layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
ஸ்ருதியை முத்தமிட்டுக்கொண்டே தூக்கி வந்தவன் அவளை அணைத்தவாறு தங்கள் அறையை திறந்துகொண்ட்னு வெளியே வந்தான். முதலில் ஸ்ருதி லோகிக்கு முத்தம் வைக்கும் ஆர்வத்தில் மயக்கத்தில் அதை கவனிக்கவில்லை. அவள் ஏ சி காற்றை தாண்டி உடல் வெளிக்காற்றில் சிலுசிலுக்க...அதை உணர்ந்தவள் அவனுக்கு முத்தம் வைப்பதை நிறுத்தி விட்டு கண்கள் திறந்து பார்த்தாள்.



அவளை வீட்டுக்குள் இருந்து வெளியே வராண்டாவிற்கு அழைத்து வந்து இருந்தான் லோகி . " லோகி என்ன இது என்னை இப்படியேவா வெளியே கூடி வருவ..நான் நைட் டிரஸ் மட்டும் தான் போட்டிருக்கேன் . யாராவது உன்னையும் என்னையும் அதுவும் இந்த் கோலத்தில் பார்த்தால் என்ன நினைப்பாங்க" என்று கூச்சப்பட்டவள் .தான் அணிந்தது இருக்கும் லேசான நைட் ட்ரெஸ்ஸை தாண்டி சில்லென்ற காற்று அவள் உடலை உரச... அதில் குளிர் எடுக்கவும் அவனை மேலும் இறுக்கி அணைத்தாள் ஸ்ருதி.



"நீ மட்டும் என்னை இப்படி இறுக்கமா அணைச்சிட்டு இருக்க..இதை யாரும் பார்த்தா நம்மை பற்றி ஏதும் நினைக்க மாட்டார்களா ?" என்றான் லோகி அவளை இறுக்கி அணைத்தபடி .




"நினைச்சா நினைக்கட்டும் எனக்கு கவலை இல்லை நான் என் புருஷனை தானே கட்டி பிடிச்சிட்டுருக்கேன்" என்றவள். "ஆமா நீ எனக்கு முத்தம் கொடுப்பதை எல்லாம் வெச்சு நான் இந்த ப்ரெசிடெண்ட் என்கிட்டே வேற எதுக்கோ அடிபோடுறாருனு இல்ல நினைச்சேன். ஆனா நீ என்ன என்னை வெளியே கூட்டிட்டு வந்து இருக்க அதுவும் இந்த நேரத்துக்கு" என்றாள் புரியாமல் ஸ்ருதி ,



"நான் உன் கிட்டே எதுக்கு அடிபோடனும் வேணும்னா நானே எடுத்துக்க போறேன் . நான் கேட்டு நீ வேணாம்னு சொல்லிற போறியா என்ன" என்றான் அவள் கண்களை பார்த்து .

லோகியின் கண்களை பார்த்தவள் அதில் அவன் தன் மீது வைத்து இருக்கும் காதலும் , ஏக்கமும் அப்பட்டமாக ஸ்ருதிக்கு விளங்க... "முதல்ல நான் இப்போ கமிட் ஆகி இருக்க நியூ மூவி ஷூட்டிங் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆகட்டும் அதுக்கு பிறகு நீ என்கிட்ட கேட்காமலேயே என்னை எடுத்துக்கலாம் நான் அதுக்கு தடை போடவே மாட்டேன்" என்றாள் ஸ்ருதி .



"அப்போ அதுவரை இப்படி அடிக்கடி முத்தம் கொடுத்தே என் ஆசையை நான் கன்ட்றோல் பண்ணி வெச்சுக்கணுமா?" என்றான் லோகி ஏக்கமாக .



"கொஞ்ச நாள் எனக்காக வெயிட் பண்ணுங்க மிஸ்டர் ப்ரெசிடெண்ட் ப்ளீஸ்... அப்பறோம் நான் உன் ஆசைக்கு நிச்சயமா தடை போடவே மாட்டேன்" என்றாள் .



"ஓகே உன்னோட சூட்டிங் முடிய எவ்வளவு நாள் ஆகும்" என்றான் .




அவன் கழுத்தை கட்டிக் கொண்டே "நாளைக்கு தான் எனக்கு ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகப்போகுது லோகி எப்படியும் ஒரு மூன்று மாதம் ஆகிவிடும்" என்று நினைக்கிறேன் என்றாள் சுருதி



"அப்போ அதுவரைக்கும் வெறும் முத்தம் மட்டும் தானா?" என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு .




"சாரி மிஸ்டர் பிரசிடெண்ட் இந்த சின்ன பெண்ணுக்காக ஒரு மூணு மாசம் நீங்க காத்திருக்க மாட்டீங்களா ப்ளீஸ்..." என்று அவளும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு லோகியிடம் கெஞ்ச ...

அவளைப் பார்த்து சிரித்தவன் "ஓகே இந்த பிரசிடென்ட் உனக்கு அனுமதி அளிக்கிறேன் 3 மாசத்துக்கு ஒரு நாள் அதிகமானாலும் நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்" என்றான் .



"கண்டிப்பா லேட் ஆகாது ஒன்லி த்ரீ மன்த்ஸ் சீக்கிரம் போய்விடும்" என்றவள் "சரி சொல்லு என்னை எதுக்காக இப்போ வெளியே கூட்டிட்டு வந்த" என்றாள் .



"நாளைக்கு இந்த பிரசிடெண்ட் ஓட வைஃப் சூட்டிங் போக போற அவளுக்குன்னு நான் ஒரு இதுவரைக்கும் எந்த கிப்ட்ம் கொடுத்ததே இல்லை திடீர்னு எனக்கு என் பொண்டாட்டிக்கு கிப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு அதனாலதான் உன்ன சர்ப்ரைஸா இங்க கூட்டிட்டு வந்தேன்" என்றான் .



"என்னது கிப்ட்டா!! என்று சுற்றி ஆச்சரியமானவள் சட்டென்று திரும்பி பார்க்க போக அவள் முகத்தை பிடித்து தடுத்தவன் "வெயிட் பண்ணு நானே உனக்கு காட்டுவேன்" என்றவன் "கண்ணை மூடு நான் 1 2 3 சொன்ன பிறகுதான் நீ கண்ணை திறக்கணும் ஓகேவா" என்றான் லோகி



ம்ம்ம்... ஓகே என்று "எனக்கு லோகி என்ன பரிசு தரப் போகிறான் என்று ஆர்வத்தில் கண்களை வேகமாக மூடினாள் சுருதி .



சாட்டின் துணியால் நைட் கவுன் அணிந்து அவன் இடையில் கால்களால் கிடுக்கிப் பிடிப்போட்டு அமர்ந்திருந்த ஸ்ருதியை அவள் கண் மூடி இருக்கும் போது ஏக்கமாக ஒரு முறை பார்த்தவன் பின்பு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டவன் "மூன்று மாதம் வெயிட் பண்ணுடா அதுக்கப்புறம் உன்னோட ஸ்ருதி உனக்கு மட்டும் தான்" என்று அவனே தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவன் வராண்டாவிற்கு தாண்டி வெளியே வந்து கார்டனை நோக்கி சென்றான் .



"என்ன லோக்கி இன்னுமா எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிற கண்ணு திறக்கட்டுமா நான் எவ்வளவு நேரம் நான் இப்படியே இருக்கிறது" என்றாள் அவன் இடையை கட்டிக் கொண்டு .



"டூ மினிட்ஸ் பேபி" என்ற லோகி கார்டனை தாண்டி கார் பார்க்க செய்யும் இடத்திற்கு அவளை அழைத்து வந்தான் அங்கே அவன் வரவும் அவனுடைய கார்ட்ஸ்கள் ஏற்கனவே அவளுக்கு லோகி கொடுக்கப் போகும் பரிசை அலங்கரித்து ஒரு பெரிய பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர் .


"சரி வந்தாச்சு இப்போ கண்ண திற" என்றான் .

அவன் சொன்ன அடுத்த நொடி கண்களை திறந்த சுருதி தன்னை சுற்றிலும் பார்க்க அவளுக்கு பின்புறம் ஒரு பெரிதாக ஏதோ ஒன்று பட்டுத்துணியால் போற்றப்பட்டு இருக்க அதைச் சுற்றி லோகின் காட்சிகள் நின்றிருப்பதை பார்த்தாள் .

அவர்கள் எல்லாம் புதிதாக இருந்தனர் ஆனால் அவர்கள் உடையை வைத்து அது லோகியின் காட்சிகள் தான் என்று கண்டுபிடித்து இருந்தால் ஸ்ருதி அவர்களை பார்த்ததும் கூச்சத்தில் நெளிந்தவள் எல்லாரும் பாக்குறாங்க என்ன கீழே இறக்கி விடுடா என்று திரும்பி லோகியை பார்த்து கெஞ்சினாள் .

அவர்கள் எல்லாம் இதை பார்த்தாலும் எதுவும் நினைச்சுக்க மாட்டாங்க நீ பேசாம இரு கின்றான் .



"ப்ளீஸ் லோகி அவங்க முன்னாடி எனக்கு இப்படி இருக்க என்னவோ போல இருக்கு இறக்கி விடுவேன்" என்று கெஞ்சினாள் சுருதி .


"ம்ஹும்...முடியவே முடியாது" என்ற லோகி தன் கார்ட்ஸ்களை பார்த்து கண்களால் ஜாடை செய்ய ... அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் .




தன்னுடைய அரசியலில் எத்தனையோ நபர்களை லோகி சந்தித்திருக்கிறான் பாமர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை பார்த்து பழகியிருந்த லோகி அவனை அவனோடு எத்தனை வருடமாக பயணம் செய்து வரும் லோகியின் கார்ட்ஸ்களுக்கு அவனின் இந்த புதிய பரிமாணம் ஆச்சரியமாக இருந்தது. அதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கள் தொழில் நிமித்தமாக உடலை இறுக்கமாகவும் முகத்தை முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .




அவர்கள் சென்றதும் தான் ஸ்ருதிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது "சீக்கிரம் என்ன கீழே இறக்கி விடுடா என்ன பரிசு ரொம்ப பெருசாயிருக்கு அப்படி என்ன இருக்கு இதுல" என்றாள் சுருதி .




"நீயே போய் ஓபன் பண்ணி பாரேன் அது உனக்காக வாங்கி கிப்ட் தானே" என்றான் லோகி .



"ஓகே சீக்கிரம் சீக்கிரம் டா சீக்கிரம் என்னை கீழே இறக்கி விடு" என்று அவள் லோகி அவசரப்படுத்த...

"பொரு எதுக்கு இவ்வளவு அவசரம் எப்படியும் இந்த கிப்ட் நீ ஓபன் பண்ணி பாக்க தானே போற" என்றவன் .



"முதல்ல எனக்கு ஒரு முத்தம் கொடு அதுக்கு பிறகு தான் உன்னை கீழே இறக்கி விடுவேன் இல்லனா இப்படியே தான் பிடிச்சிட்டு நிற்பேன்" என்றான் .



அவனை செல்லமாக முறைத்த சுருதி லோகியின் கன்னம் கண்கள் மூக்கு உதடு என மாற்றி மாற்றி மொத்தம் நிறைய வைத்தவள் "போதுமா இப்போ என்ன இறக்கி விடு ப்ளீஸ்" என்று தன் கால்களை ஆட்டியபடி அவனிடம் கெஞ்சினாள் .



சிறுபிள்ளை போல அவன் இடையில் தொற்றிக் கொண்டு இருந்தவள் அடம்பிடிப்பதை பார்த்து ரசித்த லோகி "அவ்வளவுதானா முத்தம் எனக்கு இதெல்லாம் பத்தாது இன்னும் ஒரே ஒரு முத்தம் லாங் கிஸ் ஒன்னு வேணும் அது கொடுத்தா நான் உன்னை இறக்கி விடுவேன்" என்றான் .


"டேய் பிரசிடென்ட் வர வர நீ ரொம்ப என்னை தொந்தரவு பண்ற" என்றவள் அவன் முகத்தை பிடித்து லோகின் இதழை கவ்வினால்.

முதலில் அவசரமாக முத்தம் கொடுக்க ஆரம்பித்த சுருதி அந்த குளிர் காற்றில் அவள் உடல் முழுவதும் ஜிவ்வென்று ஆக அதோடு சேர்த்து அவன் முத்தம் அவளை சூடேற்றவும் ஆழ்ந்து லோகின் இதழை பற்றி முத்தம் கொடுத்தால் .



லோகியும் கண்மூடி அவள் முத்தத்தை அனுபவித்தவன் சிறிது நேரம் கழித்து ஸ்ருதி அவன் இதழிலிருந்து தன் இதழை பிரித்து விட அவளை செல்லமாக முறைத்து விட்டு கீழே இறக்கியவன் பின்னால் வேகமாக அடித்து போய் பாரு என்றாள் .

அவன் அடித்ததில் சத்தம் பலமாக சத்தம் கேட்க "டேய் ராஸ்கல் எங்கடா அடிக்கிற என்ன யாராவது கேட்டிட போறாங்க வரவர உனக்கு விவஸ்த்தையே இல்லை" என்றவள் வேகமாக அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த கிப்டை நோக்கி ஓடினாள் அதன் அருகில் சென்றவள் கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டு அந்த அரிசியின் மீது போர்த்தி இருந்த பட்டு துணியை தொட்டவள் திரும்பி லோகியை பார்க்க .

"ம்ம்ம்...இன்னும் ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்க டார்லிங் கிஃப்ட் ஓபன் பண்ணி பாரு" என்றான் சிரித்துக் கொண்டே லோகி .



மீனு சந்தோசமாக சிரித்தபடி அந்த பரிசு பொருளை போற்றி இருந்த பட்டு துணியை வேகமாக இரண்டு கைகளாலும் இழுக்க ...



பரிசின் மீது போர்த்தி இருந்த மொத்த துணியும் சுருதியின் மீது மொத்தமாக விழுந்து அவளை பரிசை பார்க்க விடாமல் செய்தது .

"ம்ம்க்கும்ம்...இது வேற இந்த நேரத்துல வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணுது" என்று தன்மீது போட்டி இருந்த அந்த துணியை விளக்க ஸ்ருதி போராட ...



அவள் அந்த பட்டு துணிக்குள் மாட்டிக் கொண்டு சிரமப்படுவதை பார்த்து சிரித்த லோகி அவளிடம் வந்தவன் அவள் மேல் போர்த்தி இருந்த மொத்த துணியையும் விளக்கி விட்டவன் அவளை திருப்பி நிற்க வைத்து அவளுக்காக வாங்கி வந்த பரிசை காட்டினான் .

அவன் வாங்கி தந்த பரிசை பார்த்ததும் சுருதியின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது . அதை அந்த பரிசை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை அதே ஆச்சரியத்தோடு திரும்பி யோகியை பார்க்க



"என்ன மிஸ்ஸஸ் பிரசிடெண்ட் உங்களுக்கு இந்த கிப்ட் பிடிச்சிருக்கா?" என்றான் .

"
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 15
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top