layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
ஜெர்மன் கிளம்பி செல்வதற்காக ஏர்போர்ட் வந்திருந்த தாராவிற்கு லோகி அவளை பார்ப்பதற்காக வருவான் என்ற நம்பிக்கையே போய்விட்டது .

அவள் செல்லும் பிலைட்டின் கடைசி அழைப்பும் வந்துவிட... இனியும் லோகியை எதிர்பார்த்து காத்திருப்பது வீண் என்று புரிந்து கொண்ட தாரா பெருமூச்சோடு அவள் பெற்றோரை பார்த்தாள் .

"தாரா இனியும் லோக்கி உன்னை பார்க்க வருவான்னு நீ காத்துக்கொண்டிருக்கிறது வீண் . நாங்க சொல்றது கொஞ்சம் கேளு பேசாம ஜெர்மன் போற பிளான் கேன்சல் பண்ணிட்டு இங்கேயே இருந்துக்கோ உன்னையும் உன் வயித்துல வளர குழந்தையையும் நாங்க பாத்துக்கிறோம். ஏன் நாங்க சொல்றத கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காமல் இப்படி நாட்டை விட்டு போகணும்னு பிடிவாதமா இருக்க" என்றார் தாராவின் அப்பா குமரன் .

"இல்லப்பா இங்க இருந்தா என் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா யாருன்னு கேள்வி வரும். ஏற்கனவே லோகியோட நான் நெருக்கமா இருக்கிற போட்டோஸ் மீடியாவுல வெளி வந்துடுச்சு. எங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்குற உறவே ஏற்கனவே நிறைய பேர் இங்கே திருச்சி பேச ஆரம்பிச்சிட்டாங்க. இந்த சூழ்நிலையில நான் இங்க இருந்தா அது லோக்கிக்கும், அவனோட கல்யாண வாழ்க்கையும் தான் பாதிக்கும் அதனால தான் பா நான் ஜெர்மன் போகணும்னு முடிவு பண்ணினேன்" என்றாள் .

"நீ மட்டும் தான் தாரா அவனையே நெனச்சிட்டு உருகிட்டு இருக்க. ஆனா அவனுக்கு உன் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்ல . சரி உன்னை விடு உன் வயித்துல வளர அவனோட குழந்தை மேல கூட அக்கறை இல்லாம போயிடுச்சா... நீ இந்த நாட்டை விட்டு கிளம்பி போற இனிமேல் இங்கு திரும்ப வர மாட்டேன்னு அவன பாத்து சொல்லியும் அவன் உன்ன கடைசி ஒரு தடவை வந்து பார்த்து வழி அனுப்ப கூட வராமல் இருக்கான் . அப்போ அவன் எவ்ளோ கல்நெஞ்சகாரனா இருப்பான். அவனுக்காக நீயேன் இவ்வளவு தூரம் வருத்தப்படுற" என்றார் தாராவின் அம்மா மல்லி .

"அம்மா லோகியோட வேலைய பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். அவன் நெனச்ச உடனே இந்த மாதிரி எல்லாம் கிளம்பி வர முடியாது . எவ்வளவு பாதுகாப்பு இருக்குன்னு உங்களுக்கு தெரியும் தானே அவன் வராததுக்கு ஏதாவது ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும் . நீங்க லோகியை பத்தி தப்பா நினைக்கிறது முதல்ல நிறுத்துங்க. நீங்க நினைக்கிற மாதிரி மோசமான ஆள் கிடையாது லோகி. அவரோட சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது விடுங்க" என்றவள் .

" சரி எனக்கு நேரம் ஆயிடுச்சு நான் ஜெர்மன் ரீச் ஆயிட்டு உங்களுக்கு கால் பண்றேன். நீங்களும் சீக்கிரமாவே அங்கு வர பாருங்க" என்று தன் பெற்றோரை விட்டு பிரிய மனம் இல்லாமல் விடை பெற்று தாரா அங்கிருந்து கிளம்பினாள் .

தாரா இத்தனை நாள் அவள் பெற்றோரிடம் இருந்து தான் கர்ப்பமான விஷயத்தை சொல்லாமல் மறைத்து இருந்தாள் . ஆனால் நாள் ஆக ஆக அவள் வாந்தி , மயக்கம் சோர்வாக இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி டாக்டரை சென்று பார்த்து வருவதை கண்டு சந்தேகப்பட்ட அவள் அம்மா தாராவை அதட்டி உருட்டி கேட்கவும் தான் தன் வயிற்றில் கரு உண்டாகி விருப்பத்தையும் அது லோகியின் குழந்தை என்பதையும் சொன்னாள்.

அதை கேட்டதும் மல்லிக்கும், குமரனுக்கு தாராவை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டு அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவன் மட்டும் சந்தோசமாக இருக்கிறானே என்று ஆத்திரமாக வந்தது .

உடனே இதற்கு ஒரு முடிவு தெரியவேண்டும் என்று அவனிடம் கேட்க சென்ற தன் பெற்றோரை தடுத்து அவர்களிடம் அழுது புலம்பி கெஞ்சி அவர்களை லோகியிடம் தன்னை பற்றி எதுவும் கேட்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டிருந்தாள் . அதனால் தான் அவர்கள் எதுவும் செய்யாமல் இத்தனை நாள் மவுனம் காத்திருக்கின்றனர்.

தங்கள் மகளோடு சேர்ந்து அவர்களும் ஜெர்மனியில் செட்டில் ஆகா முடிவு செய்திருக்கிறார்கள் . அதற்கு முன்பு இங்கே இருக்கும் அவர்கள் பிசினெஸை நம்பகமா ஆளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களும் தாராவுடன் சென்று செட்டில் ஆகிவிட முடிவும் எடுத்துவிட்டனர்.

தங்களை திரும்பி திரும்பி பார்த்துவிட்டு செல்லும் தாராவை பிரிய மனமில்லாமல் அவளை ஜெர்மனிக்கு வழி அனுப்பிவைத்தனர் .

தாராவும் செக் இன் செய்தவள் பிலைட்டில் ஏறி இந்தியாவை விட்டு லோகியை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்ல தயார் ஆனால் .

கடைசியாக லோகியிடம் ஒரு முறை பேசிவிடலாம் என்று அவனுக்கு கால் செய்யலாமா? வேண்டாமா? என்று தனக்குள் ஒரு பெரிய போராட்டமே நடத்தியவள் அவனிடம் பேசவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு தன் மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணிவைத்து பைக்குள் போட்டுவிட்டாள்.

அப்போது விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பை செய்யும் மைக்கில் இருந்து " miss தாரா உங்க பேரன்ட்ஸ் உங்களை உடனே மீட் பண்ணனும்னு உங்களை உடனே வர சொல்லி தகவல் கொடுத்திருக்காங்க. மிஸ் தாரா உங்க அப்பாவுக்கு எமெர்ஜென்சி என்று உங்க அம்மா மல்லி தகவல் சொல்லி இருக்காங்க. ப்ளீஸ் மிஸ் தாரா தயவு செய்து நீங்க உங்க பேரண்ட்ஸை பார்க்கணும்னு கேட்டுகிறோம். மிஸ் தாரா நாங்க சொன்ன தகவல் உங்களை வந்து சேர்ந்ததா ... உடனே எழுந்து வரவும் " என்று விடாமல் அந்த பிலைட்டில் தாராவின் பெயரை சொல்லி அவளை அழைக்கவும்.

"இப்போ தானே அப்பாகிட்டே பேசிட்டு வந்தேன் . அவருக்கு என்ன ஆச்சு ? நான் கிளம்புற அப்போ நல்லா தானே இருந்தார் அதுக்குள்ள என்ன ஆச்சு ? " என்று பதறியவள் வேகமாக தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அங்கு அனௌன்ஸ் செய்துகொண்டு இருந்த ஏர்ஹோஸ்டர்சிடம் வந்தவள் "நான் ... நான் தான் தாரா " என்றாள்.

"மேடெம் உங்களுக்காக தான் பிலைட் கிளம்பாம இருக்கு . உங்களுக்காக தான் உங்க பேரன்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க " என்றார்.

"நான் உடனே அவங்களை பார்க்கணும் " என்றாள் ஒருவித பதட்டத்தோடு .

தாராவை அவள் பெற்றோரை சந்திக்க உடனே ஏற்பாடுகள் செய்யப்பட்டது .அவளை விமானத்தில் இருக்கும் வாகனத்தின் மூலம் தாராவின் அப்பா இருந்த எமெர்ஜென்சி இடத்திற்கு அழைத்து சென்றார்கள் .

அங்கே சென்றவள் அவள் அப்பாவும், அம்மாவும் இருந்த நிலைமையை பார்த்ததும் அதிர்ந்து போனாள் தாரா .
 

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 27
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top