layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
லோகியை பார்த்து வெட்கப்பட்டுகொண்டு ஸ்ருதி உள்ளே செல்லவும் தன்னை போல தான் அவளுக்கும் தன்னை பார்க்கும்போது உள்ளுக்குள் புதுவித உணர்வு தோன்றியிருக்க வேண்டும் அதனால் தான் அவள் தன்னை பார்ப்பதை தவிர்த்து விட்டு உள்ளே சென்றுவிட்டால் என்று புரிந்தது.


உடனே லோகேஷ் வேகமாக ஸ்ருதியை காண அவன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றான்.


லோகேஷ் வந்தது தெரியாமல் இங்கே ஸ்ருதி மெத்தையில் குப்புற படுத்துக்கொண்டு

" ஐயோ... குட்டிப்பிசாசு.. இப்படியா டி நீ...அவன ஓபன் ஆஹ் சைட் அடிப்ப.. அவன் வேற உன்னையே முழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்கான். அது தெரிஞ்சும் நீ எவ்ளோ தைரியமா அவனை சைட் அடிச்சிட்டு இருப்ப.. "

என்று தன்னை தானே திட்டி கழுவி ஊற்றிக்கொண்டு இருந்தாள்.


அவள் புலம்புவதை கேட்ட்டுக்கொண்டே சத்தமில்லாமல் அவள் அருகில் நெருங்கி வந்தவன்


" நான் பார்த்தா என்ன நீ என்னை எப்போ வேணா.. எவ்ளோ வாட்டி வேணாலும் சைட் அடிக்கலாம் "


என்று ஸ்ருதியின் பின்னால் இருந்து அவள் மேல் சாய்ந்த படி பேசினான்.


இப்படி சத்தமில்லாமல் திடீர் என்று வந்து தன் மேல் சாய்ந்து நிற்பவனை கண்டதும் ஏற்கனவே தாறுமாராக துடித்துக்கொண்டு இருந்த அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


அதை அவள் மீது சாய்ந்து இருந்த லோகேஷினால் உணர முடிந்தது.



உடனே அவள் மேல் இருந்து எழுந்தவன்

" ஏய் ஸ்ருதி என்ன இது உன் இதயம் இவ்ளோ வேகமா துடிக்குது.. "


என்று குப்புற படுத்திருத்த ஸ்ருதியை திருப்பி அவள் கண்ணத்தை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்து கேட்டான்.


லோகேஷின் கண்களை ஒரு நிமிடம் தான் பார்த்து இருப்பாள் அவன் கண்களை பார்த்த மறுநொடி தன் கண்களை மூடிக்கொண்டு தன் முகத்தை அவனிடம் மறைக்க வழி தெரியாமல் அவன் மார்பிலேயே தன் முகம் புதைத்து மறைத்துக்கொண்டாள்.


அதில் சிரித்தவன் ஸ்ருதியை இருக்கமாக காற்று கூட புக முடியாத அளவிற்கு இருக்கி அணைத்தவன் " என்ன குட்டிப்பிசாசு நேத்து நைட் வரை என்கிட்டே நல்லா தானே பேசிட்டு இருந்த.. இப்போ என்ன என்னை பார்த்ததும் வெட்கம், பயம் எல்லாம் " என்றான்.


அவன் மார்பில் முகம் புதைத்து இருந்தவள் " குட்டிப்பிசாசா!! நானா? " என்றவள்.


" நேத்து வரை உனக்கு கண் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். அதனால எனக்கு உன்கிட்டே அப்படி பேச ஒன்னும் சிரமமா இல்ல... ஆனா... " என்று அவள் நிப்பாட்ட...



" ம்ம்... என்ன ஆனா.. சொல்லு.. " என்றான் அவளை மேலும் இருக்கி அணைத்துக்கொண்டே...


அவன் கைக்குள் அவன் வாசனையை உணர்ந்தவலுக்கு லோகேஷின் பிரத்தியேக நறுமணம் அவளை ஏதோ செய்ய...


அவன் கைக்குள் இருந்து தன்னை பிரித்துக்கொண்டவள் அவனை பார்க்காமலேயே " உனக்கு கண் தெரியும்னு எனக்கு தெரிஞ்சதும் முதல்ல எனக்கு ஞாபகம் வந்தது நேத்து நைட் நான் உமுன்னாடி டிரஸ் மாத்தினது தான். நீ வேணும்னே நேத்து என்கிட்டே பொய் சொல்லி நான் டிரஸ் மாத்துற அப்போ நீ என்னை முழுசா பாத்துட்டேன்னு உணர்ந்ததும் என்னனு தெர்ல எனக்கு அதுக்கு அப்பறோம் உன்னை நேரா பாக்கவே முடியலை " என்றாள்.


அதை கேட்டவனுக்கு நேற்று நடந்தது நினைவில் வர... ஸ்ருதியை சேலை இல்லாமல் பார்த்தவனுக்கு இப்பொதும் தன் உடலில் பரவும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சிரமமாக இருந்தது.


" நான் உன்னை முழுசா எதுவும் பாக்கலையே... " என்றான் குறும்பாக.


இவ்வளவு நேரம் அவனை பார்த்து பேசமுடியாமல் தினரியவள் அவன் பதில் கேட்டதும் சட்டென நிமிர்ந்து லோகேஷை பார்த்து " பொய் சொல்லாத எனக்கு தெரியும் நீ என்னை முழுசா பாத்துட்டேன்னு.. " என்றாள் வெட்கத்தில் சிவந்த முகத்தோடு.


" இல்லையே நீ சேலையை கழட்டும் போது உன்னை நான் பார்த்தேன். அதுக்கு பிறகு தான் நீ ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போய் ட்ரெஸ் மாத்திகிட்டியே... அப்பறோம் எப்படி நான் உன்னை முழுசா பார்த்து இருப்பேன் " என்றான்.



அவன் பேசியதை கேட்டு அவனை முறைத்தவள்

" நல்லா யோசிச்சு பதில் சொல்லு நீ என்னை முழுசா பாக்கல அப்படித் தானே " என்றாள்.


அவனும் சிறிதும் யோசிக்காமல் "ம்ஹும்... பாக்கல..." என்றான்.


அவன் பதிலை கேட்டு கடுப்பானவள் " டேய்.. லோகி ஏன்டா.. இப்படி பொய் பொய்யா பேசிட்டு இருக்க... நேத்து நான் ட்ரெஸ்ஸிங் ரூம் போய் டிரஸ் மாத்தும்போது நீ என்னை முழுசா பாக்கல.. " என்றாள்.


" நீ ட்ரெஸ்ஸிங் ரூம்ல டிரஸ் மாத்துற அப்போ நான் அந்த பக்கம் திரும்பி படுத்துஇருந்தேன். அப்பறோம் எப்படி உன்னை பார்க்க முடியும். " என்றான்.


" நானும் உனக்கு கண்ணு தெரியுங்குற உண்மை எனக்கு தெரியுற வரைக்கும் அப்படிதான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா உனக்கு கண்ணு தெரியுன்னு நான் தெரிஞ்சுகிட்டேன் அப்போதான் எனக்கு தோணிச்சு.. " என்றாள்.


" அப்படி என்ன தோணிச்சு " என்றான் லோகேஷ் சற்று பதற்றமாக.


அவன் அருகில் நெருங்கி வந்தவள் " ம்ம்ம்... நான் டிரஸ் மாத்துற அப்போ நீ எப்படி படுத்து இருந்தயோ அதே மாதிரி படு " என்றாள்.


" படுக்கணுமா? அதெல்லாம் முடியாது.. " என்றான் லோகேஷ்.


" சரி படுக்க வேணாம் " என்றவள்.


" உனக்கு கண்ணு தெரியாதுன்னு சாதாரணமா நினைச்சிட்டு நான் நேத்து ட்ரெஸ்ஸிங் ரூம் கதவை சாத்தவே இல்ல... டிரஸ் மாத்திட்டு நான் வெளியே வர அப்போ தான் நீ படுத்து இருந்த இடத்துக்கு நேர் எதிரா இருந்த கண்ணாடியை பார்த்தேன். அதை பார்த்ததும் எனக்கு டவுட் வந்துச்சு... சரின்னு உன் பக்கத்துல வந்து உன்னை மாதிரியே அந்த கண்ணாடியை பார்த்து படுத்து பார்த்தேன்.

அப்போதான் ட்ரெஸ்ஸிங் ரூம் இங்கே இருந்து இந்த கண்ணாடி வழியா பார்த்தா நல்லா தெளிவா தெரியுதுனு கவனிச்சேன். சரி உனக்கு தான் கண்ணு தெரியாதேன்னு நான் அப்போ அதை பெருசா எடுத்துக்கள ஆனா இன்னிக்கு உனக்கு கண்ணு தெரியுங்குற விஷயத்தை தெரிஞ்சதும் என்னோட சந்தேகம் கிளியர் ஆகிடுச்சு " என்றவள்.


அவன் அருகில் வந்து லோகேஷின் சட்டையை பிடித்து " ஒழுங்கா உண்மையை சொல்லிடு.. டா.. ராஸ்கல் இல்லே நடக்குறதே வேற " என்றாள்.



ஸ்ருதி எப்படி யோசித்து தான் அவளை கண்ணாடி வழியாக பார்த்ததை கண்டுபிடித்துவிட்டாள் என்று தெரிந்ததுமே லேசாக லோகேஷிற்கு வியர்த்துவிட்டது.இவளிடம் உண்மையை ஒப்புக்கொள்ளக்கூடாது என்று நினைத்தவன்.



" ஏய் என்ன நீ... ஒரு ப்ரெசிடெண்டை பார்த்து ராஸ்கல் அது..இதுன்னு பேசுற... " என்றான் பொய்யாக கோபம் வந்தவனாக.


" டேய் நீ இப்படி எல்லாம் பேசினா நான் பயந்திருவேன்னு நினைச்சியா? அதுதான் இல்ல... இந்த ஸ்ருதிய ஏமாத்த முடியாது. ஒழுங்கா மரியாதையா உண்மையை ஒத்துக்க... இல்ல... அவ்ளோதான் நான் ஊரை கூட்டி உங்க ப்ரெசிடெண்ட் செய்த காரியத்தை பாருங்கன்னு சொல்லிருவேன் " என்றாள்.


" என்ன சும்மா என்னை பூச்சாண்டி காட்டி பயமுறுத்தினா நான் பயந்திருவேனா... நீ யார் கிட்டே வேணா போய் சொல்லு... இதுக்கெல்லாம் நான் பயந்தவன் இல்ல.. " என்று திமிராக மெத்தையில் சாய்ந்து தலைக்கு கைகொடுத்து படுத்துக்கொண்டான்.


' ஓஹோ.. உனக்கு அவ்ளோ தைரியமா... இப்போ பாக்குறேன் உன் தைரியத்தை " என்று சொல்லிக்கொண்டே...


" ஆன்டி... அங்கிள்... உங்க மகன் என்ன செஞ்சான் தெரியுமா? " என்று சத்தமிட்டபடி அங்கிருந்து கதவை நோக்கி செல்ல போனால்.


மெத்தையில் படுத்திருந்த லோகேஷ் தன் அப்பா, அம்மாவை ஸ்ருதி அழைக்கவும் வேகமாக எழுந்து அவள் கையை பிடித்து வெளியே செல்ல விடாமல் இழுத்தான்.


அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது போய் ஸ்ருதி மோத.. அவள் மோதியதும் தடுமாறியவன் மெத்தையில் ஸ்ருதியை கட்டிக்கொண்டு சரிந்தான்.


அவன் மேல் விழுந்தவள் " டேய் ராஸ்கல் எதுக்கு டா.. என்ன இழுத்த.. நான் அங்கிள், ஆன்டி கிட்டே உண்மையை சொல்லிருவேன்னு பயந்து தானே என்னை இழுத்த... ஒழுங்கா என்னை விடுடா... " என்று அவன் மேல் இருந்து எழுந்திருக்க போக...


' முடியாது டி.. குட்டிபிசாசு... "என்றவன் அவளை மெத்தையில் சரித்து அவள் மேல் படுத்துக்கொண்டான்.


" டேய்.. பிராடு.. பொய்க்காரா... ராஸ்கல்.. என்ன விடுடா... என்மேல இருந்து எழுந்திருடா... நான் ஆன்டி கிட்டே உன்னை பத்தி சொல்லாம விட மாட்டேன்" என்று விடாமல் அவள் புலம்ப...


" ஏய் குட்டி பிசாசு இப்போ எதுக்கு டி.. இவ்ளோ சத்தம் போடுற... ஆமா அந்த கண்ணாடி வழியா நீ டிரஸ் மாத்துற அப்போ நான் உன்னை பார்த்தேன். ஆனா முழுசா பாக்கல... நீ ப்ளௌசை கழட்டும்போது நான் கண்ணை மூடிக்கிட்டேன் போதுமா நான் உன்னை முழுசா எதுவும் பாக்கல சரியா... " என்றான்.


" போய் சொல்லாத டா... " என்றாள்.


'ஏய் சத்தியமா சொல்றேன் டி.. குட்டி பிசாசு நான் உன்னை முழுசா பாக்கல என் மேல சத்யம் " என்றான்.


அவன் மீதே சத்யம் செய்த பின்பு அவனை நம்பாமல் அவளால் இருக்க முடியவில்லை அதன் பின்பு அமைதியானவள் " சரி என் மேல இருந்து எழுந்திறு நான் உன்ன நம்புறேன் போதுமா? " என்றாள்.


" ம்ஹும் முடியாது " என்றான்.


" ஒழுங்கா இப்போ எழுந்திருக்க போறியா... இல்ல... நான் ஆன்டியை கூப்பிடட்டுமா? " என்றாள்.


" எந்திரிக்க முடியாது டி... நீ யாரை வேணா கூப்டுக்கோ... " என்றவன் அவள் மீது வசதியாக படுத்துக்கொள்ள..


" கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்பத்தான் பேசுற நீ... பாவமேன்னு என்கிட்டே பொய் சொல்லி என்னை ஏமாத்தினாலும் பரவாயில்லைன்னு உன்ன பத்தி யாருகிட்டயும் சொல்லாம இருந்தேன் பாரு என்னை சொல்லணும் " என்றவள்.


கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறேன் ஓழுங்கா என் மேல இருந்து எந்திரிக்க போறியா.. இல்ல ஆன்டி, அங்கிளை கூப்பிடட்டுமா? " என்றாள்.


" முடியாது நீ முடிஞ்சா கூப்பிட்டுக்கோ... " என்றான்.


" இரு டா ராஸ்கல் இப்போ கூப்பிடுறேன்.. " என்று வாசலை பார்த்து "ஆண்ட்ட்.... டி... " என்று அவள் வார்த்தையை முடிக்கும் முன் அவள் கன்னத்தை பிடித்து திருப்பி குனிந்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.


இதை சற்றும் எதிர் பாராதவள் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள் பின் சுதாரித்துக் கொண்டவள் " ம்ம்ம்... ம்ம்ம்... " என்று அவன் இதழில் இருந்து தன் இதழை பிரிக்க முயன்றவள் அது முடியாமல் போகவே...அவன் முதுகில் அடித்துக்கொண்டே தன்னை அவனிடம் இருந்து பிரிக்க முயற்சித்தால்.


ஆனால் அது எல்லாம் அவனை எதுவும் செய்யவில்லை அவள் முனகல் சத்தத்தை கேட்டவன் மேலும் தன் முத்தத்தை தீவிரப்பிடுத்தி முத்தமிட்டவன் அவன் முத்தத்தில் அவள் சத்தம் அடங்கியதும் அவளை விடுவித்தவன்.


" என்ன பத்தி எதுவும் வெளிய பேசின இதுதான் உனக்கு தண்டனை ' என்றான் அவள் மேல் இருந்து எழுந்துகொண்டே...


" சொல்லுவேன் டா.. உன்னை பத்தி நீ என்னை ஏமாத்தி கல்யாணம் செய்துகிட்டது.. கண்ணு தெரியாம நடிச்சது எல்லாமே சொல்லுவேன் உன் அம்மா, அப்பாகிட்டே.. என்னடா பண்ணுவ... " என்றால் கட்டிலில் இருந்து தன் பனியனை சரி செய்துகொண்டே...


கட்டிலில் இருந்து எழுந்தவலை மீண்டும் கட்டிலில் தள்ளி அவள் இதழில் அழுந்த முத்தமிட்டவன் " நமக்குள்ள நடந்ததை யார் கிட்டயும் சொன்னே... உனக்கு இப்படித்தான் தண்டனை கிடைச்சுட்டே இருக்கும். அதையும் மீறி நீ உண்மையை சொன்னா... இதை விட பெரிய தண்டனை உனக்கு காத்துட்டு இருக்கு நியாபகம் வெச்சுக்கோ... " என்றவன் அவள் கண்களை பார்த்து.



"இனி நீயே நினைச்சாலும் என்னை விட்டு போக முடியாது. உன்னை என்கிட்டே இருந்து போக விடவே மாட்டேன் " என்றான்.
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 10
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top