layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
ஸ்ருதியிடம் சாதரணமாக பேசிக்கொண்டு இருந்த லோகி திடீர் என்று அவள் இதழில் மூர்க்கத்தனமாக முத்தம் வைக்க... அதில் அதிர்ந்த ஸ்ருதி தன்னிடம் இருந்து லோகியை வலுக்கட்டாயமாக விலகி அவனை புரியாமல் பார்த்தவள் .

"லோகி என்ன இது... ஏன் இவ்வளவு மூர்க்கத்தனமான முத்தம் கொடுக்குறே... உனக்கு என்ன ஆச்சு?" என்றாள் .

" ஏன் நான் முத்தம் கொடுக்குறது உனக்கு பிடிக்கலையா? இல்ல நான் உன்னை விட வயசு அதிகம் ஆனவன்னு நான் கொடுக்குற முத்தத்துல உனக்கு விருப்பம் இல்லியா? " என்றான்.

அவன் பேசுவது கேட்டு மேலும் குழம்பிய ஸ்ருதி "என்ன சொல்றே.. லோகி நீ கொடுக்குற முத்தத்துக்கும் , உன்னோட வயசுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு . ஏன் இப்படி சம்மந்தம் இல்லாம பேசுற நீ எனக்கு ஏதும் புரியலை " என்றாள் .

"ஏதும் புரியலையா... காலையில் சித்துகிட்டே என்ன சொன்னே நீ ,... நல்லா யோசிச்சு பாரு ..' என்றான் கோபமாக .

"என்ன அச்சு லோகி உனக்கு . கோபமா இருக்கியா நீ..." என்று கக்கட்டிலில் தன் பக்கம் அமர்ந்து இருந்தவனை நெருங்கி ஸ்ருதி தன்மையாக பேச...

அவளை முறைத்தவன் "நான் கோபமா தான் இருக்கேன். என்னோட வயசை காரணம் காட்டி பேசினா எனக்கு கோபம் வரும் . ஏன் அது உனக்கு தெரியலையா ?" என்றவன் மீண்டும் ஸ்ருதியை இழுத்து அவள் இதழில் அழுந்த முத்தம் வைத்து மூர்க்கமாக நடந்துகொண்டவன் ஸ்ருதியின் இதழை தன் பற்களுக்கு இடையில் வைத்து கசக்கியவன் அவள் இதழில் இருந்து ரத்தம் வரும் வரும் வரை முத்தம் கொடுத்து அந்த சூடான ரத்தத்தை சுவைத்தபின்னும் மூச்சு விட சிரமப்பட்ட ஸ்ருதியை விடாமல் முத்தம் வைத்துக்கொண்டு இருக்க...

அவன் செயலில் அதிர்ச்சியும், ,கோபமும் அடைந்த ஸ்ருதி தன் பலம் மொத்தமும் சேர்த்து தன்னிடம் இருந்து லோகியை தள்ளி விட... அவள் தள்ளிய வேகத்தில் கட்டிலில் இருந்து தரையில் விழுந்தான்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி இப்படி மனைவி தள்ளிவிடத்தில் கீழே விழுந்துவிட்டான் என்று கேள்விப்பட்டால் அன்றைய தலைப்பு செய்தி இதுவாக தான் இருந்திருக்கும், நல்லவேளையாக அவன் அறைக்குள் இது நடந்தேறி இருக்கிறது .

கீழே லோகி விழுந்தது கூட பொருட்படுத்தும் நிலையில் ஸ்ருதி இல்லை . அவன் சற்று முன் அவள் உதட்டை கடித்து தின்றதில் கோபம் தான் தலைக்கு ஏறி இருந்தது. வேகமாக கட்டிலை விட்டு கீழே இறங்கியவள் "என்ன லோகி இது ... ஏன் இவளவு காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிறிங்க... . நான் காலையில் சித்துகிட்டே சொன்னதுல எந்த தப்பும் இல்லை. உங்களுக்கு வயசாகிடுச்சு தான் அதனால தான் நான் காலையில் கிண்டலாக சொன்ன விஷயத்தை இவ்வளவு நேரம் ஆகியும் அதை இன்னமும் மனசுல வெச்சிட்டு என்கிட்டே இப்படி எல்லாம் நடந்துக்கிறிங்க... "என்றாள் கோபமாக..

தரையில் இருந்து எழுந்திருந்த லோகி அவள் கைபிடித்து தன் அருகில் இழுத்து அவள் தாடையை இருக்க பற்றியவன்

"ஸ்ருதி இன்னொரு தடவை என் வயசை பத்தி பேசாதே... உனக்கும் எனக்கும் ரொம்ப பெரிய வயசு வித்யாசம் இல்லை " என்று சொல்ல...

" ஏன் உங்க வயசை பத்தி சொன்னா உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது லோகி . நான் எந்த தப்பான அர்த்தத்துலயும் சொல்லல... முதல்ல என்கிட்டே இப்படி காட்டுமிராண்டி தனமா நடந்துக்கிறதை நிறுத்துங்க... உங்களுக்கு என்ன ஆச்சு? " என்று நிமிர்ந்து அவனை பார்க்க...

"காட்டுமிராண்டியா... நானா... " என்று அவளை பிடித்து இருந்த கையின் அழுத்தத்தை கூட்ட... அதில் வலியில் ஸ்ருதி முகம் சுருங்கியவள் .

"ஷ்... லோகி வலிக்குது ப்ளீஸ்... என்னை விடுக... " என்று அவன் கையை தன்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்க...

"இந்த வயசானவன் காட்டு மிராண்டி இப்படி தான் நடந்துப்பான்" என்று சொல்லி மேலும் அவன் பிடியை இருக்க...

"ச்சே... லோகி நீங்க இவ்வளவு மோசமானவர்னு நான் நினைக்கவே இல்லை. உங்களால ஒரு பொண்ணுக்கியே எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியலை . நீங்க... நீ.... நீ... காட்டுமிராண்டி தான். உன்னோட வைஃபை எப்படி நடத்தணும்னு கூட உனக்கு தெரியல... ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியலை... நீ காட்டு மிராண்டி தான். உன் கூட தானே உன் தம்பியும் பிறந்தான். அவன் பொண்ணுங்க கிட்டே எப்படி மரியாதையா நடத்துகிறான் தெரியுமா? நீயும் தான் இருக்கியே... " என்று அவனை வெறுக்கும் பார்வை பார்த்தவள்.

"என் கையை விடு டா ... காட்டுமிராண்டி ... " என்று சிரமப்பட்டு லோகியின் கைப்பிடிக்குள் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அவன் அழுத்தியதில் சிவந்து இருந்த அவள் மணிக்கட்டை தேய்த்துவிட்டுக்கொண்டே அவனை பார்த்தவள் திரும்பி வெளியே செல்வதற்காக நடக்கபோக...

ஸ்ருதி தன் வயதை பற்றி பேசியது... அவனை சித்துவுடன் சேர்த்த்து ஒப்பிட்டு பேசியது என்று கோபம் தலைக்கு ஏறி இருக்க... கடாய்சியாக மீனுடன் அவனை காட்டுமிராண்டி என்று ஸ்ருதி அழைக்கவும் அவன் தலைக்குள் சூடேறி... கோபம் அவன் கண்களை மட்டும் அல்ல.... முகம் முழுவதும் சிவக்க வைத்து இருந்தது.

தன்னை இப்படி உதாசீனப்படுத்தி விட்டு செல்லும் ஸ்ருதியை பார்க்க பார்க்க... அவள் பேசியது எல்லாம் கேட்டு கோபமடைந்தவன் கதவை திறந்து அவர்கள் அறையை விட்டு வெளியே சென்றவள் பின்னால் சென்றவன் ஸ்ருதியின் கையை பிடித்து தன் பக்கம் திருப்ப...

ஏற்கனவே லோகியின் மீது கோபத்தில் இருந்த ஸ்ருதி அவனை அதே கோபத்தோடு அவனை புழுவை போல பார்க்க... அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்தவன் " இந்த வயதானவன் ... காட்டுமிராண்டி என்னவெல்லாம் செய்வான்னு இப்போ உனக்கு காட்டுறேன் தெரிஞ்சுக்கோ.... " என்று சொன்னவன் ஸ்ருதி என்ன என்று யோசிக்கும் முன்பு அவளை தூக்கி தோளில் போட்டவன் தங்கள் அறையை நோக்கி நடந்தவன் கதவை திறந்து கொண்டே உள்ளே சென்றான்.

அதை சற்றும் எதிர்பாராத ஸ்ருதி அவன் தொழில் இருந்து திமிறி கீழே இறங்க முற்பட... அவளை விடாமல் பிடித்து இருந்த லோகி கட்டிலில் கொண்டு வந்து ஸ்ருதியை போட்டவன் வேகமாக த்ன் சட்டையை கழட்ட ஆரம்பித்தான்.

அவன் என்ன செய்யப்போகிறான் என்று ஓரளவுக்கு புரிந்து இருந்த ஸ்ருதிக்கு அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் புரியவே... அவசரமாக மெத்தையில் இருந்து எழுந்தவள் "லோகி என்ன செய்ற!.. இங்கே பாரு எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் . நீ என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ் லோகி... அவசர படாத... நான் பேசினது தப்பு தான் உன் வயசை பத்தி பேசி இருக்க கூடாது தான். என்னை மன்னிச்சிரு ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் " என்று அவனை மிரளும் பார்வை ஸ்ருதி பார்க்க...

ஆனால் அவள் பேசியது எல்லாம் லோகியின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள் இங்கே அவன் காதுகளையும் செவிடாக்கி இருந்தது அவன் கோபம் .

ஸ்ருதி பேசிக்கொண்டு இருக்கும்போதே கட்டிலில் அவளை நெருங்கி இருந்தான். தன் மேல் வந்து விழ இருந்தவனை தன் இரு கையை அவன் மார்பில் வைத்து தடுத்து நிறுத்தினாள் ஸ்ருதி .

அவன் பாரம் தாங்காமல் பின்னால் மெத்தையில் வளைந்தவள் "லோகி ப்ளீஸ் அவசர படாதே... நான் சொல்றதை கொஞ்சம் கேளு ப்ளீஸ்.. லோகி " என்று அவள் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே...

ஸ்ருதி அணிந்து இருந்த அவள் மெல்லிய ஷர்டை பிடித்து இரு கைகளிலும் இழுக்க... அவள் சட்டை பட்டன்கள் எல்லாம் தெறித்து கட்டிலில் சிதரி இருக்க... அதில் பதறிய ஸ்ருதி லோகியின் மார்பில் இருந்த கையை விலகி அவள் மார்பை மறைக்க போனாள்.

ஸ்ருதி கையை எடுத்ததும் அவள் மேல் விழவந்தவன் சுதாரித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் ஸ்ருதி தன் உள்ளாடை அணிந்த உடல் லோகி கண்களுக்கு விருந்தாக்குவதை தடுக்க மார்பை மறைக்க முயற்சிக்க... அவள் கைகளை பிடித்து மெத்தையில் அவளை சரித்து கைகளை மெத்தையில் எழுதியவன் ஸ்ருதியை பார்த்தான்.

அவன் பார்வையில் இருந்த கோபம் ஸ்ருதியின் வயிற்றுக்குள் பயத்தை கிளறியது .

"லோ... லோகி... ப்ளீஸ்... வேணாம். இது... இது ... .வேணாம் " என்று தலையை இடவலமாக ஸ்ருதி ஆட்ட..

"it's too late baby... எனக்குள்ள தூக்கிகிட்டு இருந்த மிருகத்தை தேவை இல்லாம சீண்டி விட்டுட்டே... " என்றவன் அடுத்த நொடி அவள் இதழை கவ்வி இருந்தான்.
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 18
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top