- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிய லோகி நேராக தாரா வர சொல்லி இருந்த ஹோட்டல் பிளாசாவிற்கு சென்றான்.
அவன் அந்த ஹோட்டலுக்கு வரப்போவதால் ஹோட்டலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. யாரோ ஒரு விஐபி வருகிறார் என்று மட்டுமே அந்த ஹோட்டல் ஊழியர்கள் அறிந்து இருந்தனர் . ஆனால் யார் அந்த முக்கிய நபர் என்று யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது . ஏன் என்றால் லோகி அரசியில் காரங்களுக்காக இங்கே வரவில்லை தன்னுடைய பெர்சனல் விஷயத்திற்காக தாராவை சந்திக்க வந்திருக்கிறான் .
அதனால் தான் லோகி வருவதை ரகசியமாக வைத்து இருக்கின்றனர் . ஏற்கனவே லோகியுடன் சேர்த்து வைத்து தாரா பற்றிய வதந்திகள் இன்னமும் உலாவிக்கொண்டு இருக்க.. இந்த நேரத்தில் இவர்கள் சந்திப்பு வெளிவந்தாள் பிரச்சனை வெடிக்கும் என்று இந்த முடிவு .
ஹோட்டலின் பிரத்யேக வழியில் லோகியின் சார் வந்து நின்றது . முதலில் காரில் இருந்து இறங்கிய லிசா சுற்றிலும் யாரேனும் பாப்பராஸிகள் இருக்கிறார்களா என்று கவனித்தாள் . அங்கு யாரும் இல்லை என்று அவள் உறுதி செய்த பிறகு நேராக லிப்ட் அருகில் சென்று அதை இயக்கி அவர்கள் இருந்த தரை தளத்தற்கு வரவழைத்து லிப்ட் அஃதவை திறந்து அதன் குறுக்கே நின்று லோகியை அழைத்து வரும்படி அவர்கள் பாடிகார்டுகளுக்கு கட்டளையிட்டாள்.
லோகியின் பாடிகார்டுகள் ஒருமுறை சென்று சுற்றிலும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின் வந்து கார் கதவை திறந்து விட்டனர்.
காரில் இருந்து இறங்கிய லோகி நேராக அங்கே இருந்த லிப்ட்டில் போய் ஏறிக்கொள்ள தாரா இருந்த தளத்திற்கு லிப்ட் சென்றது . அங்கே வந்து நின்றதும் மீண்டும் லிசாவும், லோகியின் பாதுகார்டுகளும் அந்த தளத்தில் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகு முதலில் லிசா சென்று தாராவின் அறைக்கதவை தட்டினாள்.
கதவு தட்டப்பட்ட சிறிது நேரத்தில் அறைக்கதவை திறந்தாள் தாரா . அவளை தாண்டி உள்ளே சென்ற லிசா அந்த அறையில் ஒரு இடம் விடாமல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்த பின் லிபிட்டில் இருந்து லோகியை அழைத்து வர சொல்லி கமாண்ட் செய்தாள்.
தாராவிற்கு இது ஒன்றும் புதிது இல்லை அவள் லோகியுடன் பழகிய காலங்களில் இதை எல்லாம் பார்த்திருக்கிறாள். அதனால் இது ஒரு விஷயமாகவே அவளுக்கு தோன்றவில்லை. லோகி நேராக தாராவின் அறைக்குள் வந்ததும் தாரா அறைக்கதவை சுற்றிவிட்டு அவன் பின்னால் வந்தாள்.
உள்ளே சென்றதும் "சொல்லு தாரா எதுக்காக என்னை வர சொன்னே.."என்றான் .
"என்ன லோகி இது இப்போதான் வந்தே வந்ததும் வராததுமா இப்படி கேட்கணுமா . வா வந்து உட்காரு "என்று அங்கிருந்த சோபாவை காட்டி கூறினாள்.
"அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை . நீ முதல்ல எதுக்காக என்னை வர சொன்னேனு விஷயத்தை சொல்லு "என்று அவளை அவசரப்படுத்தினான் .
"லோகி ப்ளீஸ் இப்படி மூணாவது மனுசங்க மாதிரி என்னை நடத்தாதே . நீயும் நானும் அப்படியா பழகினோம் . இந்த நேரம் நீ மட்டும் என்னோட விருப்பத்தை மதிச்சு சம்மதம் சொல்லி இருந்தா நாம ரெண்டு பெரும் இப்படி யாருக்கும் தெரியாம சந்திக்க அவசியமே வந்திருக்காது. இன்னேரம் உன்னோட மனைவியா நான் உன்கூட ஆண் வீட்ல இருந்திருப்பேன் "என்றாள்.
"தாரா இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சுக்களை எல்லாம் பேசுற நீ முதல்ல விஷயத்தை சொல்ல போறியா இல்ல நான் கிளம்பட்டுமா "என்று வாசல் நோக்கி செல்லபோனான்.
வேகமாக அவன் வழியை மறைத்து நின்ற தாரா "லோகி ப்ளீஸ் உக்காரு . உனக்கு என்ன நான் எதுக்காக உன்னை இங்கே வரவழைச்சேன்னு தெரிஞ்சுக்கணும் அதானே சொல்றேன் உக்காரு "என்றாள்.
அவளை ஒரு முறை பார்த்தவன் சென்று அவள் கட்டிய சோபாவில் அமர்ந்தான் .
அவன் அருகில் சற்று தள்ளி அமர்ந்த தாரா "ஏதாவது சாப்பிடறியா லோகி "என்றாள்.
"வேணாம் ஒரு முறை நீ கொடுத்த கூல்ட்ரிங்க்ஸை குடிச்சதுக்கு தான் நான் உன்கூட ஒண்ணா ஒரே அறையில் இருந்தேன்னு சொல்லிய ஊர் முழுக்க நான் உன்கூட இருந்ததா ஒரு போட்டோவை கிரியேட் செய்து எல்லாரும் என்னை பத்தி தப்பா நினைக்க வெச்சுட்ட ... மறுபடியும் நீ கொடுக்குற எதையும் நான் சாப்பிடறதா இல்லை "என்றான் .
"சரி லோகி நான் சாப்பிட சொல்லி உன்னை கம்பெல் பண்ணல "என்றவள் அங்கிருந்த ipad ஐ எடுத்து அதில் ஒரு விடியோவை ஓடவிட்டு அதை லோகியியிடம் நீட்டினாள்.
அவளை யோசனையோடு பார்த்தவன் அதை வாங்கி அதில் ஓடிய விடியோவை பார்த்த்தான்
அந்த வீடியோ 3 மாதங்களுக்கு முன்பாக லோகியும், தாராவும் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்த வீடியோ அது. ப்ரெசிடெண்ட் என்ற முறையில் லோகியும், தாராவின் அப்பாவின் தொழில் ரீதியான நண்பர் வட்டத்தில் நாடாகும் ஒரு விருந்து அது . லோகி தாரா இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்பதால் இருவருமே ஒன்றாக அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தனர்.
"வாங்க மிஸ்டர் லோகி எங்க அழைப்பை ஏற்று உங்க பிஸியான வேலையை ஒதுக்கி வெச்சிட்டு நீங்க இங்கே வந்ததுக்கு நான் சந்தோசப்படறேன் "என்று அந்த பார்ட்டியினை ஏற்பாடு செய்திருந்த நாட்டின் முக்கிய பணக்காரரும், தொழில் துறையில் வசதி படைத்தவருமான சந்திரன் லோகியை வரவேற்றார்.
அவர் புதிதாக ஆரம்பித்து உள்ள சிமெண்ட் பாக்டரி நல்ல லாபம் ஈட்டி தொழில் வட்டாரத்தில் சந்திரனின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து இருக்க அதை கொண்டாடும் வகையில் இந்த பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
"எனக்கு இந்த மாதிரி பார்ட்டிகளில் எல்லாம் கலந்து கொள்வதில் விருப்பம் கிடையாது . நீங்க request பண்ணி கூப்பிட்டதால தான் வந்தேன் "என்றான் லோகி.
"ரொம்ப சந்தோசம் "என்றவன் அவன் அருகில் நின்று இருந்த தாராவை பார்த்தது "நீங்க மிஸ்டர் தணிகாசலத்துடைய பொண்ணு ... தாரா... தானே "என்றார் .
"ஆமா மிஸ்டர் சந்திரன் என் அப்பாவால இன்னிக்கு வர முடியல அதனால் தான் என்னை இங்கே அனுப்பி வெச்சார். மிஸ்டர் லோகி என்னோட பிரென்ட் அவர் கூட நானும் இங்கே வந்துட்டேன் "என்றாள்.
அவளை கண்களாலேயே அளந்த சந்திரன் "அப்படியா லோகியும், நீங்களும் நண்பர்களா வசதியா போய்டுச்சு . மிஸ்டர் லோகியை மீட் பண்ண முடியாலையின்னா உங்க கிட்டே சொல்லி அவரை மீட் பண்ண அப்பாயின்மென்ட் வாங்கிக்கலாம் "என்று சிரித்தான் .
அவன் வழிசல் சிரிப்பபை பார்த்து தாராவிற்கு எரிச்சலாக இருந்தது . இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் அவனிடம் பேசினான் மூவரும் பொதுவான விஷயங்களை பேசியவன் "நீங்க பேசிட்டு இருங்க நான் வந்துடறேன் "என்று தாராவை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றான் .
அதை லோகி கவனிக்கவில்லை ஆனால் தாரா கவனித்து இருந்தாள். அவன் தூரத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தாலும் பார்வை எல்லாம் தாராவின் மீதே இருந்தது. இது அந்த வீடியோவில் நன்றாக பதிந்து இருக்க.. அதை லோகி கவனித்தான். விடியோவை பார்த்துக்கொண்டு இருந்தவன் திரும்பி தன் அருகில் அமர்ந்து இருந்த தாராவை பார்க்க... அவள் மென்மையாக அவனை பார்த்து புன்னகைத்தவள் .
"இந்த விடியோவை முழுசா பார்த்துட்டு அப்பறோம் நீ என்ன தேசித்தே பணிகளும் அதுக்கு நான் கட்டுப்படறேன் " என்றாள்
அவளிடம் எதுவும் சொல்லாமல் விடியோவை விட்ட இடத்தில இருந்து பார்க்க துவங்கினான் .
அந்த பார்ட்டிக்கு வந்திருந்த பிசினஸ் ஆட்கள் லோகியை சந்தித்து அந்த வீடியோவில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . அதனால் தாரா லோகியை விட்டு தனியே வந்து ஓரு டேபிளில் அமர்ந்து ஜூஸ் குடித்துக்கொண்டு இருக்கிறாள் .
அப்போது அவள் தனியாக இருப்பதை கவனித்து சந்திரன் அங்கு வந்து அவளிடம் பேசுச்சு கொடுப்பது நன்றாகவே தெரிந்தது. முதலில் இருவரும் நார்மலாக பேசுவது போல் இருட்னஹா அநத வீடியோவில் நேரம் செல்ல செல்ல தாராவின் முகம் மாறியது . இருவரும் ஏதோ தீவிரமாக பேசுகிறார்கள் என்று தெரிந்ததே ஒழிய என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அந்த வீடியோவில் கேட்க வில்லை,
அப்போது அவன் கையில் இருந்த டேபை வாங்கிய தாரா மற்றொரு விடியோவை ஓட விட்டாள். அதில் சந்திரன் பேரரிடம் ஏதோ சொல்கிறான் . பேரரும் அங்கிருந்து சென்றவன் சிறிது நேரத்தில் கையில் இரண்டு குல்ட்ரின்க்ஸ் டம்பளர் எடுத்து வர அதில் ஒரு டம்பளரில் தன் பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு கவரை எடுத்துக்கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டவன் அந்த கவரில் இருந்த பவ்டரை டம்பளர்களில் ஒன்றில் மட்டும் கலந்து அதை அவனிடம் ம்கொடுத்து தாரா அமர்ந்து இருந்த டேபிளை காட்டி அவனிடம் ஏதோ சொன்னவன் அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
இப்பொது தாரா இருந்த வீடியோ ஓடியது . பேரர் அந்த டேபிளிற்கு வரவும் சரியாக லோகியும் அங்கு வருகிறான் . பவுடர் கலந்த கூல் ட்ரின்க்சை கொண்டு வந்து தாராவின் முன்பு வைத்தவன் மற்றொன்றை லோகியின் டேபிளில் வைத்தான் ,
தாராவும் , லோகியும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் கொண்டு வந்து வைத்த கூல்ட்ரின்க்சை எடுத்து குடிக்க ஆரம்பித்தனர்.
சிறுது நேரத்தில் கூல்ட்ரின்க்ஸ் அருந்திய தாரா போதையில் தள்ளாடுவாள் என்று நினைத்திருக்கும் வேளையில் லோகி சற்று தள்ளாடியபடி நடக்க துவங்கினான். அவன் தள்ளாடுவதை பார்த்ததும் தாரா லோகியிடம் ஏதோ பேசுகிறாள் . அதன் பிறகு அவள் தோளில் கைபோட்டவாறு அவனை அந்த இடத்தை விட்டு அழைத்து செல்கிறாள்.
அந்த வீடியோ அதோடு முடிகிறது . அதற்கு பிறகு பார்ட்டியில் தனக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டதும் . தாரா அவனை கைத்தாங்கலாக அங்கிருந்த ஹோட்டல் அறையில் அவனுடன் உள்ளே சென்றது வரை ஒன்றும் பாதியுமாக லோகிக்கு நினைவில் இருக்கிறது. வீடியோ முடிந்ததும் தாரா லோகியை பார்க்க.. அவனோ தீவிர யோசனையில் அமர்ந்து இருந்தான்.
"என்ன லோகி இந்த விடியோவை பார்த்த பிறகும் என் மேல உனக்கு சந்தேகமா இருக்கா ? சத்தியமா நீ குடிச்ச கூல் ட்ரிங்க்சில் நான் எதுவும் கலக்கலியின்னு தெரிஞ்சுக்கோ... என்னை அந்த சந்திரன் வலையில் விழ வைக்குறதுக்காக அவன் எனக்கு செய்த சதி வேலை இது . அதில் நீ மாட்டிகிட்டே... போதை அதிகம் ஆனதும் நீ என்ன செய்றதுன்னு தெரியாம என்னை ... "என்று தாரா தயங்க...
லோகி அதிர்ச்சியாக அவளை பார்த்தான் .

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 24
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.