layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
லோகி இன்னும் வீட்டிற்கு வரவில்லையில் என்று விசாரிக்க தான் லோகிக்கு ஸ்ருதி கால் செய்திருந்தாள் . போனில் அவளிடம் தான் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்றும் அவளை தனக்காக காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் நீண்ட நேரம் அதே அறையில் அமர்ந்து இருந்தவனை லிசா வந்து அவனை அங்கிருந்து அழைத்துச்சென்றாள்.

நள்ளிரவை தாண்டி வீட்டிற்கு வந்தான் லோகி. அவன் வரும் வேளையில் ஸ்ருதி உறங்கி இருந்தாள். அவளிடம் வந்தவன் உறங்கி இருந்தவள் போர்வையை சரி செய்தவன் அவள் முகத்தை பார்த்தவன் அமைதியாக எழுந்து வந்தவன் தாராவை சந்தித்து வந்ததை பற்றி யோசித்தபடி வந்து சோபாவில் அமர்ந்தவன் அப்படியே உறங்கியும் போனான்.

அடுத்த நாள் காலை கொடைக்கானலில் ஷூட்டிங் கிளமபி இருப்பதால் நேரமே எழுந்த ஸ்ருதி சோபாவில் அமர்ந்த வண்ணம் உறங்கிக்கொண்டு இருந்தவனை பார்த்து அவன் அருகில் சென்றாள்.

"தூங்குறதை பாரு தூங்கும் போது கூட முகத்தை நார்மலா வெச்சிருக்க மாட்டான் போல... ஏதோ சண்டைக்கு போறவன் மாதிரியே முகத்தை உர்ருன்னு வெச்சிருக்கான் " என்று புலம்பியவள் அசந்து தூங்குபவனை எழுப்ப மனமில்லாமல் குளித்துவிட்டு வந்து வந்தாள்.

அப்போதும் அவன் உறங்கிக்கொண்டு இருக்க... "எப்பவும் லேட்டா எழுந்திருக்குற நானே இன்னிக்கு சீகிரியாம் எழுந்து குளிச்சு கிளம்பிட்டேன். இவன் என்ன இவ்ளோ நேரம் ஆகியும் தூங்குறானே... இது சரி இல்லையே " என்று யோசித்தப்படியே அவன் அருகில் வந்தவள் வேண்டுமென்றே தன் தலையில் கட்டி இருந்த டவலை அவிழ்த்தவள் தலையில் இருந்த ஈரத்தை அவன் மீது தெளித்தாள் .

தூங்கிக்கொண்டு இருந்தவன் முகத்தில் சில்லென்று நீர் படவும் கண்விழித்துப்பார்த்தான் . அவன் எதிரே இன்று பூத்த ரோஜாப்பூவாய் ஸ்ருதி நின்று இருக்க... அவளை அப்படியே விழுங்குவது போல பார்த்தவன் ஸ்ருதியின் கையை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் அவள் மார்பில் முகம் புதைத்து குளித்துவந்த பின் சோப் வாசத்தை நாசியில் நிரப்பிக்கொண்டு இருக்க..

"என்ன பிரசிடெண்ட் என் பக்கத்துல வந்து படுத்து தூங்காம புதுசா சோபாவில் படுத்து தூங்குறீங்க. அவ்ளோ தானா "என்றாள் தன் மார்பில் முகம் புதைத்திருந்தவனிடம் .

அவள் கேட்டதும் தான் நேற்று இரவு தாரா பற்றி யோசித்ததில் மறந்து போய் இங்கேயே தூங்கி விட்டதை . ஸ்ருத்தியை இறுக்கி அணைத்து இருந்தவன் தாரா பற்றிய நினைவுகளில் அவன் இறுக்கம் தளர்ந்தது .

அதை உணர்ந்த ஸ்ருதி அவன் மடியில் இருந்து எழுந்தவள் "லோகி என்ன ஆச்சு ?" என்றாள்.

எழுந்தவளை மீண்டும் இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் " என்ன இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டே... ஷூட்டிங் இவ்ளோ சீக்கிரத்துலயே ஆரம்பிக்க போகுதா என்ன "என்றான்.

"ஆமா ஆமா சீக்கிரத்துல தான் ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்க "என்றாள்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றவன் அவளை கட்டிலில் அமரவைத்து தானும் அவள் பக்கத்தில் அமர்ந்தவன் ஸ்ருதியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து பிடித்துக்கொண்டவன் . "ஸ்ருதி நான் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றான்.

"என்ன விஷயம் சொல்லு லோகி " என்றாள்.

"அது... அது.. வந்து.. நான் ..."என்று அவன் பேசவரும்போது ஸ்ருதியின் போன் அடித்தது .

"ஒரு நிமிஷம் லோகி "என்றவள் எழுந்து சென்று போனை எடுத்து பார்க்க... அதில் அவள் அம்மா ஜானகியின் பெயர் வந்திருந்தது. அதை பார்த்ததும் "இவங்க எதுக்காக எனக்கு கால் பண்றங்க அதுவும் இவ்வளவு காலையில்" என்று யோசித்த படி நின்று இருக்க..

அதை கவனித்த லோகி எழுந்து ஸ்ருதீயின் அருகில் வந்தவன் கையில் வைத்திருந்த போனின் திரையில் தெரிந்த அவள் அம்மாவின் பெயரை பார்த்ததும் அவள் முகமாற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டவன் .

அவள் தோளில் கைவைத்து அழுத்தியவன் "அட்டென்ட் பண்ணி என்னனு கேளு " என்றான் .

லோகி சொன்னதும் ஸ்ருதி யோசனையோடு காலை அட்டென்ட் செய்தாள்.

"ஹலோ... ஹலோ ஸ்ருதி. நான் தான் உன் அம்மா பேசுறேன் டி... "என்றார் ஜானகி குழைவாக.

" தெரியும் சொல்லுங்க... எதுக்காக எனக்கு கால் பண்ணிருக்கீங்க அதுவும் இவ்ளோ காலையில் "என்றாள் .

"என்னடி இப்படி பேசுற.. நாங்க எல்லாரும் அமெரிக்கா போகலாம்னு முடிவு பண்ணிட்டோம் . அதனால தான் நாங்க கிளம்புறதுக்கு முன்னாடி உன்னையும், மாப்பிள்ளையையும் பார்த்து பேசிட்டு போலாம்னு..."என்று அவர் வார்த்தையை முடிப்பதற்கு முன்பாகவே .

"நான் என்னோட ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் கிளம்பிட்டு இருக்கேன். வரதுக்கு எப்படியும் ரெண்டு நாளைக்கு மேல ஆகிடும் .அவரையும் நீங்க பார்க்க முடியாது "என்றாள்.

"என்ன டி இது ஆசையா உங்க ரெண்டு பேரையும் பார்க்கலாம்னு போன் பண்ணி கேட்டா இப்படி அத்துவிடுறவ மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ஒன்னுன்னு பேசுற.. சரி நீ கொடைக்கானல் போய்ட்டு வா.. நாங்க மாப்பிள்ளையை மட்டும் நேரில் பார்த்து எங்களுக்கு கொடுத்த பணத்துக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பிடறோம் " என்றார்.

"ம்ப்ச் .. இங்க பாருங்க நீங்க நினைச்ச நேரத்துக்கு எல்லாம் பார்க்கணும்னு சொன்னதும் அவரை பார்க்க முடியாயது . அவர் எவ்ளோ பிஸியான ஆளுன்னு உனக்கு நான் சொல்லி தெரியணும்னு அவசியம் இல்லை " என்றவள்.

"அதான் நீங்க கேட்டது மாதிரி பணத்தை வாங்கிட்டீங்களே... இனி உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு உறவும் கிடையாது. என்னை பணத்துக்காக ஏற்கனவே விற்க நினைச்சவங்க தானே நீங்க. அதே போல தானே லோகிகிட்டேயும் பணத்தை வாங்கிட்டு என்னை அப்படியே விட்டுடுங்க. நான் இப்போ லோகிக்கு சொந்தமானவ.. அவர் என் புருஷன். எங்க ரெண்டு பேரையும் பார்க்கவோ.. பேசவோ.. உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அந்த உரிமையை நீங்க இழந்துட்டீங்க சரியா . இனிமேல் எனக்கு கால் பண்றேன் , என் புருஷனை பார்க்குறேன்னு வந்துராதீங்க... " என்றவள் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்துவிட...

"ஏய் ஸ்ருதி ஏன் போனை கட் பண்ணிட்ட... அவங்க நம்மளை மீட் பண்ணிட்டு போறேன்னு தான்னு சொல்ராங்க "என்றான் .

"இல்ல லோகி காலையிலே என்னோட மூடை ஸ்பாயில் பண்ணிட்டாங்க. நானே உன்னை பிரிஞ்சு ரெண்டு நாள் கொடைக்கானல் போகணுமேன்னு வருத்தத்தில் இருந்தேன். இந்த நேரத்தில் இவங்க வேற போன் என் மூடை ஸ்பாயில் பண்ணிட்டாங்க" என்று சலித்துக்கொண்டாள்.

தாராவை பற்றியும் அவள் வயிற்றில் தன் குழந்தை இருக்கிறது என்று சொல்ல நினைத்து அவளிடம் பேசவந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா கால் செய்ததில் அவள் மைண்ட் அப்சட்டாகிவிட்டாள். இந்த நேரத்தில் இந்த விஷயத்தை சொன்னால ஸ்ருதி அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று தோன்ற... அவளை பார்த்தான்.

ஜானகி பேசியதில் மனம் சோர்ந்தவளாக போய் கட்டிலில் கைகால்களை குறுக்கிக்கொண்டு படுத்துவிட்டாள் ஸ்ருதி . அவளிடம் வந்தவன் .

"ஒய் பேபி.. இப்போ எதுக்கு அப்சட் ஆகுற... அதான் உன் அம்மகிய பேச பிடிக்கலேன்னு போனை வெச்சுட்டியே அப்றம் ஏன் அதையே நினைச்சிட்டு இருக்க... இங்கே பாரு உன் தலைமுடி இன்னும் ஈரமாவே இருக்கு அப்டியே வந்து படுத்துட்டே... வா வந்து முதல்ல தலைமுடியை காய வை "என்று அவள் கை பிடித்து இழுத்தான்.

அவன் கையில் இருந்து தன் கையை இழுத்துக்கொண்டவள் "எனக்கு இப்போ மூட் இல்லை . முடித்தான் அதுவே காய்ஞ்சுக்கும் போ.."என்று கையை கட்டிக்கொண்டு முகத்தை உம்மென்று வைத்தபடி படுத்துவிட்டாள்.

"தலைமுடி காயா வைக்கிறதுக்கு எல்லாம் மூட் வரணுமா உனக்கு. இப்படி ஒரு சோம்பேறித்தனம் உன்கிட்டே இருக்கா " என்று சிரித்தவன் .

"சரி வா நானே உன் தலைமுடியை காய வைக்குறேன் "என்று அவளை அழைத்தான்.

"நான் எங்கயும் வரல.. "என்று அவனை பார்க்காமல் சிறுபிள்ளை போல முறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.

"உன்னை... "என்று அவள் தலையில் நங்கென்று கொட்டுவைத்தவன் திரும்பி நடந்தான்.

"ஷ்... ஆஹ்...வலிக்குது டா ராஸ்கல் "என்று தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள்.

"இந்த நாடோட ப்ரெசிடெண்ட்டையே எவ்வளவு தைரியமா அடிக்குற நீ... உன்னை... "என்று அவளிடம் வேகமாக வர...

"ஐயோ... அம்மா... இந்த நாட்டோட ப்ரெசிடெண்ட் என்னை அடிக்க வராரு.. " என்று அந்த அரை முழுவதும் அவள் குரல் எதிரொலிக்கும் அளவிற்கு கண்களை மூடிக்கொண்டு கையை தலைக்கு பாதுகாப்பாக வைத்த படி சத்தமாக ஸ்ருதி கத்தினாள்.

" பேபி... நீ பண்றது கொஞ்சமும் சரி இல்லை . யாராவது நீ சத்தம் போடுறதை கேட்டா என்னவோ நான் நிஜமாவே உன்னை அடிக்குறேனு நினைச்சிருவாங்க" என்று அவள் அருகில் வர..

"நினைக்கட்டுமே அதுக்காக தானே இவ்ளோ சத்தம் போடுறேன் "என்று அவனை பார்த்து கிண்டல் செய்வது போல தன் நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்ட...

"உன்னை இப்படியே விட்டா சரிவராது இப்போ பாரு "என்று அவளிடம் லோகி குனிய...

ஸ்ருதி லோகி என்ன செய்யப்போகிறான் என்று தெரியாமல் விழித்தபடி அவனை பார்க்க...

அவள் அருகில் வந்தவன் நொடிப்பொழுதில் ஸ்ருதியை தன் கைகளில் ஏந்தி நடக்க ஆரம்பித்தான்.

"லோகி என்ன செய்ற நீ... என்னை எங்க கூட்டிட்டு போற... "என்று அவன் கழுத்தில் கைகளை கோர்த்துக்கொண்டு கேட்க...

"ம்ம்ம்... உன்னை இப்படியே விட்டா சரிவராது . அதனால... "என்று அவளை பார்க்க...

"அதனால... "என்று ஸ்ருதி ஒரு வித எதிர்பார்ப்போடு அவனை பார்த்தாள்.

அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவன் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்து இருந்தான்.

"லோகி இங்கே எதுக்காக என்னை தூக்கிட்டு வந்தே.. நான் தான் ஏற்கனவே குளிச்சுட்டினே" என்றாள்.

"பரவாயில்லை என்னோட சேர்ந்து இன்னோரு முறை குளிச்சிடு... " பாத்ரூமிற்குள் இறக்கிவிட்டவன் கதவை தாளிட்டு ஸ்ருதியை வெளியே செல்லவிடாமல் பிடித்துக்கொண்டவன் தன் ஆடை முழுவதையும் கழட்டி இருந்தவன் . ஸ்ருதியை பார்க்க...

"சீ... பப்பி ஷேம் .. "என்று முகத்தை மூடிக்கொண்டு திரும்பி நின்றாள்.

அவளை பின்னால் இருந்து அணைத்தவன் "நேத்தும் இதே பப்பி ஷெமோட தானே ஒரு ராத்திரி முழுக்க இருந்தே.. இப்போ என்ன வந்துச்சு என்னை பார்க்க "என்றான்.

"போடா.. அது இருட்டுல வெறும் பெட் லாம்ப் வெளிச்சம் நான் எதையும் கவனிக்கல... "என்றாள்.

"எதையும் கவனிக்கல... ஆனா.. உன்னை நான் கட்டிக்கிட்டு மெத்தையில் நாம ரெண்டு பேரும் சேர்ந்து..."என்று அவன் பேசிமுடிக்கும் முன் திரும்பி அவன் வாயை பொத்தி பேசவிடாமல் தடுத்தவள் "ம்ஹும்..." என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.

தன் வாயில் இருந்து அவள் கையை பிரித்தவன் "அப்போ... இப்போ.... "என்று அவளை லோகி ஒரு மார்க்கமாக பார்க்க...

ஸ்ருதி அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் அவனை கட்டிக்கொண்டாள்.

அவள் முன்பு இருந்த மனநிலை மாறி இப்பொது அவனுடைய மனைவியாக அவனுடைய ஸ்ருத்தியாக லோகியை கட்டிக்கொண்டு இருந்தவளை நினைக்கையில் தாராவுடனான தன் பந்தம் அவள் வயிற்றில் வளரும் குழந்தையோடு முடிந்துவிட்டது. தான் செய்த தவறுக்கு நிச்சயம் மன்னிப்பு கிடையாது என்றாலும். தன்னை நம்பி தன் சொந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்து ஸ்ருதியின் ஆசை , கனவு லட்சியம் என்று சிறகடித்தது பறக்க நினைக்கும் அவன் சிட்டுக்குருவியை தான் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவன் இனி தாராவை பற்றி எண்ணி தங்கள் வாழ்க்கையை பிரச்சனையில் கொண்டு வந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தவன்.

அவன் ஸ்ருதியை ஆசையாக கட்டிக்கொண்டு அவளோடு ஷவரில் நனைந்து சந்தோசமாக குளிக்க ஆரம்பித்தனர் இருவரும்.
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 26
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top