layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
குரு ரிஷியை வறுடுத்துக் கொண்டு இருந்ததை கேட்டு அவன் பின்னால் இருந்து தேவ்வும், குருவும் பேசியதை கேட்டு அவர்கள் முன் வந்த பிரியா.

நீங்க சின்ன வயசுல செய்யாததைய என் மகன் செய்துட்டான. நீங்க என்ன எல்லாம் செய்திங்கன்னு நான் சொல்லட்டுமா என்று பிரியா குருவை மிரட்ட..

எங்கே தன் மகன் முன் தான் செய்த லீலைகளை எல்லாம் பிரியா போட்டு உடைத்து விடுவளோ என்று பயந்த குரு அப்படியே பிரியாவிடம் சரண்டர் ஆகி விட்டான்.

இதை பார்த்த தேவ்விற்கு இருவரிடமும் இருக்கும் புரிதலும் , காதலும், பாசமும் அவனை சிலிர்க்க வைத்தது.

தன் அம்மாவிடம் அடங்கி போகும் தன் அப்பாவை பார்த்து சசிறிதுக கொண்டு இருந்தான் தேவ்.

சரி டி பிரியா.. இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற.. நம்ம பையன் தானே எடுத்து சொன்ன புரிஞ்சுக்க போறான்.

நான் அவனை எதுவும் சொல்ல மாட்டேன் சரியா நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம டென்ஷன்ன ஆகி உன் ஹெல்த்த்தை கெடுத்துக்கிறே... என்றான் குரு.

அதை பார்த்த தேவ் இதற்கு முன்பு ரிஷியை உண்டு இல்லை என்று செய்துவிட வேண்டும் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டுஇருந்த தன் அப்பா.

அவன் அம்மா பிரியாவிடம் இறங்கி போவதை பார்த்து வாயின் மேல் விரலை வைத்துக்கொள் கொண்டு இவர்கள் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தான்.

அப்பா... என்ன இப்படி பல்டி அடிச்சுட்டீங்க... அம்மாவை பார்த்தால் கொஞ்சம் பயமா இருக்கும் என்று ஒரு அளவுக்கு தெரியும்.

ஆனால இப்படி மொத்தமா காலில் விழுந்திடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

இனி நான் என் அம்மா கட்சில தான் இருக்க போறேன். நீங்க டம்மி பீஸ்ன்னு எனக்கு இப்போதான் தெரியுது என்றான் தேவ்.

டேய்... டேய்... இதை எல்லாம் அப்பறது அப்பாவை இடை போடாதே டா.. நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை நான் சும்மா உங்க ம்ம வருத்தப்படுவான்னு தான் அப்படி நடிச்சேன் என்றான் குரு.

அதை கேட்ட ப்ரியா சிரித்தபடி டேய் தேவ் உன் அப்பா அப்படிதான் எப்பவுமே.. பார்க்க தான் டேர்றோர் பீஸ் ஆனா கூட இருக்கவங்களுக்கு தான் தெரியும் இவர் ஒரு வெத்து வெட்டுண்ணு என்று ப்ரியா ஏகத்திற்கும் வார..

அம்மாவும் பிள்ளையும் ஒன்று சேர்ந்துட்டீங்களா இனி என் பாடு திண்டாட்டம் தான் என்று குரு தலையில் கை வைத்துக் கொண்டு அமர...

என்ன பிரச்சனை இவங்க உங்க ரெண்டு உங்கள ரொம்ப கலாய்க்கிறாங்களா என்னன்னு சொல்லுங்க இவங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே ரிஷி குருவை நோக்கி வர...

ரிஷியன் குரலைக் கேட்டது மூவரும் குரல் வந்து திசையை திரும்பிப் பார்க்க...

தனக்கு இருபுறமும் இரண்டு பெண்கள் வர அவர்களின் தோலில் கையை போட்டபடி காதில் ஐபேட் ஹெட்செட் மாட்டிக்கொண்டு அந்தப் பெண்களை தன்னோடு சேர்த்து அழைத்தவாறு ரிஷி இவர்கள் மூவரும் நோக்கி வந்தான்.
j

இத்தனை வருடங்களாக ரிஷி பல நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்து இருக்கிறான் ஆனால் ஒரு நாள் கூட எந்த ஒரு பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து வந்தது இல்லை.

ஆனால் இன்று நியூஸில் வந்ததை விட மேலும் அதிர்ச்சியாக தன் பெற்றோரின் முன்பு இரு பெண்களை அனைத்து படி அழித்துக் கொண்டு அவர்கள் முன்பு வந்து நின்றவன் ஹாய் மாம் ஹாய் பாப்ஸ் என்று சொல்லி என்ன பிளஸ் பண்ணுங்க என்றவன் அவர்கள் காலில் விழுந்து எழுந்தான்.

நல்ல வேலையாக என் இரு பக்கமும் இருந்த பெண்களோடு சேர்ந்து அவர்கள் காலில் விழுந்து ரிஷி ஆசீர்வாதம் வாங்கவில்லை அந்த மட்டிலும் இருவரும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டனர்.

பிரியா தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் ஆசீர்வாதம் வாங்கிய தன் செல்ல மகனே தூக்கி அவன் நெற்றியில் முத்தம் வைத்தவள் நல்லா ரிஷி எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்ள..

எப்படி இந்த பக்கம் ஒரு பொண்ணு அந்த பக்கம் ஒரு பொண்ணுன்னு கூட்டிகிட்டு சுத்துறானே அது போலவா என்று குரு கேட்க...

ரிஷியை கட்டிக்கொண்ட பிரியா குரூ பேசியதை கேட்டு பிரியாவின் வாய் மூணு முனுக்க...

அப்பா அங்க பாருங்க அம்மா ரிஷியை கட்டி புடிச்சிட்டு அவன் காதில் என்னமோ ரகசியமா சொல்றாங்க என்றான தேவ்.

டேய் மகனே... நல்லா பாரு ரிஷி கிட்ட எந்த ரகசியமும் பேசல அவ என்ன பார்த்து தான் திட்டிகிட்டு இருக்கா.

நல்லா பாரு அவ கண்ணு என்கிட்ட தான் இருக்கு அவ வாய் என்ன தான் எதையோ சொல்லி திட்டுது என்று குரு சொல்ல ....

குரு சொன்னது நன்றாக கவனித்த தேவ். ஆமா அப்பா அம்மா அவங்க கிட்ட பேசல உங்கள பார்த்து தான் ஏதோ சொல்லிட்டு இருக்காங்க என்றான்.

சரி சரி விடு தேவ் இதெல்லாம் எனக்கு பழக்கமான ஒன்றுதான் இவளை நான் நைட் போய் கவனிச்சுக்கிறேன் என்று சொன்ன குரு.

ரிஷி அழைத்து வந்த இரண்டு பெண்களையும் பார்த்து ஏன்மா இப்படி ரெண்டு பேரும் நாடு விட்டு நாடு தனியா வந்து இருக்கீங்க உங்க வீட்ல எல்லாம் உங்களை கன்டிக்க மாட்டாங்களா என்று கேட்க.

அந்தப் பெண்கள் இருவரும் குரு பேசிய பாஷை புரியாமல் ரிஷியை பார்க்க...

அவன் ஒன்றும் இல்லை என் அப்பா எப்போதுமே அப்படித்தான் பேசுவார் என்று கூறி என்ன குரு என்ன சொன்னானோ அதைச் அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல....

ரிஷி சொன்னதை கேட்டு சிரித்த அந்த இரு பெண்களும் எதுவும் சொல்லா மாட்டாங்க என்றனர் .

காலம் அப்படி கேட்டுப போய் கிடக்கு என்று தலையில் அடித்துக் கொண்டவர் திரும்பி காரிற்கு செல்ல...

பிரியா குரு செய்ததை பார்த்து சிரித்தவரே ஸ்ரீயையும், தேவையும் அழைத்துக் கொண்டு சென்றால்.

ஸ்ரீயுடன் வந்த பெண்கள் தங்கள் நபர் வீடு இங்கே இருப்பதாக கூறி அவர்கள். வீட்டிற்கு சென்று விட இவர்கள் நால்வர் மட்டும் ஒரே காரில் கிளம்பினர்.

பிரிஹா வந்த காரை டிரைவரை எடுத்துப்போக சொல்லிவிட்டு தேவ் காரை ஓட்ட...நால்வரும் கிளம்பினர்.

காரின் முன்னால் ரிஷி அமர்ந்து கொள்ள பின்னால் பிரியாவும் குருவும் அமர்ந்திருந்தனர்.

நால்வரும் அமைதியாக சென்று கொண்டு இருக்க திடீரென்று குரு பிரியாவிடம் திரும்பி... ஆமா நீ எப்படி ஏர்போர்ட்டுக்கு வந்த நாங்க வந்த அதே டைமுக்கு.

அங்க ஏர்போர்ட்டுக்கு போய் ரிஷியை கூப்பிட போனது நாங்களே கடைசி நிமிஷத்துல முடிவு பண்ணனும் அப்புறம் எப்படி உனக்கு தெரிஞ்சது என்று கேட்டான் குரு.

அதெல்லாம் அப்படித்தான் பேசாம வாங்க இப்ப என்ன நான் ஏர்போர்ட்டுக்கு வந்தது உங்களுக்கு குத்தமா போய்விட்டதா என்று பிரியா

அச்சோ....பிரியா குட்டி அப்படி இல்ல இல்ல டா நீ எப்படி வந்தேன்னு தான் கேட்டேன் என்றான் குரு அப்படியே மாடுலேஷனை மாற்றி.

ரிசி வந்த பிறகு தன் அப்பா கிழித்து நார்னாராக தொங்க விட்டுவிடுவார். தங்களோடு ரிஷி வரும்போது பம்மிக் கொண்டு வருவான் என்று நினைத்திருந்த தேவ்விற்க்கு ஏமாற்றமே.

இங்கு அப்படியே என்ன நினைத்து வந்தனோ அதற்கு நேர் எதிராக ஜாலியாக வண்டியில் முன்னால் அமர்ந்து வர தன் அப்பா தான் அம்மாவிடம் சரண்டர் ஆகி இருந்தார்
 

Author: layastamilnovel
Article Title: வசீகரா 6
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top