான் இங்கேயே உன்னை என்று வீரா அவள் காதில் கிசுகிசுக்க...

அவன் மடியில் அமர்ந்திருந்த அதித்திக்கு மிகவும் அசோகர்யமாக இருக்க அவள் முகத்தை சுளித்தாள்.

முகத்தில் குளிப்பது காரில் முன்னாடி டேஷ்போர்டு கண்ணாடியில் நன்றாக தெரிந்தது.

அதைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் அதிகமாக... தன் மடியில் இருந்தவளை அப்படியே முகத்தை பிடித்து திருப்பியவன் அவள் இதழில் அழுந்த ஒரு முத்தம் வைத்து.

நீ என்ன பார்த்து ஏன் பயப்படுறேன்னு சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பேன் எப்படி வசதி என்று கேட்டான்.

அவன் முத்தம் கொடுத்ததில் அதிர்ச்சியான அதித்தி வீராவை பயந்து போய் பார்க்க...

இப்படி பயந்து மறுபடியும் பார்க்காத நீ இப்படி பாக்குறப்போ எல்லாம் எனக்கு உனக்கு முத்தம் கொடுக்கணும்னு தோணுது என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் உதட்டில் முத்தம் வைத்தான்.

வீரா முத்தம் வைத்ததும் அதித்தி ஆற்றாமையோடு அவனைப் பார்த்தவள் ச்சி... என்று சொல்லி முகம் சுளித்து தன் உதட்டில் இருந்த அவன் எச்சிலை துடைத்தால்.

தான் முத்தம் கொடுத்ததை அருவருப்பு போல முகம் சுளித்து பார்த்து அதித்தி அதை துடைக்கவும் வீராவிற்கு கோபத்தில் உச்சி நரம்புகள் எல்லாம் சூடேறி விட்டது.

இத்தனைக்கும் அவன் அவளுக்கு ஆழமாக முத்தம் வைக்கவே இல்லை தன் உதட்டை ஈரப்படுத்தி அவள் உதட்டின் மேல் மட்டுமே லேசாக ஒட்டி எடுத்து இருந்தான்.

அதற்கே இப்படி முகம் சுளிக்கிறார் என்று கோபம் வர மீண்டும் அவள் முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக தன் முகத்திற்கு அருகில் இழுத்தவன் அவள் திமிரிக் கொண்டு பின்னால் செல்லவும்... அதை எல்லாம் கருத்திலேயே கொள்ளாமல் அவள் இதழில் ஆழ முத்தம் பதிக்க ஆரம்பித்தான்.

வீரா கோபத்தோடு அவளுக்கு முத்தம் கொடுக்க அவன் தந்த முத்தமே அவனுக்கு வினையாகி போனது ஏற்கனவே அவனைக் கண்டு ஒதுங்கி இருந்தவள் இப்போது அவனை சுத்தமாக வெறுத்து ஒதுக்கினால்.

இதுவரை வீரா அதித்தியிடம் அதிகமாக பேசியதே கிடையாது. எங்கும் பங்க்ஷனில் பார்த்தால் தூரத்திலிருந்து மட்டும் அவளை ரசித்துக் கொள்வான்.

அவனுக்கே தெரியாமல் அதித்தி அவள் இதயத்திற்குள் என்றோ நுழைந்து விட்டால். இன்று உன் கனவில் வந்து அதித்தி அவனை வீரா மாமா என்று ஆசையாக அழைத்ததுமே.

வீராவிற்கு அவளை அப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றித்தான் அவளை பார்க்க பிரியாவின் வீட்டிற்கு சென்றான்.

இங்கே அவள் இவனைப் பார்த்து பயந்து ஒழிந்து கொள்ளவும் தான் அவள் மீது அவனுக்கு கோபமாக வந்தது தான் அப்படி என்ன செய்து விட்டேன் என்பதற்கு என்று இவள் இப்படி என்னை கண்டு பயந்து போகிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால் தான் நேராக அவள் எங்கே செல்கிறாள் என்று விசாரித்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான்.

ஆனால் அவள் இப்படி தன்னை நடத்துவாள் என்று வீரா துளியும் எதிர்பார்க்கவே இல்லை.

அவளை ஆழ்ந்து முத்தமிட்டவன் என்னோட ஒரு முத்தத்தையே இப்படி முகம் சுழித்தே நீ என்ன அசிங்கப்படுத்திட்ட...

அடுத்த முறை நான் உன்ன பார்க்கிறப்போ எனக்கு சரியான காரணம் தெரியனும் நீ ஏன் என்னை பார்த்து பயப்படுற அப்படின்னு அப்படி இல்ல நீ காரணம் சொல்லலைன்னா இதே மாதிரி முத்தம் மறுபடியும் உனக்கு கொடுப்பேன் என்றான் வீரா.

அவள் மிரண்டு போய் அவன் மடியில் அமர்ந்து வாறே வீராவை பார்க்க... இந்தக் கண்ணு இந்த கண்ணு ரெண்டு தாண்டி என்ன என்னவோ செய்யுது நீ இப்படி பயந்து பார்க்கிறப்போ எனக்கு உன் பக்கத்திலேயே இருக்கணும் போல இருக்கு என்றவன்

காரை திறந்து அவளை கீழே இறக்கி விட்டு கதவை சாற்றியவன் அதித்தியை திரும்பியும் பார்க்காமல் மறுபுறம் வந்து இறங்கி கார் கதவை திறந்து உள்ளே அமரப்போனவன்.

காருக்கு வெளியே நின்று இருந்த அதிதியை பார்க்க....அவள் கண்களில் கண்ணீரோடு தலை குனிந்தபடி இன்னும் அதே இடத்தில் நின்று இருந்தால்.

என்ன வீட்டுக்கு போறது ஐடியா இருக்கா இல்ல இன்னொரு முத்தம் வேனுமா என்று கேட்டான்.

அவன் அப்படி சொன்னதும் தான் தாமதம் இங்கிருந்து விட்டால் போதும் என்று அதித்தி ஒரே ஓட்டமாக தன் வீட்டிற்குள் ஓடி விட்டாள்.

அவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட அவள் சென்ற திசையை பார்த்து லேசாக புன்முறுவல் இட்டவன் தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.

அழுதப்படியே அதித்தி வீட்டுக்குள் ஓடி வர... அப்போதுதான் ஏர்போர்ட்டில் இருந்து வந்து இருந்த தேவ் ரிஷி பிரியா குரு நால்வரும் ஹாலில் அமர்ந்து இருக்க...

அவர்கள் நால்வரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடி உள்ளே வந்த அதித்தி.

அவசர அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்து தன் அண்ணன்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவள் ரிஷி இடம் அண்ணா எப்போ வந்த என்றாள்.

இப்போ தான்டா ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் ஆகுது எங்க பெயிண்டிங் கிளாஸ்க்கு போயிட்டு வரியா என்று கேட்டான்.



ஆமாம் அண்ணா என்று அதித்தி சொல்ல...

எங்கே ஒன்றுமே கையில இல்ல சும்மா கை வீசிட்டு வந்திருக்க கிளாஸ்ல இருந்து என்றான் ரிஷி.

ரிஷி கேட்டதும் தான் பெயிண்டிங் கிளாஸிற்க்கு கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் பயத்திலும் பதட்டத்திலும் வீராவின் காரிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம் வர..



அது...அது வந்து.... அண்ணா என் ஃப்ரெண்ட் ரெஃபரன்ஸ்க்கு வேணும்னு அவ வீட்டுக்கு எடுத்துட்டு போய் இருக்கா நாளைக்கு கிளாசுக்கு வரும்போது கொண்டு வரேன்னு சொன்னா என்றால் அதித்தி.



சரிடா என்று அவள் தலையில் கை வைத்து அதித்தியின் தலையை கலைத்து விட்டான்.



அதித்தி வீராவுடன் காருக்குள் நடந்த எதையுமே தன் வீட்டில் சொல்லாமல் மறைத்து விட...

ஆனால் அவள் முகம் சரியில்லை... வாசலில் வரும் போதே அதித்தி அழுது கொண்டு வந்ததை கவனித்த இரு கண்கள் .



இதற்கு காரணமானவர்கள் யார் என்று தனக்கு தெரியும் என்பது போல அவனை வைத்துக் கொள்கிறேன் என்று கோபமாக தனக்குள் கர்ஜித்தது
 

Author: layastamilnovel
Article Title: வசீகரா 6.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top