layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
பரந்தாமன் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த லோகி " நீங்க சொல்ற மாதிரியே நான் செய்யுரேன் . ஆனா எனக்கு நீங்க வாங்குற பணத்துல ஷேர் எல்லாம் வேணாம் " என்றான் .

இந்த ப்ரொஜெக்ட்டிற்கு லோகி சம்மதித்ததும் சந்தோசம் அடைந்த பரந்தாமன் அதற்கு பணம் எதும் வேண்டாம் என்று சொன்னது வேறு ரெட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது . அவர் சந்தோசமாக லோகியை பார்க்க...

"உங்களுக்கு கிடைக்குற கமீஸன்ல்ல இருந்து எனக்கு எந்த சேரும் வேண்டாம். ஆனா.... " என்று அவரை லோகி பார்க்க...

"என்ன சார் என்ன வேணும் தயங்காம கேளுங்க நான் செய்றேன் " என்றார்.

"எனக்கு அந்த கம்பெனி இந்தியாவுல செய்ய போற முதலீட்டில் அவங்க கம்பெனியில் நானும் ஒரு ஷேர் ஹோல்டேரா இருக்கனும் "என்றான் .

லோகி சொன்னதை கேட்டு அதிர்ந்த பரந்தாமன் சாதாரணமாக சில கோடிகளில் ஏதாவது லோகி கேட்பான் என்று நினைத்து இருக்கையில் அவன் அந்த கம்பெனியில் தன்னையும் ஒரு பங்கு தாரராக சேர்க்க வேண்டும் என்று கேட்கவும் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தார்.

"என்ன மிஸ்டர் பரந்தாமன் அப்படி பாக்குறீங்க... நீங்க தானே நான் என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னிங்க.. அதான் எனக்கு என்ன வேணுமோ அதை கேட்கிறேன் "என்றான் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து .

"சார் அது வந்து" என்று பரந்தாமன் தயக்கமாக அவனை பார்க்க...

"என்ன சார் உங்களுக்கு நான் சொன்ன டீலிங் பிடிக்கலையா? அதனால தான் என்கிட்டே சொல்ல யோசிக்கிறீங்களா? எனக்கு எந்த ப்ரோபலமும் இல்லை உங்ககிட்ட நான் கேட்ட டீலிங்கை இப்போ நான் ஆளுங்கட்சிக்கிட்டே சொல்லி அவங்க ப்ரொஜெக்ட்ல என்னை சேர்க்க சொன்ன்னா உடனே சம்மதித்திருவாங்க எப்படி பார்த்தாலும் எனக்கு தான் லாபம் "என்று அவரை பார்த்தான் .

லோகியின் கிடுக்குப்பிடி பரந்தாமனை அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் செய்தது . லோகி கேட்பது சற்று அதிகம் தான் என்றாலும். இந்த டீலிங்கை விட்டால் மாற்றி அவனுக்கு தருவதற்கோ பேசுவதற்கோ பரந்தாமனிடம் ஒன்றும் இல்லை. அவர் யோசனையோடு திரும்பி தன் பியேவை பார்க்க... அவர் அருகில் வந்த பிஏ குனிந்து பரந்தாமன்ம் காதுகளில் "சார் இதை விட்ட நமக்கு வேற சான்ஸே இல்லை இதுக்கு சம்மாதிக்குறதை தவிர வேற வழியும் இல்லை "என்றான்.

அவர் பிஏ சொன்னதும் சரிதான் என்பது போல பரந்தாமன் தலையை ஆட்ட... அவர்கள் இருவரும் பேசுவதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்த லோகி பரந்தாமன் அவனிடம் பேச வரும்போது சாதாரணமாக எதையும் கண்டுகொள்ளாதவன் போல ஒரு பார்வை பார்த்தான் .

"ஓகே சார் நீங்க சொன்ன டீலிங்கிற்கு சம்மதிக்குறேன் .நாம பேசினது போல ஆளுங்கட்சி நாளைக்கு அசெம்பிளியில் இந்த ப்ரொஜெக்ட்டை அமல் படுத்தும் திட்டத்தை கொண்டு வர போறாங்க . அவங்க அதை செய்ய கூடாது . அதை நீங்க தான் பார்த்தட்டுக்கணும். அதுக்காக தான் இந்த டீலிங்குக்கே நான் சம்மதிக்குறேன் "என்றவர் எழுந்து லோகிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவன் அருகில் நின்று இருந்தா லிசா லோகியின் இந்த டீலிங் பேசும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. மற்ற ஆட்களை போல தான் லோகியும் பணத்திற்காக இப்படி வேலை செய்கிறான் என்று அவன் மீது கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்று இருந்தாள்.

இங்கே... லோகியை சந்தித்துவிட்டு தன் காரில் போய்க்கொண்டு இருந்த பரந்தாமன் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார். அடுத்து அவருடைய ஸ்கெடுளை அவரிடம் நியாபகப்படுத்திக்கொண்டு இருந்த அவரது பிஏ பரந்தாமனின் அமைதியை கண்டவன் மெதுவாக அவரிடம் "ஐயா ... ஐயா... "என்று அவரை அழைத்து அவர் யோசனையை கலைத்தான் .

"ஏன் வரதா அந்த ப்ரெசிடெண்ட் இருக்கானே கொஞ்சம் கூட யோசிக்காம இதுதான் வேணும்னு பிடிவாதமா நின்னு டிமாண்ட் பண்ணி அவன் நினைச்சதை சாதிச்சுட்டானே... நமக்கு வர லாபத்தில பங்கு கேட்பான்னு பார்த்தா அவன் என்னடான்னா அந்த கம்பெனியில் பாதியை இல்ல வேணும்னு கேக்குறான் "என்றார் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் .

"வேற என்ன ஐயா செய்ய சொல்றிங்க... அவர் சொன்ன டீலிங்குக்கு வேணாம்னு நாம மருத்டுடு வந்துட்டா நம்ம இந்த பக்கம் வந்ததும் அந்த பக்கம் இதே டீலிங்கை ஆளுங்கட்சி தலைவர் கிட்டே பேசி சம்மதமும் வாங்கிருப்பாரு. நீங்க அவர் டீலிங்குக்கு ஓகே சொன்னது தான் சரிங்க ஐயா ரொம்ப யோசிக்காதிங்க "என்றான்.

"இல்ல வரதா இதை இப்படிஏ விடக்கூடாது . அவன் மட்டும் அந்த டீலிங்கில் கையெழுத்து மட்டும் போட்டான் அப்பறோம் அவன் குடுமி நமக்கு கிடைக்காது . நீ என்ன பண்ணுற... "என்று வரதனிடம் அடுத்தது அவர் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு நிம்மதியாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தார்.

"அய்யா நீங்க இத்தனை வருஷம் இந்த பெரிய தலைகளை எல்லாம் எப்படி தாக்கு பிடிச்சீங்கன்னு இப்போதான் புரியுது . சூப்பர் ஐயா " என்றான்.

"சரி சரி என்னை பாராட்டினது போதும் நான் சொன்னதை சரியா செஞ்சிரு "என்றவர அவர் அலுவலகம் வரவும் கரை விட்டு இறங்கி உள்ளே செல்ல... பரந்தாமனின் பிஏ அவர் சொன்ன வேலைகளை செய்ய ஆயத்தமானார்.

ஸ்ருதி ஷூட்டிங்கில் மும்மரமாக வேலைபார்த்து கொண்டு இருந்தாள் . அவள் ஆர்வமும் ஒத்துழைப்பும் வருணுக்கும், சித்துவிற்கும் மிகவும் த்ரிப்தியாக இருந்தது . செட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசிப்பழகுவதும் சில சமயம் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது நேரத்தை கழிப்பது என்று அவள் இருக்க...

"ஏன் டா நிஜமாவே ஸ்ருதி உன் அண்ணனை தான் கல்யாண செய்திருக்காளா ?"என்றான் வருண் .

"என்ன வருண் என் அண்ணாவும், ஸ்ருதியும் கல்யாணம் செய்துக்கிட்டது ஊரே பாத்திச்சு... அதை பார்த்தும் கூட உனக்கு ஸ்ருத்தி தான் என் அண்ணின்னு உன்னால நம்ப முடியலையா "என்றான் சித்து .

"இல்ல டா ஒரு ப்ரெசிடெண்ட்டோட மனைவியா இருந்துட்டு எப்படி ஸ்ருதியால இவ்வளவு எளிமையா இருக்க முடியுது . எல்லார் கிட்டயும் எந்த பந்தாவும் இல்லாம ஹெட் வெயிட் இல்லாம அவளால் இருக்க முடியுது . எனக்கு இன்னமும் ஆச்சர்யமா இருக்கு டா... இதுவே அவ இடத்துல வேற யாரும் இருந்திருந்தா இந்த நேரம் எவ்ளோ ஆட்டம் போட்டிருப்பாங்க. இது வேணும் அது வேணும் அது இதுன்னு அலப்பறை பண்ணிருப்பாங்க. ஆனா ஸ்ருதியை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு டா சித்து "என்று செட்டில் நடிக்க வந்திருந்த ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து ஏதோ புதிதாக விளையாடுவது போல நொண்டி அடித்து விளையாடிக்கொண்டு இருந்தவளை பார்த்தபடி கேட்டான்..

"ஆமா வருண் நம்ம கிட்டே ஆடிஷன் வந்த அப்போ ஸ்ருதி எப்படி இருந்தாளோ அதே போல தான் இவ்ளோ நாள் ஆகியும் இருக்கா " என்றான்.

வருணிடம் பேசிக்கொண்டே ஸ்ருதியை பார்க்க... அவள் விளையாடிக்கொண்டு இருக்கும்போது கால் தவறி கீழே விழ அதை பார்த்து பதறி எழுந்திருக்க போனான். அதற்குள்ளாக ஆவலுடன் விளையாடிய பெண் ஸ்ருதிக்கு கைகொடுத்து தூக்கி விட்டிருந்தாள். ஸ்ருதியும் சகஜமாக எழுந்து தன் மேல் இருந்த புழுதியை தட்டிவிட்டுவிட்டு மீண்டும் அந்த பெண்ணுடன் விளையாட ஆர்மபித்து இருக்க.. அதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த வருண்

"டேய் சித்து .."என்றான் .

"சொல்லு டா..." என்று அவனை பார்த்தான் சித்து .

"இந்த நேரம் ஸ்ருதி தடுக்கி விழுந்து மாதிரி இந்த இடத்துல அந்த தாரா இருந்திருந்தா என்ன எல்லாம் பண்ணி இருப்பா " என்று சித்துவை பார்த்தான் .

"டேய் இப்போ ஏன் டா அவளை நியாபக படுத்துற.."என்று கோபமானான் .

"இல்ல டா அவ உன் அண்ணனை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு திரிஞ்ச அப்போ அவ கூட சேர்ந்து நம்ம ஒரு 3 டயஸ் ப்ராஜெக்ட் பன்னினோமே நியாபகம் இருக்கா... "என்றான்.

"அதெப்படி மறப்பேன் அப்பப்பா... அந்த 3 நாளுல அவ பண்ணின அளப்பறையை இப்போ நினைச்சாலும் கடுப்பா வருது. அந்த செட்டில் இருந்தவர்களை எவ்ளோ பாடு படுத்திட்டா... "என்று தலையை குலுக்கியவன் .

"டேய் இப்போ தான் அவளுக்கும் என் அண்ணாவுக்கும் சம்மந்தம் இல்லையான்னு ஆகிருச்சு இல்ல.. அப்பறோம் எதுக்கு டா அவளை பத்தி பேசிகிட்டு இருக்க நீ...

'என்றவன்.

வருண் பக்கம் சேரை நகர்த்தி போட்டு "இங்கே பாரு ஸ்ருதிக்கு என் அண்ணாவும் , தாராவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்ச விஷயம் தெரியாதுன்னு நினைக்குறேன். நீ பாட்டுக்கு அவ இருக்கும்போது எதுவும் உளறி வெச்சிடாத... அப்பறோம் அவ்ளோதான் விஷயம் தெரிஞ்சா ஸ்ருதி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது. அதனால அண்ணாவுக்கும், அவளுக்கும் இடையில் இதனால் ஏதாவது பிரச்சனை வரபோகுது "என்று தன் நண்பனை எச்சரித்தான்.

"இல்ல டா இதை போய் நான் ஸ்ருத்திக்கிட்டே சொல்லுவேனா... ஸ்ருதி காதுக்கு விஷயம் போகாம நான் பார்த்துகிறேன் "என்று வாக்கு கொடுத்தான் வருண்.

அப்போது வருணின் அசிஸ்டன்ட் வந்து " எல்லாம் ரெடி சார் "என்றான்.

"ஓகே டா ஸ்டார்ட் பண்ணிடலாம் "என்று சித்துவிடம் சொல்லிவிட்டு ஷூட்டிங்கிற்கு அனைவரையும் தயா்ராக சொல்லி மைக்கில் சொல்லிக்கொண்டே சென்றான்.

நாளை நிகழ போகும் பூகம்பம் தெரியாமல் ஸ்ருதி ஷூட்டிங்கிற்கு தயாராக சென்றாள்.

மாலை ஷூட்டிங் முடியவும் வருண் பேக் அப் என்றதும் தான் தாமதம் ஸ்ருதி சந்தோசமாக வீட்டிற்கு கிளம்ப தயார் ஆனால் . அவளோடு சித்துவும் வீட்டிற்கு ஒன்றாகவே காரில் கிளம்பினான்.

வழி எங்கும் நேற்று ஸ்ருதிக்கும், லோகிக்கும் நடந்த முதல் இரவை நினைத்து உள்ளுக்குள் வெட்கபட்டுக்கொண்டும் தனக்கு தானே சிரித்துக்கொண்டும் வந்தாள்.அதை கவனித்த சித்து "என்ன ஸ்ருதி ரொம்ப ஹாப்பியா இருக்க... காலையில் ஷூட்டிங் வந்ததுல இருந்து இப்போ வரை கொஞ்சம் கூட சோர்வில்லாம சந்தோசமா இருக்க... எதுவும் ஹாப்பியான விஷயம் நடந்துச்சா என்ன..."என்றான்.

ஸ்ருதி சிரித்துக்கொண்டே "ம்ம்ம்.. ஆமா "என்று வெட்கப்பட்டாள்.

அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த சித்து "ஏய் என்ன இது இந்த மாதிரி எல்லாம் செய்து என்னை பயமுறுத்தாத ப்ளீஸ். உனக்கு என்ன ஆச்சு ம்மா... புதுசா வெட்கமெல்லாம் படுற.. உனக்கு வெட்கப்பட தெரியுமா என்ன.. "என்று அவளை கலாய்த்தான்.

"போடா..."என்று அவன் தோளில் அடித்தவள்.

"நேத்து...நேத்து... "என்று விரலை பிசைந்துகொண்டே ஸ்ருத்தி பேச...

"என்ன இதெல்லாம் தயவு செய்து நீ எதும் எனக்கு சொல்ல வேணாம் தாயே.. நீ பண்றதை எல்லாம் பார்க்க சகிக்கலை "என்றான் அவள் பக்கம் திரும்பி .

மீண்டும் அவன் தோளில் அடித்தவள் "அதெல்லாம் கிடையாது நீ கேட்டுட்டே.. எனக்கு யாரவது கிட்டே இதை சொல்லணும் போல இருக்கு, எனக்கு இந்த ஊர்ல உன்னை விட்டா நம்ம வீட்டு ஆளுங்களை விட்டா யாரையும் தெரியாதே... "என்றாள்

"ஏன் சித்தாரா இருக்காளே அவ கிட்டே சொல்லலாமே .."என்றான் சித்து.

"டேய் அவ சின்ன பொண்ணு டா இதை எல்லாம் அவ கிட்டே சொல்லி வீனா சின்ன பொண்ணு மனசை கலைக்க கூடாது"என்றாள் .

"அப்படி என்ன நடந்துச்சு சித்தாரா மனசை கலைக்குற அளவுக்கு என்ன விஷயம் நடந்துச்சு "என்றான்.

"அது... அது வந்து... நேத்து... நேத்து... எனக்கும் , உன் அண்ணாவுக்கும் அது.. அது நடந்திருச்சு "என்று சொல்லி வெட்கப்பட்டு முகத்தை மூடினாள்.

அவள் சொன்னதை வைத்தே புரிந்துகொண்ட சித்து "ஏய் இதை போய் என்கிட்டே ஏன் சொல்லுற.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. இதெல்லாம் யாராவது ஒரு பொண்ணு இருந்தா அவங்க கிட்டே இல்ல நீ சொல்லிருக்கானும் . என்கிட்டே போய் இதெல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டு . நானும் கல்யாணம் ஆகாத சின்ன பையன் தான் தெரிஞ்சுக்கோ... எனக்கும் மனசு கலையுமில்ல... "என்று பதிலுக்கு சித்து வெட்கப்பட...

முகத்தை மூடி இருந்த ஸ்ருதி கையை விலக்கி சித்துவை பார்த்தவள் "சீ... நீ என்ன பொண்ணுங்க மாதிரி வெட்கப்புடுற.."என்றவள் .

"இதுக்காகவே நான் சீகிரியாம் இங்கே யாராவதை பிரென்ட் பிடிச்ச ஆகணும் டா..."என்று அவனை அடித்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 23
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top