- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
சுருதியின் அம்மா அவளை சாபம் விட்டு சென்றதிலிருந்து மிகவும் சோகமாக தன் அறைக்கு சென்று கதவடைத்தவள் இரவாகியும் சாப்பிடக்கூட வெளியே வரவில்லை.
அமலாவும் இரண்டு மூன்று முறை சித்தாராவை அனுப்பி ஸ்ருதியை சாப்பிட அழைக்க… அவள் தனக்கு பசி இல்லை என்று சொல்லி சித்தாராவை அனுப்பி விட்டாள் .
ஆளுநர் மாளிகையில் தனது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்தான் லோகி .
அவன் வரும்வரை தூங்காமல் ஹாலிலேயே காத்திருந்த அமலா வேகமாக லோகி வந்ததை பார்த்து எழுந்து அவனிடம் சென்றவர்.
“டேய் நான் உன்கிட்ட காலையிலேயே சொன்னேன் ஸ்ருதி சோகமா இருக்கான்னு… அவளை சமாதானம் செய்வது விட்டுட்டு உடனே நீ ஆபீஸ்க்கு போகணுமா பாவம்டா அவ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல ரூமை விட்டும் வெளியே வரல” என்றார் சோகமாக .
“காலையிலிருந்து வெளியேவே வரலையா?” என்றான் லோகி
இல்லை… என்று அமலா தலையாட்ட…
“சரி அப்போ நீங்க கொஞ்சம் அவளுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு ரூமுக்கு கொடுத்து விடுங்க… நான் அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்து விடுகிறேன்” என்றான் .
“சரிப்பா..” என்றவர் லோகியின் கையை பிடித்துக் கொண்டு “ஸ்ருதி நம்ம வீட்டுக்கு நம்மள நம்பி வந்த பொண்ணு அவள சந்தோஷமா வச்சுக்க வேண்டியது எல்லாரோட பொறுப்பும் தான். குறிப்பா அவள கல்யாணம் பண்ணி இருக்கிற உனக்கும் அந்த பொறுப்பு அதிகம் இருக்கு… அவள எவ்வளவு சந்தோஷமா வச்சுக்கணும்னு நீ நினைக்கிறாயோ…. ஸ்ருதி எவ்வளவு நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறாயோ அப்படி அவளை நடத்து. அதுதான் இந்த அம்மாவுக்கு பெருமை மத்த மாமியார் மாதிரி மருமகள பத்தி குறை சொல்லவோ இல்ல மருமகள் கூட சேர்ந்து வாழ கூடாதுன்னு தடை போடுற ஆள் நான் கிடையாது . நீ அவளை சந்தோஷமா பாத்துக்க அம்மாவுக்கு அதுதான் சந்தோஷம்”என்றார் .
அவரை பார்த்து சிரித்த லோகி “நீங்க கவலைப்படாதீங்கம்மா நான் கண்டிப்பா சந்தோஷமா பாத்துக்குவேன்” என்றவன். அவன் அறையை நோக்கி செல்ல அவர்கள் இருவருக்கும் வேலை ஆளிடம் சொல்லி உணவை அனுப்பி வைத்துவிட்டு தூங்கச் சென்றார் அமலா .
லோகி தன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வர அவன் அறை முழுவதும் இருட்டாக இருந்தது . கோட்டை கழட்டி வைத்துவிட்டு லைட்டை ஆன் செய்தவன் திரும்பி பார்க்க அங்கே இருந்த ஒரு சிறிய சோபாவில் உடலை குறுக்கிக் கொண்டு கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி .
அவளை அப்படி பார்க்கையில் லோகியின் இதயம் ஏனோ வலித்தது. சத்தம் எழுப்பாமல் மெல்ல அவளிடம் வந்தவன் பூனை குட்டி போல சுருண்டு சோபாவில் படுத்திருந்தவளை மெதுவாக கை கொடுத்து தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்தவன் அவளுக்கு மார்பு வரை போர்த்திவிட்டு அவள் அருகில் சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்.
ஸ்ருதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் .
சற்று நேரத்தில் அவர்கள் அறைத்ததவு தட்டவும் அவள் தூக்கம் கலைந்து விடாதவாறு வேகமாக அறை கதவை திறக்க வேலையாள் அவர்களுக்கு உணவை கொண்டு வந்திருந்தார்.
அவரிடம் வாங்கியவன் கதவை சாற்றிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஸ்ருதியின் அருகில் உணவை வைத்தவன் . முதலில் சென்று பிரஷ் ஆகிவிட்டு வேறு உடை மாற்றி வந்த லோகி உணவை இழுத்து கட்டிலுக்கு அருகில் வைத்தவன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியை நிமிர்த்தி உட்கார வைத்து அவள் பின்னால் அமர்ந்து சுருதியை தன் இடது தோளில் சாய்த்து அமர்ந்து கொண்டான்.
அருகில் இருந்த உணவு தட்டை கையில் எடுத்து அதிலிருந்த உணவை எடுத்து ஸ்ருதியின் வாய அருகில் கொண்டு சென்றவன் “குட்டிமா .. பப்பி வாய திறடாகொஞ்சம் சாப்பிடு.
காலையிலிருந்து நீ எதுவுமே சாப்பிடலன்னு அம்மா சொன்னாங்க” என கொஞ்சி சிறு பிள்ளையை அழைப்பது போல அவளை அழைத்தான் .
அவன் பேசுவதை கேட்டு தூக்கத்தில் நெளிந்த சுருதி அவன் மார்பை உரசியபடி லேசாக திரும்பி படுத்தாள் .
தட்டை தனக்கு அருகில் வைத்தவன் கையில் இருந்த உணவை அவள் உதட்ட அருகில் கொண்டு சென்று முதல் வாயை சற்று வலுக்கட்டாயமாக அவளுக்கு புகட்டினான் .
முதலில் முகத்தை சுளித்துக்கொண்டே உணவை வாங்கியவள் நல்ல பசியில் இருக்கவும் லோகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவளுக்கு ஊட்டி விட பசியில் அவன் ஊட்ட ஊட்ட கொண்டு வந்த மொத்த உணவையும் சாப்பிட்டு முடித்தாள் .
சுருதி முழுவதுமாக சாப்பிட்டு முடித்த பின்பு கை கழுவி அவள் வாயை துடைத்து விட்டவன் அவளை மெல்ல தலையணையை சற்று உயர்த்தி வைத்து அதில் படுக்க வைத்து விட்டு சாப்பிட்டு வைத்த தட்டுகளை ஓரமாக வைத்துவிட்டு விளக்கை அணைத்தவன் வந்து சுருதியின் அருகில் அவள் மார்பு வரை போர்த்திவிட்டு லோகியும், படுத்துக் கொண்டான் .
லோகி வந்து சுருதியின் அருகில் படுத்த மறுநிமிடம் அவன் அருகில் உறங்குவது போல படுத்துக் கொண்டிருந்த ஸ்ருதி திரும்பி அவனை இடையோடு கட்டிக்கொண்டு இருக்க அணைத்தவள் தேம்பி அழ ஆரம்பித்தாள் .
இதை சற்றும் எதிர்பாராத லோகி தன்னை கட்டிக்கொண்டு அழுபவளை பார்த்து “சுருதி என்ன இது நீ முழிச்சிட்டு தான் இருந்தியா இப்போ எதுக்காக அழற” என்றான்.
ஒன்றும் புரியாமல் அவள் எதுவும் பேசாமல் அவன் மார்பில் தலை வைத்து மேலும் இறுக்கமாக லோகியை கட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.
அவள் கண்ணீர் துளிகள் லோகி அணிந்திருந்த சட்டையை ஈரம் செய்திருக்க எட்டி கட்டிலுக்கு அருகில் இருந்த விளக்கை போட்டவன்.
ஸ்ருதியின் முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் அவள் முகம் அழுது வீங்கி இருப்பதை பார்த்து அதிர்ந்தான்

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 12
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.