layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
தாரா சொன்னதை கேட்டு லோகி அதிர்ந்தது பார்த்தவள் அவனிடம் " லோகி இந்த விஷயம் நடந்து நான் காலையில் கண்விழிச்சதும் விபரீதம் எனக்கு புரிஞ்சது . அதனால தான் உன்கிட்டே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வீட்டுக்கு போய்ட்டேன். இது நாலு சுவத்துக்குள்ள உனக்கும் எனக்கும் மட்டுமே நடந்த ஒரு விபத்து . இதை வெச்சு நான் உன்னை என் பக்கம் இழுக்கனும்னு நான் என்னிக்குமே நினைக்கல லோகி . அந்த வீடியோ கூட நான் சோசியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணல... என்னோட அக்கௌன்ட்டை யாரோ ஹேக் பண்ணி அந்த விடியோவை ரிலீஸ் பண்ணிருக்காங்க "என்று அவனை பார்த்தாள்.

லோகி தாராவையே பார்த்துக்கொண்டு இருக்க..

"என்ன லோகி நான் சொன்னதை உன்னால நம்ப முடியலையா ? இன்னமும் நான் உன்கிட்டே பொய் சொல்லி நாடகம் ஆடுறேனு நினைக்குறியா "என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் வேகமாக தலையசைத்து "இல்லை... இல்லை தாரா . நீ இவ்வ்ளவு சொல்லியும் இன்னமும் நான் உன்னை நம்பளையினா நான் முட்டாளா தான் இருக்கனும் "என்றவன் அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு

"தாரா நடந்த எல்லா விஷயத்துக்கும் நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன் . என்னால் உன்கிட்டே மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும் . எனக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு . என்னை நம்பி ஒரு பொண்ணு என்கூட இருக்கா . அவளுக்கு நான் துரோகம் பண்ண முடியாது தாரா"என்று அவளை பார்த்தான்.

"எனக்கு உன்னோட நிலைமை புரியுது லோகி . உனக்கு கல்யாணம் ஆகலையின்னாலும் கூட நான் என் வயித்துல வளர்ற உன்னோட வாரிசை பற்றி உன்கிட்டே எடுத்து சொல்லி புரியவெச்சு என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டிருப்பேன்"என்று தன் வயிற்றை தடவிகாட்டி அவனை பார்த்தாள் .

தாரா சொன்னதை லோகியால் முற்றிலும் நம்பமுடியவில்லை அவள் வயிற்றில் தன் வாரிசு என்று சொன்னதும் அதிர்ந்து போனவன் சோபாவில் இருந்து எழுத்து அவளை நம்பமுடியாமல் பார்த்தான்,

சோபாவில் இருந்து எழுந்த தாரா "லோகி நீ அதிர்ச்சியாகுறது எனக்கு புரியது . இந்த உண்மையை உன்கிட்டே சொல்லலாம்னு நான் உன்னை பார்க்க அன்னிக்கு உன்வீட்டுக்கு வந்தேன். நீ தான் என்னை பார்க்க முடியாதுனு என்னை உன் ஆளுங்களை விட்டு துரத்தி அடிச்சுட்டே "என்று சோகமாக கூறினாள்.

"தாரா!! நீ... நீ சொல்றது எல்லாம் உண்மையா ? நீ கர்பமா இருக்கியா!"என்று அவள் வயிற்றை பார்த்தவன் உன் வயித்துல வளரது . என்.. என்னோட குழந்தையா ?"என்று அதிர்ச்சியாக கேட்டான் .

"ஆமா லோகி என் வயித்துல உன்குழந்தை வளர ஆரம்பிச்சு முழுசா 3 மாசம் ஆகிடுது. என் வயிற்றில் குழந்தை வளருவதற்கான டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் "என்று தன் பர்ஸை திறந்து அதில் அவள் எடுத்த டெஸ்ட் ரெபோர்ட்ஸை அவன் முன் நீட்டினாள்.

அதை வாங்கியவன் அந்த டெஸ்ட் ரொபேர்ட்ஸை படித்தது பார்த்தவன் தாரா உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது . இருந்தும் அவனால் இன்னமும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடையவில்லை . அவளையம் அந்த டெஸ்ட் ரிபோர்ட்ஸையும் மாறி மாறி பார்த்தான்.

"இன்னமும் நான் சொல்றதுல உனக்கு சந்தேகமா இருந்தா நான் என் வயித்துல வளருவது உன்னோட குழந்தை தான்னு DNA டெஸ்ட் எடுக்கவும் தயாரா இருக்கேன் . " என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.. அவன் அருகில் வந்தவள் லோகியின் தோளை தொட்டு "லோகி..."என்று அவனை அழைத்தாள்.

அவள் அழைப்பில் திரும்பிய லோகி தாராவை பார்த்தவன் "தாரா நீ சொல்றதை எல்லாம் என்னால் இப்பவும் நம்ப முடியல.. இதை எப்படி எடுத்துகிறதுனு எனக்கு தெரியல "என்றான் .

"ஐயோ லோகி ... நீ இதை எல்லாம் நினைச்சு உன் நிம்மதியை கெடுத்துக்க வேண்டாம் . உனக்கு என்னாலேயோ என் வயித்துல வளர நம்ம குழந்தையினாலேயோ எந்த பிரச்னையும் வராது. நான் நாளைக்கு காலையில் ஜெர்மனி கிளம்ப போறேன். அங்க போய் நம்ம குழந்தையை நல்லபடியா பெத்தெடுத்து வளர்க்க போறேன். இதை சொல்ல தான் உன்னை இங்கே மீட் பண்ணணும்னு வர சொன்னேன். உன்கிட்டே நான் எந்த தப்பும் செய்யலையினு புரியவைக்கவும் தான் உன்னை வர சொன்னேன் "என்றாள்.

"என்ன தாரா சொல்றே... ஜேர்மன் போறியா ! இப்போ அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு" என்றான்.

"இல்ல லோகி உனக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு. ஏற்கனவே உன்னையும் என்னையும் பத்தி ரூமெர்ஸ் பரவிக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல என் வயித்துல குழந்தை இருக்க விஷயம் வெளியே தெரிஞ்சா அப்பறோம் உனக்கு தான் பிரச்சனை அதிகம் ஆகும். அதனால தான் நான் இந்த முடிவை எடுத்தேன்"என்றாள்.

"தாரா... "என்று லோகி பேச வர... அவனை தடுத்தவள் .

"லோகி நான் முடிவு எடுத்துட்டேன் நீ என்னை தடுக்காதே " என்றவள் "எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா ?" என்றாள் .

"என்ன தாரா சொல்லு " என்று அவன் குரல் தணிந்து வந்தது .

"நாளைக்கு உன்னால் ஏர்போர்ட் வர முடியுமா லோகி . தெரிஞ்சோ தெரியாமலோ உன்கூட நான் ஒண்ணா இருந்துட்டு வந்த அப்பறோம் உன்னை தவிர என்னால வேற எதையும், யாரையும் பத்தி நினைக்க தோணல... நாளைக்கு உன்னை ஒரே ஒரு முறை இந்தியாவை விட்டு கிளம்பும்போது பார்க்கணும்னுன் எனக்கு ஆசையா இருக்கு அதான் "என்று அவனை ஒருவித எதிர்பார்ப்போடு தாரா பார்த்தாள்.

தன்னால் கற்பை இழந்து தன் வரிசையும் சுமந்து நிற்கும் தாராவை அவனால் வெறுக்க முடியவில்லை . தன்னால் அவள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகி இருக்கிறது . இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூநிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் விழித்திருக்க... "உனக்கு விருப்பம் இல்லையினா வேணாம் லோகி நான் உன்னை கட்டாயப்படுத்தல..."என்றவள் "நான் கிளம்புறேன் லோகி உன்னை இப்போ பார்த்ததே எனக்கு போதும் " என்று கண்ணீரோடு அவனை தாண்டி செல்ல..

தரையில் இருந்த மேட்டில் கவனிக்காமல் காலை வைத்த தாரா சற்றும் எதிர்பாராத நேரம் கால் தடுக்கி கீழே விழப்போக ...

"ஏய் தாரா !! பார்த்து... " என்று ஓடிச்சென்று அவளை கீழே விழாமல் தாங்கிக்கொண்டவன் "என்ன தாரா இது வயித்துல குலந்தியை வெச்சிட்டு இப்படி கவனம் இல்லாம இருக்கியே "என்று அவளை கைத்தாங்கலாக பிடித்து சோபாவில் அமர வைத்தவன் அருகில் இருந்த பாட்டிலை எடுத்து அவ்வடியாம் நீட்டி இந்தா இந்த தண்ணியை குடி "என்றான் .

தாரா அவனை பார்த்துபடி அமர்ந்து இருக்க...

"என்ன தாரா அப்படி பாக்குற... இந்த தண்ணியை குடி "என்றான்.

அவன் நெடிய பாட்டிலை வாங்கியவள் "லோகி நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே "என்றாள்.

"என்ன தாரா சொல்லு... "என்றான் .

"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னுன் சொல்லுவாங்களே அது இது தான் போல இருக்கு . என் வயித்துல இருக்க உன் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாதுன்னு தானே நீ இவ்வளவு பதட்ட படுற... " என்றவள் .

"இந்த ஒரு நிமிஷம் நீ காட்டுன அக்கறை எனக்கு இலேன்னாலும், இந்த குழந்தைக்கு கிடைக்காதான்னு என் மனசு ஏங்குது லோகி "என்று அழுத்தவள் வேகமாக சோபாவில் இருந்து எழுந்து அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

லோகி என்ன செய்வது என்றே தெரியவில்லை . தாரா அழுதுகொண்டு என்றதை பார்த்த லிசா உள்ளே வந்தவள் . அங்கே லோகி தலையை பிடித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருந்தான் . அவன் அருகில் வந்த லிசா "சார் ஆர் யு ஆல்ரைட்" என்று குனிந்து அவனிடம் கேட்டாள் .

அப்போது அவன் போன் ஒலிக்க துவங்கியது டேபிளில் இருந்த அவன் மொபைலை பார்த்த லிசா அதை எடுத்து லோகியிடம் நீட்டி " சார் ஸ்ருதி மேடம் தான் கால் பண்றங்க " என்றாள்
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 25
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top