- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
இரவு முழுவதும் லோகியின் கைபிடிக்குள்ளேயே படுத்த ஸ்ருதி அவன் உடலில் இருந்த கதகதப்பில் நன்கு உறங்கி இருந்தாள்.
வழக்கம் போல மிகவும் தாமதமாக எழுந்தவள் ரெப்பிரேஷ் ஆகிவிட்டு காபி குடிக்க தன் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல போனவள் அங்கே தனக்கு பரீச்சயமா குரல் பேசுவது கேட்கவும் கதவை திறந்தவள் அப்டியே பிரீஸ் ஆகி நின்றுவிட்டாள்.
"மாப்பிள்ளை நாங்க மண்டபத்துல நடந்துகிட்டத்தை எல்லாம் வெச்சு எங்களை தப்பா நினைச்சுக்காதீங்க... அந்த ஓடுகாலி..." என்று சொன்னவர்.
அந்த வார்த்தையை சொன்னதும் லோகி அவரை பார்த்த பார்வையில் கதிகலங்கியவர்.
"சாரி மாப்பிள்ளை தெரியாம.." என்று தலையை சொறிந்துகொண்டே ...
"ஏதோ எங்க பொண்ணு இப்படி சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு ஓடி வந்துட்டாலேன்னு ஆதங்கத்துல மண்டபத்துல அப்படி நடந்துகிட்டேன். எங்களை மன்னிச்சிருங்க " என்று ஜானகி லோகி முன்பும் அவன் குடும்பத்தின் முன்பும் கூலை கும்பிடு போட்டுகொண்டு நின்று இருக்க..
அதை தன் அறைக்குள் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ருதி " ச்சே.. நேத்து வரைக்கும் என்னை கண்டாலே ஆகாது இவங்களுக்கு. நான் இப்போ வசதியான வீட்டில் அதுவும் இந்த நாட்டோட ப்ரெசிடெண்ட்டையே கல்யாணம் செய்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும் எப்படி வெட்கமே இல்லாம வந்து இங்கே நடிக்குதுங்க. என் அம்மா தான் அப்படின்னா கூட இருக்குறவங்களும் அப்டி தான் இருக்காங்க" என்று சலிந்துகொண்டவள் திறந்த கதவை மூடிவிட்டு ரூமுக்குள் சென்றவள்.
" இவங்க முகத்துலயே முழிக்க கூடாதுனு தானே நான் ஊரை விட்டே இவ்வளவு தூரம் ஓடி வந்தேன். ஆனா இங்கயும் வந்து எண்ணை நிம்மதியா இருக்க மாட்டேங்குறாங்களே.. " என்று சலித்துக் கொண்டவள் டவலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்று விட்டால்.
இங்கே லோகியிடம் மிகவும் நல்லவர்கள் போல பேசி நடித்துக்கொண்டு இருந்தவர்களை பார்த்து அங்கே இருந்த அமலாவிர்க்கோ எரிச்சலாக இருந்தது. இருந்தும் அவர்கள் ஸ்ருதியின் உறவு ஆயிற்றே அவர்களை எதுவும் சொல்லி ஸ்ருதிக்கு கஷ்டத்தை கொடுத்துவிக் கூடாது என்று பொறுமையாக நின்று அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஜானகி லோகியிடம் பேசிக்கொண்டு இருந்தவர் சட்டென்று வந்து அவன் கையை பிடிக்க... உடனே லோகியை சுற்றி நின்று இருந்த கார்ட்ஸ்கள் வேகமாக வந்து ஜானகியை அவனிடம் இருந்து பிரித்து தனியே நிற்க வைத்து பிடித்துக் கொண்டனர்.
உடனே அவர்கள் முன் வந்த ஜானகியின் கணவன் கைலாஷ் லோகியின் பாதுகாவலர்களிடம் "ஏய்.. உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு ப்ரெசிடெண்ட் மனைவியுடைய அம்மாவை பிடிச்சு இழுத்து நிற்க வைப்பிங்க... இதை செய்ய உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும் " என்று அவர்களை அதிகாரம் செய்தவர் ஜானகியை அவர்கள் பிடிக்குள் இருந்து விடுவிக்க முயற்ச்சித்தார்.
லோகியின் கார்டுகள் இப்பொது என்ன செய்வது என்று தெரியாமல் லோகியை பார்க்க.. அவன் பரவாயில்லை விட்டுடுங்க என்றான்.
அப்போது " வேணாம் அவங்களை அப்படியே வெளியே தள்ளி கதவை சாத்துங்க.. " என்ற படி ஸ்ருதி தன் அறையில் இருந்து வெளியே அவர்களை நோக்கி வந்தாள்.
அமலாவிற்கு ஸ்ருதி பேசியதில் மகிழ்ச்சியே இப்படி தன் குடும்பமாகவே இருந்தாலும் அவர்களின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வதை பார்த்து.
லோகி ஸ்ருதியிடம் " ஏன் ஸ்ருதி இவங்க உன்னோட அம்மா அப்பா இல்லையா அந்த உரிமையில் தான் என் கையை பிடிச்சாங்க. " என்றான் லோகி.
" இங்கே பாரு லோகி நீயும் நானும் காதலிக்கும்போது நான் உன்கிட்டே என்ன சொன்னேன் " என்று அவனை பார்த்து சற்று கோபமாக பேசிக்கொண்டே ஸ்ருதி அவன் அருகில் வந்தாள்.
அவள் திடீர் என்று இப்படி கேட்கவும் லோகி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவளை பார்க்க...
உடனே ஸ்ருதி " என்ன பாக்குற லோகி.. நான் சொன்னதை அதுக்குள்ள மறந்துட்டியா? சரி பரவாயில்லை நானே சொல்றேன் " என்றவள்.
" நாம கல்யாணம் செய்துகிட்ட பிறகு என் சொந்தம்னு சொல்லிட்டு யாரு இந்த வீட்டுக்குள்ள உரிமை கொண்டாடிட்டு வந்தாலும் அவங்களை சேர்த்துக்கக் கூடாதுனு சொன்னேனே. மறந்துட்டியா? எனக்குன்னு இருந்த ஒரே உண்மையான உறவு என் அப்பா மட்டும் தான் அவர் எப்போ என்னை தனியா விட்டுட்டு இந்த உலகத்தை விட்டு போனாரோ!! அப்போவே நான் யாரும் இல்லா அனாதை ஆகிட்டேன். அதுவும் உன்னை பாக்குற வரை தான் அப்படியா ஒரு நினைப்பு என் மனசுல இருந்துச்சு. என்னிக்கு உன்னை காதலிக்க ஆரம்பிச்சனோ அப்போவே எனக்குன்னு நீ மட்டும் தான் இருக்கேன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதனால இவங்களோ இவங்க குடும்பத்தை இருந்தவங்களோ என் பேரை சொல்லிட்டு உரிமை கொண்டாறதுல எனக்கு இஷ்டம் இல்லை. " என்றாள்.
ஸ்ருதி பேசியதை கேட்டதும் ஜானகியின் உண்மை முகம் மீண்டும் வெளியே வந்தது. " என்ன டி சொன்ன.. இவ்வளவு நாளும் என் வீட்டுல நான் போட்ட சாப்பாட்டை தின்னுட்டு, நீ நினைச்சது எல்லாம் படிச்சிட்டு,என் காசுல சொகுசா வளர்ந்துட்டு இப்போ என்னவோ எனக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுற... நானா உன்னை பெத்தவங்க டி அதை மறந்துட்டியா? " என்று ஜானகி ஸ்ருதியை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு வர...
அவர் முன்னே வந்து லோகி ஜானகியின் கையை பிடித்து தடுத்தவன் " இங்க பாருங்க ஸ்ருதிக்கு உங்களை பார்க்கவோ உங்க கூட உறவு கொண்டாடவோ விருப்பம் இல்லைனு அவள் பேசியதில் இருந்தே தெளிவா புரிஞ்சிருச்சு. இனி அவளை நீங்க தொந்தரவு செய்றதுல நியாயம் இல்லை. " என்றான் பொறுமையாக.
" அவ அப்படி சொன்னா நான் சும்மா விட முடியுமா? " என்றவர் லோகியை தாண்டி அவன் பின்னால் நின்று இருந்த ஸ்ருதியை பார்த்து " நீ இதுக்கெல்லாம் அனுபவிப்ப டி... " என்றவர்.
திரும்பி லோகி இடம் " இவ ஒரு விளங்காதவ... இவ பொறந்ததுமே இவ அப்பனை முழுங்கி என்னை நாடு ரோட்டில் நிற்க வெச்சுட்டா... ஏதோ என் புருஷன் என் மேல பரிதாபப் பட்டு என்னை கல்யாணம் செய்துங்கிட்டதுனால அவரோட தயவுல நான் இவளை என் வீட்டுள வெச்சு வளர்த்துட்டு வந்தேன். ஆனா என்கிட்டே இருந்த தரித்திரம் விலகி உன்னை வந்து பிடிச்சிருச்சு. இவளை கலயாணம் பண்ணின பாவத்துக்கு அவளோட துரதிஷ்டம் உன்னையும் பிடிச்சுக்க போகுது பார் " என்று லோகிக்கு சாபம் விடாத குறையாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இவ்வளவு நேரம் தைரியமாக பேசிய ஸ்ருதி தன்னை பெற்றவளே தன்னை பற்றி பேசியதை கேட்டு உள்ளம் வருந்தினால் ஸ்ருதி.
அவளிடம் வந்த அமலா ஸ்ருதியின் தலையை வருடி விடவர் " உன் குடும்பத்தை விட்டு நீ விலகி இருக்குறதே நல்லது தான் மா.. என்ன பேச்சு பேசுறாங்க உன் அம்மா.. இப்படி ஒரு பொம்பளையை நான் பர்ஹடாதே இல்லை. பெத்த பொண்ணையே இவ்வளவு பேசிட்டு போறாங்க.. " என்று வருத்தப்பட்டார்.
"விடுங்க ஆன்டி இது அவங்க குணம் மாத்த முடியாது" என்றவள் அதெசோகத்தோடு தன் அறைக்கு சென்றாள்.
ஸ்ருதி முகத்தை தூங்கபோட்டுக் கொண்டு செல்வதை பார்த்த லோகிக்கு அவளை இந்த மனநிலைக்கு தள்ளிய ஜானகியின் மீது கோபம் அதிகம் ஆனது. உடனே தன் கார்ட்ஸ்களை அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னவன் அங்கிருந்து தன் ஆஃபிஸிற்கு கிளம்ப..
"டேய் லோகி என்ன டா உன் பொண்டாட்டி சோகமா உள்ள போயிருக்கா அவளை சமாதானம் செய்யாம நீ வெளியே போற.." என்றார் அமலா.
" மா.. என்ன செய்தா என் மனைவி சந்தோஷப்படுவான்னு எனக்கு தெரியும். அதை செய்ய தான் நான் இப்போ போய்ட்டு இருக்கேன். நான் நைட் வந்து அவ கிட்டே பேசிக்குறேன் . அவளை நான் பார்த்துக்கறேன் ம்மா..." என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 11
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.