layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
இப்போ எதுக்குடா கண்ணா அழற என்ன ஆச்சு என்றான் .



அவள் எதுவும் பேசாமல் விம்மிக்கொண்டே லோகியை பார்க்க .



காலைல வந்து உன் அம்மா உன்னை திட்டிட்டு போனாங்களே அத நெனச்சு அழறியா என்றான் .


அவள் இல்லை என்று தலையாட்ட.

காலையிலிருந்து நான் உன்னை சமாதானம் செய்ய வரவே இல்லைன்னு என் மேல எதுவும் கோவமா அதனால உனக்கு அழுக வருதா என கேட்டான் .



அதற்கும் இல்லை என்று சுருதி தலையை ஆட்ட .


அப்புறம் ஏன்டா குட்டிமா அலற நீ அழுததை பார்க்கிறப்போ எனக்கு இங்கு ஏதோ செய்து என்று தன் இதயத்தை தொட்டு தடவி காட்டினான் லோகி .

அழுது கொண்டிருந்த ஸ்ருதி தன் கண்களை துடைத்துக் கொண்டே தேம்பியவாறு அவனை பார்த்து உனக்கு என்ன எவ்வளவு நாளா தெரியும் என்றாள் .



உன்னை முதன் முதலில் ஏர்போர்ட்ல பார்த்த நாளிலிருந்து தெரியும் ஏனென்றான் .



என் அம்மா வயித்துல நான் கருவா உருவானதிலிருந்து அவங்களுக்கு என்ன நல்லா தெரியும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து என் அம்மா ஒரு முறை கூட எனக்கு இப்படி பாசமா ஊட்டி விட்டது இல்ல என்ன இவ்வளவு அக்கறையுடன் கவனித்துக் கொண்டது இல்லை வீட்டில் இருக்கிற வேலைக்காரவங்க யாராவது என்னை பார்த்துக்கொள்வாங்க ஆனா அப்ப கூட சாப்பாடு நானே தான் எடுத்து சாப்பிடணும் சின்ன குழந்தையா இருக்கிறப்போ எனக்கு இதெல்லாம் ஒரு ஆசை இயக்கம் என்கூட படிக்கிற பொண்ணுகளோட பேரண்ட்ஸ் எல்லாம் அவங்கள நல்லா பார்த்துக்கிறப்போ என்ன ஏன்னு கேட்க கூட யாருமே இல்லைன்னு நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன் .



நான் பிறந்ததிலிருந்து எத்தனை வருஷம் கழிச்சு முதன்முறையா எனக்கு பாசமா அக்கறையா அன்போட ஊட்டி விட்டது நீ மட்டும் தான் இது எனக்கு கிடைச்ச பொக்கிஷமான நேரம் இந்த நேரத்தில் மறக்கவே மாட்டேன் என்றால் சுருதி அழுது கொண்டே .




அவள் சொல்வதெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த உலோகியை பாசத்திற்காக எவ்வளவு இயங்குகிறாள் என்று அவளுடைய வாயிலிருந்த வந்த வார்த்தைகள் அவனுக்கு உணர்த்தியது தன் மார்பை கட்டிக்கொண்டு அனுபவங்களை தன்னோடு சேர்த்து மேலும் இறுக்கி அணைத்தவன் இனிமேல் நீ இந்த மாதிரி எதுவும் அழக்கூடாது உனக்கு என்ன வேணும் என்ன பிடிக்கும்னு உன்ன விடாம என்கிட்ட சொல்லு சின்ன வயசுல ஆசைப்பட்டிருந்தாலும் சரி இப்போ ஆசைப்பட்டு இருந்தாலும் சரி அது என்னவா இருந்தாலும் எதுவாயிருந்தாலும் உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் உனக்கு என்ன தேவையோ அதை உன் காலடியில் கொண்டு வந்து நான் வைப்பேன் என்றான் யோகி உறுதியாக .




லோகி நான் யாரு உனக்கு என்றால் .




இது என்ன கேள்வி நீ என் பொண்டாட்டி டி என்று அவளை தோளோடு இறுக்கி அணைத்து கூறினான் லோகி .




அப்போ நம்ம கல்யாணம் காண்ட்ராக்ட் மேரேஜ் கிடையாதா என்றால் .




அது ஒரு கண்துடைப்பு நீ நான்தான் சொன்னேனே என் குடும்ப வழக்கப்படி நான் கல்யாணம் செய்துக்கிட்ட பிறகு என்னோட வாழ வந்த உன்னை எந்த ஒரு காரணத்தாலும் என்ன விட்டு பிரியவோ அல்லது நீயாகவே என்னை பிரிந்து செல்லவோ நான் விடமாட்டேன் .பொய் சொல்லி வேணா நான் உன்கிட்ட காண்ட்ராக்ட்ல கையெழுத்து வாங்கி இருக்கலாம் ஆனா உண்மையில் உன்னை நான் என்னுடைய மனைவியா மனதார நினைச்சுட்டு இருக்கேன் நீயும் என்னை அப்படி நினைக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன் என்றான் லோகி .




அவன் பேசுவதையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி.




என்ன ஸ்ருதி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ எதுவும் பேசாம என்னையே பார்த்துட்டு இருக்க என்றான் லோகி .




நீ என்னோட புருஷனா இருக்க வேண்டாம் லோகி எனக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தா போதும் என்றாள் .




என்னை நீ இப்படி சொல்லிட்ட உன்னோட நண்பனா இருந்தா இப்படி எல்லாம் உன்கிட்ட என்னால நெருக்கமாக இருக்க முடியாது என்று அவள் இடையில் கொடுத்திருந்த கையை மேலும் இறுக்கி அணைத்தபடி அவளை பார்த்து கேட்க.




டேய் பிரசிடெண்ட் என்கிட்ட பழகும் போது நட்பா பழகணும்னு சொன்னேன் அதுக்காக எல்லா நேரமும் பிரண்டா இருக்கணும்னு அவசியம் இல்லையே சில நேரங்களில் லவ்வரா இருக்கலாம் சில நேரங்களில் ஹஸ்பண்டா நடந்துக்கலாம் சில நேரங்களில் எனக்கு ஒரு கம்பி சரா இருக்கலாம் சில நேரம் எனக்கு ஒரு அப்பாவா கூட நீ இருக்கலாம் என்றால் ஸ்ருதி .




எனது டேட் பிரசிடென்ட்டா டேய் நான் யாரு என்ன வாடா போடான்னு மரியாதை இல்லாம கூப்பிடுறேன் என்றான் லோகி .




இந்த நாட்டுக்கு வேணாம் நீ ப்ரெசிடென்ட்டா இருக்கலாம் என்ன பொறுத்த வரைக்கும் நீ என்னோட ஹஸ்பண்ட் நான் உன்ன அப்படித்தான் கூப்பிடுவேன் பிடிச்சா கேளு பிடிக்காட்டி போ என்று ஸ்ருதி அவனிடம் இருந்து விலகப் போக .




கை கொடுத்து விலகவிடாமல் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் அவள் முகத்தை பார்த்து




சரி நீயே சொல்லு இப்போ நான் உன்கிட்ட எப்படி இருக்கணும் ஒரு பிரண்டாகவா ? ஹஸ்பண்டா ? வெல்விஷரா ? இல்ல அப்பாவா ?என்றான் அவள் முகத்தைப் பார்த்து .




அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் இருந்த லோகியின் கை சுருதியை தழுவிக் கொண்டே மேல்நோக்கி செல்ல...




தன் மேலே ஊர்ந்து கொண்டு இருந்த அவன் கையை பிடித்து நிறுத்தியவள் கொஞ்ச நாளைக்கு நீயும் நானும் ஒரு நல்ல பிரண்டா பழகுவோமா எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியாது நான் நிறைய உன்ன பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் அதே போல தான் நீயும் என்றவள் என்ன சொல்ற என்றாள் .




எனக்கு பிரண்டா இருக்க விருப்பமில்லை என்றான் லோகி சற்று கடுமையான குரலில் .




அதைக் கண்டதும் பயந்து போன சுருதி அவனையே பார்க்க ... அட்லீஸ்ட் நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு லவ்வராகவாவது இருப்போமே என்றான் கெஞ்சும் குரலில்.




ம்ம்ம்ம்....இன்று தன் கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல விட்டத்தை பார்த்தவன் சரி லவ்வரா வேணா இருந்துக்கோ ஆனா எல்லை மீறக் கூடாது என்றால் .

ம்ஹும்...கண்டிப்பா மாட்டேன் என்று அவள் இடையில் அழுத்தம் கொடுத்தவன் ஸ்ருதியின் முகத்தை பிடித்து நிமிர்த்தியவன் குனிந்து அவள் இதழில் தன் இதழை ஒட்டி எடுத்தான் .




அவனை தன்னிடமிருந்து விலக்கி பார்த்தவள் இப்பதானே எல்லாம் ஈழக் கூடாதுன்னு சொன்னேன் நீயும் கண்டிப்பா மாட்டேன்னு சொல்லி அடுத்த நிமிஷமே எனக்கு முத்தம் கொடுக்கிற ராஸ்கல் என்று அவன் மார்பில் நறுக்கென்று kகிள்ளி சுருதி

அதான் சொல்றேன் நான் கண்டிப்பா உன்கிட்ட இல்லை மீற மாட்டேன் ஆனா காதலர்களுக்கு உள்ள முத்தம் கொடுத்து வாங்களே அது கூடவா எனக்கு கொடுக்க பர்மிஷன் இல்லை என்றால் அவளை இயக்கமாக பார்த்து .




ம்ஹும்....எதுக்குமே பர்மிஷன் கிடையாது என்று சொல்லி ஸ்ட்ரிக்ட்டாக பேச ...




அதெல்லாம் முடியாது நீ முத்தம் கொடுக்க சம்மதிக்கவில்லை என்றால் நான் மொத்தமும் எடுத்துக்க தயாராகி விடுவேன் என்று லோகி சொல்ல .




யூ யூ ராஸ்கல் நீ சரியான ஆளு தாண்டா என்றாள் .




சரி இப்ப சொல்லு பர்மிஷன் கொடுக்க போறியா இல்ல என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே லோகி நெருங்க.




ஏய் ஏய் ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப் ஓகே நான் பர்மிஷன் தரேன் ஆனா ஒரே ஒரு கண்டிஷன் என்றாள் .




கொடுக்கப் போறதே முத்தம் மட்டும் தான் அதுக்கு என்ன கண்டிஷன் என்றான் லோகி சலித்துக் கொண்டு.




ஒரு நாளைக்கு ஒரு கிஸ் கொடுக்க மட்டும் தான் நான் பர்மிஷன் கொடுப்பேன் என்றாள் .




சரி என்றவன் குனிந்து அவள் இதழை சிறை செய்ய போக ... தன் அருகில் வந்தவனை மார்பில் கை வைத்து தடுத்த சுருதி இன்னையோட உனக்கு ஒரு கிஸ் கோட்டா முடிஞ்சுது இனி அடுத்து நாளைக்கு தான் என்றாள் .




அவள் சொன்னதும் புரிந்து கொண்டவன் நிமிர்ந்து அறையில் இருந்த டிஜிட்டல் கிளாத்தை பார்க்க அது 11: 59 என காட்டியது .




வாட்ச்ல இருந்த நேரத்தைக் காட்டி இன்னும் ஒரு நிமிஷம் தான் அடுத்த நாள் பிறந்திடும் அதனால உனக்கு ஒரு நிமிஷம் கழிச்சு நான் முத்தம் கொடுத்துட்டு தான் தூங்க போறேன் என்றான் .




ஒரு முத்தம் கொடுக்க எவ்வளவு காரணம் கண்டுபிடிக்க நீ என வெட்கப்பட்டு கொண்டே சுருதி கூற .




அமைதியாக கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தால் லோகி எதுவும் பேசாமல் .

என்ன எதுவும் பேச மாட்டேங்குற என்று அவன் சட்டையை பிடித்து இழுத்தாள் சுருதி .




சரியா 12 மணிக்கு கிஸ் பண்ணுவேன் வெயிட் பண்ணு என்றான்


சரியாக 12 மணியை கடக்கவும் சட்டென ஸ்ருதியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு முத்தம் கொடுக்கவும் சரியாக இருந்தது .
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 13
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top