- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
"என்ன லோகி இது போனை அட்டென்ட் பண்ணினதும் இப்படி பேசுற... " என்றாள் தாரா .
"நீ செய்த காரியத்துக்கு வேற என்ன செய்ய சொல்றே.. "என்றான் கோபமாக.
"நான் அப்படி ஒன்னும் பெரிய தப்பு செய்யலையே நீயும் , நானும் ஒண்ணா இருந்த போட்டோவை தெரியாம சோசியல் மீடியாவுல போஸ்ட் பண்ணிட்டேன். அது தெரியாம நடந்துச்சுன்னு உன்கிட்டே விளக்கி சொல்ல நான் எவ்ளோ முயற்சி பண்ணினேன் ஆனா நீ என்னை அவொய்ட் பண்ற . முழுசா விஷயம் தெரியாம இப்படி என்னை தள்ளிவெச்சுட்டு வேற ஒருத்தியை நீ கல்யாணம் செய்துக்கிட்டது எனக்கு எவ்ளோ பெரிய அஏமாற்றத்தை கொடுத்திருக்குனு உனக்கு தெரியுமா லோகி " என்று குரலில் சோகத்தை தத்தெடுத்துக்கொண்டு கேட்டாள் .
"தாரா முதல்ல நீ இதுவரை சொன்னது எதுவுமே உண்மை கிடையாது . என் நினைவு தெரிஞ்சு உன்கூட நான் அப்படி ஒரு காரியத்த்தை செய்யல... நீ தப்பான தகவல்களை வேணும்னு பரவ விட்டுட்டு இப்போ எதுவும் தெரியாதவள் போல என்கிட்டே விளக்கம் சொன்னா அதை நம்ப நான் ஒன்னும் முட்டாள் கிடையாது "என்று கோபமாக பேசினான் லோகி.
"நான் சொன்னது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க நினைச்சா இன்னிக்கு நைட் ஹோட்டல் பிளாசா ரூம் நம்பர் 2034 க்கு வா . அங்கே வெச்சு நான் உனக்கு விளக்கமா சொல்றேன் "என்றாள் தாரா.
"எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லை .உன்கிட்டே பேச எனக்கு டைம் இல்லை . நான் வெக்குறேன் " என்று காலை கட் செய்ய போனான்.
"சரி நீ கேக்கலையின்னா என்ன நான் உன்னோட பொண்டாட்டிக்கிட்டே நம்ம விஷயத்தை பத்தி எடுத்தது சொல்லி அவங்க கிட்டயே நியாயம் கேக்குறேன் " என்றாள் .
"என்ன தாரா என்னை பிளாக் மேல் பண்றியா?" என்றான் எரிச்சலாக.
"நோ..நோ... லோகி எனக்கு நியாயம் கிடைக்க தான் இதெல்லாம் நான் செய்த்துடு இருக்கேன் . என்கூட ஒண்ணா ஒரு ராத்திரி முழுக்க இருந்துட்டு . எனக்கு துரோகம் செய்துட்டு ஈபிடிபி திடீர்னு வேற ஒருபெண்ணை கல்யாணம் செய்துகிட்டா நான் என்ன செய்வேன் . உன்னையே நினைச்சிட்டு இதனை காலமும் வாழ்ந்த என் நிலை என்ன ஆகும் " என்று நீலிக்கண்ணீர் வடித்தாள்.
"தாரா இப்ப்போ என்னை என்ன தான் பண்ண சொல்றே.." என்றான் கடுப்பாக .
"நீ எதுக்குவம் செய்யவேணாம் லோகி . நான் சொன்ன இடத்துக்கு நிஜித் 10 மணிக்கு ஷார்ப்பா வந்திரு மற்றதை நான் நேரில் சொல்றேன் " என்று அவன் பதிலுக்காக காத்திருந்தாள் .
சிறிது நேர அமைதிக்கு பின் "சரி வரேன் " என்று காலை கட் செய்தான் .
போனை கட் செய்துவிட்டு லோகி யோசனையில் நின்று இருக்க... அவனை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு "எங்க போறே... லோகி " என்றாள் ஸ்ருதி .
அவள் குரலில் தெளிந்தவன் "என்ன... என்ன சொன்னே பேபி " என்றான்.
"எங்கேயோ வரேன்னு போன்ல சொல்லிட்டு இருந்தியே அதான் எங்கே கிளம்பிட்டேன்னு கேட்டேன் " என்று அவன் முன் வந்து நின்று தன் தலை முடியை துவட்டிக்கொண்டே கேட்டாள் .
"ஒரு மீட்டிங் இருக்கு நைட் 10 ஓ கிளாக் அதை நியாபகம் செய்யத்தான் லிசா கால் பண்ணினா . நானும் வரேன்னு சொன்னே " என்று த்ன் பிஏ லிசா லோகிக்கு கால் செய்ததாக போய் சொன்னான்.
தாராவை பற்றி ஸ்ருதிக்கு இதுவரை எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை . ஏன் என்றால் தாராவையும் , லோகியையும் வைத்து பரவிய செய்திகள் ஸ்ருத்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவள் இந்தியா வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னாள் வந்த செய்தி என்பதால் ஸ்ருதிக்கு இந்த விசயம் தெரியாது . முடிந்து போன தேவையில்லாத விஷயத்தை ஸ்ருதியிடம் சொல்லி அவளை ஏன் மனா உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்று அவளிடம் பொய் சொல்லி இருந்தான் லோகி .
"ஏன் லோகி நைட் டைமில் கூட மீட்டிங் இருக்குமா " என்றாள்
"ஒரு முக்கியமான வேலை அதான் கொஞ்சம் போக வேண்டி இருக்கு "என்றவன் அவள் கையில் இருந்த டவலை வாங்கியவன் மெத்தையில் ஸ்ருத்தியை அமரவைத்து அவள் ஈரத் தலையை துவட்டிவிட்டான்.
இருவரும் சிரித்து பேசி கொஞ்சி மகிழ்ந்தவர்கள் கிளம்பி அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.
தன்னுடைய ஜனாதிபதி மாளிகைக்கு வந்தவன் முதலில் லிசாவை அழைத்து இரவு தாராவை சந்திக்க போகும் விபரம் சொல்லி இதை ரகசியமாக வைக்க சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி இருந்தான்.
தாரா பேசியதே லோகியின் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருந்தது , அவனால் இன்றி வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த லிசா "சார் எதிர்க்கட்சி தலைவர் பரந்தாமன் உங்களை மீட் பண்ணனும்னு வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்காரு " என்றாள் .
சிறிது யோசித்தவன் " ஓகே வர சொல்லு " என்றான் .
லிசா வெளியே சென்ற சில நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் பரந்தாமன் .
பரந்தாமனை பற்றி நிறைய விஷயங்கள் அவர் ஊழல் விவகாரங்கள் , சட்டம் ஒழுங்கை மீறுவது போன்றவை அடிக்கடி லோகியின் காதுகளில் வந்து விழத்தான் செய்திருக்கிறது . அப்படி பட்டவர இன்று எதற்காக தன்னை சந்திக்க வருகிறார் என்று யோசித்தபடியே அவரை பார்த்தவன் .
"வாங்க மிஸ்டர் பரந்தாமன் . உக்காருங்க " என்று தனக்கு எதிரே இருந்த இருக்கையை கைகாட்டினான்.
தன்னை எழுந்து நின்று வரவேற்காமல் திமிராக சேரில் சாய்ந்து வரவேற்ற லோகியை கண்டு உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் சிரித்த படி அவன் முன்னாள் இருந்த சேரில் அமர்ந்த பரந்தாமன்.
"மன்னிக்கணும் அறிவிப்பில்லாமல் வந்துட்டேன் "என்றார்.
அவரை பார்த்து சிரித்தவன் " பரவாயில்லை அதான் வந்துட்டீங்களே... என்ன விஷயமா இப்படி என்னை திடீர்னு அப்பாயின்மென்ட் கூட வாங்காம வந்திருக்கீங்க " என்றான்.
"என்ன லோகி இது நமக்குள்ள என்ன போர்மாலிட்டீஸ் எல்லாம். நான் எதிர்க்கட்சி தலைவனாவே இருந்தாலும் . உங்களை சந்திக்க நான் அனுமதி வாங்கிட்டு வரணுமா ? என்ன ? " என்று அவனை திமிராக பார்த்தார்.
"நீங்க மட்டும் இல்லை மிஸ்டர் பரந்தாமன் நாட்டோட பிரதமந்திரியே என்னை பார்க்க வராதா இருந்தா என்கிட்டே அனுமதி வாங்கிட்டு தான் வரணும் " என்றான் அவரை போலவே திமிராக .
அதில் கடுப்பான பரந்தாமன் "அப்போ நான் போயிட்டு உங்க அனுமதி வாங்கிட்டு இன்னோரு நாள் வரட்டுமா " என்று எழுந்து செல்வது போல பாவனை செய்ய...
"ரொம்ப நல்லது ... எனக்கு சில முக்கியமான வேலை முடிக்க வேண்டி இருக்கு. நீங்க என் பியேவை தொடர்பு கொண்டு என்னோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு அப்பறோம் வாங்க " என்று டேபிளில் இருந்த பையிலை எடுக்க போக...
"அட என்ன தம்பி நீங்க நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அதை போயி நீங்க சீரியஸ் ஆஹ் எடுத்திருக்கிட்டு பொசுக்குன்னு போய்ட்டு வர சொல்லிட்டீங்க..."என்றவர் .
தான் அமர்ந்து இருந்த சேரை முன்னாள் நகர்த்தி லோகிக்கி முன்னாள் வந்தவர் "உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி நான் பேசணும் .அதுக்காக தான் வந்தேன் "என்றார்.
"சொல்லுங்க பரந்தாமன் என்ன விஷயம் "என்றான் .
" அது ஒண்ணுமில்ல... லோகி..."என்று லோகியின் பெயரை சாதாரணமாக அழைக்க...
"சொல்லு பரந்தாமா "என்று அவனும் பதிலுக்கு தன்னை விட 20 வயது மூத்தவரை பெயரை சொல்லி அழைத்தான்.
அதில் பரந்தாமன் முகம் கருத்திட்டுவிட... அதை கண்டும் காணாதவன் போல லோகில் அமர்ந்து இருந்தான் , அதை பார்த்து இதுவரை அவர்கள் இருவருக்கும அருகில் நின்று இருந்த லிசா லோகி பரந்தாமன் பெயரை சொல்லி அழைத்ததும் சிரித்துவிட அவளை திரும்பி முறைத்த பரந்தாமன் "என்ன லோகி இது எண்கோண வயசுக்கு மரியாதையை தராம இப்படி என் பேரை சொல்லி கூபிட்றே "என்றார்.
"நீங்க என் பதவிக்கு மரியாதையை கொடுத்த்து் பேசியிருக்கலாமே .." என்றான்.
இவனிடம் பேசி பகைத்துக்கொள்ள இப்பொது அவர் விரும்பவில்லை. தான் வந்த வேலை அவருக்கு ஆகா வேண்டுமே
"இல்ல மிஸ்டர் லோகி எனக்கு ஒரு உதவி நீங்க செய்யணும் . அதுக்காக தான் உங்களை பார்க்க வந்தேன் "என்றார்.
"என்ன சார் நீங்க எவ்ளோ பெரிய ஆள் உங்களை கண்டு ஆளுங்கட்சியே அலறுது . உங்களுக்கு எதுவும் உதவின்னா நீங்க சொன்ன மாத்திரத்திலே செய்ய எத்தனை பேர் இருக்காங்க . அவங்களை எல்லாம் விட்டுட்டு என்கிட்டே வந்திருக்கீங்க " என்றான்.
"ஒரு வெளிநாட்டு கம்பெனியில் இருந்து நம்ம நாட்டுல தொழில் தொடங்க முதலீடு பண்ண போறதா கேள்வி பாட்டன். அது நம்ம ஆளுங்கட்சி மூலமா அநத கம்பெனி இந்தியாவுல தொழில் தொடங்க போறதா தீர்மானம் பண்ணி இருக்காங்க "என்றார் பரந்தாமன் .
"சரி அதுக்கு இப்போ நான் என்ன செய்யணும் . அது ஆளுங்கட்சியோட முயற்சியில் உருவாகப் போகுது . அதனால நம்ம நாட்டு இளைஞர்கள் பலபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க போகுது . அது நல்ல விஷயம் தானே. அதை எதுக்கு இங்கே எடுத்துட்டு வந்திங்க " என்றான் லோகி.
"அட என்ன தம்பி நீங்க புரியாத பையனா இருக்கீங்க... இப்போ ஆளுங்கட்சியால கொண்டு வரபோற அநத கம்பெனி மட்டும் நம்ம நாட்டுக்குள்ள கால் பதிச்சி அது மூலமா நல்ல விஷயம் நம்ம ஊர் ஆளுங்களுக்கு நடந்திருச்சுன்னு வெச்சுக்கோங்க... அப்பறோம் இன்னும் பத்து வருசத்துக்கு அவங்க ஆட்சியை கலைக்கவே முடியாது .ஸ்ட்ரோங்கா உக்காந்துட்டு எங்க கட்சி கண்ணுல விரலை விட்டு ஆட்ட ஆரம்பிச்சிருவானுங்க "என்ற பரந்தாமன் .
"தம்பி இப்போ அந்த கம்பெனி விஷயமா நம்ம அசெம்பிலியில் தீர்மானம் கொண்டு வர போறாங்க . அதுக்கு எல்லா MP க்களும் ஆதரவு கொடுக்கப்போறதா கேள்விப்பட்டேன். என் கட்சியில் இருக்கருங் சில ஆளுங்களை கூட அவங்க காசு கொடுத்து விலைக்கு வாங்கி இந்த திட்டத்துக்கு அவங்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி பேசி இருக்குறதுக்கு எனக்கு தெறியும்."என்றார்.
"ஓஹோ... அப்போ உங்களுக்கும் கண்டிப்பா பண பெட்டி வந்திருக்குமே... அப்பறோம் என்ன நீங்க வழக்கம் போல பணத்தை வாங்கிட்டு அமைதியா போய்டா போறீங்க தானே அப்பறோம் எதுக்காக இங்கே வந்திருக்கீங்க..." என்றான் .
"அட என்ன தம்பி பொடலங்கா காசு நான் பாக்காத காசா ... எனக்கு அதெல்லாம் சரியா போட்டி வந்து சேர்ந்திருச்சு. ஆனா எனக்கு அதுல திருப்தி இல்லை . இந்த வெளிநாட்டு கம்பெனி நம்ம நாட்டுல முதலீடு பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல... இந்த மாதிரி நல்ல ப்ராஜெக்ட் எல்லாம் நான் ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடக்கணும். ஆனா இவங்க ஆட்சி காலத்துல இதை மாதிரி நல்ல விஷயம் நடந்து அதனால இந்த முட்டாள் ஜனங்க அவன் செய்யுற நல்லதை எல்லாம் பாத்துட்டு அவனையம், அவன் கட்சியையும் தலையில் தூக்கி வெச்சு கொண்டாட ஆரம்பிச்சிருவாங்க . அது எனக்கு சுத்தமா பிடிக்கல... அதனால தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்." என்றார்.
"அந்த விஷயமா என்கிட்டே என்ன பேச வேண்டி இருக்கு "என்றான் லோகி.
"அதான் தம்பி ஆளுங்கட்சி அந்த ப்ரொஜெக்ட்டை தீர்மானம் பண்ணி நிறைவேத்தகே கூடாது. அதுக்கு நீங்க உங்க பவரை யூஸ் பண்ணி ஏதாவது செய்து இந்த ப்ராஜெக்ட் நம்ம நாட்டுக்குள்ள வர விடாம நிறுத்தி வையுங்க... இன்னும் ஆறு மாசத்துல அடுத்த எலெக்ஷன் வரப்போகுது . என் ஆட்சி தான் அடுத்த எலெக்ஷன்ல ஜெயிக்கவும் போகுது . அப்போ இந்த ப்ராஜெக்ட்டை என் கட்சி மூலமா இந்தியாவுல கொண்டு வந்துரலாம். என்னோட ஆட்சியில் அந்த ப்ராஜெக்ட்டை கொண்டு வந்துட்டா அதுல வர பணத்துல ஒரு ஷேர் உங்களுக்கு கொடுத்துறேன். என்ன சொல்றிங்க.."என்று தான் வந்த நோக்கத்தை ஒருவழியாக சொல்லி முடித்தார்.

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 22
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.