layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
ஸ்ருதி முதல் நாள் சூட்டிங் இருக்கு கிளம்பிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்து சித்துவை பார்த்து மகிழ்ந்தவள். அவன் லோகியின் தம்பி என்று தெரிந்ததும் மேலும் ஆச்சரியமானாள்.

பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்ட பின்பு சித்து ஸ்ருதியிடம் அண்ணி கிளம்புங்க சூட்டிங் போகலாம் நானே உங்கள இன்னைக்கு என் கூட அழைச்சிட்டு போறேன் என்றான்.

அதுவரை அனைவரிடமும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருந்த சுருதி. சித்து அவளை சூட்டிங் இருக்கு அழைத்ததும் முகம் மாறியவள் நான் சூட்டிங் வரல என்றாள்.

திடீரென சுருதி சூட்டிங் இருக்கு வர மறுத்ததும் என்ன என்று புரியாமல் குழம்பிய சித்து என்ன ஆச்சு அண்ணி? திடீர்னு சூட்டிங்கு வரமாட்டேன்னு சொல்றீங்க.இப்ப கொஞ்ச நேரம் முன்ன கூட அண்ணா கிட்ட சூட்டிங் போறத பத்தி அவ்வளவு சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தீங்க. நான் வந்து கூப்பிட்டதும் இப்படி வர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் எனக்கு புரியல.

லோகியும் சுருதியிடம் ஏன் சுருதி என்ன ஆச்சு திடீர்னு ஷூட்டிங் போக மாட்டேன்னு சொல்ற எதுவும் பிரச்சனையா? என்றான் மிகவும் அக்கரையாக.

நான் சூட்டிங் போகவில்லை என்றால் போகவில்லை தான் என்று கோபமாக அங்கிருந்து சுருதி திரும்பி செல்ல போக..

இவளை நம்பி படம் எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்து சித்து திடீரென சுருதி ஷூட்டிங் இருக்கு வரமாட்டேன் என்று சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்று இருக்க...

அவளை என்ன சொல்லி அழைப்பது தெரியாமல் சித்து குழப்பமாக நின்று இருக்க... உள்ளே செல்ல இருந்த ஸ்ருதி திரும்பி சித்துவிடம் வந்து நின்றவள் அவனைப் பார்க்க...

என்ன ஆச்சு அண்ணி இப்படி திடீர்னு ஷூட்டிங் வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம் தயவு செய்து என் கூட கிளம்பி வாங்க அண்ணி என்றான்.

இப்படி வார்த்தைக்கு வார்த்தை என்ன அண்ணி அண்ணின்னு கூப்பிட்டா நான் எப்படி உங்க கூட வந்து நடிக்கிறது. இந்த மாதிரி முறை வச்சு கூப்பிட்டா என்னால உங்க கூட சகஜமா எப்படி நடிக்க முடியும். இந்த படத்துல நீங்க ஹீரோ நான் ஹீரோயின் அது ஞாபகம் இருக்கா? இல்லையா? அதுவும் இல்லாம உங்களை விட வயசுல நான் சின்னவ தான். என்ன நீங்க பெயர் சொல்லியே கூப்பிடலாம் இப்படி அண்ணின்னு முறை வச்சு கூப்பிடுறது எனக்கு என்னவோ போல இருக்கு. நான் சின்ன பொண்ணு தானே உங்க அண்ணாவுக்கு தான் வயசு ரொம்ப ஜாஸ்தி ஆனா நான் அப்படி இல்லையே நான் குட்டி பொண்ணு தானே என்றாள்.

ஐயோ இதுக்குத்தான் ஷூட்டிங் வரமாட்டேன்னு சொன்னீங்களா நான் கூட என்னவோ எதுவும் நினைச்சு பயந்துட்டேன் இப்ப என்ன உங்களை அண்ணினு கூப்பிடக்கூடாது அவ்வளவு தானே தப்பு நான் உங்களை சுற்றி கூப்பிடுறேன் என்றான்.

அவன் சொன்னதை கேட்டு சந்தோசமான சுருதி இப்பதான் எனக்கு திருப்தியா இருக்கு அதேபோல நீ வா பொண்ணே கூப்பிடுங்க வாங்க போங்கன்னு ரொம்ப மரியாதை எல்லாம் கொடுக்க வேண்டாம் என்றாள்.

சித்து, ஸ்ருதி இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அமலாவிற்கு சந்தோசமாக இருந்தது. சிடுமூஞ்சியான தன் பிள்ளைகள் இருவர் இடமும் ஸ்ருதி சிரித்து பேசுவதும் அவர்களும் அவளிடம் சகதமாக பேசுவதையும் நினைத்து சற்று நிம்மதி அடைந்தார் அமலா.

அதே சந்தோஷத்தோடு திரும்பி லோகியை பார்க்க ஆனால் அவனோ அவர்கள் இருவரும் சகஜமாக பேசி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து முகம் இறுகிப்போய் நின்றிருந்தான்.

என்ன ஆச்சு உனக்கு ஏன் இவ்வளவு முகம் ஒரு மாதிரியா இருக்கு என குழப்பமான அமலா லோகியின் புலி தோளில் கைவைத்து அவனை உலுக்கியவர் என்ன ஆச்சு லோகி ஏன் அப்படி பார்த்துட்டு நிக்கிற என்றான்.

ம்ஹும்... ஒன்னும் இல்லம்மா சும்மா தான் என்று கூறி சமாளித்தவன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றிருக்க... சித்துவிடம் பேசிவிட்டு லோக்கியை பார்த்த சுருதி ஓகே லோகி நான் போயிட்டு வரட்டுமா? ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் லேட்டா போன நல்லா இருக்காது என்றவள். சித்துவிடும் திரும்பி போலாமா? என்றாள்.

ஓகே கிளம்பலாம் என்றவன் லோகி அமலா இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப...

அமலா சிரித்துக் கொண்டே அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தார். ஆனால் லோகியின் முகமோ இன்னும் இறுகிப் போய் தான் இருந்தது. முதல் நாள் சூட்டிங் செல்லும் சந்தோஷத்தில் அதை சுருதி கவனிக்க தவறிவிட்டாள்.

சித்து வந்ததும் தன்னை கவனிக்காமல் போனதும். சுருதியை விட தான் வயதில் மூத்தவன் என்று தன் வயதை சுட்டிக்காட்டியதும் லோகிக்கு கோபம் வந்துவிட்டது. இதை அறியாத ஸ்ருதிக்கு மாலை வீடு திரும்பும் பொழுது என்ன காத்திருக்க போகிறதோ அது லோகிக்கு தான் வெளிச்சம்.

சித்துவிடம் காரில் வரும் பொழுது வழி எங்கும் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தால் சுருதி.



இந்த சிறிய பயணத்திலேயே இருவரும் நிறைய பேசிக்கொண்டார்கள். ஸ்ருதிக்கு சிறுவயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் ஆர்வமும், அதற்காக அவள் அமெரிக்காவிலிருந்து ரிஸ்க் எடுத்து இவ்வளவு தூரம் வந்ததையும் அவனிடம் சொல்ல இந்த வயதில் தன்னுடைய லட்சியத்தை நோக்கி இத்தனை கஷ்டங்களை தாண்டி அவள் வந்திருப்பதை நினைத்து ஆச்சரியமடைந்தால் சித்து அவள் மீது அவனுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உருவானது.

சூட்டிங்கு வந்த பிறகு அவரவர்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குச் சென்று சூட்டிங்கிற்கு தயாராக இருவரும் கிளம்பினர்.

ஸ்ருதியின் முதல் நாள் முதல் சூட்டிங் கல்லூரியை விட்டு ஸ்ருதி வெளியே வரும்போது நாயகனான சித்து. ஸ்ருதி படிக்கும் கல்லூரி வாசலில் வைத்து அவளுக்கு ப்ரபோஸ் செய்வது போல காட்சி அமைப்பு.

டைரக்டர் வருண் காட்சி அமைப்புகளை இருவருக்கும் விவரித்து விட்டு அவர்களை தயார் படுத்தியவர் கேமராவிடும் வந்து ரோலிங்.... ஆக்ஷன் என்று சொன்னதும் இருவரும் நடிக்க ஆரம்பித்தனர்.

தன் தோழிகளோடு பேசிக்கொண்டு கையில் புத்தகத்தை மார்போடு அனைத்து படி காலேஜ் விட்டு வெளியே வந்தாள் வைஷு.

ஏ வைஷு உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கானே அந்த சூர்யா அங்கே பாருடி அவன் காலேஜ் மெயின் கேட்டில் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் என்று அவள் தோழி கூற..

தன் தோழி சொன்னதை கேட்டு சலிப்பான வைஷு ஐயோ இவனுக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு. நான் எங்கு போனாலும் என் பின்னாடியே வந்துடறான். இவனை என்னடி செய்யறது என்னால இவனோட டார்ச்சர் தாங்கவே முடியல என்றவள் .

தூரத்தில் நின்று தான் வருவதை பார்த்து சந்தோஷமாக சிரித்தபடி நின்ற சூர்யாவை பார்த்து முறைத்தவள் இருங்கடி இன்னைக்கு இவன்கிட்ட ஒன்னுல ரெண்டு பேசிட்டு வந்துடறேன் என்னால இவன் டார்ச்சர் தாங்க முடியல என்றவள். தன் கையில் இருந்த நோட்டை தோழியிடம் கொடுத்துவிட்டு வேக வேகமாக காலேஜ் வாசலை விட்டு வெளியே வந்தவள் சூர்யாவை நோக்கி சென்றாள்.

வைஷு வேகமாக நடந்து வருவதை பார்த்ததுமே புரிந்து கொண்டான் அவள் தன்னிடம் சண்டைக்கு வருகிறாள் என்று.

நேராக அவனிடம் வந்த வைஷு ஏன் உன்கிட்ட எவ்வளவு முறை நான் சொல்றது. இப்படி நான் போற பக்கமெல்லாம் என் பின்னாடி வராதேன்னு.. என்றாள் கோபமாக .

என்ன வைஷு இப்படி சொல்லிட்ட உன்ன பாக்காம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல. நீ என் காலேஜுக்கு போகும் போதும் வரும் போது மட்டும் தானே என்னால உன்ன பாக்க முடியுது வேற எங்கே நான் வந்து உன்ன டிஸ்டர்ப் பண்றேன் நீயே சொல்லு என்றான்.



என்ன சொன்ன என்ன சொன்ன நீ என்ன டிஸ்டர்ப் பண்றியா காலையில நான் வீட்டிலிருந்து கிளம்பினதும் அங்கு ஆரம்பிச்சா காலேஜ் வாசல் வரைக்கும் வர அதே போல சாயங்காலம் நான் காலேஜ் முடிஞ்சு வீடு போற வரைக்கும் என் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ற இதுக்கு பேரு என்ன என்றாள் கோபமாக.

என்ன வைஷு பண்றது இந்த நேரத்துல மட்டும் தானே நான் உன்ன மீட் பண்ண முடியுது. நீ வீட்டுக்குள்ள போயிட்டேனா அப்புறம் திரும்ப வெளியேவே வரமாட்டேங்குற. மத்த பொண்ணுங்க எல்லாம் பிரண்ட்ஸ் கூட வெளியே சுத்துறாங்க. அடிக்கடி பக்கத்துல இருக்குற கடைக்கு கூட போறாங்க ஆனா நீ என்னடான்னா வீட்டுக்குள்ள போய்ட்டா திரும்ப வெளியேவே வர மாட்டேங்குற அப்புறம் உன்னை நான் எங்க தான் மீட் பண்றது எப்ப தான் உன் கூட பேசுறது என்றான்.

இங்க பாரு நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ இப்படி தேவையில்லாம என் பின்னாடி சுத்திட்டு இருக்குற வேலையெல்லாம் வெச்சுக்காததுக்கு மீறியும் என் பின்னாடி தான் வருவேன்னு சொன்னா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி இருக்கும் என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு சிரித்த சூர்யா இப்போ என்ன நான் உன் பின்னாடி வரக்கூடாது அப்படித்தானே என்றான்.

ஆமாம் என்று வைஷு தலையாட்ட...

அப்போ என்ன லவ் பண்றேன்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு உன் பின்னாடி நான் வரவே மாட்டேன் நீயா என்னை எப்போ பார்க்கணும்னு சொல்றியோ அப்ப வந்து உன் முன்னாடி நிப்பேன் என்றான்.

இவ்வளவு சொல்லியும் கேட்காமல் சுற்றி வளைத்து திரும்பவும் அங்கேயே வந்து நிற்பதை கண்டு ஆத்திரம் அடைந்தவள் தனக்கு எதிரே சிரித்து முகமாக நின்றிருந்த சூர்யாவை முறைத்து விட்டு திரும்பி தன் தோழிகளோடு வீட்டிற்கு கிளம்பினாள்.

தன்னிடம் கோபமாக பேசி விட்டு செல்லும் வைஷுவை பார்த்து சூர்யா. நீ ஓகே சொல்ற வரைக்கும் நீ எங்க போனாலும் நான் உன் பின்னாடி வந்துட்டே இருப்பேன் பேபி என்று சொல்லிக் கொண்டு அவள் பின்பு நடக்க ஆரம்பித்தான்.

கட்.. கட்ம்.. என வருண் மைக்கில் சத்தமிடமும் அதுவரை அந்த கதாபாத்திரமாகவே நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி தன்னுடைய நடிப்பை நிறுத்திவிட்டு திரும்பி வருணின் முகத்தை மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்தாள். தன்னுடைய நடிப்பை பற்றி இந்தப் படத்தின் டைரக்டர் ஆன வருண் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டி ஆர்வமாக அவனைப் பார்க்க...

சித்துவை பார்த்து திருப்தியாக புன்னகைத்தான் வருண். அவன் சிரிப்பிலேயே தாங்கள் தேர்ந்தெடுத்த கதாநாயகி தங்களை ஏமாற்றவில்லை என திருப்தி அடைந்தனர்.

ஸ்ருதியை பார்த்து வருண், சித்து இருவரும் தங்கள் கட்டைவிரலை தூக்கி தம்சப் காட்ட சந்தோசமடைந்தாள் சுருதி. முதல் நாள் ஷூட்டிங்கில் எந்த ஒரு தவறும் இல்லாமல் தான் திருப்தியாக நடித்துக் கொடுத்து விட்டோம் என்று அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது .

முதல் நாள் சூட்டிங் என்பதால் சீக்கிரமே சூட்டிங் முடித்துவிட்டு சித்து உடன் ஸ்ருதி தங்கள் வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்ததும் சித்தாராவிடமும் அமலாவிடமும் அன்று ஷூட்டிங்கில் நடந்த அனைத்தையும் சொல்லி சந்தோஷப்பட்டவள். அனைவருடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தவள் தன் அறைக்குச் சென்று லோகிக்காக காத்திருந்தாள்.

அடுத்த நாள் நடக்க இருக்கும் சூட்டிங்கில் நடிப்பதற்கான டயலாக் பேப்பரை வைத்து அதில் இருப்பதை நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தால் சுருதி.

காலையிலிருந்து வேலை செய்த களைப்பில் கட்டிலில் படித்தபடி டயலாக் பேப்பரை படித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

ஆளுநர் மாளிகையில் ஒரு முக்கியமான வேலையில் இருந்ததால் லோகி வீட்டிற்கு வருவதற்கு தாமதமானது.

வீட்டிற்கு வந்தவன் கட்டிலில் குப்புற படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்ருதியா பார்த்து சிரித்துக்கொண்டே அவளிடம் வந்தவன். அவள் தூங்கும் அழகை பார்த்து ரசித்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

தூக்கத்திலிருந்த ஸ்ருதி லோகி வந்ததை உணர்ந்தவள் அவன் தன் அருகில் வந்து அமர்ந்ததும் வந்துட்டியா லோகி என கேட்டுக்கொண்டே கட்டிலில் இருந்து எழுந்து அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

ஆமா டார்லிங் இப்பதான் வந்தேன் என்றவன் நீ சாப்டியா என்ன கேட்டான் சாப்பிட்டேன். நீ? என்றாள்.

தலையை ஆசையாக வருடிக் கொடுத்த லோகி சட்டென அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவன் குனிந்து அவள் இதழில் மூர்கத்தனமாக முத்தம் வைக்க ஆரம்பித்தான்.

எப்போதுமே தன்னிடம் மென்மையாகவும் ஆசையாகவும் முத்தம் கேட்கும் லோகி என்று சம்பந்தமே இல்லாமல் தனக்கு ஆவேசமாக லோகி முத்தமிடுவதை கண்டு சுருதி அதிர்ச்சி அடைந்தாள்.
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 17
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top