layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
லோகியும் சுருதியும் முன்பை மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தனர் . அவளுக்கு சூட்டிங் நடப்பதற்கு இன்னும் ஒரு வார காலம் இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருக்க அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் சுருதி .



படக்குழுவில் இருந்து அவளுக்கு அவளுடைய காட்சி காண டயலாக் பேப்பர்கள் எல்லாம் முன்கூட்டியே வந்திருக்க அதை தன் அறையில் வைத்து படித்துப் பார்த்துக் கொண்டு கண்ணாடி முன்பு அந்த டயலாக் இருக்கு ஏற்ற சிச்சுவேஷங்களை நடித்தும் பார்த்துக் கொண்டிருந்தால் சுருதி .

வழக்கம்போல இரவு லோகி தாமதமாக வீட்டிற்கு வர அவனுக்காக அறையில் காத்திருந்தவள் டயலாக் பேப்பர்களை அங்கே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டே படுத்து இருந்தவள் அப்படியே அந்த டயலாக் பேப்பரை முகத்தில் மூடியவாறு உறங்கியும் போயிருந்தாள் .



தன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த லோகி அங்கே இருந்த நாற்காலியில் ஸ்ருதி பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவதை பார்த்து சிரித்தவன் "தூக்கம் வந்தா பெட்ல போய் படுத்து தூங்க வேண்டியது தானே இப்படியா தூங்குவாங்க என்று நினைத்து சிரித்தவன்" அவள் அருகில் வந்து மெல்ல அவள் முகத்தில் மூடி இருந்த காகிதத்தை எடுத்தான் .



அதில் என்ன எழுதி இருக்கிறது என்று சும்மா வேண்டும். பார்க்க சரியாக அவன் பார்த்த இடம் அந்த கதையில் வரும் ஒரு காதல் காட்சி..அதில் நாயகன் நாயகியுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல டயலாக் எழுதப்பட்டிருந்தது .

அதில் என்ன இருக்கிறது என்று படித்துப் பார்க்க அடுத்த பக்கத்தை லோகி புரட்ட...

தன் அருகில் ஏதோ நிழலாடுவது போல உணர்ந்த ஸ்ருதி அதை தூக்கத்தில் இருந்தவள் கண் விழித்துப் பார்க்க அவள் டயலாக் பேப்பரை கையில் வைத்து புரட்டிக்கொண்டு தனக்கு எதிரே லோகி நின்று இருப்பதை பார்த்ததும் அவசரமாக சேரில் இருந்து எழுந்தவள் லோகியின் கையில் இருந்த அந்த டயலாக் பேப்பரை பிடுங்க போனாள் .



அவன் கையில் இருந்த பேப்பரை ஸ்ருதி பிடுங்க வரவும் லோகி சட்டென தன் கையை உயர்த்தி பிடித்தான் .



"என்ன லோகி இது.. அது என்னோட ஸ்கிரிப்ட் பேப்பர் அதை எதுக்கு நீ படிக்கிற என்கிட்ட குடு அதெல்லாம் நீ படிக்க வேண்டாம்" என்று சொல்லி எட்டிக் குறித்து அவன் கையில் இருந்த பேப்பரை பிடிக்க போக ..

ஆறு அடிக்கு மேலே வளர்ந்திருக்கும் லோகின் கையில் இருக்கும் பேப்பரை ஐந்தே கால் அடியை தொட்டிருக்கும் சுருதியால் எட்டி பிடிக்க முடியவில்லை.

"இப்போ அந்த பேப்பரை கொடுக்க போறியா? இல்லையா?" என்று தன் எதிரே நின்று சிரித்துக்கொண்டிருந்த லோகியை பார்த்து இடுப்பில் கை வைத்து முறைத்தபடி கேட்டால் சுருதி .

"ம்ஹும்...கொடுக்க முடியாது உனக்கு வேணும்னா நீயே எடுத்துக்கோ" என்று கையை உயர்த்தியவன். தன் காலையும் லேசாக உயர்த்தி அவளுக்கு எட்டாத வண்ணம் கையில் இருந்த பேப்பரை ஆட்டி காட்டினான் .



"இப்ப நான் அந்த பேப்பரை உன்கிட்ட இருந்து புடுங்கிட்டா நீ எனக்கு என்ன தருவ" என்றாள் சுருதி .



"முத்தம் தருவேன்" என்றான் கொஞ்சமும் யோசிக்காமல் லோகி .



"ஒரு நாளைக்கு ஒரு முத்தம்னு கண்டிஷன் போட்ட என்னையே எப்படியாவது பேசி மயக்கி அப்பப்போ தினமும் முத்தம் வாங்கிட்டு தானே இருக்க... இது பழசு வேற ஏதாவது சொல்லு" என்றாள் ஸ்ருதி. அவன் கையில் இருந்து பேப்பரை அவன் கவனம் இழக்கும் நேரத்தில் பிடுங்கலாம் என்று சமயம் பார்த்து காத்திருந்தாள் .



"சரி இப்படி செய்யலாம் என் கையில் இருக்கிற பேப்பரை நீ பிடுங்கிட்டா ஒன் வீக்குக்கு நான் உன் பக்கத்திலேயே வரமாட்டேன் ஓகேவா.. அதேபோல என் கையில் இருக்கிற பேப்பரை உன்னால பிடுங்க முடியலன்னுவை நான் கேட்டதெல்லாம் நீ எனக்கு தரனும் நான் என்ன கேட்டாலும் செய்யணும்" என்றான் குதர்க்கமாக லோகி .



அப்படி என்ன பெரிதாக லோகி கேட்டிடப் போகிறான் என்று நினைத்த ஸ்ருதி அந்த நேரத்தில் அவன் தந்திரத்தை சரியாக கண்டு கொள்ள முடியாதவள் "ஓகே டில் அந்த பேப்பரை நான் வாங்கிட்டா நீ சொன்ன மாதிரி நடந்துக்கணும்" என்றாள் .

"கண்டிப்பா அதே போல நான் சொன்னது போல நீயும் நடந்துக்கணும் நீ என்கிட்ட தோத்து போயிட்டா" என்றான் லோகி .



"சரி ஓகே டீல்.." என்று சொன்ன மறுநிமிடமே முன்பை விட உயரமாக குதித்து அவன் கையில் இருந்த அந்த டயலாக் பேப்பரை பிடுங்க சுருதி முயற்சித்தாள் . ஆனால் அவனும் இந்த கையும் அந்த கையும் என மாற்றி மாற்றி அந்த பேப்பரை பிடித்தவன் அவள் குதிக்கும் பொழுது அவளோடு சேர்ந்து லோகியும் உயரத்திற்கு குதிக்க அவளால் அவன் கையில் இருந்த பேப்பரை எடுக்க முடியவில்லை.

இவனிடம் இருந்து எப்படி அந்த பேப்பரை வாங்குவது என நின்று மூச்சுவாங்க யோசித்துக் கொண்டிருந்தாள் .



"என்ன மேடம் ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க .. என்ன செஞ்சு என் கையில் இருக்கிற இந்த சின்ன பேப்பரை வாங்கலாம்னு யோசிக்கிறீங்க அப்படித்தானே" என்றான் லோகி, அவளும் ஆமாம் என்று தலையாட்டிக்கொண்டே மெல்ல அவனிடம் நெருங்கி வர அவள் வருவதை பார்த்ததும் உஷாரான லோகி அவள் கையில் அந்த பேப்பர் சிக்கி விடாதபடி மேலே தூக்கிப் பிடித்தவன் அவளைப் பார்க்க .



அவன் இடையை வந்து கட்டிக்கொண்ட ஸ்ருதி "என் டார்லிங் இல்ல... நீ அந்த பேப்பர் குடுத்துடுமா ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சுவது போல நடிக்க ...

"நோ.. நெவர் இந்த பேப்பரை உன்கிட்ட கொடுத்துட்டேன்னா உன் பக்கம் நான் வரவே முடியாது. அதுவும் ஒன் வீக் அதுக்கு வாய்ப்பே கிடையாது" என்றான் லோகி .

"நீ தானடா இப்படி ஒரு கண்டிஷனை போட்ட அப்புறம் நீயே முடியாதுன்னு சொன்னா எப்படி .. அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு அந்த பேப்பர் இப்போ என் கைக்கு வேணும்" என்றவள் அடுத்த நொடி அவன் இடையில் கை கொடுத்து கிச்சு கிச்சு மூட்டி அவன் கையை கீழே இறக்க முயற்சித்தாள்

அதற்கெல்லாம் அசுரபவன் நான் இல்லை என்பது போல விரைப்பாக நின்றிருந்தான் லோகி .



இந்த முயற்சியும் நடக்காமல் போகவே அருகில் இருந்த நாற்காலியின் மேல் ஏறி நின்று அவன் கையில் இருந்த பேப்பரை பிடுங்கப் போக அவள் கைக்கும் அவன் கைக்கும் சிறிது தூரமே இடைவெளி இருந்தது அவள் கால்களை மெல்ல உயர்த்தி அவன் கையில் இருந்து பேப்பரை பிடிக்கப் போக ஆனால் லோகியோ அவள் கையில் பேப்பர் சிக்கி விடாமல் அந்த இடத்தை விட்டு பின்னால் சென்றான் .




தான் சேர் மீது நின்றிருக்கிறோம் என்று மறந்து போன சுருதி அவன் பின்னால் செல்லவும் அவள் முன்னோக்கி நடந்தாள் முன் நோக்கி நகர்ந்தவள் சாரிலிருந்து தவறி கீழே விழப்போக . அதை கவனித்த லோகி கீழ விழுந்துடாத என்று சொல்லி அவசரமாக அவள் அருகில் நெருங்கி அவளை பிடிக்க வர இதுதான் சமயம் என்று அவன் கையில் இருந்து பேப்பரை வெடிக்கென பிடுங்கி விட்டாள் சுருதி .அதை கண்டுகொள்ளாமல் முதலில் அவள் கீழே விழாமல் பிடித்துக் கொண்ட லோகி



அடுத்த நிமிடம் அவள் கையில் இருந்து பேப்பரை மீண்டும் பிடுங்கிக் கொண்டான் .

"லோகி என்ன இது நான் தான் உன் கையில் இருக்கிற பேப்பரை பிடுங்கிவிட்டேனே அப்புறம் ஏன் மறுபடியும் என் கையில் இருந்து வாங்கின" என்றாள் சுருதி .



"என் கையில இருந்து பேப்பரை வாங்கின மட்டும் போதாது அதை மறுபடியும் என் கையில மாட்டாத மாதிரி நீ வெச்சிருக்கணும். அப்படி இருந்தா தானே ஜெயிச்சதா அர்த்தம் மறுபடியும் உன்கிட்ட இருந்து பிடுங்க எனக்கு எவ்வளவு நேரம் ஆச்சு" என்றான் லோகி .




"நீ நல்லா அழுகுனிய ஆட்டம் ஆடுற டா நான் தான் ஜெயிச்சிருக்கணும் சரி பரவாயில்ல பார்க்கலாம் இந்த முறை கண்டிப்பா உன் கையில் இருந்த அந்த பேப்பரை நான் வாங்கத்தான் போறேன்" என்று வேகமாக சேரில் மேல் நின்றிருந்தவள் அவனை நோக்கி தாவ ..

அவள் இடையில் கை கொடுத்து கீழே விழாமல் தன்னோடு சேர்த்து ஒரு கையால் இறுக்கி பிடித்தான் லோகி .



அவன் இடையே தன் கால்கள் இரண்டால் கொக்கிப்பிடி போட்டு பிடித்துக் கொண்டவள் ஒரு கையில் அவன் கழுத்தைப் வளைத்து பிடித்து மறு கையால் அந்த பேப்பரை பிடுங்க முயற்சித்தால் சுருதி .

அவள் கையில் சிக்க விடாமல் கையை உயர்த்தி பிடித்தவாறு ஸ்ருதியின் முகத்தை மிக அருகில் உரசியபடி அவளிடம் போக்கு காட்டிக்கொண்டு இருந்தான் லோகி .



ஒரு பக்கம் அவள் இடையே அவன் கை உணர்ந்து கொண்டு இருக்க மறுபக்கம் அவள் மென்மைகள் அவன் மார்போடு உரசி அவனை சூடேற்றிக் கொண்டு இருந்தது இதை எதையும் கவனிக்காமல் சுருதி அவன் கையில் இருந்து அந்த காகிதத்தையே பிடுங்க முயற்சித்துக் கொண்டிருக்க

அவள் முகம் அவன் முகத்தோடு உரச ஆரம்பிக்கவும் இருவர் இதழும் ஒன்றோடு ஒன்று லேசாக உரச அப்போதுதான் சுருதிக்கு நிலைமை புரிய ஆரம்பித்தது ...



உயர்த்திப் பிடித்திருந்த தன் கையை இறக்கி அவன் மார்பில் கை வைத்து தன் உடலை அவனுடன் இருந்து லேசாக பிரித்து அவன் முகத்தை பார்த்த ஸ்ருதி "ராஸ்கல் இதுக்கு தான் என்ன டார்ச்சர் பண்ணினாயாடா .. என்ன முதல்ல கீழே இறக்கி விடு " என்றாள் பொய் கோபத்தோடு .



"ம்ஹும்... முடியாது என்னடி பண்ணுவ.." என்ற லோகி தன் கையில் இருந்த ஸ்கிரிப்ட் பேப்பரை அங்கே இருந்த ஒரு உயரமான அலமாரியின் மீது வைத்துவிட்டு மற்றொரு கையால் ஸ்ருதியை கீழே இறங்கவிடாமல் இடையோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தான்
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 14
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top